Categories
Ramayana One Slokam ERC

ராமனே என் தெய்வம்; ஏக பக்திர் விஷிஷ்யதே

சுந்தர காண்டத்துல, இருபத்தி நாலாவது சர்க்கத்துல, ஒரு ஸ்லோகம்

दीनो वा राज्यहीनो वा यो मे भर्ता स मे गुरुः। तं नित्यमनुरक्तास्मि यथा सूर्यं सुवर्चला ।।

தீனோ வா ராஜ்ய ஹீனோ வா யோ மே பர்த்தா ஸ மே குரு: |
தம் நித்யம் அனுரக்தாஸ்மி யதா சூர்யம் சுவர்ச்சலா ||

சீதா தேவியை ராவணன் வந்து பார்த்து, ஏதேதோ ஆசை வார்த்தைகள் பேசறான். அவ நிமிர்ந்து கூட பார்க்கலை. அப்புறம் பயமுறுத்தறான். அவ ஒரு துரும்ப போட்டு, “அற்ப பதரே, உனக்கு பெரிய ஆபத்து இருக்கு. நீ திருடனாட்டம், பேடியாட்டம், ராம லக்ஷ்மணாளை அப்புறப் படுத்திட்டு, அவா இல்லாத போது, என்னைத் தூக்கிண்டு வந்திருக்கே. அவா இருக்கறப்போ, நீ என்னை தூக்கிண்டு வந்துருந்தா, என்னிக்கோ, நீ, கர, தூஷணாளை பார்க்க எமலோகத்துக்குப் போயிருப்ப. நீ இவ்வளவு பேச்சு பேசாதே. நான் ஒரு நாளும் உன்னை ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன். எனக்கு, ராமன்தான் தெய்வம். உனக்கு உயிர் மேல ஆசை இருந்தா, ராமர் கிட்ட என்னை ஒப்படைச்சு மன்னிப்பு கேட்டுக்கோ” அப்படீன்னு தைரியமா சொல்றா. அப்போ ராவணன் கோபத்தோடு அவளை கொல்ல வரான். அப்போ மற்ற ராக்ஷசிகள் எல்லாம், “நீ ஏன் இவளோட மன்றாடற. நீ வா போகலாம்னு” அவனை தள்ளிண்டு போயிடறா. அவன் சிரிச்சுண்டே போயிடறான். போகும்போது அந்த ராக்ஷசிகள்கிட்ட, “இவளை எப்படியாவது, வழிக்கு கொண்டு வாங்கோ. மிரட்டியோ, உருட்டியோ, இல்ல ஆசை வார்த்தை பேசியோ எப்படியாவது, வழிக்கு கொண்டு வாங்கோ” அப்படீன்னு சொல்லிட்டு போறான்.

அவன் போன உடனே, ராக்ஷசிகள் எல்லாம் சீதாதேவிகிட்ட, “ராவண மஹாராஜாவுக்கு என்ன குறைச்சல். அவருக்கு ஆயிரக் கணக்கான பத்னிகள் இருக்கா. இருந்தாலும் உன்கிட்ட வரார். இவாளுக்கு எல்லாம் தலைவியா, பட்ட மஹிஷியா இருக்கலாம். உனக்கு என்ன கசக்கறதா, உனக்கு இவ்வளவு கர்வமா” அப்படீன்னு பேசிண்டே வரா. இதை எல்லாம் சீதை காதுலயே வாங்கல. “அந்த ராமன் என்ன சாதாரண  மனுஷன், அல்ப ஆயுசு, என்னமோ பெண் பேச்சை கேட்டுண்டு காட்டுக்கு வந்துருக்கான். அவன் இவ்வளவு பெரிய கடலை தாண்டி, இவ்வளவு நாளுக்கு அப்புறம் வரப் போறான்னு நினைச்சுண்டு இருக்கியா” அப்படீன்னு சொல்றா. “அவனுக்கு ராஜ்ஜியம் இல்ல, ஒண்ணும் இல்ல. ஆனா ராவணனை பாரு. அவன்கிட்ட எவ்வளவு சொத்து சுகம், ரத்தினங்களும், எவ்வளவு பெரிய மாட மாளிகைகளும், கூட கோபுரங்களும், புஷ்பக விமானமும் எல்லாம் இருக்கு. இதெல்லாம் enjoy பண்றதை விட்டுட்டு, என்னமோ உளறிண்டு இருக்க. இளமைங்கிறது, சீக்கிரம் போயிடும், அதனால enjoy பண்ணனும்”, அப்படீன்னு ராக்ஷசிகள் சொல்றா.

