Categories
Stothra Parayanam Audio

Vishnu Sahasranama stothram audio recording; விஷ்ணு சஹஸ்ரநாமம்


மஹாபாரதத்துல சாந்தி பர்வம்னு இருக்கு. அதுல யுதிஷ்டிரர், கிருஷ்ண பகவான் சொன்னபடி, பீஷ்மாச்சார்யாள் கிட்ட பலவிதமான தர்மங்களை கேட்டுக்கறார். அவர் அடுத்தது சக்கரவர்த்தி ஆகப் போறார். அதனால ராஜ தர்மங்களை கேட்டுண்டு, கடைசீல, இந்த ஆறு கேள்விகளை கேட்கறார். “கிமேகம் தைவதம் லோகே? கிம்வாபி ஏகம் பராயணம்? ஸ்துவந்த: கம்? கமர்ச்சந்த: ப்ராப்னுயுர் மானவா: சுபம்? கோதர்ம: ஸர்வ தர்மானாம் பவத: பரமோ மத:? கிம் ஜபன் முச்யதே ஜந்து: ஜன்ம ஸம்ஸார பந்தனாத்?” அப்டீன்னு கேட்கறார்.

இந்த கேள்விகளுக்கு, பீஷ்மாச்சாரியாள், ஆறு கேள்விக்கும் ஆறு பதில் சொல்றார். அந்த ஆறு கேள்விக்கும் பதில் சொல்லும்போது முடிவாக சொல்றார்.
“ஏஷமே ஸர்வ தர்மானாம், தர்ம: அதிகதமோ மத: |
யத் பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவைஹி அர்ச்சேன் நரஸ்ஸதா ||”
நான் அறிந்த வரையில் கமலக் கண்ணனான, புண்டரிகாஷனான, விஷ்ணு பரமாத்வை, “ரிஷிபி: பரிகீதானி”, ரிஷிகளெல்லாம் பாடும், வேதங்களில் உள்ள, ஒரு ஆயிரம் நாமாக்களை சொல்கிறேன். இந்த ஆயிரம் நாமாக்களை, “ஸ்தவைஹி அர்ச்சேன் நரஸ்ஸதா” இந்த ஸ்தோத்திரத்தை சொல்றதே ஒரு அர்ச்சனை. இதைச் சொல்வது தான் என்னை பொறுத்த வரைக்கும், “ஏஷமே ஸர்வ தர்மானாம், தர்ம: அதிகதமோ மத:” எல்லாத்துக்கும் மேலான தர்மம். அப்டீன்னு சொல்றார்.

விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்ரத்திற்கு, ஆதிசங்கர பகவத்பாதாள்  பாஷ்யம் எழுதி இருக்கார். அந்த பாஷ்யத்துல, “நாக்கு இருக்கு, நாமம் இருக்கு. சுலபமான இந்த வழியை, இந்த நாமங்களைச் சொல்வது ஏன் இவ்வளவு உயர்ந்த தர்மமாக பீஷ்மாசாரியாள் சொல்கிறார்?”, அப்டீன்னு கேள்வி கேட்டுண்டு, “இந்த நாம ஜபத்தால் செய்யும் பகவத் பஜனம் என்பது, எந்த ஒரு திரவ்ய, தேச, கால நியமங்களோ, தோஷங்களோ இல்லாதது. ஒரு ஹோமம் பண்ணா, அதுக்கு திரவ்யங்கள் சேர்க்கறோம். அதுல ஏதாவது தோஷம் இருந்தா, நமக்கு தோஷம் வரும். அப்படி, ஒவ்வொரு புண்ய கார்யத்துலயும் ஏதாவது தோஷங்கள் வரதுக்கு வாய்ப்புகள் இருக்கு. இந்த நாமத்தை ஜபிக்கும்போது எதுவும் தோஷங்கள் வராது. யாருக்கும் ஹிம்சை கிடையாது. ஆகையினால, இது, எல்லா தர்மத்துக்கும் மேற்பட்டது. பகவானோட அனுக்ரஹத்தை நேரடியாக பெற்றுத் தரக் கூடியது”, அப்டீன்னு, ஆதி சங்கரர் சொல்றார்.

