Categories
mooka pancha shathi one slokam

காமாக்ஷி கடாக்ஷம் என்னும் அருமருந்து

கடாக்ஷ சதகம் 66வது ஸ்லோகம் பொருளுரை – காமாக்ஷி கடாக்ஷம் என்னும் அருமருந்து

कामाक्षि घोरभवरोगचिकित्सनार्थं
अभ्यर्थ्य देशिककटाक्षभिषक्प्रसादात् ।
तत्रापि देवि लभते सुकृती कदाचित्
अत्यन्त दुर्लभमपाङ्गमहौषधं ते ॥

காமாக்ஷி கோ⁴ரப⁴வரோக³சிகித்ஸனார்த²ம்
அப்⁴யர்த்²ய தே³ஶிககடாக்ஷபி⁴ஷக்ப்ரஸாதா³த் ।தத்ராபி தே ³வி லப⁴ தே ஸுக்ருʼதீகதா³சித்அத்யந்த து³ர்லப⁴மபாங்க³மபஹௌஷத⁴ம் தே ॥ 66 ॥

இது கடாக்ஷ சதகத்துல 66வது ஸ்லோகம்.

“கோ⁴ரப⁴வரோக³சிகித்ஸனார்த²ம்” – கோரமான பவ ரோகம். இந்த ஜன்மாவே ஒரு வ்யாதியாட்டம் வந்திருக்கு. இது ஒரு கோரமான வ்யாதி,அப்படின்னு எல்லாருக்கும் தோணறதில்ல. ஏதோ வந்து பொறந்துதிருக்கோம்.இதுல என்ன சுகப்பட முடியும்னு தேடி அலைஞ்சிண்டே இருக்கோம். ஆனா இதுல சுகம் இல்ல.

“ஒருபொழுதும் இருசரண நேசத்தே வைத்து உணரேனே

உனது பழனி மலை எனும் ஊரை சேவித்து அறியேனே

பெருபுவியில் உயர்வரிய வாழ்வை தீரக்குறியேனே

பிறவி அற நினைகுவனென் ஆசைப்பாடை தவிரேனோ”

அப்படின்னு அருணகிரிநாதர் பாடறார்.  “பெருபுவியில் உயர்வரிய வாழ்வு”  – இதுல உயர்வுனு எதுவும் கிடையாது. படிச்சு முடிச்சா ஒரு உயர்வு, கல்யாணம் ஆச்சுன்னா ஒரு உயர்வு,பணம் சம்பாதிச்சு வீடு கட்டினா ஒரு உயர்வு அப்படினெல்லாம் ஒரு பிரமை. நாம ஒரு சந்தோஷத்தை தேடறோம். ஆனா துக்கம் நம்மல துரத்திண்டே தான் இருக்கு. கடைசில இதெல்லாம் விட்டுட்டு காலமா போறது, திரும்பவும்  Phd படிச்சிருந்தாலும் திரும்ப வந்து பொறந்தா அ,ஆ,இ.ஈ லேந்து கத்துக்க வேண்டியதுதான், கோடீஸ்வரனானாலும் மொதலேந்து சம்பாதிக்க வேண்டிதான். அப்படி இதுல உயர்வு ஒண்ணும் தெரியல. இத முடிச்சிக்கறதுக்கு “பிறவி அற நினைகுவன் என் ஆசைப்பாடை தவிரேனோ”  – இந்த பிறவியை போக்கிக்கறதுக்கு, பக்தி பண்ணி உலக விஷயத்துல நான் ஆசையை தவிர்க்க மாட்டேனா. அதுக்கு உன்னுடைய பழனி மலைக்கு வந்து உன்னை தரிசனம் பண்ணி உன்னுடைய இரு சரணங்களை ஒரு பொழுதாவது மனசுல நிறுத்தி உன்னை பாட மாட்டேனா, அப்படின்னு சொல்றார் பழனி முருகன்கிட்ட.