ஸ்வாமிகள் சொல்வார், “மகான்கள், இளமைங்கிறது சீக்ரம் போயிடும், அதனால பகவான சீக்கிரமா சின்ன வயசுல இருந்தே பகவானை பஜிக்கணும்னு சொல்வா. இந்த மாதிரி அசத்துகள், மாத்தி சொல்றா”, அப்படீன்னு சொல்வார். அப்படி அந்த ராக்ஷசிகள் மத்தது சொன்ன போது சீதை காதுல வாங்கல. அந்த ராக்ஷசிகள் ராமனை பத்தி சொன்ன போது சீதைக்கு பொறுக்கல. அப்போ, சீதை சொல்றா. தீனோ வா ராஜ்ய ஹீனோ வா யோ மே பர்த்தா ஸ மே குரு: | தம் நித்யம் அனுரக்தாஸ்மி யதா சூர்யம் சுவர்ச்சலா || என் கணவன் ஏழையா இருந்தாலும் சரி, அவன் நாட்டை இழந்தவனாக இருந்தாலும் சரி, எனக்கு யார் கணவனோ அவர்தான் எனக்கு தெய்வம். அவரைதான் நான் பின் தொடர்வேன், சூரியனை ஸ்வர்ச்சலா தேவி பின் தொடர்வது போலவும் அருந்ததி, வசிஷ்ட பகவானை  பின்தொடர்வது போலவும், ரோகிணி சந்திரனை பின் தொடர்வதுபோலவும், தமயந்தி நளனிடம் இருந்தது போலவும், மதயந்தி, கல்மாஷ பாத சௌதாஸனிடம் இருந்தது போலவும், நான் என் கணவரைத் தான் தெய்வமா வெச்சிருப்பேன், இன்னொருத்தரை நான் பார்க்கவே போறது இல்ல. நீங்க இந்த பேச்சையே பேச வேண்டியது இல்ல” அப்படீன்னு சொல்றா.

அந்த சௌதாஸன், மதயந்தி அப்படீன்னு சீதை சொல்றாளே. அவா யாரு? இது அதிகம் பேருக்கு தெரிஞ்சிருக்காது. அந்த மதயந்திங்கிறவ கற்புக்கரசி, மஹா உத்தமி, அவளோட கதையை நான் உங்களுக்கு சொல்றேன். அந்த கதை என்னன்னா, அந்த சௌதாஸங்கிறது, இக்ஷ்வாகு வம்சத்துல ராமருக்கு முன்னாடி, ஒரு பத்து தலைமுறை முன்னாடி இருந்த ஒரு ராஜா. இக்ஷ்வாகு குலத்து மன்னர்கள் எல்லாருமே ஜயசாலிகள், வெற்றி வீரர்கள். அந்த மாதிரி இந்த சௌதாசனும் எல்லாரையும் ஜெயிச்சு, சக்ரவர்த்தியா ஆண்டுண்டு இருந்தான். ஒரு எதிரி அவனுக்கு. எப்படியோ அவனை தோற்கடிக்க முயற்சி பண்ணி பாக்கறான். இந்த சௌதாசனை தோற்கக்கடிக்க முடியல அவானால. அதனால அவன் என்ன பண்றான். சமையற்காரனாட்டம் வேஷம் போட்டுண்டு வந்து, இந்த சௌதாசனோட சமையற்கட்டுல, சமையல் காரனா இருக்கான். அப்போ வசிஷ்டர் ஒரு நாளைக்கு சாப்பிட வரும்போது, நர மாமிசம் சமைச்சு அவன் வசிஷ்டருக்கு பரிமாறிடறான். உடனே வசிஷ்டர் கோச்சுண்டு, ராஜா இருக்கார், அங்க. “என்னது இது?”, அப்படீன்னு கேட்கறார். ராஜா, “ஐயையோ எனக்குத் தெரியலையே”, அப்படீன்னு சொல்றான். “நான் யாருன்னு பார்த்து தண்டிக்கறேன்”, அப்படீன்னு சொன்ன போது, வசிஷ்டர் சொல்றார். “அவனை என்ன தண்டிக்கறது, நீதான் பொறுப்பு, நீ பிரம்மராக்ஷஸா போ” அப்படீன்னு சபிச்சுடறார்.

