Categories
shivanandalahari

சிவானந்தலஹரி 88வது, 89வது, 90வது ஸ்லோகம் பொருளுரை

சிவானந்தலஹரி 88வது, 89வது, 90வது ஸ்லோகம் பொருளுரை (10 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokams 88, 89, 90)

சிவானந்த லஹரில அடுத்த மூணு ஸ்லோகம் பார்க்கலாம்.

88ஆவது ஸ்லோகத்ல வைதீக பக்தி ஒன்னு இருக்கு. இந்த வைதீக பக்தி பண்றதுக்கும் என்னால முடியல னு சொல்றார். 89ல பரா பக்தி இருக்கு. அந்த பாரா பக்தியையும் என்னால பண்ண முடியல, அப்படினு சொல்லிட்டு,

90 ஆவது ஸ்லோகத்தில எனக்கு தெரிஞ்ச பக்தி பண்றேன், அனுக்கிரஹம் பண்ணு னு சொல்லி முடிக்கிறார்.

यदा कृताम्भोनिधिसेतुबन्धनः करस्थलाधःकृतपर्वताधिपः ।
भवानि ते लङ्घितपद्मसम्भवः तदा शिवार्चास्तवभावनक्षमः ॥ ८८॥

யதா³ க்ருʼதாம்தபா4நிதி4தஸதுப³ந்த4ன:,
கரஸ்த²லாத4 :, க்ருʼதபர்வதாதி4ப: ।
ப 4வானி தத, லங்கி4தபத்³ேஸம்ப4வ:,
ததா³ ஶிவ, அர்சாஸ்தவபா4வனக்ஷே:

பகவானிடம் பக்தி பண்றதுக்கு வைதீகமா பண்ணும் போது 3 கரணங்கள் இருக்கு. வாக்கு,உடம்பு, மனசு.

இந்த மூன்றையும் பகவானிடத்தில் ஈடு படுத்தனும்.

உலகத்தவருக்கு நாம இப்ப சேவா பண்றோம், அதுலேர்ந்து வர பணத்தை கொண்டு ஏதோ சந்தோசத்தை அனுபவிக்க பார்க்கிறோம். அப்படி இல்லாம பகவானிடம்  சேவை பண்ணனும், எது குடுக்கறாலோ அதுல திருப்தி யா இருக்கணும்.

அந்த வைதீக பக்தி பண்ணி கொண்டே வந்தால் உத்தம பக்தி வரும். இந்த மனச கொண்டு பகவானை த்யானம் பண்றதுக்கு, வாக்கை கொண்டு பகவானை ஸ்தோத்திரம் பண்றதுக்கு, கைகளால் அர்ச்சனை பண்றதுக்கு – ஆச்சார்யாள் சொல்றாள், என்னால எப்படி பண்ண முடியும்?

யார் அத பண்ண முடியும் னா,

” ஶிவா! க்ருʼதாம்தபா4நிதி4தஸதுப³ந்த4ன:”

கடல் மேல பாலம் கட்டினவரால வேணா சிவ பூஜை பண்ண முடியும். சேது பந்தனம் பண்ணும் போது ராமர் ராமேஸ்வரத்தில சிவ பூஜை ய பண்ணார் இல்லையா,அவர் தான் உள்ளபடி உன்னோட பூஜையை பண்ண முடியும்.

“கரஸ்த²லாத4 :, க்ருʼதபர்வதாதி4ப:”

கையால  ஒரு மலையயே  அழுத்தி, சின்னது ஆக்கின  வேணா உன் ஸ்தோதிரம் பண்ண முடியும். அகஸ்தியர் கை தளத்தால் விந்திய மலையையே அடக்கினார் சின்னது ஆக்கினார் இல்லையா, அப்படி அகஸ்தியர் தான் உள்ளபடி ஸ்தோத்ரம் பண்ண முடியும்.

“லங்கி4தபத்³ம ஸம்ப4வ:,”

தாமரை ல உதித்த பிரம்மாவால் கூட உன்ன த்யானம் பண்ண முடில , வேதங்கள கொண்டு ஸ்தோத்திரம் பண்ண முடில, உன்னுடைய முடியை பார்க்க முடில, அவருக்கும் மேல ஒருத்தர் இருந்த தான் அவா தான் உன்னுடைய த்யானம் பண்ண முடியும்.

அப்படி இருக்கிறச்ச,

“ததா³ ஶிவ, அர்சாஸ்தவபா4வனக்ஷே:, ப4வானி!”