அப்படி, மஹான்கள் தான் இந்த சம்சாரம்கறது ஒரு கோரமான வ்யாதி, இதுக்கு சிகித்ஸை வேணும் அப்படிங்கற நாட்டம், ஞான நாட்டம் வறதுங்கறது ஒரு பெரிய பாக்கியம். உள்ளுக்குள்ள ஏதோ ஒரு பெரிய lacuna, ஒரு வெறுமை. எவ்ளோ அன்பு வெச்சாலும் எவ்ளோ சம்பாதிச்சாலும் ஒரு வெறுமை இருக்குங்கறது ஒரு அனுக்கிரஹம்.போடப்போட அது சாப்டுண்டே இருக்கு. அப்புறம் ஒரு emptiness வந்துடறது அப்படிங்கறது ஒரு அனுக்கிரஹம்.அப்படி இருக்கறவா அந்த உண்மையை தேடும்போது ஒரு ஸத்குரு  கிடைச்சார்னா அது ஒரு பெரிய அனுக்கிரஹம்.

“மஹாபுருஷ சம்ச்ரய:”  – மஹாபுருஷர் ஒருத்தர தரிசனம் பண்ணா, அவாகிட்ட ரொம்ப பவ்யமா நாம் சிஸ்ரூஷை பண்ணா, அவா ரொம்ப காலத்துக்கப்புறம் நமக்கு ஒரு மருந்து குடுக்கறா, அப்படிங்கறார் இந்த ஸ்லோகத்துல மூக கவி.

இந்த வைத்தியர், மருந்து அப்படிங்கற example ரொம்ப அழகா  இருக்கு. ரொம்ப  உபயோகமா  இருக்கு . இது மூலமாவே நெறைய தெரிஞ்சுக்கலாம். நம்மல்லாம் இந்த காலத்துல என்ன பண்றோம்? ஒரு வைத்தியர் கிட்ட போறோம், அப்புறம் இன்னொருத்தர் கிட்ட போறோம் அப்படி வைத்தியர்  மாத்திண்டே இருக்கோம்.அப்படி பண்ண கூடாது. Family Doctor ங்கற மாதிரி ஏதாவது ஒரு வைத்தியரை பாத்து, அவர்கிட்ட நம்பிக்கை வைக்கணும். நம்ப உடம்பையே அவர்கிட்ட ஒப்படைக்க போறோம். அவர், என்ன வேண்ணா  பண்ணலாம். அதனால அவர் மேல நம்பிக்கை வைக்கணும். அந்த நம்பிக்கை வர அளவுக்கு நம்ப அவர பத்தி தெரிஞ்சுக்கணும். shopping மாதிரி பண்ணிண்டே இருக்க கூடாது, குரு shoppingம் பண்ணக்கூடாது . ஒரு குரு கிட்ட நம்பிக்கை வந்த ஒடனே அவர்கிட்ட நம்மள ஒப்படைச்சிடணும். அவர் சொல்றத கேக்கணும். அவர் குடுத்த மருந்த விடாம சாப்பிடணும். அவர் சொல்ற பத்தியத்தை follow பண்ணனும். அவர் ரொம்ப ஒல்லியா இருக்க நன்னா சாப்பிடுன்னு சொன்னா அத சாப்பிடணும். நீ ரொம்ப குண்டா இருக்க, இதெல்லாம் சாப்பிடாத avoid பண்ணுன்னு சொன்னா அதையும் கேக்கணும் . அந்த மாதிரி ஒரு reservation, மனசுல நமக்கு ஒரு opinion இல்லாம அவர்கிட்ட நம்ப ஒடம்ப ஒப்படைச்சிக்கணும். இத நான் ஸ்வாமிகள் கிட்ட பாத்திருக்கேன். அவர் டாக்டர் சொன்னத அப்படியே follow பண்ணுவார். ரொம்ப ஆஸ்ச்சர்யமா இருக்கும்.

