Categories
Bala Kandam

கங்காவதரணம்

24. சகர மன்னரும், அம்சுமானும், திலீபனும் முயற்சி செய்த பின் பகீரதன் நாட்டைத் துறந்து காடு சென்று கடும் தவம் செய்து பிரம்ம தேவரை வேண்ட அவரும் மகிழ்ந்து கங்கையை பூமிக்கு அனுப்ப இசைகிறார். ஆனால் கங்கை விழும் வேகத்தை தாங்க பரமேஸ்வரன் ஒருவரால் தான் முடியும் என்று பிரம்மா சொல்ல பகீரதன் சிவபெருமானை வேண்டுகிறான். சிவபெருமான் கங்கையை தன் ஜடாபாரத்தில் தாங்கி பூமியில் விட, புண்ய கங்கை பூமியிலும், பாதாளத்திலும் ஓடி சகர புத்ரர்களை கரை சேர்க்கிறாள். [கங்காவதரணம் 8 min audio giving meaning of sargams 42, 43, 44 Balakamdam]

Categories
Bala Kandam

திருமுருகாற்றுப்படை


22. முருகப் பெருமானின் பெருமையை தமிழ்ப் புலவர்களும் பக்தியோடு பாடியுள்ளார்கள். அவற்றுள் நக்கீரர் அருளிய திருமுருகாற்றுப்படை மிகத் தொன்மை வாய்ந்தது. அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முதலான நூல்கள் முருகனின் மார்பில் தவழும் மதாணியின் நவரத்தினங்கள் . [திருமுருகாற்றுப்படை]

Categories
Bala Kandam

குமார சம்பவம்

21. சிவபெருமானின் தேஜஸை, அக்னி பகவான் கங்கையிடம் அளிக்கிறார். கங்கை அதை சரவணப் பொய்கையில் சேர்க்க, அங்கு முருகப் பெருமான் ஆறு குழந்தைகளாய் அவதரிக்கின்றார். பார்வதி தேவி அள்ளி எடுத்தவுடன் ஆறுமுகராக ஆகிறார். பின் தேவர்களுக்கு சேனாதிபதி ஆகி சூரபத்மனை சம்ஹாரம் செய்கிறார். [குமார சம்பவம்]

Categories
Bala Kandam

உமாம் லோகநமஸ்க்ருதாம்


20. விஸ்வாமித்ரர் இரவின் அழகை வர்ணித்து பின் குழந்தைகளை தூங்கச் சொல்கிறார். மறுநாள் கிளம்பி புண்ய நதியான கங்கைக் கரையை அடைகிறார்கள். ராமர் ‘கங்கை எப்படி மூவுலகிலும் ஓடுகிறது?’ என்று கேட்க முனிவர் ‘விரிவாக சொல்கிறேன் கேள். ஹிமவானின் மூத்த பெண் கங்கா தேவி. இளைய பெண் பார்வதி தேவி’ என்று சொல்லி பார்வதி தேவியின் கதையை ஆரம்பிக்கிறார். [உலகமெல்லாம் வணங்கும் உமா தேவி]