உன்னுடைய அர்ச்சனமும் ஸ்தோத்ரம் த்யானமும்  பண்ணுவதற்கு நான் திறமை  உடையவனா அப்ப தான் ஆகா முடியும் . என்னால அவளோ பண்ண முடியாது .அப்படி னு இந்த ஸ்தோத்திரதில் சொல்கிறார். நாம் பூஜை பண்ணும் போது பெரியவா சொல்லி கொடுத்த குரு சொல்லி கொடுத்த விதத்துல நமக்கு தெரிஞ்ச விதத்துல பூஜை பண்றோம்.ஆனா தினமும்  ஒரு மணி நேரம் ஒரு முறையை வைச்சுண்டு பண்ணா தான் அந்த நேரத்துலயாவது  பகவானுடைய கார்யத்துல போகும்.

அப்படி பண்ணும் பொது,மஹான்கள் எப்படி பக்தி பண்ணா னு நெனச்சுக்கணும் .

பெரியவா  சந்திரமௌலீஸ்வரர் பூஜை போது ரொம்ப சுட சுட கொண்டு வந்து பிரசாதங்கள் எல்லாம் நைவேத்தியத்துக்கு வச்சாலும் ,பெரியவா காத்துண்டு இருப்பாளாம், ஆறட்டும் னு. அதே, ஆறி போனாலும் நைவேத்யம் பண்ண மாட்டளாம். சரியான சூடு ல இருக்கணும் நைவேத்தியத்துக்கு. அதே மாதிரி ஒரு சஹஸ்ரநாமம் மாலை  பண்ணி காமாக்ஷிக்கு போட்டா, தங்கத்துல. அதை சாத்தனும் னு வந்தப்போ பெரியவா சொன்னாளாம், எவ்ளோ வெயிட்டா  இருக்கே இந்து மாலை, இதை அம்பாள் கழுத்துல போட்டா அம்பாளு க்கு வலிக்காதா  ? அதனால ஒரு தண்டு கட்டி, அது மேல போடுங்கோ.. நமக்கு  பார்க்கும் போது கழுத்துல மாலை இருக்கறா மாதிரி தெரியணும். அப்படினு சொல்லி, அந்த மாதிரி, சொந்த தாயாராட்டம் கழுத்து வலிக்குமே அப்படினு நெனைக்கறா. இப்படி வைதீக பக்தி பண்ணும் போதே அந்த பாவம்!

அதே மாதிரி ஸ்வாமிகள் பண்ற க்ருஷ்ண பூஜையும். குருவாயூரப்பன் விக்ரஹத்தை வச்சுண்டு, அதுக்கு அபிஷேகம், அர்ச்சனை நம்ம பண்ற மாதிரி தான் பண்ணுவார். ஆனா, அந்த பாவமே  தனியா இருக்கும்.ரொம்ப ஆனந்தமா ஒரு குழந்தைய கொஞ்சற மாதிரி இருக்கும். அவருடைய குருவாயூரப்பன் ரொம்ப அழகு, அந்த ஸ்வாமிய அவரு பூஜை பண்றது கொஞ்சற மாதிரி இருக்கும்.பூஜா முடிச்சு தொடச்சு ஸ்வாமிக்கு குங்குமம் சந்தனம் இட்டு, அதுக்கு அர்ச்சனை பண்ணிட்டு ஆரத்தி பண்ண பின்ன, அவர் திருஷ்டி கழிப்பார். நேரா பார்க்கற மாதிரி மஹான்கள் ஸ்வாமிக்கு பூஜா பண்ணுவா!,அந்த பாவம் நமக்கும் வரணும் னு நாம பூஜா பண்ணும் பொது வேண்டிக்கணும், நாம் ஸ்தோத்ரம் சொல்லும் போது வேண்டிக்கணும்.

அடுத்த ஸ்லோகத்துல ,

नतिभिर्नुतिभिस्त्वमीशपूजा-विधिभिर्ध्यानसमाधिभिर्न तुष्टः ।
धनुषा मुसलेन चाश्मभिर्वा वद ते प्रीतिकरं तथा करोमि ॥ ८९॥

நதிபி4ர்நுதிபி4 :, த்வமீஶ, பூஜா
விதி4பி4ர்த்4யாநஸமாதி4பி4:, ந துஷ்ட:
த 4நுஷா முஸலேன, சாஶ்மபி4ர்வா,
வத³தே ப்ரீதிகரம், ததா² கராமி

ஈசா!, நதிபி4:-நமஸ்கரங்களாளும், நுதிபி4:-ஸ்தோத்ரங்களாலும், பூஜா விதிபி: – பல விதமான பூஜை முறைகளாலும், த்4யாநஸமாதி4பி4 : -த்யான சமாதிகளாலும்,

ந துஷ்ட –   திருப்தி இல்ல நினைக்கறேன்.

