Categories
shivanandalahari

சிவானந்தலஹரி 91வது, 92வது, 93வது ஸ்லோகம் பொருளுரை

சிவானந்தலஹரி 91வது, 92வது, 93வது ஸ்லோகம் பொருளுரை (9 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokams 91, 92, 93)

சிவானந்தலஹரில 90 வது ஸ்லோகத்தில என்னுடைய முக்கரணங்களாலும் உன்னோட வழிபாட்டை பண்றேன், வாக்குனால உன்னோட சரித்திரத்தை சொல்றேன், உடம்புனால உன்னோட கோவில்ல நமஸ்காரம் பண்ணி , ப்ரதக்ஷிணம் பண்ணி, அர்ச்சனை பண்றேன், என்னுடைய  மனசுனால உன்னுடைய ரூபத்தை த்யானம் பண்றேன், அப்படினு சொன்னார். வேற உத்தம பக்தி அர்ஜுனனை போலவோ, இல்ல ராமரை போல பூஜை பண்ணவோ  எனக்கு தெரியலை.. அனுக்கிரஹம் பண்ணுன்னு சொல்லி முடிச்சார்.

பக்தில எப்போ அந்த Total Surrender, தன்னுடைய egoவை விட்டு, individualityயை  விட்டு surrender பண்ணா, சரணாகதி பண்ணா, அந்த க்ஷணமே முக்தி கிடைச்ச மாதிரி தான். இதுக்கு அப்புறம் இருக்கிற பத்து ஸ்லோகங்களில்ல, தான் அடைந்த  அந்த அனுக்கிரஹம், அந்த பேரானந்தத்தை  சொல்லி சந்தோஷபட்டு ஸ்தோத்ரத்தை முடிக்கிறார்.

இந்த 91 வது ஸ்லோகத்தில

आद्या(अ)विद्या हृद्-गता निर्गतासीत्-

विद्या हृद्या हृद्-गता त्वत्-प्रसादात्

सेवे नित्यं श्री-करं त्वत्-पदाब्जं

भावे मुक्तेर्-भाजनं राज-मौले

ஆத்³யா(அ)வித்³யா ஹ்ருʼத்³க³தா நிர்க³தாஸீ-

த்³வித்³யா ஹ்ருʼத்³யா ஹ்ருʼத்³க³தா த்வத்ப்ரஸாதா³த் .

ஸேவே நித்யம்ʼ ஶ்ரீகரம்ʼ த்வத்பதா³ப்³ஜம்ʼ

பா⁴வே முக்தேர்பா⁴ஜனம்ʼ ராஜமௌலே

“ராஜ மௌலே” னா சந்திரமௌலி.. சிரசில் சந்திர கலையுடன் பிரகாசிக்கும் பரமேஸ்வரா,

“ஆத்³யா ஹ்ருʼத்³க³தா” … முதலில் இருந்து, ஆ தி காலத்தில் இருந்து என்னுடைய ஹ்ருதயத்தில் குடிகொண்டிருக்கும்,

“(அ)வித்³யா…த்வத்ப்ரஸாதா³த் நிர்க³தா” .. அஞ்ஞானம் உம்முடைய அருளால் இன்று என் மனதை விட்டு போய் விட்டது,

“ஹ்ருʼத்³யா வித்³யா” .. ஹ்ருத்யானா மனசுக்கு இன்பம் அளிக்கும்னு பொதுவா ஒரு  அர்த்தம்.

இங்க வேற மாதிரி அதை  பிரிச்சு

“யா ஹரதி ஹ்ருதய கிரந்திம் ” அப்படினு போட்டு இருக்கா .. மனத்திலுள்ள முடிச்சை, சிக்கலை அவிழ்க்க கூடியதான ஹ்ருʼத்³யா(ஞானம்),

அந்த ஞானம் “ஹ்ருʼத்³க³தா “.. என்னோட மனசில எப்பவும் வசிக்கும்படியாக உன்னுடைய அனுக்கிரஹம் பண்ணிடுத்து .. என்னோட அஞ்ஞானம் போயிடுத்து, எனக்கு மனசில இருக்கற சந்தேகங்கள் எல்லாம் விலகி விட்டது, ஞானம் கிடைத்து விட்டது. இனிமேல் ,

“ஸ்ரீ கரம்” ஸ்ரீனா செல்வம், ஸ்ரீனா மங்களம் .. எல்லா மங்களங்களையும் அளிக்க கூடிய,

” முக்தேர்பா⁴ஜனம்” முக்திக்கு இருப்பிடமான,

“த்வத்பதா³ப்³ஜம்” .. உன்னுடைய திருவடி தாமரையை,

“நித்யம் ஸேவே” எப்பவும் இனிமே நான் சேவிச்சுண்டு இருக்க போறேன்,

“பா⁴வே ” அதையே த்யானம் பண்ணிண்டு இருக்க போறேன்

அப்படினு இந்த 91 வது ஸ்லோகம்.