உடனே ராஜாவுக்கு கோபம் வந்துடறது. “ஒரு தப்பும் அறியாதவன் நான். யாரோ பண்ணின சூழ்ச்சியினால நான் மாட்டிண்டுட்டேன்”. இப்படிதான் அவனை ஜெயிக்க முடியும்னு அந்த எதிரி தெரிஞ்சுண்டு இப்படி பண்றான்.  “பகவான், நீங்க எல்லாம் தெரிஞ்சவர்,  நீங்க என்னை சபிக்கலாமா” அப்படின்னு, அந்த ராஜா, “நான் உங்களை சபிக்கிறேன்” என்று வசிஷ்டரை சபிக்க கையில ஜலம் எடுத்துடறார். அப்போ அந்த மதயந்திங்கிற சௌதாசனோட மனைவி வந்து “நான் உங்ககிட்ட ப்ரார்த்தனை பண்ணிக்கறேன் , நம்ம குலத்துல குருவை ஒருத்தர் சபிச்சார், அப்படீங்கிற வார்த்தை வரவேண்டாம், நீங்க பொறுத்துக்கோங்கோ”, அப்படீன்னு சொன்ன உடனே, “வாஸ்தவம்தான்” அப்டீன்னு சொல்லி கோபத்தை பொறுத்துக்கறான். ஆனா அந்த கோபத்துனால அவன் கையில இருக்கிற ஜலம் கொதிக்கறது. அப்போ இந்த ஜலத்தை எங்க விடறதுன்னு பாக்கறான். ஆகாசத்துல விடலாம்னு பாத்தா, ஆகாகசத்துல பறவைகள், எல்லாம் இருக்கு, ஜலத்துல விடலாம்னு நினைச்சா, ஜலத்துல, மகரங்கள், மீன்கள் எல்லாம் இருக்கு, அதெல்லாம் கஷ்டப் படும். தரையில விட்டா, இருக்கிற உயிரினங்கள் எல்லாம், கோபத்துனால எரிஞ்சிடும், அதனால தன்னோட கால் மேலேயே அந்த ஜலத்தை விட்டுக்கறான். அதனால அவன் கால் எரிஞ்சு போயிடறது. கரிகாலன் ஆயிடறான். அதுக்கு கல்மாஷ பாதன்னு சமஸ்க்ருதத்துல பேரு. அதனால கல்மாஷபாத சௌதாசன்னு பேரு.

வசிஷ்ட முனிவர், “நீ பன்னிரெண்டு வருஷம் இந்த மாதிரி  ப்ரம்மராக்ஷஸா இருப்ப. அப்புறம் சுய ரூபம் வந்துடும்”னு சொல்றார். அப்படி பன்னிரெண்டு வருஷம், ப்ரும்மராக்ஷஸா இருந்த அவனிடம், அவனுடைய மனைவி, அனுசரணையா இருந்துண்டு, விடாம அவன்கிட்ட அன்பு பாராட்டிண்டு, அப்புறம் அவன் உடம்பு சரியான உடனே சௌக்யமா இருக்கா. அப்படி ஒரு வ்ருத்தாந்தம்.

அப்படி சீதா தேவி இவாளை எல்லாம் நினைச்சு, தமயந்தி, மதயந்தி, ரோகிணி,  வசிஷ்டேரோட மனைவி அருந்ததி, சூரியனுடைய மனைவி, சுவர்ச்சலா,  இது போல நான் ஏக பக்தியா என் கணவன்கிட்ட நான், தெய்வமா நினைச்சு நான் இருப்பேன், வேறு யாரையும் நான் ஏறெடுத்துக் கூட பாக்கப் போறது இல்ல”, அப்படீன்னு சொல்றா.

நேத்திக்குப் பேசிண்டு இருக்கும் போது, நமக்கெல்லாம், மஹாபெரியவா தான் ராமர் அப்படீன்னு சொன்னேன். அந்த மாதிரி, நாம எல்லாரும், மஹாபெரியவா கிட்ட ஏக பக்தியா இருக்கணும், மஹா பெரியவா தெய்வம், அப்படீன்னு புரிஞ்சுண்டு, அவரை நாம அடையணும்னு, நினைச்சா அடிக்கடி நாம ஒவ்வொரு சாமியாரா போயி பாத்துண்டு இருக்கக் கூடாது, பெரியவா, நூறு வருஷம் இருந்து, ஜகத்குருவா இருந்து, நமக்கு வழி காண்பிச்சிருக்கா. அவா என்ன, கருணை பண்றாளோ, அது போறும். அதுக்கு, நமக்கு, சிவன் சார், ஸ்வாமிகள் மாதிரி, பெரியவாக் கிட்ட கூட்டிண்டு போறதுக்கு, யாரு சொல்லியிருக்காளோ அதை கேட்கலாம், ஆனா, மஹாபெரியவாளை தவிர, வேற  ஒருத்தரையும் தெய்வமா நினைக்கக் கூடாது.