த 4நுஷா: அர்ஜுனன் வந்து வில்லால அடிச்சான், இன்னொருத்தர் உலக்கையால் அடிக்கறார்.

சாக்ய நாயனார் ஒருத்தர், அவர் சமணர் கு நடுவுல மாட்டிண்டதனால சிவலிங்கம்  ஒன்னு இருந்தது.அதா போகும்போது, இத பில்வ தளமா நெனச்சுக்கோங்கன்னு சொல்லி கல்லை எடுத்து அடிச்சுட்டு போவார். அதுக்கும் சிவன் அனுக்கிரஹம்  பண்ணார்.

த 4நுஷா முஸலேன சாஶ்மபி4ர்வா  -அஶ்மபி4:  கற்கள் .த்வம்-அதனால எல்லாம் நீங்க ரொம்ப சந்தோஷம் ஆயிடரேள்னு நினைக்கறேன். அதனால உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்கோ, நான் அத பண்ணிட்டு போறேன். இது வந்து, நிந்தா ஸ்துதி மாதிரி… அதாவது நீங்க அன்பு தான் பார்க்றேளுங்கிறத நான் புரிஞ்சுட்டேன். கண்ணப்பன் போல அன்பு எனக்கு இல்லையேனு எல்லா மகான்களும் நெனைக்கரா இல்லையா !?.

காளத்தியப்பர் கோவில் கும்பாபிஷேகம் பண்ணும் போது, பெரியவா காளத்தியப்பருக்கு கண்ணப்பன் வாயில கொண்டு வந்து உமிழ்ந்த எச்சில் தான் பிடிச்சது. அதனால, அவருக்கு கங்கை

ஜலம், பட்டுத்துணி, பால், தேன் இந்த நாலையும் கும்பாபிஷேகத்துக்கு கொடுத்து அனுப்புவோம். ஏன்னா இந்த நாலுமே எச்சிலாம்! ஏன்னா , கன்னுகுட்டி மடில வாய் வச்ச அப்புறம் தான் பால் கறக்கும் , அதனால கன்னுகுட்டி ஓட  எச்சில் – பால், தேன் வந்து தேனீ ஓட எச்சில்,பட்டுப்பூச்சி தன் வாயாலதான் அந்த  நூலை கோற்கறது, அதனால் பட்டும் எச்சில் , கங்கை ஜலத்துல எப்ப பாரு மீன் வாய தொறந்து தொறந்து மூடிண்டு இருக்கும், அது மீன்களோட எச்சில்னு பெரியவா சொல்லிருக்கா.

எப்படி பெரியவா வைதீக பூஜை பண்ணுவானு நமக்கு  தெரியும். ஆனா அதுக்கும் மேல, இந்த கண்ணப்பனோட பக்திய வியந்திருக்கானு இந்த நிகழ்ச்சி ல இருந்து தெரியறது. அந்த மாதிரி , குங்குலியக்கலய நாயனார் னு ஒருத்தர் இருந்தார்.. அவரு எல்லா சொத்தையும் இழந்து தினமும் குங்குலியம் போடுவார். குங்குலியங்கறது சாம்பிராணி மாதிரி. குங்குலியம் போட முடிலயேனு கஷ்டபட்டுண்டு இருக்கார். மனைவி மாங்கல்யத்தை கொடுத்து இதை வச்சு குழந்தைகளுக்கு  ஏதாவது சாப்பிட வாங்கிண்டு வாங்கோ னு கொடுத்தா, அவர் போகும் போது, எதிரில்  பகவானே  ஒரு மூட்டைல குங்குலியத்த கொண்டுவரார். இந்த மாங்கல்யத்தை கொடுத்து குங்குலியத்தை வாங்கி ஸ்வாமிக்கு போட்டார். இது மனுஷாளால புரிந்து கொள்ள முடிமா.? இது பரா பக்தி. அந்த மாதிரி பரா பக்தி எனக்கு வேணும் னு இந்த ஸ்லோகத்துல வேடிக்கையா  சொல்றா, அந்த பக்திய  எனக்கு கொடுத்துரு அப்ப நான் வைதிகமா பக்தி பண்றேனா? அத கரெக்டா பண்றேனான்னு நீ பார்க்க மாட்டாய். அன்பா பண்றேன்னு நீ ஏத்துப்ப இல்லையா என்று  சொல்றார்.

