ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – பலச்ருதி

பலச்ருதி ராமாயணம் குறை போக்கும்

ராமாவதாரம் நிறைய பேர்களுடைய குறை போக்கியது. அதனால் ராம கதை, ராம நாமம், ராம தர்சனம், ராம பக்தி குறை போக்கும் என்பார் ஸ்வாமிகள்.

अमॊघं दर्शनं राम न च मॊघस्तव स्तव: ।

अमॊघास्तॆ भविष्यन्ति भक्तिमन्तस्च यॆ नरा: ॥

என்று ப்ரஹ்மாதி தேவர்கள் ராவண வதத்துக்கப்பறம் ராமரை கொண்டாடுகிறார்கள். அமோகம் (अमॊघं) amogham அமோஹம், என்றால் வீண்போகாது (won’t go waste).

ஸ்வாமிகள் இதை விஸ்தாரமாய் சொல்வார்.

 • தேவர்களுக்கு ராவணனனிடம் இருந்த பயம், விஷ்ணு பகவான் அவர்களுக்கு அபயம் குடுத்த உடனே நீங்கியது.
 • தசரதருக்கு கையில் எடுத்து கொஞ்ச ஒரு பிள்ளை இல்லையே என்ற குறை ராமாவதாரத்தால் நீங்கியது.
 • விச்வாமித்ரருக்கு யாகம் முடிக்க முடியவில்லையே என்ற குறை ராமர் யக்ஞ ரக்ஷணம் செய்ததால் நீங்கியது.
 • அஹல்யா சாப விமோசனம் மூலம் சதானந்தருக்கு தன் அம்மா அப்பா பிரிந்து இருக்கிறார்களே என்ற குறை நீங்கியது.
 • ஸீதைக்கு ஏற்ற மாப்பிள்ளை கிடைப்பானா என்ற கவலை ஜனக மன்னருக்கு ராமர் சிவ தனுசை வளைத்தவுடன் நீங்கியது.
 • விராதனுக்கும் கபந்தனுக்கும் ராமர் சாப விமோசனம் அளித்தார்
 • கர தூஷணாதி 14000 ராக்ஷஸர்கள் வதத்தால் தண்டகா வனத்து ரிஷிகளுடைய பயம் நீங்கியது.
 • சரபங்கர், ஸுதீக்ஷ்ணர், சபரி போன்றவர்களுடைய தபஸ் ராம தர்சனத்தல் முழுமை ஆனது
 • ரிஷ்யமூக மலையில் ஔந்து கொண்டிருந்த ஸுக்ரீவனுக்கு “இப்படியே இந்த மலையிலேயே வாழ்க்கை முழுக்க போயிடுமோ” என்ற கவலை ராமர் வாலி வதம் செய்ததால் நீங்கியது.
 • வானரர்களுக்கு சீதை இருக்கும் இடத்தை சொன்னவுடன் சம்பாதிக்கு இறக்கை முளைத்து அந்த குறை தீர்ந்தது
 • ஹனுமாருடைய ராம பக்தியால் வானரர்கள் மட்டும் இல்லை, ராமருக்கும் ஸீதைக்குமே நிம்மதி ஏற்பட்டது
 • மைனாக மலை ராமகார்யமாய் போகும் ஹனுமாருக்கு ஸஹாயம் பண்ணினதால், இந்த்ரன் அபயம் குடுத்தான். கடலுக்குள்ளயே ஔஞ்சுண்டு இருக்கோமே என்ற அதன் குறை நீங்கியது.
 • விபீŸணன் ராமரை சரணாகதி பண்ணினதால், லங்கைக்கு ராஜாவாகி, ராவணனால் எற்பட்ட அவமானம் நீங்கியது.
 • இந்த்ரஜித், கும்பகர்ணன் வதத்தால் தேவர்கள் பயம் நீங்கியது. ராவண வதத்தால் 14 உலகமும் நிம்மதி அடைந்தது
 • ராமர் திரும்ப வந்து ராஜ்யத்தை ஏற்றுக் கொண்டதால் பரதனுக்கும் அயோத்தி ஜனங்களுக்கும் ராமரை பிரிந்து 14 வருஷம் இருந்த குறை நீங்கியது.

நாமும் ராம கதையை, ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அதை வாழ்ந்து காட்டிய மஹத்துவத்தைப் பேசிக் கொண்டு ராம ராஜ்யத்தில் இருப்பதால், நமக்கும் ஒரு குறையும் இல்லை.

முடிவுரை

ஸ்வாமிகள் கிட்ட ஒருத்தர் ‘நீங்க எத்தனையோ ஜன்மங்களாக ராமாயணம் பாகவதம் படிச்சிருக்கணம். அதனால் தான் இப்படி விஸேஷ அர்த்தங்கள் சொல்ல முடிகிறது’ என்று சொன்னார். ஸ்வாமிகள் ‘நீங்க சொல்றது வாஸ்தவமா இருக்கலாம். ஆனா அப்படி ராமாயணம் படிச்சுட்டு, மீண்டும் ஒரு ஜன்மா எடுத்து வந்து இவ்வளவு கஷ்டப் படறேன் என்றால், அந்த வாட்டி ராமாயணத்தை சரியா உபாசனை பண்ணாம பஹிர்முகமாக, பணம் புகழுக்கு ராமாயணத்தை வித்துண்டு இருந்திருப்பேன். இந்த ஜன்மத்திலயாவது ஒழுங்கா இருந்து, ராமர் திருவடிகளில் போய்ச் சேரவேண்டும்’ என்று சொன்னார். அது நம்ம எல்லாருக்கும் பொருந்துமே!

ஸ்வாமிகள் ஒரு வண்டு மாதிரி ராமாயண வனத்திலிருந்து தேன் எடுத்து நமக்குக் குடுத்திருக்கார். நான் கிளி மாதிரி அவர் சொன்ன விஷயங்களைத் திருப்பிச் சொல்லறேன். அதற்கே, எனக்கு க்யாதி லாப பூஜை வர வாய்ப்பு இருக்கு. அது பின்னாடி நான் போனால், ஸ்வாமிகள் மேலே சொன்னதை, எனக்கு நினைவுபடுத்துங்கள். அதிலிருந்து மீண்டு ஸ்வாமிகளின் திருவடிகளில் சென்று சேருவோம்.

Audio of the above article – மேலே உள்ள கட்டுரையின் ஒலிப்பதிவு

Series Navigation<< ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – யுத்த காண்டம்ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் முழு புத்தகம் >>
Share

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.