
முதல் முதல்ல நான் ஸ்வாமிகள் கிட்ட போயிருந்த போது, அவர் எனக்கு மூகபஞ்ச சதி சொல்லித் தர ஆரமிச்சார். அந்த பாடம் regularஆ போயிண்டு இருந்தது. ஒரு நாள் கார்த்தால அவர் பாராயணம் பண்ணும் போது போனேன். அப்போ அவர் சுந்தரகாண்டம் பாராயணம் பண்ணிண்டு இருந்தார். எனக்கு அது தெரியல. நான் உள்ள போன போது ஒரு ஸ்லோகம், முப்பத்தியேழாவது சர்க்கத்துல கடைசி ஸ்லோகம். இதை அவர் கொஞ்சம் உரக்க சொன்னார்.