இதை தாயுமானவர் ரொம்ப அழகா ஒரு பாட்டு ல சொல்றார்

“கல்லால் எறிந்தும், கைவில்லால் அடித்தும்,

கனிமதுரச் சொல்லால் துதித்தும்,

நற் பச்சிலை தூவியும் –  தொண்டரினம்

எல்லாம் பிழைத்தனர் –  அன்பற்ற

நான் இனி ஏது செய்வேன் ?

கொல்லா விரதியர் நேர்நின்ற

முக்கட்குருமணியே!”

அப்படி  னு ஒரு பாட்டு. எப்படியோ அவ, அன்பு இருக்கறது நால அவா பொழச்சு போய்ட்டா, நான் எப்படி பிழைப்பேன் தெரியலையே ? எனக்கு உன் மேல  அன்பே வர மாட்டேங்கறதே பரமேஸ்வரா னு வேண்டிக்கறார். இங்க எல்லாரும் உன்னை அடிக்கறாங்கிறத வச்சுண்டு பட்டினத்தார் வேடிக்கையா ஒரு பாட்டு சொல்றார்.

வில்லால் அடிக்கச் செருப்பால் உதைக்க வெகுண்டு ஒருவன்
கல்லால் எறியப் பிரம்பால் அடிக்க இக் காசினியில்
அல் ஆர் பொழில் தில்லை அம்பலவாணற்கு ஓர் அன்னை பிதா
இல்லாததால் அல்லவோ இறைவா  கச்சியேகம்பனே

னு சொல்றார்.

ஹே! பரமேஸ்வரா! வரவன், போறவன் எல்லாம் உன்னை அடிக்கறானே ?

உனக்கு அப்பா அம்மா இல்லாததால தான் இப்படி எல்லாம், அப்படினு சொல்றார்.

அதாவது, பரமேஸ்வரன், அதி அந்தம் இல்லாத பழமநாதி என்றத வச்சுண்டு அதையும் கொண்டாடறார். நீ அன்பினால எது பண்ணாலும் ஏத்துக்கறங்கிறதயும் கொண்டாடறார் ,ஆனா சொல்றதுஒரு  நிந்தா ஸ்துதி மாதிரி வேடிக்கையா  சொல்றார்.

குரு காமிச்ச வழி ல முறையா பூஜை பண்ணனும். நாம ஏதோ பெருசா பூஜா பண்ணிட்டேன் னு நெனச்சுக்க கூடாது. ராமர் பண்ண பூஜையோ, அகஸ்தியர் பண்ண ஸ்தோத்ரமோ , பிரம்மா பண்ண த்யானமோ நம்பனால பண்ண முடியுமா ?

அதனால, நம்மால முடிஞ்ச குரு காமிச்ச வழில நமக்கு தெரிஞ்சத  பண்ணிண்டு போறோம், அப்படினு வைதிக பக்தி பண்ணும் பொது நெனைச்சுகனும்.

பரா பக்தி பண்ணும் போது நம்மலால அர்ஜுனன் போலவோ, கண்ணப்பன் போலவோ ஒரு உத்தம அன்பு ஒன்னு நமக்கு வரலையே !?

அப்பேர் பட்ட பக்தி வருவதற்கு அனுக்கிரஹம் பண்ணு .அப்படி னு ரெண்டாவது ஸ்லோகத்துல வேண்டிக்கறார்.

90 வது ஸ்லோகத்துல

वचसा चरितं वदामि शम्भोरहमुद्योगविधासु तेऽप्रसक्तः ।
मनसा कृतिमीश्वरस्य सेवे शिरसा चैव सदाशिवं नमामि ॥ ९०॥

வசஸா சரிதம்ʼ வதா³மி ஶம்போ⁴-அஹமுத்³யோக³விதா⁴ஸு தே(அ)ப்ரஸக்த꞉ .
மனஸா க்ருʼதிமீஶ்வரஸ்ய ஸேவே
ஶிரஸா சைவ ஸதா³ஶிவம்ʼ நமாமி .. 90..

அப்படி னு எனக்கு தெரிஞ்சதா நான் பண்றேன் பா.

முக்கரணங்களால உன் வழிபாடு பண்ணனும் அப்படி னு பெரியவா சொல்லி கொடுத்துருக்கா..