அந்த மாதிரி ஒரு குருகிட்ட நம்பள ஒப்படைச்சிக்கணும்.சீதா தேவி மொதல்ல ஹனுமாரைப் பாத்தபோது குரங்க பாத்தேனேனு சந்தேக படறா.அப்புறம் இராவணன் வந்திருக்கானோனு பயப்படறா. ஆனா ராம கதையை ஹனுமார் சொன்ன பின்ன, அவரோட குணங்களை விவரிச்ச பின்ன நம்பிக்கை வந்துடறது. அப்புறம் அங்குலீயம் குடுத்து ராம தூதனா வந்திருக்கேம்மான்ன ஒடனே ஆசீர்வாதம் பண்றா. அதுக்கப்புறம் தன்னுடைய மனசை திறந்து எல்லாத்தையும் சொல்றா சீதை. அவ அந்த காக்கை வந்தது ஹிம்சை பண்ணித்து, ராமர் வந்து ப்ரம்மாஸ்திரம் போட்டார் அப்படிங்கறத சொல்றா,

அந்த எடத்துல ஒரே ஒரு சின்ன ஸ்லோகம் இருக்கும். ஒரு வாட்டி என்னுடைய நெத்தியில திலகம் அழிஞ்ச போது ராமர் ஒரு சிவப்பு கல்லை தீட்டி அத எடுத்து என் நெத்தியில திலகமா இட்டு கன்னத்துலயும் பூசி விட்டார்.இத அவருக்கு ஞாபக படுத்து அப்படிங்கறா. இது வந்து ராமருக்கும் சீதைக்கும் நடந்த ஒரு intimate ஆன ஒரு  moment. அத ராமர்கிட்ட சொன்ன அவருக்கு தன் மேல இருக்கற அன்பு திரும்பவும் வளரும் அப்படின்னு அவளோட ஏக்கம். அப்படி தன்னுடைய மனசுல இருக்கறதெல்லாம் ஹனுமார்கிட்ட கொட்டறா.

அப்படி ஒரு குருகிட்ட நம்ப நம்பிக்கை வைக்கணும். அவர் கிட்ட ரொம்ப பொறுமையா இருக்கணும்.நமக்கு அவர் குடுக்கற மருந்து நமக்கு’இருக்கற ஜுர    வேகத்துல கசக்கக்கூட செய்யலாம். அவர் சொல்ற methods, அவர் இத பண்ணு, அத பண்ணுன்னு சொல்றதெல்லாம் நமக்கு.ரொம்ப சந்தேகம் வரும். இப்டி சொல்லறாரே, அப்படி சொல்லறாரேன்னு. doctors சொல்ற methods இந்த காலத்துல computerல பாத்துண்டு போய் அவருக்கே வைத்தியம் சொல்ற காலமா இருக்கு. அப்படி ஒரு சத்குரு கிட்ட பண்ணக்கூடாது. அவா சொன்னத நம்ம கேக்கணும். அவா மத்தவாளுக்கு என்ன பண்றார்கிறதையும் பாக்கக்கூடாது. அந்த குரு ஒவ்வொருத்தர ஒவ்வொரு மாதிரி treat பண்ணுவார். ஓவ்வொருத்தருக்கு ஒவ்வொரு வ்யாதி.ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு சிகித்ஸை.  அந்த மாதிரி அந்த குரு நமக்கு என்ன சொன்னாரோ அத நம்ப கேட்டுக்கணும். அந்த மருந்து மேல ரொம்ப நம்பிக்கை வைக்கணும்.

சிவன் கோயில்ல போய் விளக்கு ஏத்து அப்படினு சிவன் SAR ஒரு வாட்டி என்கிட்ட சொன்னார். பிள்ளையார் படத்தை வெச்சுண்டு அதுக்கு தினமும் அருகம்புல் போடு அப்படின்னு ஸ்வாமிகள் ஒரு தரம் சொல்லிருக்கார். எனக்கு மூக பஞ்ச சதி படிக்க சொன்னார்.அப்படி அவா குடுக்கற அந்த மருந்து மேல நம்பிக்கை’வெச்சா ஒரு நாள் விடாம அந்த மருந்தை சாப்டா நம்முடைய பவ ரோகம் போகும்.நமக்கு அந்த காமாக்ஷியோட கடாக்ஷம் கிடைக்கும்.