ஆதி சங்கர பகவத் பாதாள் பாஷ்யத்துல, ஒவ்வொரு நாமாவளிக்கும், அழகழகா அர்த்தம் சொல்றார். சூரசேன:, அப்டீங்கிரதுக்கு, ஹனுமார் போன்ற சூரர்களை கொண்ட சேனையை படைத்த ராமர், அப்டீன்னு சொல்வார்.
ஸ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம் |
நமாமி பகவத் பாத சங்கரம்,லோக சங்கரம் ||
னு சொன்ன மாதிரி, இந்த ஆயிரம் நாமங்களுக்கும், வேத சாஸ்திர புராணங்களில் இருந்து ஆதி சங்கரர், ஒவ்வொண்ணுக்கும்  எடுத்து சொல்றார். ஸுவ்ரத:, அப்டீங்கிரதுக்கு, பித்ரு வாக்ய பரிபாலனம் என்கிற விரதத்தையும், சரணாகதி கொடுப்பது என்ற விரதத்தையும் கொண்டவர், அப்டீன்னு சொல்வார். ஸுமூக:, அப்டீன்னா, இன்னிக்கு ராஜ்ஜியம் அப்டீன்னு சொன்ன அப்பா, நாளைக்கு காலம்பர கூப்பிட்டு, வன வாசம் அப்டீன்னு சொன்ன போது,  எந்த முகம், கொஞ்சம் கூட வாடாம இருந்ததோ, அந்த தாமரை போன்ற முகம் படைத்த ராமர், அப்படி,  ராமர், கிருஷ்ணர், நரசிம்மர், அப்படி எல்லா தெய்வங்களையும் எல்லா புராணங்களையும் வெச்சுண்டு, சொல்வார்.

மஹா பெரியவா ஒரு  பத்து நிமிஷம் “தத்வம் தத்வம் விதேகாத்மா ஜன்ம ம்ருத்யு ஜராதிக:” அப்டீங்கிறதுக்கு விளக்கம்  சொல்லி,  அந்த தத்வம், அதை அறிந்தவன், தத்வவித். அந்த தத்வத்தை அறிந்தவன் தத்வமாகவே ஆகி விடுகிறான். ஏகாத்மா. அவனுடைய லக்ஷணம் என்னன்னா, ஜன்ம ம்ருத்யு ஜராதிக:, அப்டீன்னு, ஜன்மா, ம்ருத்யு,ஜரை இதெல்லாம் தாண்டி முக்தி அடைவான், அப்டீன்னு, ஒரு, பெரியவா, ஒண்ணுகொண்ணு, கோத்துண்டு போறது, அப்டீன்னு சொல்றா. அந்த மாதிரி, இதுல, ஒரு நாமமும் இருக்கு, நாமத்து மூலமா செய்திகளும் இருக்கு. சரித்தரமும் இருக்கு. “குணி நிஷ்ட குணாபிதானாம் ஸ்தவ:” அப்டீன்னு, “குணசாலிகளிடத்தில் உள்ள குணங்களை எடுத்து பேசுவதற்கு ஸ்தோத்திரம் என்று பெயர். இந்த சஹஸ்ரநாமம் நாம ஜபமும், அதுவே ஸ்தோத்ரமும் ஆக இருக்கு” அப்டீன்னு சொல்லியிருக்கா. அப்படி பகவானோட குணங்களை ரிஷிகள் சொன்ன, வேதத்துல இருக்கக் கூடிய நாமங்களை எடுத்து, பீஷ்மாசாரியாள் கோர்த்துக் கொடுத்துருக்கார்.