“வசஸா சரிதம் வதாமி ஶம்போ:”

என் வாக்குனால உன் சரித்திரம் சொல்றேன்,

“உத்யோக விதாஸு அஸக்த:”

உயர்ந்த யோக மார்க்கங்கள் எல்லாம் நான் அஸக்தன் -எனக்கு அதெல்லாம் ஒன்னும் தெரியவே இல்ல.

“மனஸாக்ருதிம்-ஈஶ்வரஸ்ய ஸேவே”

ஆக்ருதிம் ஈஶ்வரஸ்த  ஸேவே

அந்த நடராஜ விக்ரஹத்தை பார்த்து ஒரு நிமிஷம் என்னால நிற்க முடியறது, இவ்வளவு தான் என்னால த்யானம் லாம் பண்ண முடியரது,

ஶிரஸா சைவ ஸதாஶிவம் னமாமி

கோவிலுக்கு போனால், அந்த லிங்காகாரத்தில இருக்கிற ஸ்வாமிய பார்த்து சாஷ்டாங்கமா நமஸ்காரம் பண்றேன்.

இது பண்றேன். இதுக்கு நீ  அனுகிரஹம் பண்ணனும் அப்படினு இந்த ஸ்லோகத்துல சொல்லி முடிக்கிறார் .

மஹான்கள் எல்லாம் தன்னை ரொம்ப தாழ்த்திண்டு, இந்த மாதிரி எனக்கு ஒரு பக்தியும் தெரியலை அனுகிரஹம் வேணும்னு ஏன் சொல்ரானா, நமக்கு அதுல ஒரு உபதேசம் இருக்கு. நம்ப ராமர் மாதிரி பூஜை பண்ண முடியாது ,கண்ணப்பன் மாதிரி நம்ம பக்தி பண்ண முடியாது, ஆனா நாம ஈகோவ விட்டு பகவான் இடத்துல சரணாகதி பண்றதுக்கு முயற்சி பண்ணனும்.

ஸ்வாமிகள் தன் கிட்ட யாராவது பூஜா எடுத்து வைங்கோ னு கேட்டா, ஒரு சின்ன படம், பிள்ளையார் படம். அந்த பிள்ளையார் படத்துக்கு அர்ச்சனை – 16 நாம சொல்லி அருகம்புல்லால் அர்ச்சனை தினம் பண்ணா போதும்னு சொல்லுவார். தன்னுடைய பூஜைல நாராயணீயம் சொல்லி தான் பூஜா பண்ணுவார், வேத மந்த்ரங்களேல்லாம் சொல்ல  மாடார்.

எளிமையா நான் பூஜை நித்யம் பண்ணனும், more important than ஆடம்பர பூஜா. ஏன்னா,  பக்தி மூலமா ஞானம் அடையனும் அப்படினா அதுல அந்த ஈகோவ போக்கிகறது தான். உலகத்துல நாம ஜெயிக்க பொறந்தது ல இருந்து படிப்பு பணம் பேமிலி எல்லாத்தையும் வச்சு ஒரு ஈகோவ வளர்த்துண்டு அந்த ஈகோ வச்சு உலகத்துல போய் ஜெயிக்கனும் முயற்சி பண்றோம்.

ஆனா பகவான் இடத்துல அந்த ஈகோ முழுக்க கை விட்டு, சரணாகதி பண்ணா , அதுல ஒரு நிம்மதி இருக்கு அது மோக்ஷத்துக்கு. அப்படிங்கிறது னால மஹான்கள் அந்த மாதிரி என்னுடைய பூஜா என்னுடைய பக்தி லாம் கணக்கு இல்லை.  “மீனாக்ஷி விஸ்வஜனனீம் சரணம் ப்ரபதயே” – நீலகண்ட தீக்ஷிதர்.

உன்ன சரணாகதி பண்றேன் அம்மா நீ காப்பாத்து, அப்படி ங்கிற மாதிரி இங்க 90 வது ஸ்லோகத்துல ஆச்சார்யாள் உனக்கு நமஸ்காரம் பண்றேன்,உன் ரூபத்தை பார்க்கறேன்,உன்னுடைய ஸ்தோத்ரம் படிக்கிறேன்,

உன் சரித்ரம் படிக்கிறேன், அனுக்கிரஹம் பண்ணுங்கிறார். இதுக்கு அடுத்த பத்து ஸ்லோகத்திலேயும், எப்பேர்ப்பட்ட அனுக்கிரஹத்தை பகவான் பண்ணிட்டார் எனக்கு அப்படினு பேரானந்தம் படறார்.

அத அடுத்து பார்ப்போம்….

