Categories
mooka pancha shathi one slokam

பாசாங்குசமும் கரும்புவில்லும் அங்கை சேர்த்தாளை


ஆர்யா சதகம் 68வது ஸ்லோகம் பொருளுரை – பாசாங்குசமும் கரும்புவில்லும் அங்கை சேர்த்தாளை
பாணஸ்ருணி பாஷகார்முக பாணிமமும்கமபி காமபீட கதாம் |
ஏணதர கோணசூடம் சோணிம பரிபாக பேதமாகலயே ||
இது ஆர்யா சதகத்துல 68-வது ஸ்லோகம். காமாக்ஷி அம்பாளுடைய ஸ்வரூப வர்ணனை.
* பாணம் அப்படின்னா பஞ்ச புஷ்ப பாணங்கள்.
* ஸ்ருணி அப்படிங்கிறது அங்குசம்.
* பாசம் அப்படிங்கிறது பாசம் கயிறு.
* கார்முகம் அப்படிங்கிறது வில், கரும்பு வில்.
* பாணிம் இதை நான்கு கரங்களில் தாங்கிக் கொண்டிருப்பவளும், கமபி காமபீட கதாம், காமபீடத்தில் எழுந்தருளி இருப்பவளும், ஏணதர கோண சூடம்.
ஏணம்னா மான். ஏணதரஹ அப்படிங்கிறது சந்திரனுக்கு கவிகள் சொல்ற ஒரு பதம். சந்திரனில் ஒரு களங்கம் மாதிரி தெரியறதே அது மான் மாதிரி இருக்கு, முயல் மாதிரி இருக்குன்னு சொல்லி ஷஷதர:, ஏணதர: அப்படின்னுலாம் சொல்லுவா. அந்த சந்திரனுடைய கோணத்தை, பிறையை, சூடம் தன்னுடைய தலையில் அணிந்து கொண்டிருப்பவளும், சோணிம பரிபாக பேதம். சிவப்பு வர்ணத்தின் ஒரு தனி பரிபாகம், ஒரு தனி சிவப்பு அப்படின்னு சொல்றாரு. “உதிக்கின்ற செங்கதிர்” அப்படின்னு அபிராமி பட்டர் அடுக்குற மாதிரி, ஒவ்வொரு சிவப்பையும் பார்த்து இதைவிட தனியான ஒரு அழகு அம்மாவோட சிவப்பு அப்படிங்கிற மாதிரி சொல்றாரு. அந்த காமாக்ஷியை ‘ஆகலயே’, தியானம் பண்றேன் அப்படின்னு சொல்றாரு.
இந்த ஸ்வரூபம் காமாக்ஷி அம்மனை நம்முடைய கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிறுத்துறது. இது ஒவ்வொன்னுக்கும் மகா பெரியவா அவ்வளவு அற்புதமான விளக்கம் சொல்லி இருக்கா. நான் அந்த இணைப்பை கொடுக்கிறேன். வரி வரியா படிச்சு நீங்க ஆழ்ந்து அனுபவிச்சு புரிஞ்சுக்கிறதுக்கு ஒரு ஜென்மா வேணும், அவ்வளவு அழகா இருக்கு. அதோட சுருக்கமா நான் சொல்றேன்.
* பஞ்ச புஷ்ப பாணங்கள் நம்முடைய இந்திரியங்கள்.
* கரும்பு வில்லுங்கிறது மனசு.
இது மன்மதனுடைய ஆயுதம். மன்மதனை சுவாமி எரிச்ச போது அந்த ஆயுதங்களை எடுத்துண்டு போய் அம்பாள் சுவாமிட்ட அன்பு பாராட்டி அவருடைய அன்ப ஜெயிச்சா. அந்த ரெண்டு ஆயுதங்களும் மன்மதன் வச்சுருக்கும்போது அவன் இந்த புஷ்ப பாணங்கள்ல இருந்து தேனை சொரிய விட்டு, கரும்புல இருந்து மதுரத்தை காமிச்சு சிற்றின்பத்துல எல்லாரையும் ஆட்படுத்தறது தான் அவனோட வேலை.
ஆனா காமாக்ஷி அதோட ஸ்ருணி, பாசம் அப்படின்னு ரெண்டு வச்சுருக்கா. ஸ்ருணிங்கிறது அங்குசம், யானையை அடக்குறதுக்கு ஒரு ஷார்ப் எட்ஜ்டா, ஒரு கூரிய முனையோட ஒரு ஆயுதம் வச்சுருப்பா. அந்த அங்குசம். பாசம்ங்கிறது கயிறு, யானையை கட்டி போடுறதுக்கு உபயோகப்படுத்துற கயிறு. நமக்குள்ள இருக்குற பாசத்தையும் சொல்றேன், உலகத்துல நம்ம இந்த பாசங்கிறதானே கட்டி போடுறது. அதை கூட தாய் பாசம் அப்படிலாம் சொல்லுவா, அந்த மாதிரி அந்த பாசங்கிறது நம்முடைய கட்டு. ஸ்ருணிங்கிற அங்குசம் நம்முடைய கோபம்.
இந்த காம குரோதம் அப்படிங்கிற ரெண்டுத்துனால தான் நம்முடைய மனசு புலன்கள் மூலமாக உலகத்துல ஈடுபடுறது. இதை பண்றவளும் காமாக்ஷி தான். ஆனா காமாக்ஷி தேவியை சரணடைஞ்சு காமாக்ஷியோட அனுகிரகம் கிடைச்சுடுத்துன்னா, இந்த பஞ்ச புஷ்ப பாணங்கள் கருணைங்கிற தேனை பொழியும். நம்முடைய கோபத்தையே காமாக்ஷி கோச்சுண்டுருவா அங்குசத்தை வச்சுண்டு. பாசத்தினால தன்னுடைய பாதத்துல கட்டி போட்டு நம்முடைய மனசு திரியாத மாதிரி, பக்தியை கொடுத்து முக்தியை கொடுப்பா அப்படின்னு பெரியவா இன்னும் ரொம்ப நிறைய விஷயங்கள் அழகழகா பேசி இருக்கா.