குருவுக்கோ, தெய்வத்துக்கோ வழிபாடு பண்ணும் போது, நமக்கு உலகத்தில போய் “success” அடைஞ்சு என்ன திருப்தி கிடைக்கறதோ, அதில இல்லாத ஒரு திருப்தி கிடைக்கறது. அதனால தான் foreignல இருக்கற CEO கூட இங்க ஒரு குருவை  தேடிண்டு வரா ..இல்லையா .. அந்த ego குறையும்  போது, கிடைக்கற  ஆனந்தம் ego boost ஆகும் போது கிடைக்கறது இல்லை. egoவை  விட்ட போது கிடைக்கற ஒரு திருப்தி .. அது  அனுபவிச்சா அதுவும் வேணும் போல இருக்கு நமக்கு.. மஹான்கள் அதேயே  பண்ணின்டு  இருக்கா.. அதனால தான் நம்ம போய், குருன்னு நமஸ்காரம் பண்ணி, அவா கூட இருந்து, அவாளுக்கு சேவை பண்ணி, அவாளுடைய எளிய தேவைகளை பூர்த்தி பண்ணி, அவா சொன்னதை கேட்டு, அது மூலமா நாம லாபம் அடையறோம். நம்ம உலகத்தில , நம்மோட egoவை  வெச்சு காரியங்கள் பண்ணிண்டு தான் இருக்க வேண்டியிருக்கு. material worldல தான் நம்ம இருக்கோம். ஆனா அப்பப்போ போய், இந்த மஹான்களுடைய  சேவையைப் பண்ணிட்டு வந்தா, நமக்கு battery  recharge ஆகிறது.

இது “பதா³ப்³ஜம் ” .. என்னென்ன மங்களங்களைக் கொடுக்கும், எப்படி அஞ்ஞானத்தை போக்கும், ஞானத்தை கொடுக்கும்னு சொன்னார்.

அடுத்த ஸ்லோகத்தில, எல்லா கெடுதல்களும் போயிடுத்து, இந்த பகவானுடைய  அனுகிரஹத்துனால அப்படினு சொல்றார்.

दूरीकृतानि दुरितानि दुरक्षराणि

दौर्भाग्यदुःखदुरहङ्कृतिदुर्वचांसि ।

सारं त्वदीयचरितं नितरां पिबन्तं

गौरीश मामिह समुद्धर सत्कटाक्षैः

தூ³ரீக்ருʼதானி து³ரிதானி து³ரக்ஷராணி

தௌ³ர்பா⁴க்³யது³꞉க²து³ரஹங்க்ருʼதிது³ர்வசாம்ʼஸி .

ஸாரம்ʼ த்வதீ³யசரிதம்ʼ நிதராம்ʼ பிப³ந்தம்ʼ

கௌ³ரீஶ மாமிஹ ஸமுத்³த⁴ர ஸத்கடாக்ஷை꞉

“ஹே கௌ³ரீஶ ” .. உமா பதியே,

“து³ரிதானி” .. என்னுடைய பாவங்கள்,

“து³ரக்ஷராணி” .. ப்ரஹ்மா என் தலையில் எழுதிய கெட்ட தலை எழுத்துக்கள்,

“தௌ³ர்பா⁴க்³ய து³க² து³ரஹங்க்ருʼதி” .. என்னுடைய துரதிருஷ்டம், என்னுடைய துக்கங்கள் , என்னுடைய துர் அகங்காரம்,

“து³ர்வசாம்ʼஸி” ..  கெட்ட வார்த்தைகள்.. இந்த அகங்காரத்துனால ஏதாவது  ஒரு  வார்த்தை சொல்வோம். அது பெருசா ஒரு  vicious circleயா  நம்மளை  பிடிச்சிண்டிரும்,

இது எல்லாத்துல இருந்தும்,

“தூ³ரீக்ருʼதானி ” அவற்றில்  இருந்து  மீண்டு விட்டேன்,

“ஸாரம்ʼ த்வதீ³யசரிதம்” ..மிகவும் சுவை மிகுந்த, சாரமான உன்னுடைய சரிதம் ,

“நிதராம்ʼ பிப³ந்தம்” .. அதை இடைவிடாது பருகிக்கொண்டு, வீண் பேச்சுகளிலிருந்து விலகி, உன்னுடைய

சரிதத்தை படிக்கறதுக்கு எனக்கு  இங்கேயே, இப்பவே அனுக்கிரஹம் பண்ணனும் அப்படினு சொல்றார்.