வசஸா சரிதம்ʼ வதா³மி ஶம்போ⁴-அஹமுத்³யோக³விதா⁴ஸு தே(அ)ப்ரஸக்த꞉ .மனஸா க்ருʼதிமீஶ்வரஸ்ய ஸேவே
ஶிரஸா சைவ ஸதா³ஶிவம்ʼ நமாமி ..

நம: பார்வதி பதயே ஹர ஹர மகாதேவ ..

Series Navigation<< சிவானந்தலஹரி 85வது, 86வது, 87வது ஸ்லோகம் பொருளுரைசிவானந்தலஹரி 91வது, 92வது, 93வது ஸ்லோகம் பொருளுரை >>

One reply on “சிவானந்தலஹரி 88வது, 89வது, 90வது ஸ்லோகம் பொருளுரை”

மிக அருமையான ஸ்லோகங்கள். அற்புதமான விளக்கம்.

முதல் ஸ்லோகத்தில், ராமர், அகஸ்தியர், பிரம்மா போன்றவர்கள் பண்ணிய பக்தி நமக்கு இல்லை என்று சொன்னாலும், அப்பேற்பட்ட நற்குணங்களுடன் கூடிய பக்தியை நமக்காகப் பிரார்த்திக்கிறார். 

இரண்டாவது ஸ்லோகத்திலும் நான் செய்யும் பக்தியைவிட, வில்லாலும் கற்களாலும் உலக்கையாலும் செய்த பூஜை உனக்கு பிரியமானதாக இருப்பதால் அதையே நானும் செய்கிறேன் என்று நிந்தாஸ்துதியாக ஸ்தோத்திரம் செய்கிறார். 

ஆசார்யாள் செய்துள்ள  “சிவ புஜங்கம்” பதின்மூன்றாவது  ச்லோகத்தில், “உன்னை எப்படி ப்ரீதி கொள்ளச் செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. எனக்கோ பிறத்தியாருக்கு த்ரோஹம் செய்வதற்கு முடியவில்லை. நீயானால் கட்டின பெண்டாட்டிக்கும், பெற்ற பிள்ளைக்கும், பெற்றெடுத்த தகப்பனாருக்கும் த்ரோஹம் செய்தவர்களுக்குத்தான் ப்ரஸன்னமாகி அநுக்ரஹம் பண்ணியிருக்கிறாய்!” என்று நிந்தா ஸ்துதியாக ஸ்தோத்தரிக்கிறார். காந்தா த்ரோஹி (இயற்பகை நாயனார்), ஸுத த்ரோஹி (சிறுத்தொண்டர்), பித்ரு த்ரோஹி (சண்டிகேச்வரர்) என்று இதில் மூன்று நாயான்மார்களைக் குறிப்பிடுகிறார்.

மூன்றாவது ஸ்லோகத்தில் மனோ, வாக், காயத்தால் சம்புவினுடைய சரிதத்தை சொல்லி, மனதால் உருவத்தை த்யானித்து, சதாசிவத்தை தலையால் வணங்குவதாக ஸ்தோத்திரிக்கிறார். 

மனோ-வாக்-காயங்கள் என்ற த்ரிகரணங்களையும் பகவத்பரமாக்க வேண்டும். ஆண்டாள் ’திருப்பாவை’யில்
“தூமலர் தூவித் தொழுது
வாயினாற் பாடி மனத்தினால் சிந்திக்க”
என்று ஆர்டரை மாற்றி காயம்-வாக்-மனஸ் என்று பாடியிருக்கிறாள்.

“தலையே நீ வணங்காய்” என்ற அப்பர் பாடலில்,  தலையால் வணக்கம், கையால் அர்ச்சனை, வாயால் ஸ்தோத்ரம், நெஞ்சினால் நினைத்தல் என்று அடுக்கிக் கொண்டே போகிறார். “தலையாரக் கும்பிட்டுக் கூத்துமாடிச் சங்கரா
சய போற்றி போற்றி யென்றும்” என்று இன்னொரு பாடலில் பாடுகிறார்.

மஹாபெரியவா, ஸ்வாமிகள், குங்கிலியக்க நாயனார், தாயுமானவர், பட்டினத்தார் மேற்கோள்கள் மிக மிக அருமை 👌👌 மகான்களெல்லாம் நாம் நம்முடைய அஹங்காரத்தை ஒழித்து சரணாகதி 
பண்ண வழி காண்பிக்கிறார்கள் என்று விளக்கிய விதம் அருமை 🙏🌸

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.