இப்படி காமாக்ஷி அம்பாள் கையில நாலு கைகளிலும் பாண ஸ்ருணி பாஷ கார்முக பாணி அப்படின்னு ஒவ்வொரு ஆயுதங்களை தரிச்சுருக்கனால வரத முத்திரையும் அபய முத்திரையும் காமிக்கிறதுக்கு வழி இல்லாம இருக்கு. மத்த தெய்வங்கள் எல்லாம் பார்த்தா கையால வலது கையால அபயம் காமிப்பா, இடது கையால தன்னுடைய பாதத்தை காமிச்சு “நீ என்னோட பாதத்துல சரணாகதி பண்ணு, உனக்கு அபயம் தரேன், எல்லா வரங்களையும் தரேன்” அப்படின்னு சொல்ற மாதிரி இருக்கும். இதை வச்சுண்டு ஆதி ஆச்சாரியாள் சௌந்தர்ய லஹரில ஒரு அழகான கற்பனை பண்றார்.
த்வதன்ய: பாணிப்யாம் அபயவரதோ தைவதகண: |
த்வமேகா நைவாஸி ப்ரகடித வராபீத்யபிநயா ||
உன்ன தவிர மத்த தெய்வங்கள் எல்லாமே இந்த அபய வரதம் காமிக்கிறது. இந்த அபினயத்தை நீ மட்டும் காமிக்கல.
பயாத் த்ராதும் தாதும் பலமபி ச வாஞ்சாஸமதி கம் |
ஷரண்யே லோகாநாம் தவ ஹி சரணாவேவ நிபுணௌ ||
பயத்துல இருந்து காப்பாத்துறதுக்கும், நினைச்சதுக்கு மேலான வரங்களை கொடுப்பதற்கும், உலகத்துக்கெல்லாம் புகலிடமாக இருக்கும் ஹே காமாக்ஷி, உன்னுடைய பாதங்களே அந்த சாமர்த்தியத்தை வச்சுண்டு இருக்கு. அதனால உன் பாதத்தை நமஸ்காரம் பண்ணாலே போதும், நீ தனியா இதை காமிக்கணும்ங்கிறதே இல்ல அப்படின்னு ஒரு அழகான ஸ்லோகம்.
இந்த இடத்துல பலமபி ச வாஞ்சாஸமதி கம் அப்படின்னு நினைச்சதுக்கு மேலான பலனை கொடுப்பார்னா நாம் தர்மார்த்த காமம் தான் கேப்போம், அதான் நமக்கு தெரியும். காமாக்ஷி அதையும் கொடுத்து மோக்ஷத்தையும் கொடுப்பா. “ஸகல பலதாதா ஸுரதரு:” அப்படின்னு மூககவி சொல்றார். அந்த மாதிரி நமக்கு கேக்குறதுக்கு தெரியாததெல்லாம் குடுக்குற காமாக்ஷி மோக்ஷத்தையும் முடிவுல கொடுப்பா அப்படின்னு ஒரு அழகு. இதுவும் பெரியவாளுடைய விளக்கம் ரொம்ப அழகா இருக்கும், அந்த இணைப்பை நான் தரேன்.
காமபீடம் காமத்தினுடைய எல்லை. காமெல்லாம் அத்துப்போன இடத்துல காமாக்ஷி தர்சனம் கிடைக்கும். ஏணதர கோண சூடம், பிறை சந்திரனை சூடிக்கொண்டிருப்பவள். இதுக்கெல்லாம் விசேஷ அர்த்தங்கள் இருக்கு. ஆனா எனக்கு இந்த பெரியவாளுடைய வாக்கைக் கேட்கும்போது அவாளுடைய ரூபம் தான் ஞாபகம் வருது. சுவாமிகளும் என்ன வந்து “பெரியவா தான் காமாக்ஷி” அப்படின்னு சொன்னதுனால, இந்த காமாக்ஷி ரூபத்தை தியானம் பண்றதை விட பெரியவா ரூபம் ரொம்ப சுலபமா இருக்கு.
இந்த பாண ஸ்ருணி பாஷ கார்முக பாணிம்கிறதுக்கு எனக்கு அந்த தண்டம், கமண்டலு, நெற்றில விபூதி, காவி – இது இல்லாத ஒரு பெரியவாளுடைய படமோ சித்திரமோ எதுவுமே கிடையாது. எல்லா பெரியவா ரூபம்னாலே இந்த, அதுக்கப்புறம் அந்த பாதாரவிந்தங்கள், அந்த கண்ணுல கருணை, அந்த ஞானப் பூங்கொத்து போன்ற அந்த மந்தஹாசம் எல்லாம் கிடைக்கப் போறது. ஆனா பெரியவான்னு நினைச்சாலே அந்த காவி வஸ்திரம், நெற்றில விபூதி, தண்டம், கமண்டலு. அந்த ரூபத்தை தியானம் பண்றது நமக்கு ரொம்ப சுலபம், நினைச்சாலே வந்துடுறது கண்ணுல. அந்த மாதிரி இந்த ஸ்லோகத்தை கமபி காமபீட கதாம், காமகோடி பீடத்தில் அருளாட்சி புரிந்த இப்படி என்று வர்ணிக்க முடியாத ஒரு பேரொளி, ஒரு செக்கச்செவேர்னு கருணையே வடிவமான ஒரு தெய்வம், அந்த தெய்வத்தை நான் தியானம் பண்றேன் அப்படின்னு சொல்றார்.
