Categories
mooka pancha shathi one slokam

தவங்கள் செய்வார், மண் அளிக்கும் செல்வமோ பெறுவார்?


கடாக்ஷ சதகம் 62வது ஸ்லோகம் பொருளுரை – தவங்கள் செய்வார், மண் அளிக்கும் செல்வமோ பெறுவார்?

जन्तोः सकृत्प्रणमतो जगदीड्यतां च
तेजास्वितां च निशितां च मतिं सभायाम् ।
कामाक्षि माक्षिकझरीमिव वैखरीं च
लक्ष्मीं च पक्ष्मलयति क्षणवीक्षणं ते ॥                

4 replies on “தவங்கள் செய்வார், மண் அளிக்கும் செல்வமோ பெறுவார்?”

ஒரு முறை நமஸ்காரம் பண்றவாளுக்கு தேஜஸ், வாக்கு, புத்தி கூர்மை, செல்வம் எல்லாம் கிடைக்கறது சொல்ற அழகான ஸ்லோகம். 🙏🌸

ஆனால் எப்படிப்பட்ட கீர்த்தி, தேஜஸ், கல்வி, செல்வம் எல்லாம் கிடைக்க வேண்டிக்கணும்னு சிவன் சார் நமக்கு சொல்லித் தர்றது மிக அருமை. அருமையான மேற்கோள் 👌🙏🌸

மஹாபெரியவாளும் ‘ அகங்காரம் எல்லாம் அடிபட்டுப்போய்ப் பரமாத்ம வஸ்துவுடன் சேருகிற ஞானத்தைத் தரவே சகல வித்யைகளும் ஆதியில் ஏற்பட்டிருந்தன. வித்யையோடு விநயத்தையும் சொல்லிக் கொடுத்தா நம்முடைய முன்னோர்கள்: வித்யா விநய ஸம்பன்னே!’ னு சொல்றார். 🙏🌸

கூடவே ஆச்சார்யாள் கனகதாரா ஸ்தோத்திரத்தில் “உன்னை நமஸ்காரம் பண்ணிவிட்டால் போதும்; அந்த நமஸ்காரங்கள் சம்பத்து, சகல இந்திரிய சந்தோஷங்கள், சாம்ராஜ்யம் எல்லாம் தந்து விடும். ஆனால் இதெல்லாம் எனக்கு வேண்டாம். எனக்கு உன்னிடமிருந்து ஒரே ஒரு செல்வம்தான் வேண்டும். என் துரிதங்கள் – பாபங்கள் எல்லாவற்றையும் கல்லி எறிவதற்கும் உன்னை நமஸ்கரிப்பதே சாதனமாகிறது. செல்வ தேவதையான நீ எனக்குத் தருகிற செல்வம் இந்த நமஸ்காரம்தான். இது என்னை விட்டு நீங்காமல் இருக்கட்டும்” னு சொல்றதை மேற்கோள் காட்டி நாமும் இப்படிப்பட்ட பிரார்த்தனை செய்ய சொல்றார். 🙏🌸

தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வறியா தெய்வ வடிவும் தரும் நெஞ்சில்.வஞ்சமில்லா இனந்தரும் நல்லன ellaandharum அன்பர் எனபவர்க்கே கனந்தரும் பூங்குழலாள் அபிராமி க்கடைக் கண்களே என அபிராமி பாட்டர் அம்பாளின் கடாக்ஷம் வீக்ஷண்யத்தை ச்லாகிக்கிரார் !!
ஞானிகள் ஒரே போல் சிந்திக்கிறார்கள் என்பதன் எடுத்துக் காட்டு இந்தப்.பாடல் !
தஞ்சம் அடைந்தவர் அஞ்சேல் என அரவணைத்து தன் அபார கருணையால் ஞானம் அடையச் செய்யும் தாயல்லவா அன்னை பராசக்தி !!
அழகான ஸ்லோகம், நல்ல விளக்கம் !!
ஜய ஜய ஜகதம்ப சிவே…

ஸ்ரீ காமாக்ஷி பாதம் ஷரணம் !!