ஒரு தடவை வினோபா பாவே கிட்ட, இந்த விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்திரம் கொஞ்சம் கடினமா இருக்கே, நீங்க சுலபமா ஒரு விஷ்ணு சஹஸ்ரநாமம் பண்ணி கொடுத்தேள்னா, எங்களுகெல்லாம், சௌகர்யமா இருக்குமே அப்டீன்னு அவருடைய சிஷ்யர்கள் கேட்டாளாம். அவர் சொன்னாராம், “இந்த பீஷ்மாசார்யாள் சொன்ன விஷ்ணு சஹஸ்ரநாமம், எத்தனையோ யுகக் கணக்காக, எல்லாரும் ஜபிச்சு, அந்த vibrations எல்லாம் ஆகாசத்துல இருக்கு. நாம ஒரு தடவை ஜபிச்சா, அந்த vibration னுடன் சேர்ந்து, நமக்கு, அதோட பலன் கிடைக்கும். அதுனாலா இன்னொரு விஷ்ணு சஹஸ்ரநாமம் பண்ணக் கூடாது, நாம பீஷ்மர் பண்ணினதைத் தான் சொல்லணும்” அப்டீன்னு சொன்னாராம். அப்பேற்பட்ட மஹிமை வாய்ந்தது.

மஹா பெரியவா, தினமும் மூணு ஆவர்த்தியாவது சஹஸ்ரநாமம் சொல்லிடுவா. அவருடைய பிக்ஷையின் போது விஷ்ணு சஹஸ்ரநாமம் கட்டாயம் உண்டு. அதை தவிர, அந்த வண்டியை பிடிச்சுண்டு, நடந்து போயிண்டு இருக்கும்போது, நெத்தியில குட்டிண்டானா, சுக்லாம் பரதரம் சொல்லி விஷ்ணுசஹஸ்ரநாமம் ஆரம்பிக்கணும்.

ஸ்வாமிகள், இந்த பூர்வ பாகம், சுக்லாம் பரதரத்துல இருந்து, விஸ்வஸ்மை நம:, வரைக்கும் சொல்லிட்டு. இந்த “விஸ்வம் விஷ்ணுர் வஷட்கார: லேர்ந்து வனமாலீ ஸ்லோகம் முடிய, தினம் இருபத்தொரு ஆவர்த்தி, நாற்பதெட்டு நாள், சொல்லி, முடிக்கும் போது இந்த பலஸ்ருதி சொல்றது. அப்படி, அந்த ஸ்தோத்திர பாகத்தை நிறைய ஆவர்த்தி பண்றது, அப்படி ஒரு வழி சொல்வார்.

70-80 வருஷங்களுக்கு முன்னால் காமகோடி கோஷஸ்தானம் அப்டீன்னு ஒரு printing press வெச்சு மஹாபெரியவா, பக்தி க்ரந்தங்கள் எல்லாம், அவாளே ஸ்ரீ முகம் கொடுத்து, பெரியவாளே proof read பண்ணி பிரிண்ட் பண்ணா. அதோட பிரிண்டும் தனி அழகு, ஒரு தப்பு இருக்காது. அந்த press ல போட்டது, ஸ்வாமிகள் குடுத்த சஹஸ்ரநாமம் புஸ்தகத்தை வெச்சுண்டுதான் நான் கத்துண்டேன். அந்த பாடம் சம்ஸ்க்ருதத்தில் இந்த பக்கத்தில் இருக்கு https://valmikiramayanam.in/Vishnusahasranamamsamskrutham.pdf 

ஸ்வாமிகள் கிட்ட நான் விஷ்ணு சஹஸ்ரநாமம் கத்துண்ட போது, ஒவ்வொரு நாமாவையும் தெளிவா சொல்லணும், அப்டீனுட்டு, “வேதா: ஸ்வாங்க: அஜித: கிருஷ்ண: த்ருட: ஸங்கர்ஷண: அச்யுத:” அப்படீன்னு படிச்சேன். இதை கேட்கறவாளுக்கு, வித்யாசமா இருக்கும். ஏன்னா, நமக்கு விறுவிறுன்னு, படிச்சுதான் பழக்கம். “யுகாதிக்ருத், யுகாவர்த:, நைகமாய:, மஹாசன:  அத்ருஷ்ய:  வ்யக்தரூபச்ச: ஸஹஸ்ரஜித், அனந்தஜித், இஷ்ட:, விசிஷ்ட: சிஷ்டேஷ்ட:, சிகண்டி இப்படி எழுதி படிச்சு, நான் அவர்கிட்ட ஒப்பிசேன். அதுக்கப்புறம், எப்பவும் போல பாராயணம் பண்றது. அப்படி ஒரு நாமாவளி கூட தப்பா சொல்லக் கூடாது என்று ஸ்வாமிகள் சொல்வார். அவ்வளவு perfection.