திருவாசகத்துல ஒரு ஸ்லோகம் இருக்கு.

கற்றறியேன் கலைஞானம் கசிந்துருகேன் ஆயிடினும்

மற்றறியேன் பிறதெய்வம் வாக்கியலால் வார்கழல்வந்

துற்றிறுமாந் திருந்தேன்எம் பெருமானே அடியேற்குப்

பொற்றவிசு நாய்க்கிடுமா றன்றேநின் பொன்னருளே.

அப்படீன்னு ஒரு பாட்டு. கற்றறியேன் கலைஞானம், எனக்கு ஒரு சாஸ்திரமும் தெரியாது, எனக்கு கசிந்து உருகவும் தெரியல,  பக்தி பண்ணவும் தெரியல. ஆனா ஒண்ணு தெரியும் – வேற ஒரு தெய்வம் எனக்கு தெரியாது, வாக்கியலால், என்னுடைய வாக்காலயும், என்னுடைய கைகால்கள், அவயங்களை வெச்சுண்டு, வார் கழல்கள், உன்னுடைய பாதத்திற்கு, வந்து உற்று நெருங்கி இருந்து, இறுமார்ந்திருந்தேன். பெரியவா இருக்கா, அப்படீன்னு, அதுதான் என்னுடைய ஒரே பற்றுகோடாக நம்பிக்கையா இருக்கேன், இப்படி இருக்கிற எனக்கு, நீ பண்ண, உன்னுடைய அனுக்ரஹம் எப்படி இருக்குன்னா, பொற்றவிசு நாய்க்கிடுமா றன்றேநின் – சில பேர் செல்லப் பிராணியா நாயை வளர்ப்பா. அந்த நாயை பொன்னால ஒரு சிம்மாசனம் பண்ணி அதுல அதை உட்கார வைப்பாளாம். அந்த மாதிரி உன்னுடைய அனுக்ரஹம் எப்படி இருக்குன்னா, ஒரு நாய்க்கு சிம்மாசனம் போட்டு உட்கார வெச்சா மாதிரி இருக்கு. நாய்னு சொல்றதும் ரொம்ப பொருத்தம், நாய் ரொம்ப கீழான ஒரு பிராணி. மனுஷப் பிறவி மாதிரி, உயர்ந்த பிறவி கிடையாது, ஆனா நாய்க்கு இருக்கற நன்றி மனுஷனுக்கு இல்ல. அந்த மாதிரி நமக்கு பகவான் பண்ற நன்மையை  நினைச்சு, பகவான்கிட்ட நாம நன்றியோட இருக்கணும். அந்த மாதிரி ஒரு, sense of gratitude இருந்தா அந்த தெய்வத்தோட பெருமை புரியும், loyalty இல்லாம ஒவ்வொரு இடமா, மாத்தி மாத்தி போயிண்டு இருக்க மாட்டோம். அந்த ஆனந்தா வராரா, இந்த யோகி வராரா அப்படின்னு போயிண்டு இருக்க மாட்டோம். அதே வார்த்தையை அபிராமி அந்தாதில ஒரு பாட்டுலயும் சொல்றார்.

பதத்தே உருகி நின் பாதத்திலே மன பற்றி உன்றன்

இத்தே ஒழுக அடிமை கொண்டாய் இனி யான் ஒருவர்

மதத்தே மதிமயங்கேன் அவர் போன வழியும் செல்லேன்

முதத்தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே.