இப்படி ஒரு தெய்வத்துக்கிட்ட பக்தி பண்ணும்போது அந்த தெய்வத்துடைய ரூபத்தை தியானம் பண்ணி, அந்த தெய்வத்தை நம்முடைய முன்னால் வரவேண்டும் அப்படின்னு பிரார்த்தனை பண்ணிட்டு, அதுக்கப்புறம் நம்முடைய குறைகளை முறையிட்டு நமக்கு தேவையானதெல்லாம் பிரார்த்தனை பண்றது அப்படிங்கிற ஒரு வழி முன்னோர்கள் காமிச்சு கொடுத்தது.
இந்த திருப்புகழ் பஜனைக்கு வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் எங்கிறவர் ஒரு பத்ததி போட்டுக்கொடுத்தார். அதுல அந்த மாதிரி வரவு பாட்டெல்லாம் பாடிட்டு, “வருவாயே”ன்னு வரும். அப்புறம் அந்த “சீரான கோலாகால” அப்படிங்கிற ஒரு அழகான திருப்புகழ் இருக்கு. அதுல அந்த சுவாமியுடைய ரூப தியானம், நான் அதோட பொருள் சொல்றேன்.
“கோலாகால”ங்கிறது கோலாஹல அப்படிங்கிறதோட மருவு.
சீரான கோலாகால நவமணி மாலாபிஷேக பார…
அபிஷேகம்னா அபிஷேகம் பண்ணும்போது தலையில அந்த கிரீடம் வைப்பா, கிரீடத்துக்கே அபிஷேகம்னு பேரு.
…வெகுவித தேவாதி தேவர் சேவை செயும் முகமலர் ஆறும்…
கோலாகலமான நவமணிகளும் சீராக பெருமையாக பொருந்திய கிரீடங்களின் பாரத்தை தாங்கிக்கொண்டிருக்கும் வெகுவித தேவாதி தேவர்கள் எல்லாம் வந்து வணங்கும் முகமலர் ஆறும், ஆறு திருமுகங்களும் தாமரை ஒத்த அந்த அழகான… இன்னைக்கும் சுவாமிக்கு ஒவ்வொரு க்ஷேத்திரத்துல வைர முடி, இன்னும் நவமணிகளும் பதிச்சு கிரீடங்களை பண்ணிப் பண்ணி சந்தோஷப்படுறோம் இல்லையா, அப்படி அந்த கிரீடங்களோடு சேர்ந்து முகம் தாமரை போன்ற ஒளியோடு விளங்கும் அந்த ஆறு திருமுகங்களும்.
…சீராரும் வீரமாது மருவிய ஈராறு தோளும்…
சிறப்பான வீரலக்ஷ்மி குடிகொண்டிருக்கும் ஈராறு பன்னிரண்டு தோள்களும்.
…நீளும் வரி அலி சீராகம் ஓதும் நீப பரிமள இரு தாளும்…
நீண்ட ரேகைகள் கொண்ட… இந்த வண்டுகள் சுவாமியுடைய பாதத்துல இருக்குற கடப்ப மலர் மேல அந்த மணம் வீசுறது, அங்க வந்து பாடுறதாம். அந்த ரீங்காரம் எப்படி இருக்குன்னா “ஸ்ரீராகம்” போல இருக்குங்கிறார். அப்படி இந்த சுவாமியோட பாத தர்சனம் பண்ணும்போது எப்படி உலகத்துல புலன்கள் உன்னை பார்க்கிறது, உன்னை கேட்கிறது அதுல போய் மயங்குறதோ அந்த மாதிரி இந்த சரணங்கள்லயே அருணகிரிநாதருக்கு ஸ்ரீராகம் கேட்கிறது, அந்த வாசனை வர்றது, அந்த திவ்ய பாதாரவிந்தங்கள் பூக்களால நிரம்பி அந்த அழகோட காட்சியும் கிடைக்கிறது – இப்படி எல்லா புலன்களும் அவருக்கு அங்கேயே அடங்கிடுறது. “நீப பரிமள இரு தாளும்” கடப்ப மலரின் வாசனை வீசும் இரு தாளும்.
…ஆராத காதல் வேடர் மடமகள் சீமூதமூர் வலாரி மடமகள் ஆதார பூதமாக வலமிடம் உறைவாழ்வும்…
ஆராத காதல், முடிவில்லாத காதல் கொண்ட வேடர்களின் மகளான வள்ளியம்மையையும், சீமூதம்னா மேகம்னு அர்த்தம், சீமூதமூர் மேகத்தை வாகனமாக கொண்ட வலாரி, வலன் என்பவனை ஜெயித்த இந்திரனுடைய மடமகள், இந்திரனுடைய பெண்ணாகிய தேவசேனையும் ஆதார பூதமாக இடது பக்கமும் வலது பக்கமும் வாழ்ந்து கொண்டு ஆதார பூதமாக அவா இருக்கா. அவாளுக்கு ஆதார பூதமா சுவாமி இருக்கார். பக்தர்களுக்கு ஆதார பூதமா இந்த ரெண்டு சக்திகளும் இருந்து அந்த சுவாமியோட அனுகிரகத்தை நமக்கு பெற்றுத் தர்றா.
…ஆராயும் நீதி வேலும் மயிலும் மெய்ஞ்ஞான அபிராம தாப வடிவமும்…
நன்கு ஆராய்ந்து நீதி செலுத்தும் வேலாயுதமும், ராஜாவுக்கு ஒரு தண்டம் மாதிரி முருகப்பெருமான் அந்த வேலை வச்சுண்டு தர்மத்தை நிலைநிறுத்துறார். மயிலையும், மெய்ஞ்ஞான அபிராம தாப வடிவமும் – ஞான ஸ்வரூபமான அந்த பேரழகான வடிவம் அப்படின்னு அந்த முருகப்பெருமானுடைய வடிவத்தை ஞான வடிவமாகவும், அழகு வடிவமாகவும், பெருமை பெற்ற கீர்த்தி பெற்ற ஒரு வடிவமாக தர்சனம் பண்றார்.
…ஆபாதனேன் உன்னாளும் நினைவது பெறவேணும்…