பயக்ருத் பயநாசன: அப்டீன்னு ஒரு இரண்டு நாமாவளி வரது. ஸ்வாமிகள், யாராவது, office ல, வேலை போயிடும்போல இருக்கு, குழந்தை பயப்படறா அப்டீன்னு எந்த பயத்தை சொன்னாலும், ஸ்வாமிகள் “பயத்தை கொடுக்கறதும், பயத்தைப் போக்கறதும், பகவான்தான். அம்மா வந்து குழந்தை எங்கயாவது, நெருப்பை தொடப் போறதேன்னு, அடுப்பை போயி தொட்டுறப் போறதுன்னு, பூனை மாதிரி கத்துவா. அந்த குழந்தை, ஓடி வந்து, உடனே, அம்மா காலை கட்டிண்டுடும். அந்த மாதிரி பகவான், தன்கிட்ட தன்னுடைய குழந்தைகளை வர வைக்கறதுக்க்காகதான், பயத்தை கொடுக்கறார். அவரே பயத்தை, நிவர்த்தியும் பண்ணுவார். பயக்ருத், பயநாசன:”, அப்டீனுட்டு, இதை சொல்லி, “சஹஸ்ரநாமத்தை, சொல்லுங்கோ. இல்லை, பத்து நிமிஷம் ராம நாமம் சொல்லுங்கோ. சரியா போயிடும்” அப்டீம்பார். அந்த பயம் சரியா போயிடும்.

இதே பயக்ருத் பயநாசன:, மஹாபெரியவாளும் சொல்லி இருக்கா. கௌதா லலித் மனோகர்ங்கிறவர்,   மஹா பெரியவாள பத்தி, தன்னோட அனுபவங்களை, சொல்லி இருக்கார். அதில்  அவர் பெரியவாளுக்கு service பண்ணிண்டு இருக்கார். பெரியவா, அவா ஊருக்கு வந்து, தங்கியிருக்கும்போது,  அவர் wife pregnant ஆ இருந்து, குழந்தை பொறக்கறது. குழந்தை, பொறக்கும்போது, cleft lift, அப்படீன்னு, உதடு வளைஞ்சு இருக்கு. அப்போ அவர் அதை சொல்லி வருத்தப் படறார். மஹாபெரியவா வந்து, பயக்ருத் பயநாசன:, அப்படீன்னு, பகவான்தான், பயத்தை கொடுக்கறார். பயத்தை போக்கறார். கவலை படாதேன்னு சொல்லி, அந்த காலத்துல plastic surgeonsலாம் கிடையாது. ரொம்ப கொஞ்சம் பேர் தான். யாரோ ஒருத்தர் வந்து, அதை சரி பண்ணி கொடுக்கறார். அந்த மாதிரி ஸ்வாமிகள், சொல்ற மாதிரியே பயக்ருத், பயநாசன: அப்டீன்னு, மஹா பெரியவாளும் சொல்லி இருக்கா. அப்டீங்கிறதை கேட்டபோது எனக்கு, ரொம்ப சந்தோஷமா இருந்தது.