அப்படீன்னு உன்னுடைய பாதத்துல எனக்கு மனசு வெக்கறதுக்கும், உன்னை வழி படறதுக்கு, வழி என்னன்னு காமிச்சுக் கொடுத்த. என்னை அடிமையா நீ ஏத்துண்டுட்ட. இனிமே இன்னொருத்தர் மதத்துல நான் மயங்க மாட்டேன், இந்த வழி, அந்த வழின்னா எனக்கு வேண்டாம். நான் அந்த வழில போகவும் மாட்டேன், மூவருக்கும் தேவருக்கும், எல்லாருக்கும் மேலானவள் நீ. உன்னுடைய முகிழ்நகையே, அப்டீங்கறார். நகைன்னா, மந்தஹாசம். அந்த மந்தஹாசம் மலருகிதாம். அந்த மலரும் மந்தஹாசத்தை, தேவர்களும் மூவர்களும் போற்றுகிறார்கள். அப்பேற்பட்ட, உன்னுடைய  பாதத்துல நான் அடிமையா இருக்கக் கத்துண்டுட்டேன், இன்னொருத்தர் கிட்ட போக மாட்டேன் அப்படீன்னு சொல்றார். இது நான் ஸ்வாமிகள்கிட்ட பாத்துருக்கேன். மஹாபெரியவா தான் தெய்வம், இன்னொர்த்தரை, அவர் அந்த இடத்துல வைக்க மாட்டார். இதுனாலதான் பெரியவா  கூப்பிட்டு, அவருக்கு அனுக்ருஹம் பண்ணார். அந்த மாதிரி நமக்கும், பெரியவா மேல பக்தி வரதுக்கு, ஸ்வாமிகள் அனுக்ருஹம் பண்ணனும், சீதா தேவியினுடைய, ராம பக்திதான் அதுக்கு, ஒரு உதாரணமா, அடையாளமா வெச்சுக்கணும்.

ஸ்வாமிகள் இன்னொண்ணு சொல்வார், வால்மீகி ராமாயணம் பாராயணம் பண்ணிண்டு, ராமர் கைகேயிகிட்ட சொல்ற வார்த்தைகள்

अहं हि वचनाद्राज्ञः पतेयमपि पावके। भक्षयेयं विषं तीक्ष्णं मज्जेयमपि चार्णवे।।

நான் அப்பாவுடைய வார்த்தைக்காக, நெருப்புலயும் குதிப்பேன், விஷத்தையும் சாப்பிடுவேன், கடல்ல போயி, விழுவேன், அதனால நீ, அப்பா பேச்சை நான் கேட்பேனான்னு, நினைக்காதே, நான் இதோ இப்பவே கிளம்பறேன், காட்டுக்கு. அப்படீன்னு, சொல்றார். அந்த மாதிரி ஸ்லோகங்கள். இன்னிக்கு, சீதா தேவி சொன்னான்னு, படிச்சோமே,
தீனோ வா ராஜ்ய ஹீனோ வா யோ மே பர்த்தா ஸ மே குரு: |
தம் நித்யம் அனுரக்தாஸ்மி யதா சூர்யம் சுவர்ச்சலா ||
அப்படீன்னு, என் கணவன் ஏழையா போனாலும், நான், அவனையே, என் தெய்வமாகக் கொள்வேன், அப்படீன்னு, சீதா தேவி சொன்ன இந்த மாதிரி ஸ்லோகங்கள் எல்லாம் படிச்சுண்டு இருந்தா, நமக்கும் சொன்ன பேச்சைக்  கேட்கக் கூடிய பிள்ளைகளும்,  நம்மகிட்ட, கஷ்டத்துலயோ, நஷ்டத்துலயோ, எப்படி இருந்தாலும் அன்பு காட்டற மனைவியும், அமைவா. அதுக்கு ஸ்வாமிகள் சொல்வார், “அறுவது வயசு ஆன பின்னக் கூட, கணவருக்கு heart attack எல்லாம் வந்து ரொம்ப கஷ்டப் பட்டுண்டு இருப்பார். இருந்தாலும், “மாத்திரை எடுத்து வெச்சிருக்கேன், கொஞ்சம் வேலைக்குப் போயிட்டு வந்துடுங்கோ”, அப்டீன்னு, அவ்வளோ பணத்துல ஆசை பட்டுண்டு, சில பெண்கள் இருப்பா. அப்படி இல்லாம, ஐம்பது வயசுலயே, “போறும்னா! நீங்க ராமாயணம் படிச்சுண்டு இருங்கோ, உங்களுக்கு சுந்தர காண்டம் தான் ரொம்ப பிடிச்சது, ராமர் காப்பாத்துவார்”. அப்படீன்னு மனைவி சொல்வா. பையனும், “ஆமாம்பா, நானும் இன்னும்  ரெண்டு வருஷத்துல வேலைக்குப் போயிடுவேன், எல்லாம் பாத்துக்கலாம்ப்பா, நீ ராமாயணம் படி” அப்படீன்னு சொல்வான், அப்படீன்னு ஸ்வாமிகள் சொல்வார். இந்த இராமாயண ஸ்லோகங்களுக்கு, அவ்வளவு ஒரு அனுக்ரஹ சக்தி உண்டு அப்படீன்னு, ஸ்வாமிகள் சொல்வார்.

தீனோ வா ராஜ்ய ஹீனோ வா (16 min audio in tamil. same as the script above)

ஜானகி காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.