நம்ம நினைச்ச மாதிரி யாராவது நடந்துக்கலனா, ஒன்னு, நம்மளை  விட ரொம்ப பலசாலியா இருந்தா, வேற யார் கிட்டயாவது போய் புலம்பிண்டு இருப்போம். நம்மளை விட பலம் கொஞ்சம் குறைவா இருந்தா, அவாள்  கிட்ட போய் சண்டை போடுவோம். அதை  சொல்லும் போது, கொஞ்சம் masalaலாம் வெச்சு,  காரசாரமா சொல்லணும் அப்படினு  சொல்வோம். அவனுக்கு ரொம்ப  கோவம் வரும். இப்படி இதுல ரொம்ப ஒரு  ருசி இருக்கு நமக்கு.

இவர் சொல்றார், பகவானோட சரித்ரம் அல்லவா ருசியானது. நீ அதை பண்ணேனா, பகவான் உன்ன கை தூக்கி விடுவாரே, இந்த சம்சார சாகரத்தில இருந்து.. அப்படினு ஆச்சார்யாள் சொல்றார். நிறைய மஹான்கள் இந்த மாதிரி சொல்றா.

இந்த சுலோகம் படிக்கும் போது,

துஃ ஸ்வப்ன துஃ ஶகுன துர்கதி தௌர்மனஸ்ய- துர்பிக்ஷ துர்வ்யஸன துஃஸஹ துர்யஶாம்ஸி | உத்பாததாபவிஷபீதிமஸத்க்ரஹார்திம் வ்யாதீம்ஶ்ச னாஶயது மே ஜகதாமதீஶ ||

அப்படினு சிவ கவசத்தில ஒரு ஸ்லோகம் ஞாபகம் வருது.

குழந்தைகள்  ஏதாவது கெட்ட கனவை பார்த்து, அல்லது ஏதாவது காட்சிகளை பார்த்து பயந்துண்டா, இந்த ஸ்லோகத்தை சொல்வா அந்த காலத்தில, சிவ  கவசித்திலிருந்து..

தினமும் சந்தியா வந்தனம்  முடிச்சிட்டு, விஷ்ணு சஹஸ்ரநாமம், சிவ கவசம், இந்திராக்ஷி படிக்கறதுனு  எல்லாம்  அந்த காலத்தில வெச்சியிருந்தா. பகவான் அனுக்கிரஹம் கிடைச்ச  பின்ன, உலகத்தில எந்த  கெடுதலும் என் பக்கத்துலயே வர முடியாது அப்டிங்கறது மஹான்களோட அனுபவம். அவா அதை  நிறைய   சொல்றா.

அப்பர் சொல்றார் ,

அல்லல் என்செயும் அருவினை என்செயும்

தொல்லை வல்வினைத் தொந்தந்தான் என்செயும்

தில்லை மாநகர்ச் சிற்றம் பலவனார்க்

கெல்லை யில்லதோர் அடிமைபூண் டேனுக்கே.

அப்படிங்கிறார்.

நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்;

நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்;

ஏமாப்போம்; பிணி அறியோம், பணிவோம் அல்லோம்;

இன்பமே எந்நாளும், துன்பமில்லை.

அப்படினு சொல்றார்.

அடுத்து 93வது ஸ்லோகத்தில,

सोमकलाधरमौलौ कोमलघनकन्धरे महामहसि ।

स्वामिनि गिरिजानाथे मामकहृदयं निरन्तरं रमताम् ||

ஸோமகலாத⁴ரமௌலௌ

கோமலக⁴னகந்த⁴ரே மஹாமஹஸி .

ஸ்வாமினி கி³ரிஜாநாதே²

மாமகஹ்ருʼத³யம்ʼ நிரந்தரம்ʼ ரமதாம்

அப்படினு  சொல்றார்.

