ஸ்துதி சதகம் 45வது ஸ்லோகம் பொருளுரை – க்ருபா தாரா த்ரோணி – கருணை என்னும் மழை நீரால் நிறைந்த தொட்டி
कृपाधाराद्रोणी कृपणधिषणानां प्रणमतां
निहन्त्री सन्तापं निगममुकुटोत्तंसकलिका ।
परा काञ्चीलीलापरिचयवती पर्वतसुता
गिरां नीवी देवी गिरिशपरतन्त्रा विजयते ॥
One reply on “க்ருபா தாரா த்ரோணி – கருணை என்னும் மழை நீரால் நிறைந்த தொட்டி”
என்ன ஒரு குரல் வளம் ! தெய்வீகமான. குரல் ! கொடுத்து வைத்த ஆத்மா!
திருப்பாவை திருவெம்பாவை மழை பொழியும் அர்த்தமுள்ள பாக்களுக்கு இணையான, மேலான ஸ்லோகம் என்பதனை இன்றுதான் அறிந்தேன் , மிக்க நன்றி கணபதி !
மலை மகளாகப் பிறந்து சிவனிடம் மனம் பறி கொடுத்து, வேத வசனங்களே ஆடையாகத் திகழும் அன்னை காமாட்சி காஞ்சி என்ற இடை அணிகலனை அணியா்க்கொண்டு, வேடுவச்சியாக விளங்குகிறாள்.
தோட்டம், துரவுகளில் நீர் பாய்ச்ச சால் என்ற ஒரு ஏற்றத்தால் நீர் பாய்ச்சும் பழக்கம் அந்த நாட்களில் இருந்தது. அது போல் தன் கருணைப் ப்ரவாகத்தை தன்னை சிரம் தாழ்த்தி வணங்குவோருக்கு அளிக்கிறாள் !
தண்ணீர் தாகத்தைத் தீர்க்குமாபோல், தேவியின் கருணா பிரவாகம் தபத்ராயத்தை முற்றிலும் போக்குகிறது!
அவள் தாள் பணிந்தால் அனைத்துத் துன்பங்களும் நீங்கும்!
இதற்கு ஸ்வாமிகளை ஒர் சான்று!
எத்தகைய துன்பத்தையும் மன உறுதியுடன் தாங்கி, வென்று நம் போல் அஞ்ஞானிகளுக்கு ஒர் எடுத்துக்காட்டாக விளங்கினார் !
காமம், குரோதம், கோபம், மோகம் அனைத்தும் அம்பாளின் கருணா பிரவாகத்தால் தூசி போலாகும் என்பதை பெரியவா வாழ்ந்த வாழ்க்கையும், ஸ்வாமிகளின் எளிய, பக்தி வாழ்க்கையும் நமக்கு உணர்த்துகின்றன !
ஸ்வாமிகளின் வாழ்க்கை சம்பவம் எல்லாம் நமக்கு ஒர் பாடமாக விளங்குகிறது,,,!
குழந்தை பருவத்தில் தாயின் மடியில் பால் அருந்தின சம்பவம் பற்றி அவர் விவரிக்கும்போது மனம் கசிகிறது!
இந்த சந்தர்ப்பத்தில் பெரியவா ஒரு சமயம் தன் அம்மா போட்டோவைப்.பார்க்க நேர்ந்த போது ” எப்படி குழந்தை போல் சிரிக்கிறாள் ” என ஒர் பக்தர்களிடம் நீறு பூத்த நெருப்பாக இருந்த அன்பை வெளிப்படுத்தின நிகழ்ச்சி ஞாபகம் வந்து மனம்.கசிகிறது
ஞானிகள், பெரியவர்கள் வாழ்க்கை என்றும் ஒர் பாடம் நமக்கு !!
கணபதி தன் தகப்பனார் பற்றற்ற வாழ்க்கை பற்றி சொன்னது எல்லாருக்கும் ஒர் பாடம் !!
ஜய ஜய ஜகதம்ப சிவே