ஆபாதனேன் நான் ரொம்ப கீழானவன், அப்படி இருந்தாலும் நாளும் இந்த உன்னுடைய தர்சனத்தை நான் பெறவேணும் அப்படின்னு வேண்டிக்கிறார். “நாளும் நினைவது பெறவேணும்”.
அடுத்த பகுதி:
ஏராரும் மாடக்கூட மதுரையில் மீதேறி மாரியாடும் இறையவர்…
ஒருதடவை ராஜசேகர பாண்டியன் அப்படிங்கிறவர்ட்ட கரிகால் சோழன் சபையில இருந்து வந்தவர், “கரிகால் சோழனுக்கு நாட்டியம் தெரியும் உங்களுக்கு தெரியுமா?”ன்னு கேட்ட உடனே இவருக்கு வெட்கம் ஆயிடுத்து, நாட்டியம் கத்துக்குறாராம் இந்த ராஜசேகர பாண்டியன். அப்ப அவருக்கு கால் எல்லாம் வலிக்குறது, ரொம்ப அயர்ச்சி ஏற்படுது, டயர்ட் ஆயிடுறது. அப்ப மதுரையில வெள்ளி அம்பலத்துல இந்த நடராஜா ஓயாத ஆடிண்டு இருக்காரே, அந்த இடது கால்லேயே நின்னுண்டு இருக்காரே அவருக்கு எவ்வளவு வலிக்கும் அப்படின்னு சுவாமிட்ட போய் “நீங்க காலை மாத்தி ஆடணும்” அப்படின்னு சொல்றார். அவர் கேட்கலன்ன உடனே “நீங்க காலை மாத்தி ஆடலைன்னா உயிரே விட்டுருவேன்” அப்படின்னு சொன்ன உடனே வெள்ளியம்பலத்துல மதுரையில சுவாமி காலை மாற்றி ஆடுறார். அப்படி மாற்றிய அந்த இறையவர். அகப்பொருளுக்கு இலக்கியம் இல்லை அப்படின்னு சொல்லிட்டு ஒரு “இறையனார் அகப்பொருள்” அப்படின்னு ஒரு புஸ்தகம் பண்ணித் தர்றார்.
இந்த புஸ்தகத்துக்கு சங்கப் புலவர்கள் 49 பேரும் உரை எழுதுறாளாம், எந்துதான் பெருசு உந்துதான் பெருசுன்னு அவா போட்டி போட்டுக்கிறா. ஏழேழு பேர்கள் கூர வரு பொருள் அதிகாரம்… இதோட பொருள் எது அப்படிங்கிற விஷயத்துல சர்ச்சை வந்தபோது…
…ஈடாய ஊமர் போல வணிகரில் ஊடாடி…
ஈடாய ரொம்ப தகுதி பெற்ற ஊமரைப்போல வந்து வணிகரில் ஊடாடி, ஒரு செட்டி குலத்துல பிறந்து விளையாடிண்டு இருந்த ஒரு குழந்தை. இந்த சங்கப் புலவர்கள் இந்த மாதிரி அவாளுக்குள்ள சர்ச்சை பண்ணும்போது, சுவாமி இந்த செட்டி குலத்துல ருத்ரஜன்மங்கிற பேர்ல ஒரு ஊமைப் பிள்ளை இருக்கு, அந்த பிள்ளை முருகப்பெருமானுடைய அவதாரம், அந்த பிள்ளை உங்களுக்கு தீர்ப்பு சொல்லும்னு சொல்றார். ஊமை எப்படி தீர்ப்பு சொல்லுவான்னு கேட்டபோது நீங்க பாருங்கன்னு சொல்றார். இப்ப இவா 49 பேரும் அந்த சுவாமிய வரவச்சு ஒரு தங்க சிம்மாசனத்துல அமர்த்தி பூஜை எல்லாம் பண்ணிட்டு அவாவா உரையை படிக்கிறா. அப்போ நக்கீரர், கபிலர், பரணர் – இவா மூணு பேரோட உரையை படிச்ச போது அந்த ஊமைப் பிள்ளை ரொம்ப ஆனந்தத்தை வெளிப்படுத்தி “ஆஹா” அப்படின்னு வாயால சொல்லல, கண்ணீர் ஜலத்தோட ரொம்ப வியப்பையும் மெய்சிலிர்த்து கேட்டபோது அவா எல்லாரும் புரிஞ்சுக்கிறா, இவா மூணு பேரோட உரைதான் ரொம்ப சிறந்தது அப்படின்னு.
அப்படி, ஆலவாயில் விதி செய்த லீலா விசார தீர வரதர குருநாதா… உண்மை பொருளை நிலைநிறுத்திக் காட்டி திருவிளையாடல் புரிந்த தீரனே, வரங்களைக் கொடுப்பவனே குருநாதா.
…கூர் ஆழியால் முன் வீய நினைபவன் ஈடேறு மாறு பானு மறைவு செய் கோபாலராயன்…
பாரதப் போரின்போது அபிமன்யுவை ஜெயத்ரதன் வதம் பண்ணிடுறான், ஜெயத்ரதன் மூலமா அந்த வதம் நடந்தனால அர்ஜுனன் சபதம் பண்றான் “நாளைக்கு சாயங்காலம் சூரியாஸ்தமனத்துக்குள்ள ஜெயத்ரதனை கொல்வேன்” அப்படின்னு. ஆனா அடுத்த நாள் அந்த ஜெயத்ரதனை கௌரவர்கள் நன்னா புரொடக்ட் பண்ணிடுறா, அவனால முடியல. அப்போ அவன் நெருப்புல குதிக்கப் போறான், இதை வேடிக்கை பார்க்கிறதுக்கு ஜெயத்ரதன் நிக்கிறான், சூரியனும் அஸ்தமனம் ஆகல. அப்போ கிருஷ்ண பகவான் என்ன பண்றார் தன்னுடைய கூர் ஆழியால், கூர்மையான சக்கரத்தால் பானு மறைவு செய் சூரியனை மறைச்சுடுறார், அந்த ஆழிய அனுப்பி சூரியனை மறைச்சிட்டு அர்ஜுனனை பார்த்து “அம்பு போடு”ங்கிறார். அவன் ஜெயத்ரதன் மேல அம்பு போட்டு தலை கீழ விழுந்துடுது, தலை கீழ விழாம அவா அப்பா மடியில விழுது அது ஒரு கதை. இந்த மாதிரி பண்ணி முன் வீய நினைபவன், இறந்து போவதற்கு எண்ணிய அர்ஜுனனுடைய உயிரைக் காப்பாற்றிய கோபாலராயன், கோபர்களுக்கு ராஜாவான கிருஷ்ணன், அந்த கிருஷ்ணனுடைய நேயமுள்ள திருமருகோனே, அழகிய மருகோனே முருகப்பெருமானே.
