ராமர் தசரதரிடம் விடைபெறுகிறார்

65. ராமர் தன் செல்வத்தை பிரம்மணர்களுக்கும் ஏழைகளுக்கும் யாத்ரா தானமாக அளிக்கிறார். தன் சொந்த பலத்தை நம்பாமல் தெய்வத்தையே நம்பி இருக்கும் த்ரிஜடர் என்ற ப்ராம்மணரின் தேஜஸை உலகிற்கு வெளிப்படுத்தி, அவருக்கு கணக்கற்ற பசுக்களை தானம் அளிக்கிறார்.  பிறகு தந்தையிடம் விடைபெற சீதையோடும் லக்ஷ்மணனோடும் ராமர் தசரதர் அரண்மனைக்கு செல்கிறார்.
[ராமர் தன் செல்வத்தை தானமளிக்கிறார்]

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

66. ராமர் வனவாசம் போவதை அறிந்த அயோத்யா நகர ஜனங்கள் ராமருடைய குணங்களை புகழ்ந்து ‘நாம் ராமரோடு காட்டிற்கு சென்று விடலாம். இந்த அயோத்தி பாழடைந்து காடாகட்டும். ராமர் இருக்குமிடமே அயோத்தி ஆகிவிடும்’ என்கிறார்கள். ராமர், சுமந்திரர் மூலம் தன் வருகையை தெரிவித்து தசரதரை தரிசிக்கிறார். தசரதர் மயங்கி விழ ராமரும் லக்ஷ்மணரும் அவரை தூக்கி படுக்கையில் கிடத்துகிறார்கள்.
[அயோத்யா ஜனங்களின் புலம்பல்]

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

67. மயக்கம் தெளிந்து தசரதர் ராமனிடம் ‘ராமா, நான் கைகேயினால் வஞ்சிக்கப் பட்டேன்.என்னை சிறையில் அடைத்து விட்டு நீ அரசனாகி விடு’ என்கிறார். ராமர் ‘தந்தையே, உங்கள் சத்தியத்திற்காக நான் எதையும் கைவிடத் தயாராக உள்ளேன். ராஜ்யத்தை பரதனுக்கு அளியுங்கள். நான் வனவாசத்தை முடித்துவிட்டு விரைவில் திரும்ப வந்து உங்கள் பாதங்களைப் பற்றுவேன்’ என்று கூறுகிறார்.
[ராமர் தசரதரிடம் உத்தரவு பெற்றார்]

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

68. ‘தசரதரிடம் எந்த தவறுமில்லை. கைகேயி பிடிவாதத்தால் ராமர் வனவாசம் போகிறார்’ என்று புரிந்து கொண்ட சுமந்த்ரர் கைகேயியை கடிந்து பேசுகிறார் ‘இந்திரனைப் போன்ற பெருமை படைத்த தசரதரை உன் பிடிவாதத்தால் கலங்கச் செய்கிறாய். அது பெரும் தவறு. உன் அம்மாவுடைய பிடிவாத குணம் உனக்கு அமைந்துள்ளது. அதனால் உனக்கு கடுமையான கெட்ட பெயர் தான் ஏற்படும். இப்படி செய்யாதே. தசரதர் வாக்கு மாற மாட்டார். நீயே மனதை மாற்றிக் கொண்டு ராமனுக்கு பட்டம் சூட்டு.’ என்று கூறுகிறார். கைகேயி அதற்கு செவி சாய்க்கவில்லை.
[சுமந்த்ரர் கைகேயியை கோபித்தல்]

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

69. தசரதர் தன்னுடைய சொந்த செல்வத்தை, வனம் செல்லும் ராமனுக்கு அளிக்க விரும்புகிறார். அனால் கைகேயி அதைத் தடுக்கிறாள். ராமன் ‘யானையைக் கொடுத்த பின் அதைக் கட்டும் சங்கிலிக்கு ஆசைப் படுவரோ? ராஜ்யத்தைக் கொடுத்த பின் எனக்கு செல்வம் எதற்கு?’ என்று சொல்லி விடுகிறான். ராமனிடத்தில் என்ன குற்றம் கண்டாய் என்று கேட்கும் மந்திரிக்கு கைகேயி ஏதும் பதில் சொல்லவில்லை.
[ராமனுடைய வைராக்கியம்]

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.