பகவத் பாதாள், பாஷ்யத்துல, பலஸ்ருதி சொல்லிண்டே வரும்போது, ரோகார்த்தோ முச்யதே ரோகார்த்து, அப்டீன்னு, ரோகத்துல இருந்து விடுபடலாம், பணம் தேவை படரவாளுக்கு, பணம் கிடைக்கும். பிராமணனுக்கு, வேதத்தின், முடிவான, ஞானம் கிடைக்கும். உபநிஷத் தத்வங்கள், அவனுக்குப் புரியும். ராஜா வெற்றி பெறுவான், எல்லாருமே, யார் இதை கேட்டாலும், அவா சந்தோஷத்தை அடைவா. அப்டீன்னு, இந்த மாதிரி  பலஸ்ருதி சொல்லிண்டே வரும்போது, நடுவுல,
த்வௌ: ஸ சம்த்ரார்க நக்ஷத்ரா கம் திஶோ பூர்மஹோததி: |
வாஸுதேவஸ்ய வீர்யேண வித்ருதானி மஹாத்மன: ||
இந்த உலகம், ஆகாசத்துல இருந்து, சூர்யன், சந்திரன், நக்ஷத்ரங்கள் வரைக்கும், எல்லாமே, பகவானோட ஆணைப் படிதான், அங்க அங்க அது அது இருந்துண்டு இருக்கு என்று ஆரம்பிச்சு பகவானோட பெருமையா நாலு ஸ்லோகங்கள் இருக்கு.  அதற்கு அப்பறம், திரும்ப பலஸ்ருதி, வர்றது. இதுக்கு, ஆதிசங்கரர், பாஷ்யத்துல சொல்றார். இந்த பலஸ்ருதில சொல்லப் பட்டவைகள், அதிசயோக்தி, exaggeration கிடையாது. இதெல்லாம் சத்யம், அப்டீங்கிறதை, emphasis பண்றதுக்காக, நடுவுல, அந்த பகவானோட பெருமை எப்படி பட்டதுங்கிறதை, பீஷ்மாசார்யாள் எடுத்து சொல்றார், என்கிறார்.

அதற்கப்புறம் இன்னும் கொஞ்சம் பலஸ்ருதி சொல்லி, “நதே யாந்தி பராபவம்” விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பாராயணம்  பண்ணிண்டு, இருக்கறவா, எந்த ஒரு குறையும், அவமானமோ அவாளுக்கு கிடையாது. அப்படீன்னு, “நதே யாந்தி பராபவம்” அப்படீன்னு முடியறது. இது வரைக்கும், மஹாபாரதத்துல இருக்கற portion. அதற்கப்புறம், நம்ம South India ல, புத்திமான்களா இருக்கறதுனால, மேலும், அங்க அங்க புராணங்கள் ல இருந்து, எடுத்த சில அழகான ஸ்லோகங்களை சேர்த்து, அதெல்லாமும் சொல்லி, “ஸ்ரீ ராம ராமேதி ரமே ராமே மநோரமே |  சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே || அந்த ஒரு பத்து ஸ்லோகங்களையும், சொல்லி “காயேன  வாசா மனஸா இந்த்ரியைர்வா” அப்டீன்னு சொல்லி முடிக்கறா.

மஹாபெரியவா “தினமும் சந்த்யாவந்தனம் செய்த பின் விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்ல வேண்டும்” என்று சொல்லி இருக்கா. கேட்பதாலும், எல்லாருக்கும் க்ஷேமம் ஏற்படும் என்று சொல்லி இருக்கா. அந்த ஸ்தோத்ரத்தை ரொம்ப நிதானமா சொல்லி இருக்கேன். (Audio recording in the link) https://soundcloud.com/ganapathy-subramanian-sundaram/sets/vishnu-sahasranama-stothram

ஜானகி காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம…

 

10 replies on “Vishnu Sahasranama stothram audio recording; விஷ்ணு சஹஸ்ரநாமம்”

Should we only recite like this, split into each word or can we recite in the slogam format?

You can very much recite in slogam format. For clarity in diction for which my Guru Govinda Damodara Swamigal gave high value, I learnt it like this and chanting like this very slowly and split wherever possible. You can chant as full line slogam format. Make sure sandhis are pronounced correctly.

Can you please translate this to English, for non-tamil readers? Really appreciate this. Thank you

Sir,
How to download the audio file of Vishnu Sahasranama.
The link you gave is taking sound cloud, unlike your Ramayan MP3 audios which was easy to download.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.