सन्तापं विरलीकरोतु सकलं कामाक्षि मच्चेतना
मज्जन्ती मधुरस्मितामरधुनीकल्लोलजालेषु ते ।
नैरन्तर्यमुपेत्य मन्मथमरुल्लोलेषु येषु स्फुटं
प्रेमेन्दुः प्रतिबिम्बितो वितनुते कौतूहलं धूर्जटेः ॥
Categories
सन्तापं विरलीकरोतु सकलं कामाक्षि मच्चेतना
मज्जन्ती मधुरस्मितामरधुनीकल्लोलजालेषु ते ।
नैरन्तर्यमुपेत्य मन्मथमरुल्लोलेषु येषु स्फुटं
प्रेमेन्दुः प्रतिबिम्बितो वितनुते कौतूहलं धूर्जटेः ॥
3 replies on “மாசி மகத்தன்று சந்திர ஒளியில் கங்கையில் முங்கி குளிக்க வேண்டுமா?”
மாசிமகத்தன்று இருந்த இடத்தில் இருந்தே அம்பாளுடைய மந்தஸ்மிதம் என்னும் கங்கையில் ஸ்நானம் செய்த அனுபவம் கிடைத்தது. மிகவும் ஆனந்தமான நீராடல்.👌🙏🌸
மன்மதன் என்கிற காற்றினால் அசைகின்ற அம்பாளுடைய புன்சிரிப்பென்ற அலைகளில், அன்பென்ற சந்திரன் பிரதிபலித்து, பரமசிவனுடைய ஆவலை தூண்டுவதாக சொல்கிறார் மூககவி.
ஆசார்யாள் ஸௌந்தர்யலஹரியில், சில ஸ்லோகங்களில் மன்மதன் பரமசிவனை ஜெயித்ததை சொல்லியிருக்கிறார். “அம்பாள் ஈச்வரனைப் பார்க்கும் ப்ரேம வீக்ஷணம் ஈச்வரனின் மேல் மன்மதன் செய்யும் பாண ப்ரயோகமே,” என்றெல்லாம் சொல்கிறார். பரமசிவனிடம் அகம்பாவத்தோடு போனபோது பஸ்மம் ஆனான். “என் தாயாரின் அநுக்ரஹ சக்தி எனக்கும் ஜயம் வாங்கித்தரப் போகிறது!” என்ற ‘ஸ்பிரிட்’டிலேயே போனபோது அவனால் ஜெயிக்க முடிந்தது.🙏🌸
இன்னொரு ஸ்லோகத்தில், “அம்பாளுடைய கடாக்ஷத்தால் ஏதோ கொஞ்சம் க்ருபை பெற்றே மன்மதன் தனியொருவனாக, சக்தியே இல்லாத உபகரணங்களை வைத்துக் கொண்டும், இந்த ஜகத் பூராவையும் ஜயித்து விடுகிறான்.” என்கிறார். “காமன் ஜயித்ததை, அவனை அம்பாள் ஜயிக்க வைத்ததை, சொல்லும்போது அதோடு விட்டுவிடக்கூடாது. அவனை நாம் ஜயித்தாக வேண்டும்; காம ஜயம் பண்ணியாக வேண்டும். நமக்கு வேண்டியது அம்பாள் அநுக்ரஹந்தான்!” என்று மஹாபெரியவா விஸ்தாரமாக அர்த்தம் சொல்லிக் கொண்டு போவார்.🙏🌸
இதே ரீதியில்தான் மூககவியும் நிறைய ஸ்தோத்திரங்களில் மன்மதனை குறிப்பிடுகிறார் போலும்!
ஸ்ரீ காமாக்ஷி தேவியின் புன்சிரிப்பு, காற்றில் அசைந்தாடும் நிலவு இடை விடாமல் பிரதிபலிப்பது, காமனுக்கு சோமன் துணை புரிவதால்தான்! ஆகவே காதல் எனும் சந்த்ரன் ஸ்படிகம் போன்ற0 புன்னகை நதியில் பிரதிபலித்து, தன் மகிழ்ச்சியை வெளிக். கொணர்கிறபடியால் அந்த மகிழ்ச்சியில் என் தாபங்களை போக்கிக் கொள்ள உதவி புரியட்டும்! இதனை சேஷி சேஷ பாவம் என்று கருதலாம்! மிக அழகான பொருளுடைய ஸ்லோகம்.! மூக பஞ்ச சதியில் எந்த ஸ்லோகம் மனதை ஆட்கொள்ளவில்லை ? தலைப்பு ஒவ்வொன்றும் அருமை!
ஸ்வாமியிடமும், பெரியவாளிடமும் இடை விடாமல் பஜித்து, அம்பாளின் மந்தஸ்மிதத்தில் முங்கி ஸ்நானம் செய்வோம்.
மாசி மகம் ஸ்நானம் இன்று, இந்த சந்திர ஒளியின் சமீபத்தில் அழைத்து சென்றதற்கு மிக்க நன்றி 🙏