இந்த பாட்டு பாரத காட்சியை சொல்றதுனால எங்கப்பா இது “திருவல்லிக்கேணி திருப்புகழ்” அப்படின்னு சொல்லுவார் பார்த்தசாரதி இருக்கிறதனால, அதனால தினமும் பாடிப்பார்.
…கோடாமல் ஆரவார அலையெறி காவேரியாறு பாயும் வயலியில்…
தவறாமல் பேரொலியுடன் அலைகளை வீசி காவேரி ஆறு பாய்கின்ற வயலூரிலும்,
…கோனாடு சூழ் விராலிமலை உறை பெருமாளே.
கோனாடுங்கிற பகுதியில விராலிமலையில் உறையும் பெருமாளே, நீ எனக்கு தினமும் வள்ளி தேவசேனா ஸமேத சுப்பிரமணிய சுவாமி ஞான வடிவம் பெருமை பொருந்திய அந்த ஆறு திருமுகங்களும் சீர் பாதங்களோடு தர்சனம் கொடுக்கணும் அப்படின்னு வேண்டிக்கிறார்.
கோனாடு சூழ் விராலிமலை உறை பெருமாளே.
இப்படி ரூப தியானங்கள் மகான்கள் ரொம்ப சொல்லிருக்கா. இந்த பாட்டை பாடி நான் இன்னைக்கு பூர்த்தி பண்ணிக்கிறேன்.
(பாடல் தொடங்குகிறது)
சீரான கோலாகால நவமணி மாலாபிஷேக பார…
வெகுவித தேவாதி தேவர் சேவை செயும் முகமலர் ஆறும்…
சீராரும் வீரமாது மருவிய ஈராறு தோளும்…
நீளும் வரி அலி சீராகம் ஓது நீப பரிமள இரு தாளும்…
ஆராத காதல் வேடர் மடமகள் சீமூதமூர் வலாரி மடமகள்…
ஆதார பூதமாக வலமிடம் உறைவாழ்வும்…
ஆராயும் நீதி வேலும் மயிலும் மெய்ஞ்ஞான அபிராம தாப வடிவமும்…
ஆபாதனேன் உன்னாளும் நினைவது பெறவேணும்…
ஆபாதனேன் உன்னாளும் நினைவது பெறவேணும்…
ஏராரும் மாடக்கூட மதுரையில் மீதேறி மாரியாடும் இறையவர்…
ஏழேழு பேர்கள் கூர வரு பொருள் அதிகாரம்…
ஈடாய ஊமர் போல வணிகரில் ஊடாடி ஆலவாயில் விதி செய்த…
லீலா விசார தீர வரதர குருநாதா…
கூர் ஆழியால் முன் வீய நினைபவன் ஈடேறு மாறு பானு மறைவு செய்…
கோபாலராயன் நேயமுள்ள திருமருகோனே…
கோடாமல் ஆரவார அலையெறி காவேரியாறு பாயும் வயலியில்…
கோனாடு சூழ் விராலிமலை உறை பெருமாளே.
கோனாடு சூழ் விராலிமலை உறை பெருமாளே.
ஆராத காதல் வேடர் மடமகள் சீமூதமூர் வலாரி மடமகள்…
ஆதார பூதமாக வலமிடம் உறைவாழ்வும்…
ஆராயும் நீதி வேலும் மயிலும் மெய்ஞ்ஞான அபிராம தாப வடிவமும்…
ஆபாதனேன் உன்னாளும் நினைவது பெறவேணும்…
கோனாடு சூழ் விராலிமலை உறை பெருமாளே.
(பாடல் முடிகிறது)
இப்படி பாடினா முருகன் ஓடி வந்துருவார். இதுல முக்கியமானது என்னன்னா நம்ம சித்திரங்கள்ல பார்க்கலாம், கோயில்ல சுவாமியா பார்க்கலாம், மனசுல வரணும். எங்க இருந்தாலும் அந்த சுவாமியோட ரூபம் நம்ம மனசுல வரணும், அதுக்காக தான் இந்த மாதிரி மகான்கள் பாடி வச்சுருக்கா. இதை பாடிப் பாடி நம்முடைய மனசுல அந்த உருவை ஏத்தணும். அப்புறம் நம்ம வரம் கேட்டா அந்த சுவாமி எல்லாத்தையும் கொடுப்பார்.
பாணஸ்ருணி பாஷகார்முக பாணிமமும்கமபி காமபீட கதாம் |
ஏணதர கோணசூடம் சோணிம பரிபாக பேதமாகலயே ||
அப்படிங்கிற ஸ்லோகத்தை சொல்லி நம்ம பெரியவா இந்த மாதிரி “ஆபாதனேன் உன்னாளும் நினைவது பெறவேணும்” அப்படின்னு இந்த மூக பஞ்சசதி ஸ்லோகத்தை சொல்லி பெரியவாளுடைய ரூப தியானம் என்னைக்கும் நமக்கு கிடைச்சுண்டே இருக்கணும் அப்படின்னு வேண்டிப்போம்.
நம: பார்வதீ பதயே ஹர ஹர மஹாதேவா!


