108. எல்லோரும் ராமருடைய பர்ணசாலையை அடைகிறார்கள். கௌசல்யா தேவி சீதையிடம் தன் சொந்தப் பெண்ணைப் போல் அன்பு பாராட்டுகிறாள். பரதன் ராமரிடம் ‘நம் தந்தை தவறான இந்த ஏற்பாட்டை செய்து விட்டு காலமாகி விட்டார். நாங்கள் அனைவரும் உங்களை அயோத்திக்கு மீண்டும் அழைத்துச் செல்லவே வந்திருக்கிறோம். உன் தம்பியும், சிஷ்யனும், அடிமையுமான என் வேண்டுதலை ஏற்று நீ அயோத்திக்கு திரும்ப வந்து ராஜ்யத்தை ஏற்க வேண்டும். எனக்கு அரசனாகும் தகுதி கிடையாது. உனக்கு தான் அந்த தகுதி உண்டு’ என்கிறான். ராமர் ‘தாய் தந்தையர்களை அறியாமையினால் குறைவாக பேசாதே. பிள்ளைகளை எந்த விதத்திலும் ஆணையிட அப்பாவிற்கு உரிமை உண்டு. அவர் உனக்கு ராஜ்யத்தையும் எனக்கு வனவாசத்தையும் தந்திருக்கிறார். அதை நாம் அப்படியே ஏற்க வேண்டும். மாற்றக் கூடாது’ என்று கூறுகிறார்.
[பரதனின் பிரார்த்தனை]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/108%20Bharathan%20prarthanai.mp3]
Tag: ராமாயணம் கதைகள்
ராமர் பிதுர்தர்ப்பணம் செய்தார்
107. பரதன் சொன்ன சோகச் செய்தியைக் கேட்டு ராமர் மயக்கம் அடைகிறார். பின் தெளிந்து ‘என் பிரிவால் இறந்த என் தந்தையின் ஈமக் கடன்களைக் கூட நான் செய்ய முடியவில்லையே. தசரதர் இல்லாத அயோத்திக்கு நான் திரும்ப வரப்போவதில்லை. அனாதைகள் ஆகி விட்டோமே லக்ஷ்மணா’ என்று பலவாறு புலம்புகிறார்.
[ராமர் பித்ருசோகம்
பரதனுக்கு ராமர் உபதேசம்
106. ராமர் பரதனுக்கு மேலும் பல ராஜ தர்மங்களை உபதேசிக்கிறார். முடிவாக ‘நம் முன்னோர்கள் சென்ற வழியில் தர்மத்தை முன்னிறுத்தி ஆட்சி செய். நல்ல அரசனுக்கு இவ்வுலகில் கீர்த்தியும் மேலுலகில் சுவர்க்கமும் கிடைக்கும்’ என்று சொல்லி முடிக்கிறார். பரதன் ‘மூத்தவன் நீ இருக்க இளையவனான எனக்கு எப்படி பட்டம் சூட்ட முடியும்? எங்களோடு அயோத்தி திரும்பி வந்து நீ தான் அரசனாக பட்டம் சூட்டிக் கொள்ள வேண்டும். நீ காட்டிற்கு வந்த பின் உன் பிரிவினால் வருந்தி நம் தந்தையார் காலகதி அடைந்து விட்டார்’ என்று கூறுகிறான்.
[ராமாயணத்தில் அரசாட்சி]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/106%20ramar%20pithrushokam.mp3]
ராமர் விரதம் இருந்தார்
44. வசிஷ்டர் ராமருடைய அரண்மனைக்கு வந்து, ராமருக்கும் சீதைக்கும் விரதம் எடுத்து வைக்கிறார். ராமர் சீதையோடு விஷ்ணுவை பூஜித்து, பின் தரையில் தர்பையில் படுத்துறங்கி மறுநாள் காலை வெகு விரைவில் எழுந்து சந்த்யாவந்தனம் செய்கிறார். அயோத்யா ஜனங்கள் தசரதரையும் ராமரையும் புகழ்ந்து கொண்டே ஊரை அலங்கரிக்கிறார்கள்.
தசரதரின் சஞ்சலம்
43. தசரதர் தன் அரண்மனைக்கு ராமனை வரவழைத்து ‘என் மனத்தில் சில சஞ்சலங்கள் இருப்பதால் உனக்கு நாளையே பட்டாபிஷேகம் செய்யப் போகிறேன். இன்றிரவு நீயும் சீதையும் விரதமாக இருங்கள்.’ என்று கூறுகிறார். ராமர் கௌசல்யா தேவியின் அரண்மனைக்கு வந்து அம்மாவிடம் நல்ல செய்தியை பகிர்ந்து கொள்கிறார். கௌசல்யை ராமனை ஆசிர்வதிக்கிறாள்.
ராமருக்கு தசரதர் செய்த உபதேசம்
42. தசரதர் வசிஷ்டரிடம், ராம பட்டாபிஷேகத்தை முன்னின்று நடத்தி தருமாறு வேண்டுகிறார். வசிஷ்டர், மந்த்ரிகளிடமும் புரோஹிதர்களிடமும், தேவையான பொருட்களை சேகரிக்க உத்தரவிடுகிறார். தசரதர் ராமனை சபைக்கு வரவழைத்து ‘உனக்கு பதவி அளிக்க போகிறேன். நீ மேலும் வினயத்தோடும் புலனடக்கதோடும் மக்களின் நன்மையை பேண வேண்டும்’ என்று அறிவுறுத்துகிறார்.
41. தசரதர், ராஜசபையை கூட்டி, பெரியோர்களிடம், தன் மகன் ராமனை யுவராஜாவாக பட்டாபிஷேகம் செய்து வைத்து, தான் ஓய்வெடுக்க விரும்புவதாக கூறி உத்தரவு கேட்கிறார். அனைவரும் பெருமகிழ்ச்சியோடு அதை வரவேற்கிறார்கள். தசரதர் ‘இவ்வளவு சந்தோஷப் படுகிறீர்களே, என் ஆட்சியில் ஏதும் குறை இருக்கிறதா?’ என்று வேடிக்கையாக கேட்கிறார். ஜனங்கள் ராமருடைய பெருமைகளை விரிவாக எடுத்துக் கூறி ‘இப்பேர்பட்ட ராமனை நாங்கள் ராஜாவாக அடையும்படி நீங்கள் வரம் தர வேண்டும்’ என்று பிரார்த்திக்கிறார்கள்.
[ஸ்ரீராமர் பட்டாபிஷேகத்திற்கு பெரியோர்கள் அனுமதி]
ஸ்ரீராமரின் கல்யாண குணங்கள்
40. பரதன், சத்ருக்னனோடு கேகய ராஜ்யத்திற்கு செல்கிறான். தசரதர், ராமரின் உயர்ந்த குணங்களையும், மக்கள் அவனிடம் கொண்டிருந்த அன்பையும் நினைத்து, தனக்கு முதுமை வந்ததுவிட்டது என்பதையும் எண்ணி, ராமனை யுவராஜாவாக பட்டாபிஷேகம் செய்ய தீர்மானித்தார்.
[ஸ்ரீராமரின் கல்யாண குணங்கள்]