ஞான வைராக்கியம், இந்த மருந்து ஒரு மாயம் பண்றது. அதை பாகவதத்தில் 11வது ஸ்கந்ததுல பரீக்ஷித் கிட்ட சுகர் சொல்றார்.  ஒருவன் அன்னத்தை சாப்பிடும்போது ஒவ்வொரு வாய் அன்னம் சாப்பிடும்போதும் அவனுடைய பசி போறது, அவனுக்கு திருப்தி ஏற்படறது, போஷாக்கு ஏற்படறது.ருசியா இருக்கு நன்னா இருக்கு அப்படின்னு சாப்பிடறான், உடம்புக்கு தெம்பும் வரது. இது மூணும் simultaneousஆ ஒரே நேரத்துல நடக்கறது. அவன் சாப்பிடும்போது அவன் சாப்ட திருப்தி, பசி போறது அவனுக்கு புஷ்டி ஏற்படறது “துஷ்டி புஷ்டி க்ஷுதா நிவ்ருத்தி” , இதே மாதிரி பகவானுடைய பஜனத்தை பண்ணா அந்த குரு சொன்ன அந்த மருந்தை தினமும் சாப்பிட்டா ஒருவனுக்கு “பக்தி , விரக்தி, பகவத் ப்ரபோத:” – அவனுக்கு அந்த தெய்வத்தினிடத்தில் பக்தி ஜாஸ்தி ஆகும், உலக விஷயங்களில் இருந்து மனசு திருப்பும், விரக்தி ஏற்படும், அந்த பகவானுடைய ஞானமும் உண்டாகும் . இது மூணும் simultaneousஆ நடக்கும். பண்ண வேண்டியது அந்த பகவத் பஜனம் ஒண்ணு தான் அப்படின்னு சொல்றார்.

அத மாதிரி இந்த, மத்த மருந்தெல்லாம் சாப்டுண்டே இருக்க வேண்டாம். இந்த குரு சொன்ன மருந்த, நமக்கு அந்த பூர்ண ஞானம் ஏற்படற வறைக்கும் சாப்டுண்டே இருந்தா ஒவ்வொருநாளும் அந்த மருந்தை சாப்பிடும் போதும் நமக்கு இந்த பலன் ஏற்படும். பக்தி ஜாஸ்தி ஆகும், உலக விஷயங்களில் இருந்து விரக்தி ஏற்படும், பகவானுடைய ப்ரபோதம் வரும். பூர்ணமா காமாக்ஷியாகவே   ஆற வரைக்கும் அந்த காமாக்ஷி ஸ்தோத்ரத்தை படிச்சுண்டே போகணும். அப்படி அந்த மாதிரி இவ்ளோ விஷயங்கள் இன்னிக்கி இந்த ஸ்லோகத்துலேந்து வைத்தியன் மருந்துக்கற example லேந்து தோணித்து.

அருணகிரிநாதர் மாதிரி மஹாபெரியவா மாதிரி யாரோ அவதார மஹானா இருக்கறவாளுக்குதான்  ஒரு குரு இல்லாம தானா ஞானம் ஏற்படும்.அவாளே முருகனை குருவா எடுத்துண்டார் அப்படி அருணகிரிநாதர். அந்த மாதிரி நமக்கு உலகத்துல ஒரு வாழ்ந்து காட்டின மஹான் வேண்டிருக்கு.அது நம்ம கண்ணு முன்னால இருக்கறவாளா இருக்க வேண்டிதில்ல. அந்த மூக பஞ்ச சதிய பண்ணின மூக கவியவே குருவா நெனைச்சுக்கலாம். மஹாபெரியவா காமாக்ஷியோட வடிவம்.அவர குருவா நெனைச்சுக்கலாம் எனக்கு ஸ்வாமிகள் கண்ணு முன்னாடி கிடைச்சார். தற்காலத்துல பழகறவால் கிட்ட நம்மால மஹான்கள் கிட்ட அன்பு வெக்கறதோ அந்த நம்பிக்கை வெக்கறதோ கஷ்டம் தான். நம்ப அந்த நம்பிக்கை வெச்சா அந்த குருவுக்கு யோக்கியதை இருக்கோ இல்லையோ, பகவான் அந்த குரு மூலமா நமக்கு அனுக்கிரஹம் பண்ணுவார். ஆனா நம்மால அந்த அளவுக்கு நம்பிக்கை வெக்க முடிலைன்னா. நம்ப மஹாபெரியவாளையே. இந்த தலைமுறைக்கே ஒரு இந்த ஆயிரம் வருஷங்கள்லேயே  ஒரு பெரிய மஹானா அவதாரம் பண்ணி. நமக்கு அனுக்கிரஹம் பண்ணிருக்கார். அவரை குருவா வெச்சிண்டு நம்ப ஆதி சங்கர ஸ்தோத்திரங்கள் எல்லாம் படிச்சா, அந்த தோடகாஷ்டகம் சொல்லி நமஸ்காரம் பண்ணா பெரியவளோட அனுக்கிரஹம் கிடைக்கும். அந்த மாதிரி நம்பிக்கையா நம்முடைய பஜனத்தை பண்ணிண்டே போவோம்.

