Categories
mooka pancha shathi one slokam

காமாக்ஷி சரணம் ஞானத்தீயை வளர்க்கும் அரணி


பாதாரவிந்த சதகம் 80வது ஸ்லோகம் பொருளுரை – காமாக்ஷி சரணம் ஞானத்தீயை வளர்க்கும் அரணி

विराजन्ती शुक्तिर्नखकिरणमुक्तामणिततेः
विपत्पाथोराशौ तरिरपि नराणां प्रणमताम् ।
त्वदीयः कामाक्षि ध्रुवमलघुवह्निर्भववने
मुनीनां ज्ञानाग्नेररणिरयमङ्घ्रिर्विजयते ॥

3 replies on “காமாக்ஷி சரணம் ஞானத்தீயை வளர்க்கும் அரணி”

பெரியவா பாதம் ஷரணம்!
காமாட்சி பாதத்தை பற்றிக் கொள்வோம், காரியத்தின் இடையிடையே (interval) மஹா பெரியவா காட்டிய வழியில் ராம நாமா சொல்லி பழகுவோம். இறுதியில் இறை நினைவில் இருந்து, நாமாவை சொல்ல பிரார்த்தனை செய்வோம். மிக அருமையான உரை. பக்தி தேனை பருக நாளும் எதிர்நோக்குகிறேன். 💐

காமாக்ஷியின் பாதங்களின் நகங்கள் முத்துக்குப் பிறப்பிடமான முத்துச் சிப்பி !முத்துச் சிப்பிகள் கடலில் உண்டாவது . ஆனால் இந்த பாதங்களின் மகன்களான முத்துச் சிப்பிகள் சம்சாரம் எனும் கடலைக் கடப்பதற்கான தோணியாகும் !!
சம்சாரம் எனும் காட்டை அழிக்கும் காட்டுத் தீயாகும் ! முனிவர்கள் ஞானம் அடைய அதனைக் கடைந்து கொடுக்கும் அரணிக் கட்டையும் ஆகும் ! சிப்பிக்குள் ஒரு முத்துதான் இருக்கும். ஆனால் தேவியின் பாத கமலங்கள் ஒரே சிப்பிக்குள் பல முத்துக்களாகவும், பவக் கடலைக் கடக்க தெப்பமாகவும், சம்சார சாகரத்தில் ஏற்படும் துன்பங்களை எனும் காட்டை அழிக்கும் தீயாகவும், தீயை உற்பத்தி செய்யும் அரணிக் கட்டையாகவும் செயல்படுகிறது !!
இது அதிசயம் மட்டும் இல்லை உண்மையும் கூட என வியக்கிறார் கவி !
எத்தனை அழகான பொருள் பொதிந்த ஸ்லோகம் !
அவள் பாதத்தை சரணாகதி பண்ணினால் எல்லாத் துன்பமும் பஞ்சாய்ப் பறந்துவிடும் என்பது தாத்பரியம். உண்மையும் அதுவே !!
இங்கு துர்கா சந்திரா கலா ஸ்துதி அழகாக சொல்லி விளக்கியது மிகப் பொருத்தம் !
நாவில் ஸதா நாம பஜனைப் தவிர எந்த வெட்டிப் பேச்சும் இல்லாது வாழப் பழக வேண்டும். அது நம் வாழ்வை உய்விப்பதுடன் கடைசி கால கட்டத்தில் கூட இறை நினைவுடன் அவருடன் ஒன்றும் பாக்யம் கிட்ட ஏதுவாகும் !
அருணகிரியார் சொல்வது போல்
யாவுமாய் மனங்கடந்த, மோன வீடதைந்ததொருங்கி யான் அவாவடங்க என்று பெரறுவேனோ
அந்த நிலை அடைய வேண்டும் !
மிக அழகான விளக்கம் தக்க மேற்கோளுடன் !
அம்பாள் பாதத்தை இறுகப் இடித்தால் எப்படிப்பட்ட கஷ்டங்களும் விலகும் என்ற கருத்துடைய ஸ்லோகம் அம்பாளை உணர்ந்தவர்கள் அனுபவிக்கும் படி அமைந்துள்ளது தக்க விளக்கத்துடன்!
ஜய ஜய ஜகதம்ப சி வே….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.