The Form of Sri Kamakshi: Mooka Panchashati

bANasruNi pAshakArmuka pANimamumkamapi kAmapIDa gathAm |

eNadhara kONachUDam shoNima paribhAga bhedhamAkalaye ||

This is the 68th shloka from the Arya Shatakam. It is a description of the divine form (Swaroopa) of Kamakshi Ambal.

  • Banam: These are the five flower-arrows (Pancha Pushpa Banas).
  • Sruni: This refers to the elephant goad (Ankusham).
  • Pasham: This is the noose/rope.
  • Karmukam: This refers to the bow, specifically the sugarcane bow.
  • Panim: She who holds these in her four hands.
  • Kamapi Kamapitha Gatham: She who is seated upon the seat of desire (Kamapitha / Kanchi).
  • Enadhara Kona Chudam: Enam means deer. Enadharaha is a term poets use for the Moon. The spot that looks like a stain on the moon is often described as a deer or a rabbit; hence terms like Shashadhara or Enadhara. She wears that digit (Kona) of the moon as an ornament on Her head.
  • Shonima Paribhaga Bedham: A unique manifestation of the red hue. Just as Abhirami Bhattar describes “The rising crimson sun” (Udikkindra Sengadhir), the poet says that when looking at various shades of red, Amma’s complexion is a distinct, transcendental beauty beyond them all.
  • Akalaye: “I meditate upon Her.”

This description brings the form of Kamakshi Ambal right before our eyes. Mahaperiyava has given a magnificent explanation for each of these attributes. I will provide that link; it would take a lifetime to read line by line and deeply experience it. I will summarize it here:

  • The five flower-arrows represent our senses (Indriyas).
  • The sugarcane bow represents the mind (Manas).

These are actually Manmatha’s (Cupid’s) weapons. When Bhagavan burnt Manmatha, Ambal took those weapons, showed love to Bhagavan, and won His grace. When Manmatha holds them, he uses the honey from the flowers and the sweetness of the sugarcane to enslave everyone in worldly pleasures (Sittrinbam).