“ஸோமகலாத⁴ரமௌலௌ” .. சந்திரனை சிரசில் சூடி உள்ளவரும்,

“கோமலக⁴னகந்த⁴ரே” .. கரிய மேகம்போல கருத்த கழுத்தை உடையவரும்,

“ஸ்வாமினி” .. என்னுடைய தலைவரும் ,

“கி³ரிஜாநாதே²” … பார்வதி நாதருமான ,

“மஹாமஹஸி” .. பரஞ்சோதி .. பெரிய ஒரு ஒளி .. அந்த வடிவில் ,

“மாமகஹ்ருʼத³யம்” .. அந்த பரமேஸ்வரனிடத்தில் என்னுடைய ஹ்ருதயமானது ,

“நிரந்தரம்ʼ ரமதாம்” … இடை விடாது அந்த பகவானிடத்தில் என்னுடைய மனசு ரமிக்க வேண்டும் அப்படினு பிரார்த்தனை பண்றார் .

நமக்கெல்லாம் கோவிலுக்கு போனா,ஒரு  சிவ லிங்கம் தான் தெரியறது. மஹான்களுக்கு அது ஒரு பரஞ்சோதியா காட்சி  கொடுக்கறது. அதனால தான், அங்க போய் அந்த ஸ்வாமியை அடிக்கடி தரிசனம் பண்ணனும். மனசு பகவானிடத்தில் லயிச்சுடுதுன்னா, அங்கேயே ரமிச்சிண்டு இருந்துனா, மத்த கரணங்களும், வாக்கும், உடம்பும் எல்லாமே மனசு சொல்றதைத்தான் கேக்கறது. அதனாலே வீண் பேச்சுகள் தானே குறைஞ்சிடும். பகவானோட சரித்திரத்தை பேசறதுங்கறது  ஜாஸ்தி ஆயிடும்.. அப்படி பண்ணினா, நம்முடைய எல்லா துரதிஷ்டங்களும், எல்லா வியாதிகளும், எல்லா துன்பங்களும் நம்ம விட்டு விலகி போய்விடும். எல்லா மங்களங்களும் நம்மை வந்து சேரும். மஹாபெரியவா, சிவன் சார், கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் மாதிரி மகான்களை பாக்கறதுக்கு முன்னாடி, ஒருத்தரோட வாழ்க்கையே வேற.. அந்த மாதிரி மகான்களை பார்த்த பின்ன, அவாளுடைய  கடாக்ஷம் பட்டதுன்னா, அப்புறம் நம்மளுடைய  வாழ்க்கையே வேற மாதிரி இருக்கும். இத நான் நிறையபேரை  பார்த்திருக்கேன்.

அதை தான் இங்க ஆச்சார்யாள் இந்த ஸ்லோகத்தில் சொல்றார்.

பரம மங்கலங்களை கொடுக்க கூடிய அந்த பகவானோட “பதா³ப்³ஜம் ” அதை த்யானம் பண்ணனும் அப்படினு. என் மனசு உன்னுடைய பாதத்தில் இடைவிடாமல்  ரமிக்க வேண்டும் அப்படினு சொன்ன உடனே, மூகபஞ்சஶதீல ஒரு ஸ்லோகம் ஞாபகம் வருது

ஸுராகே³ ராகேந்து³ப்ரதிநிதி⁴முகே² பர்வதஸுதே

சிரால்லப்⁴யே ப⁴க்த்யா ஶமத⁴னஜனாநாம் பரிஷதா³ ।

மனோப்⁴ருʼங்கோ³ மத்க: பத³கமலயுக்³மே ஜனனிதே

ப்ரகாமம் காமாக்ஷி த்ரிபுரஹரவாமாக்ஷி ரமதாம் ॥ 97 ॥

“ப்ரகாமம் காமாக்ஷி” ரொம்ப சந்தோஷத்தோடு நிறைய  உன்னுடைய பாதமாகிய தாமரையில் என் மனமாகிய வண்டு, இடைவிடாமல் ரமிக்கட்டும் அப்படினு ஒரு அழகான பிரார்த்தனை.

ஸோமகலாத⁴ரமௌலௌ

கோமலக⁴னகந்த⁴ரே மஹாமஹஸி .

ஸ்வாமினி கி³ரிஜாநாதே²

மாமகஹ்ருʼத³யம்ʼ நிரந்தரம்ʼ ரமதாம்

நம: பார்வதி பதயே ஹர ஹர மஹாதேவா !!!

Series Navigation<< சிவானந்தலஹரி 88வது, 89வது, 90வது ஸ்லோகம் பொருளுரைசிவானந்தலஹரி 94வது, 95வது, 96வது ஸ்லோகம் பொருளுரை >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.