Categories
mooka pancha shathi one slokam

தமிழ்க்கவிதை பேசிப் பணிந்துருகு நேசத்தையின்றுதர இனிவரவேணும்

Recorded on 8th Sep 2019
ஆர்யா சதகம் 71வது ஸ்லோகம் – தமிழ்க்கவிதை பேசிப் பணிந்துருகு நேசத்தையின்றுதர இனிவரவேணும்

रक्ष्यो‌sस्मि कामपीठीलासिकया घनकृपाम्बुराशिकया ।
श्रुतियुवतिकुन्तलीमणिमालिकया तुहिनशैलबालिकया ॥

இத்தா ரணிக்குள்மநு வித்தாய் முளைத்தழுது
கேவிக் கிடந்துமடி மீதிற் றவழ்ந்தடிகள்
தத்தா தனத்ததன இட்டே தெருத்தலையில்
ஓடித் திரிந்துநவ கோடிப் ப்ரபந்தகலை
யிச்சீர் பயிற்றவய தெட்டொ டுமெட்டுவர
வாலக் குணங்கள்பயில் கோலப் பெதும்பையர்க …… ளுடனுறவாகி

இக்கார் சரத்துமத னுக்கே இளைத்துவெகு
வாகக் கலம்பவகை பாடிப் புகழ்ந்துபல
திக்கோ டுதிக்குவரை மட்டோ டிமிக்கபொருள்
தேடிச் சுகந்தஅணை மீதிற் றுயின்றுசுக
மிட்டா தரத்துருகி வட்டார் முலைக்குளிடை
மூழ்கிக் கிடந்துமய லாகித் துளைந்துசில …… பிணியதுமூடிச்

சத்தா னபுத்தியது கெட்டே கிடக்கநம
னோடித் தொடர்ந்துகயி றாடிக் கொளும்பொழுது
பெற்றோர் கள்சுற்றியழ வுற்றார் கள்மெத்தஅழ
ஊருக் கடங்கலிலர் காலற் கடங்கவுயிர்
தக்கா திவர்க்குமய னிட்டான் விதிப்படியி
னோலைப் பழம்படியி னாலிற் றிறந்ததென …… எடுமெனவோடிச்

சட்டா நவப்பறைகள் கொட்டா வரிச்சுடலை
யேகிச் சடம்பெரிது வேகப் புடஞ்சமைய
இட்டே யனற்குளெரி பட்டா ரெனத்தழுவி
நீரிற் படிந்துவிடு பாசத் தகன்றுனது
சற்போ தகப்பதும முற்றே தமிழ்க்கவிதை
பேசிப் பணிந்துருகு நேசத் தையின்றுதர …… இனிவரவேணும்

தித்தா திரித்திகுட தத்தா தனத்தகுத
தாதத் தனந்ததன தானத் தனந்ததன
செச்சே செகுச்செகுகு தித்தா திமித்ததிகு
தாதத் தசெந்திகுத தீதத் தசெந்தரிக
தித்தா கிடக்கணக டக்கா குகுக்குகுகு
தோதக் கணங்கணக கூகுக் கிணங்கிணென …… ஒருமயிலேறித்

திட்டே ரதத்தசுரர் பட்டே விழப்பொருது
வேலைத் தொளைந்துவரை யேழைப் பிளந்துவரு
சித்தா பரத்தமரர் கத்தா குறத்திமுலை
மீதிற் புணர்ந்துசுக லீலைக் கதம்பமணி
சுத்தா வுமைக்குமொரு முத்தாய் முளைத்தகுரு
நாதக் குழந்தையென வோடிக் கடம்பமலர் …… அணிதிருமார்பா

மத்தா மதக்களிறு பிற்றா னுதித்தகுக
னேதத் திலங்கையினி லாதிக்க முண்டதொரு
முட்டா ளரக்கர்தலை யிற்றே விழக்கணைக
ளேதொட் டகொண்டலுரு வாகிச் சுமந்ததிக
மட்டார் மலர்க்கமல முற்றா சனத்திருவை
மார்பிற் புணர்ந்தரகு ராமற் குமன்புடைய …… மருமகனாகி

வற்றா மதுக்கருணை யுற்றே மறைக்கலைக
ளோதித் தெரிந்துதமிழ் சோதித் தலங்கலணி
யத்தா பரத்தையறி வித்தா விசுற்றுமொளி
யாகிப் ப்ரபந்தமணி வேல்தொட் டமைந்தபுய
வர்க்கா மருப்புழுகு முட்டா திருப்பழநி
வாழ்வுக் குகந்தடிய ராவிக் குள்நின்றுலவி …… வருபெருமாளே.

8 replies on “தமிழ்க்கவிதை பேசிப் பணிந்துருகு நேசத்தையின்றுதர இனிவரவேணும்”

பிறந்தநாள் நல்வழ்த்துக்கள்.. உங்களுக்கு என்னுடைய நமஸ்காரங்கள்..

நமஸ்காரம் …இப்போதான் நானும் என் மனைவியும் தேனம்பாக்கம் சென்று பெரியவாளை தரிசித்து விட்டு வந்தபின் இதனை கேட்டேன் ..உங்களுக்கு என்ன குறை ? ஒரு குறையும் இருக்காது …உங்கள் வலைத்தளத்தை கண்டபின்தான் “பழூர் பெரியவாளின் அதிஷ்டானம் சென்று தரிசிக்கும் பாக்யம் பெற்றோம் ..இந்த மூகபஞ்சசதி, நாராயணீயம் போன்ற பொக்கிஷங்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு பெற்றோம் ..எங்களைப்போல் எத்தனையோ பேர் …தங்களின் இந்த புனிதப்பணி மேலும் மேலும் தொடர …அதற்க்கு வேண்டிய அனைத்தும் கிடைக்க மஹாபெரியவாளை வேண்டுகிறோம் …நன்றி .. ..

பரமேஸ்வரன், பரலோகம் விடுத்து, பார் எல்லாம் காக்க வேண்டி, மதுரை மாநகரிலே, பிட்டுக்கு மண் சுமந்து, பிரம்படி பட்ட திருவிளையாடல் திருநாளில், தாம் பிறந்து, எமது பிறவிப் பிணி தீர்க்க, பராசக்தியின் பெயர் பகல வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தமக்கு, பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

தாம் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் பெற்று, இந்த புணித பணியில் தொடர்ந்து ஈடுபட்டு, வாழ்வாங்கு வாழ, வள்ளி மணாளனிடம் வேண்டிக்கொள்கிறேன் .🙏🏼

அருமையான திருப்புகழும் ஆர்யா சதக ஸ்லோகமும் மன நிறைவு தந்தது.தமிழ் கற்போர் இளகிய மனமும் பணிவும் முருகனருளால் பெறுவார் என்பது உண்மையே.
தங்களுடைய பிறந்த நாள் என்றறிந்தேன்.
வாழ்க நலமுடன் பல்லாண்டு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.