However, Kamakshi also holds the Sruni and Pasha. The Sruni is a sharp-edged goad used to control an elephant. The Pasha is the rope used to tie an elephant. This Pasha also represents our worldly attachments (Paasam); people often say “Mother’s attachment/love” (Thaai Paasam)—it is a bond that ties us. The Sruni (goad) represents our anger (Krodha).

It is through these two—desire (Kama) and anger (Krodha)—that our mind engages with the world through the senses. Kamakshi is the one who facilitates this. But if one surrenders to Devi and receives Her grace, these five flower-arrows will shower the honey of compassion. She will use the goad to redirect our anger toward itself. Through Her attachment (Paasam), She binds us to Her feet so that our mind does not wander, granting us devotion (Bhakti) and ultimately liberation (Mukti). Periyava has spoken about many more such beautiful things.

The Grace of Her Lotus Feet

Because Kamakshi Ambal holds these four weapons in Her four hands, there is no “room” to show the Varada Mudra (granting boons) or Abhaya Mudra (protection). If you look at other deities, they usually show Abhaya with the right hand and point to their feet with the left, as if saying, “Surrender to my feet, I shall protect you and grant all boons.”

Adi Shankara, in his Soundarya Lahari, makes a beautiful poetic observation about this:

tvadanya: pANibhyAm abhayavarado dhaivatagaNa: |

tvamekA naivAsi prakaTita varAbhItyabhinayA ||

“Every other group of deities shows the signs of protection and boons with their hands. You alone do not display these gestures.”

bhayAt trAtum dhAtum phalamapi ca vA~nchAsamadhikam |

sharaNye lokAnAm tava hi charaNAveva nipuNau ||

“To protect from fear and to grant fruits far exceeding one’s desires—O Kamakshi, the refuge of the worlds—Your feet alone possess that supreme skill!”

The idea is that it is enough to prostrate at Her feet; She doesn’t need to show a separate gesture. The phrase Phalamapi cha vanchasamadhikam means She grants results beyond what we even think to ask. We usually ask for Dharma, Artha, and Kama. Kamakshi gives those and then grants Moksha (liberation) as well. Mooka Kavi calls Her “Sakala phaladhatha suradharu:”—the celestial tree that grants all fruits.

Meditating on Mahaperiyava

Kamapitham is the limit of desire. Where all worldly desires end, the vision (Darshanam) of Kamakshi is attained. Enadhara Kona Chudam—She who wears the crescent moon. These have deep esoteric meanings.

But when I hear the words of Periyava, I only remember His form. Since Swamigal told me, “Periyava is Kamakshi,” meditating on Periyava’s form feels much easier than meditating on Kamakshi’s form.

Regarding the description “holding the arrows, goad, noose, and bow,” I see the Dhandam (staff), Kamandalu (water pot), the Vibhuti on the forehead, and the Saffron robes. There is no image of Periyava without these. When we think of Periyava, we see those Lotus Feet, the mercy in His eyes, and that smile which is like a cluster of flowers of wisdom. Thinking of the Saffron cloth, Vibhuti, Dhandam, and Kamandalu makes the form come instantly to the mind’s eye. Meditating on that Great Light (Peroli) that ruled from the Kanchi Kamakoti Peetham—that deity who is the very embodiment of compassion—is what I do.

When we show devotion to a deity, the path shown by our ancestors is to meditate on the form, pray for the deity to appear before us, and then place our grievances and prayers at Their feet.

Thiruppugazh: Seerana Kolakala

Vallimalai Sachidananda Swamigal established a system (Paddhati) for Thiruppugazh Bhajans. In that, after singing the arrival songs, there is a beautiful Thiruppugazh titled “Seerana Kolakala.” It is a description for meditation (Roopa Dhyanam). I will explain its meaning:

  • Kolakala: Derived from ‘Kolahala’ (magnificent/celebratory).
  • Seerana kolakala navamani malabhiseka bhara…
    • Abhisheka here refers to the crown placed on the head. He wears crowns heavy with the pride of perfectly set nine gems (Navaratnas).
  • …veguvidha dhevadhi dhevar sevai seyum mukhamalar arum…
    • The six lotus-like faces that are worshipped by various Devas. Even today, we find joy in adorning Bhagavan with diamond crowns and various gems in different shrines.
  • …seerarum veeramadhu maruviya eeraru tholum…
    • The twelve shoulders where the Goddess of Valor (Veera Lakshmi) resides.
  • …neelum vari ali seeragam odhum neepa parimala iru thalum…
    • The bees with long stripes hum around the Kadamba flowers at His feet. That humming sounds like the musical scale “Sri Ragam.” Just as worldly senses get captivated by sights and sounds, Arunagirinathar finds everything at the Lord’s feet—the music of Sri Ragam and the fragrance of the Kadamba flowers.
  • …aradha kadhal vedar madhamagal seemudhamur valari madhamagal adhara bhudhamaga valamidam uraivazhvum…
    • Valli, the daughter of the hunters with endless love, and Devasena, the daughter of Indra (who conquered Valan and has the clouds as his vehicle), reside on His right and left as His support. He is also the support for His devotees.
  • …arayum needhi velum mayilum meignana abirama thaba vadivumum…
    • The Spear (Vel) that investigates and executes justice, acting like a king’s scepter to establish Dharma. The peacock, and the beautiful form of true wisdom (Meignana).
  • …apadhanen unnalum ninaivadhu peravenum…
    • “I am very lowly (Apadhanen), yet I must be blessed to meditate on this vision of Yours every day.”