நம: பார்வதி பதயே !!! ஹர ஹர மஹாதேவ !!

One reply on “காமாக்ஷி கடாக்ஷம் என்னும் அருமருந்து”

நிலையாத சமுத்திரமான சம்சாரத் துறைக்கணிற் மூழ்கி
நிசமானதெனப்பலபேசி யதனூடே
நெடு நாளுமுழைப் புளதாகி பெரியோகளிடைக் கரவாகி
நினைவால் நினடித் தொழில்பேணி துதியாமல்
தலையானௌடற்பிணி யூறி பவ நோயினலைபல வேகி
சலமான பயித்தியமாகி தடுமாறி
தவியாமல் பிறப்பையு நாடி அதுவேரை யறுத்துனை யோதி
தலமீதில்பிழைத்திடவே நினருள் தாராய்
இப்படியெல்லாம்சொல்லிகடைசியில்

பவரோக வையிதிய நாத பெருமாளே என்றுமுடிப்பார் அருணகிரியார்!
எத்தனை பொருள் பொதிந்தது!

பகவானுடைய அருள்கடாக்ஷம்கிடைத்தால்மேலே சொன்ன
எல்லா வினைகளையும் களைந்து, பவ ரோக வைத்ய நாத
பெருமாளாய் நம்மை சம்சார சாகரம் என்ற நோய்யிருந்து
விடுவிப்பார்!
அதற்கு பூர்ண பக்தியும் ,ச்ரத்தையும் total surrender
என்று சொல்லப்பட்ட சரணாகதமும் தேவை! steadfast
clinging to HIS Holy Feet!!

கடாக்ஷ சதகத்தின் இந்த ஸ்லோகம் மேலே சொன்ன
திருப்புகழைன் பொருளை ஒத்ததாக இருக்கிறது!
ஞானியர் அனைவரும் நினைப்பது ஒரே போல்
இருக்கும்!

மஹா பெரியவா காலத்தில் வாழ்ந்த நமக்கு இந்த
ஸ்லோகங்களே அரு மருந்து!
பெரியவா உடம்புக்கு வந்தால் தனக்கு ஒன்றுமே தெரியாதது
போல் டாக்டர் சொன்னதை அப்படியே follow பண்ணுவார்!
Dr. Badrinath கண் ஆபரேஷன் முடிந்த பின்
க்ரஹண காலத்தில் பெரியவா ஸ்னானம் செய்துடப்போறாரே
என்ற கவலையில் விடியகாலம் சென்னையிலிருந்து காரில்
ஓடி வரார், பெரியவா கேக்கறார்” ஏன் இந்த வேளைலே, நான்
ஸ்னானம் செய்துடுவேன்னு ஓடி வந்தியா?” ந்னு
“நான் அப்படிப் பண்ணமாட்டேன் ஏன்னா எனக்குக்கண்
கெட்டால் உன் பெயர் கெடும் நீ வளரும் டாக்டர் உன் பெயர்
கெட்டால் உன் தொழி நன்னா நடக்காது” ந்னு சொல்றார்!
அப்படிப்பட்ட நம்பிக்கை ச்ரத்தை!!
நாம்கத்துக்க எவ்வளவோ விஷயம் இருக்கு!

ராமாயணத்தில் சீதா தன் அந்தரங்கத்தை குருவாக
வந்த ஹனுமானிடம் சொல்லும் கட்டம் மனம்
நெகிழ வைக்கும் காட்சி !
நல்ல உபன்யாசம் உபமானங்களுடன் குரல் வளமும்
நேர்த்தியான முறையில் விளக்கமும் அபாரம்!!
ஜய ஜய ஜகதம்ப சிவே

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.