நமஸ்காரம் அண்ணா,
ஒவ்வொரு ஸ்லோகத்திலேயும் எத்தனை எத்தனை பொருள், எல்லாம் நம் மானிடர் உய்ய கருணை கடலான காமாக்ஷியே கவி வாக்கிலே வந்து கலந்து நின்று உள்ளார்.
அவை அனைத்தும் பொருள் விளக்கம் மட்டும் அல்லாது, ஒவ்வொன்றையும் பக்தி ரசத்துடன் கூடிய சாராக கொடுக்கும் உங்களுக்கு முதற்கண் வணக்கங்கள்.
ஸ்ரீ சார் குறிப்பிட்ட “அன்றும் இன்றும் ” என்ற தலைப்பில் வரும் முக்கிய விஷயங்கள், நம் தெய்வ மதத்திய ஆசாரம், சீலம், மற்றும் மனித பிறவி பயன் போன்றவற்றால் மிக கவர்ந்த பகுதி.
லக்ஷ்மி கடாக்ஷம் என்பது பணம், புகழ் பதவி அல்ல, மனம் நிறைந்த வாழ்க்கை முறை, சாஸ்திரம், தர்மத்தின் வழி போன்றவை நம் வழிகாட்டி. இது போன்ற சத் சங்கம் ஒவ்வொரு க்ஷணமும் கிடைக்க அந்த எல்லாம் வல்ல காமாக்ஷி, மஹா பெரியவா, ஸ்ரீ சிவன் சார், ஸ்ரீ ஸ்வாமிகள் அருள் வேண்டுகிறேன்.
🙏🙏 🌼 🌼

காமாக்ஷியின் கடைக்.கண்பார்வை, கடாக்ஷம் ஒரு வினாடி வணங்குபர்களின் மேல் பட்டால் போதும், யாவராலும் போற்றி வணங்கத் தக்க முறையில் மதிப்பான நிலை எய்துவர் !
தேவி உபாசகர்களை பார்த்த மாத்திரத்திலேயே அடையாளம் கண்டு கொள்ள முடியும் ! சபையில் பெரிதும் மதிக் கத்தக்க கூரிய ஆழ்ந்த புததி தென் போன்ற அருமையான வாக்கு ,மேலும் செல்வம் எல்லாம் பெற்று விளங்குவார்கள் !

அபிராமி பதிகத்தில் கடைசி பதிகமாக பாராயண பழன் ஒன்று இருக்கும்.
சகல செல்வங்களும் தரும் இமய கிரி ராஜா தனயை, மாதேவி நின்னை சத்தியமாய் நித்யம் உள்ளத்தில் துதிக்கும் அன்பர்களுக்கு மிகவும்
அகிலமதில் நோயின்மை, கல்வி ,தன தான்யம் அழகு,புகழ், ,பெருமை இளமை சந்தானம் வலி துணிவு, வாழ் நாள் வெற்றி ஆகு நல் நூழ் நுகர்ச்சி தொகை தரும் பதினாறு பேறும் தந்தருளி, நீ சுகானந்த வாழ்வளிப்பாய் சுகிர்த குணசாலி அனுகூலி, த்ரிசூலி மங்கள் விசாலி, மகவு நான் நீ தாய் அளிக்கொனாதோ மகிமை வளர் திருக் கடவூரில் வாழ் வாமி, சுப நேமி புகழ் நாமி சிவசாமி மகிழ் வாமி அபிராமி உமையே
என்ற பதிகம் அம்பாள் பக்தருக்கு கொடுக்கும்
செல்வம் அனைத்தும் பட்டியலிடுகிறது !
அம்பாள் திருவடி பற்றினால் நம் அனைத்தும் அடைவோம்,!

ஜய ஜய ஜகதம்ப சிவே….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.