The Second Part:

  • Erarum madakkuda madhuraiyil meedheri mariyadum iraivar…
    • This refers to the miracle in Madurai where Lord Shiva changed His legs while dancing. Rajasekhara Pandiyan learned dance and felt the pain in his legs. He worried that Lord Nataraja, standing on one leg eternally at the Velli Ambalam (Silver Hall), must be in pain. He begged the Lord to switch legs, even threatening to give up his life. The Lord changed legs for him. This Lord also gave the world the Irayanar Agapporul.
  • …ezhezhu pergal koora varu porul adhikaram…
    • When 49 Sangam poets debated over the true meaning of that work…
  • …eedaya oomar pola vanigaril udadi…
    • Lord Muruga appeared as a highly qualified mute child (Rudhra Sanmar) in the merchant community. When the poets asked how a mute child could judge, the child sat on a golden throne and listened. When the commentaries of Nakkirar, Kapilar, and Paranar were read, the child showed immense joy and shed tears of ecstasy, confirming their works were the best.
  • …aalavayil vidhi seidha leela visara dheera varadhara gurunadha…
    • O Brave One, the Giver of Boons, the Guru who performed miracles in Madurai (Aalavai) to establish the truth.
  • …koor azhiyal mun veeya ninaibavan ederu maru bhanu maraivu sei gopalarayan…
    • During the Mahabharata war, after Abhimanyu was killed, Arjuna vowed to kill Jayadratha before sunset the next day or enter the fire. The Kauravas protected Jayadratha well. Krishna used His sharp discus (Azhi) to hide the Sun (Bhanu). Thinking the sun had set, Jayadratha came out to watch Arjuna enter the fire. Krishna then told Arjuna to shoot, saving Arjuna’s life.
  • …gopalarayan neyamulla thirumarugone…
    • The beloved nephew of Krishna (Gopalarayan).
  • …kodaamal aravara alaiyeri kaveriyaru payum vayaliyil konaadu suzh viralimalai urai perumale.
    • O Lord of Viralimalai, surrounded by the Konadhu region, where the Kaveri river flows through the fields with a mighty sound.

My father used to call this the “Triplicane Thiruppugazh” because it mentions Lord Parthasarathy (Krishna), and he would sing it daily.

I will sing it now…

If we sing this, Murugan will come running. The most important thing is that while we see Him in pictures or temples, He must appear in our hearts. That is why Mahatmas composed these songs—to imprint that form in our minds. Once the form is set, if we ask for a boon, He will grant everything.

Let us meditate on the form of Periyava through the Mooka Panchashati shloka and pray, “Even though I am lowly (Apadhanen), I must always have the blessing of remembering You.”

Namah Parvati Pataye Hara Hara Mahadeva!

அம்பாள் ஸ்வரூப வர்ணனை – மகாபெரியவா தெய்வத்தின் குரலில் இருந்து

கையால் கொடுக்காத வர, அபயம் – மகாபெரியவா தெய்வத்தின் குரலில் இருந்து

बाणसृणिपाशकार्मुकपाणिममुं कमपि कामपीठगतम् ।
एणधरकोणचूडं शोणिमपरिपाकभेदमाकलये ॥

2 replies on “பாசாங்குசமும் கரும்புவில்லும் அங்கை சேர்த்தாளை”

இதை விட அம்பாளை மிக அழகாக யாராலும் வர்ணிக்க முடியாது. அர்த்தம் தெரிந்து கேக்கும் போது மிகவும் நிறைவாக உள்ளது. நிறைவாக நீங்கள் பாடியது மிகவும் அருமை 🙏🏻🙏🏻🙏🏻

தேவி மானஸ பூஜை ஆண்டவன் பிச்சை அம்மா வழங்கியது இது போன்ற பொருளில் வரும் !

கரும்பு வில்லேந்தி கணையாம் மலர் ஐந்தும் கையிலேந்தி, விரும்பியே இரு கரத்தில் பாசாங்குசத்தை ஏந்தி அரும்பும் இள நகையும்
அன்பு ததும்பும் இள நகையும் என வர்ணிக்கிறார் !
இவற்றுடன் சந்திர கலையும் தரித்து, பிரம்மத்தை விளக்க வந்த பிரம்ம ரூபிணியாய்
செக்கச் சிவந்த மேனியுடன் காட்சி கொடுக்கிறாள்!
ஆத்மா அபின்னமான பிரம்ஹ ரூபம், அதை உணரவோ , விமர்சிக்கவும் முடியாத ஒன்று !
விளக்க நினைத்தால், அது நிறமற்ற பிரம்ம ரூபம் அணி, துகில் மாலை அனைத்திலும் ஸ்ருஷ்டி, ராகம் இரண்டின் நிறமான செம்மை
நிறத்தைப் பூண்டிருப்பவள் !
ஆகையால் தான் உதய சூரிய நுக்கு
ஒப்பாக கவிகள் வர்ணிக்கின்றனர் !
அழகான பொருள் பொதிந்த சொற்பொழிவு!

ஜய ஜய ஜெகதம்ப சிவே…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.