Categories
shivanandalahari

சிவானந்தலஹரி 97வது, 98வது ஸ்லோகம் பொருளுரை


சிவானந்தலஹரி 97வது, 98வது ஸ்லோகம் பொருளுரை (11 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokams 97, 98)

Series Navigation<< சிவானந்தலஹரி 94வது, 95வது, 96வது ஸ்லோகம் பொருளுரைசிவானந்தலஹரி 99வது, 100வது ஸ்லோகம் பொருளுரை >>

One reply on “சிவானந்தலஹரி 97வது, 98வது ஸ்லோகம் பொருளுரை”

சிவானந்தலஹரி பக்திப் பிரவாகம் என்றால் மிகையில்லை !
சௌந்தர்ய லஹரி அழகு வெள்ளம்…அழகு பிரபாவம் ! இது பக்தி பிரபாவம்!
சமுத்திரத்தில் முத்து எடுக்கிறார்போல் தோண்டத் தோண்ட பக்தியே வெளிப்படும் பல ரூபத்தில் ! அதுவும்.ஆசார்யாள் பக்தின் வெளிப்பாடே !!
ஹே பரமேஸ்வரா..ஒப்பில்லா மாணிக்கமே, என் மனதாகிய யானை, அடக்க முடியாத சேஷ்டைகளுடன் இங்கும் அங்கும் திரிந்து கொண்டுள்ளது !இந்த யானையை பக்தியின் கயிற்றால் கட்டி திருப்பி சமாதானமாக உம் வசப்படுத்தி, சாஸ்வதமான பிரம்ம பதத்தை அளித்து அதே நிலையில் வைக்கும்படியான நிலையில் என்னை வைக்க வேண்டும் என்பதை பிரார்த்தனை செய்கிறார் !
நம் போன்ற எளிய ஜனங்களுக்காகச் சொல்லப்பட்ட பிரார்த்தனை இது !
அடுத்த ஸ்லோகம் பார்வதியின் பதியே, பரமேஸ்வரா! சமஸ்த ஆபரணங்களாலும் அலங்கரிக்கப் பத்தவளும், எளிதில் அர்த்தத்தைப் போதிக்கும் சுலபமான பாதங்கள் கூடியதும், மெல்ல மெல்லத் அடி வைத்து அழகாக நடப்பவழும் , லக்ஷனங்களுடன் கூடிய ஆர்யா முதலிய வருத்தங்களை உடையதும், நல்ல நிறம் கொண்டவலும், காவ்யா லக்ஷனங்கள் கொண்டவளும் ஶ்ருங்காரரசம் உடையவளும் சிறந்த நற்குணங்கள் கொண்டவள் ஆனேன் கவிதை என்ற பெண்மணியை உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன் என கவிதை நயம் பொங்க, ச்லேடையாக சொல்லி சிவானந்தளஹரி எண்டர் என்ற பக்தி வெள்ளத்தை ஈசன் பாதங்களில் சமர்ப்பணம் செய்கிறார் !
உன்னதமான பக்தி வெளிப்பாடு !
எனக்கு மிகவும் பிடித்த ஸ்தோத்திரம் இது. பிரதி பிரதோஷ காலத்திலும் சொல்வேன் . அப்படி ஒரு மஹா பிரதோஷ காலத்தில் பெரியவா சந்நிதியில் சொல்லும் பாக்யம் கிடைத்தது ! அவர் அருளும் கிடைத்தது ! வாழ் நாள் முழுதும் நினைவில் நிலைத்து நிற்கும் ஒர் அனுபவம் !!
ஜய ஜய சங்கரா….
,

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.