Categories
Govinda Damodara Swamigal

அருணகிரிநாதர் அருளிய திருவகுப்புகள் – பாராயண புத்தகம்


அருணகிரிநாதர் அருளிய பாடல்களில் திருவகுப்புகள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. பெண் மையல் போக வேண்டும், மரண பயம் போக வேண்டும் போன்ற பிரார்த்தனைகள் முடிந்த ஒரு அநுபூதி நிலையில், முருகப் பெருமானை, அவனுடைய திருப்பாதங்களை, வேலை, மயிலை, காமாக்ஷி அம்பாளை, வள்ளியம்மை பெற்ற அனுக்ரஹத்தை, போற்றும் தன்னிகரற்ற துதிப் பாடல்களாக இவை அமைந்துள்ளன.  இவற்றை அதிகமாக பாராயணம் பண்ண வேண்டும் என்ற ஆவலில், முதலில் விநாயகர் அகவலையும், பின்னர் ஆறு திருவகுப்புப் பாடல்களையும், அடுத்து அறுபடை வீடு பஞ்ச பூத ஸ்தலங்கள் திருப்புகழ், நடுவில் கந்தரனுபூதி, முடிவில் திருவெழுக்கூற்றிருக்கை பாடலையும் அமைத்து, இடையிடையில் திருப்புகழ், அநுபூதி, அலங்காரப் பாடல்களையும் சேர்த்து ஒரு பத்ததி போல இந்த புத்தகம் அமைந்துள்ளது. இதை ஸ்வாமிகளிடம் நிறைய முறை படித்து இருக்கிறேன். அவரும் மீண்டும் மீண்டும் விரும்பி கேட்டு, நிறைய ஞானக் கருத்துகளை பகிர்ந்து கொள்வார். அவற்றில் சிலவற்றை புத்தகத்தின் முடிவில் சேர்த்து இருக்கிறேன். படித்து இன்புறுவோம்.

அருணகிரிநாதர் அருளிய திருவகுப்புகள் பாராயண புத்தகம்

இதே புத்தகத்தை Print செய்தால், முதல் பக்கத்தில் நீங்கள் விரும்பும் முருகப்பெருமானின் உருவத்தை அமைத்துக் கொள்ளும் விதமாக, இடம் விட்டு, ஒரு copy இங்கே

அருணகிரிநாதர் அருளிய திருவகுப்புகள் பாராயண புத்தகம் (Blank cover page)

இதனுடன் தொடர்புள்ள மற்ற பதிவுகள்

மணி மந்திர ஔஷதம் எனப்படும் அருணகிரிநாதர் அருளிய திருவகுப்பு பாடல்கள் + ஒலிப்பதிவு

சீர் பாத வகுப்பு பொருளுரை ஒலிப்பதிவு; Meaning of Seer Pada Vaguppu audio link

அருணகிரிநாதர் அருளிய கந்தரனுபூதி ஒலிப்பதிவு (Kandar anubhoothi audio)

தேவேந்திர சங்க வகுப்பு

ஆத்மா த்வம் கிரிஜா மதி: வள்ளிமலை சுவாமிகளும் சேஷாத்ரி சுவாமிகளும்

அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் ஒலிப்பதிவு (Kandar alankaram audio)

6 replies on “அருணகிரிநாதர் அருளிய திருவகுப்புகள் – பாராயண புத்தகம்”

நமஸ்காரம். இன்று ஆடி கிருத்திகை…மனைவி குமரக்கோட்டம் சென்றுள்ளாள். தங்கள் மூலமாக கந்தகடவுள் என் இல்லம் தேடி வந்து விட்டான்..இதைவிட வேறென்ன வேண்டும். தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

உங்கள் சேவையைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. மிக்க நன்றி. நீங்கள் தயாரித்துள்ள கந்தர் அனுபூதி ஃபைலில் ‘விபாடனனே’ என்று இருக்கிறது. எனக்குத் தெரிந்தவரை அது ‘விபாடணனே’ ஆகும். சரி பார்த்து திருத்தமிருந்தால் ஆவன செய்ய வேண்டுகிறேன்.

அம்மா, எல்லா புத்தகங்களிலும் ‘விபாடணனே’, என்று கொடுத்து இருக்கிறது. ஆனால் ‘விபாடனனே’ என்பது தான் சரி. விபாடன: என்ற சம்ஸ்க்ருத சொல்லிற்கு ‘பிளந்து போடுபவன்’ என்று அர்த்தம்.
விபாடன:
விபாடன:
விபாடன:

மிக்க நன்றி, ஸ்வாமி. உங்கள் விளக்கம் அனைவருக்கும் பயனளிப்பது. நேரம் செலவிட்டு என் ஐயம் தீர்த்தமைக்கு நன்றி. உங்கள் மகத்தான சேவை தொடர பெரியவா அருள் புரிவார்.

விளக்கங்களை நாள் தவறாமல் அனுப்புவதற்கு மிக்க நன்றி. உங்கள் சேவைக்கு காணிக்கையாக நான் எவ்வாறு உதவ முடியும். மேலும் தங்களை நேரில் சந்திக்க முடியுமா

நான் சென்னையில் வசிக்கிறேன். அவசியம் சந்திக்கலாம். உங்களுக்கு என் தொலைபேசி எண்ணை அனுப்புகிறேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.