128. ராமர் ரிஷிகளோடும் சீதாதேவியோடும் பேசிக் கொண்டு இனிமையாக பொழுதைக் கழிக்கிறார். ஒரு நாள் அங்கே சூர்பனகை என்ற ராக்ஷசி வருகிறாள். அவள் ராமரைக் கண்டவுடன் காமவசப்பட்டு அவரிடம் “என்னை மணந்து கொள்” என்று கேட்கிறாள். ராமர் விளையாட்டாக “என் அருகில் என் பிரியமான மனைவி சீதை இருக்கிறாள். நீ என் தம்பி லக்ஷ்மணனிடம் கேள்” என்கிறார். லக்ஷ்மணரும் அவளிடம் வேடிக்கையாக பேச அவள் கோபம் கொண்டு சீதையை கொல்லப் போகிறாள். அப்போது ராமர் லக்ஷ்மணனிடம் “சீதையைக் காப்பாற்று” என்றவுடன் லக்ஷ்மணன் சூர்பனகையின் மூக்கையும் காதுகளையும் அறுத்து அவளை விரட்டுகிறான்
[சூர்பனகை வந்தாள்]
Categories