Categories
Stothra Parayanam Audio

திருப்புகழ் பாடல்கள் ஒலிப்பதிவு – 2

சில நண்பர்கள் மேலும் திருப்புகழ் பாடல்களை பகிரச் சொன்னார்கள். எனக்கு பாடத் தெரியவில்லையே என்று சொன்னேன். தெளிவாக படித்ததால் கூட போதும் என்று சொன்னார்கள். அதனால் இன்னும் சில திருப்புகழ் பாடல்கள் இங்கே.

பாடலைக் கேட்க பாடலின் தலைப்பில் உள்ள இணைப்பில் சொடுக்கவும்.

    1. உம்பர் தரு தேனு மணி
      உம்பர்தருத் தேநுமணிக் …… கசிவாகி
      ஒண்கடலிற் றேனமுதத் …… துணர்வூறி

      இன்பரசத் தேபருகிப் …… பலகாலும்
      என்றனுயிர்க் காதரவுற் …… றருள்வாயே

      தம்பிதனக் காகவனத் …… தணைவோனே
      தந்தைவலத் தாலருள்கைக் …… கனியோனே

      அன்பர்தமக் கானநிலைப் …… பொருளோனே
      ஐந்துகரத் தானைமுகப் …… பெருமாளே.

    2. வேத வெற்பிலே புனத்தில்
      வேத வெற்பி லேபு னத்தில் மேவி நிற்கு …… மபிராம
      வேடு வச்சி பாத பத்ம மீது செச்சை …… முடிதோய

      ஆத ரித்து வேளை புக்க ஆறி ரட்டி …… புயநேய
      ஆத ரத்தோ டாத ரிக்க ஆன புத்தி …… புகல்வாயே

      காது முக்ர வீர பத்ர காளி வெட்க …… மகுடாமா
      காச முட்ட வீசி விட்ட காலர் பத்தி …… யிமையோரை

      ஓது வித்த நாதர் கற்க வோது வித்த …… முநிநாண
      ஓரெ ழுத்தி லாறெ ழுத்தை யோது வித்த …… பெருமாளே.

    3. திமிர வுததி யனைய நரக
      திமிர வுததி யனைய நரக
      செனன மதனில் …… விடுவாயேல்

      செவிடு குருடு வடிவு குறைவு
      சிறிது மிடியு …… மணுகாதே

      அமரர் வடிவு மதிக குலமு
      மறிவு நிறையும் …… வரவேநின்

      அருள தருளி யெனையு மனதொ
      டடிமை கொளவும் …… வரவேணும்

      சமர முகவெ லசுரர் தமது
      தலைக ளுருள …… மிகவேநீள்

      சலதி யலற நெடிய பதலை
      தகர அயிலை …… விடுவோனே

      வெமர வணையி லினிது துயிலும்
      விழிகள் நளினன் …… மருகோனே

      மிடறு கரியர் குமர பழநி
      விரவு மமரர் …… பெருமாளே.

    4. அருத்தி வாழ்வொடு

      அருத்தி வாழ்வொடு தனகிய மனைவியு …… முறவோரும்
      அடுத்த பேர்களு மிதமுறு மகவோடு …… வளநாடும்தரித்த வூருமெ யெனமன நினைவது …… நினையாதுன்
      தனைப்ப ராவியும் வழிபடு தொழிலது …… தருவாயே

      எருத்தி லேறிய இறையவர் செவிபுக …… வுபதேசம்
      இசைத்த நாவின இதணுறு குறமக …… ளிருபாதம்

      பரித்த சேகர மகபதி தரவரு …… தெய்வயானை
      பதிக்கொ ளாறிரு புயபழ நியிலுறை …… பெருமாளே.

    5. தமரு மமரு மனையு மினிய

      தமரு மமரு மனையு மினிய
      தனமு மரசும் …… அயலாகத்

      தறுகண் மறலி முறுகு கயிறு
      தலையை வளைய …… எறியாதே

      கமல விமல மரக தமணி
      கனக மருவு …… மிருபாதங்

      கருத அருளி யெனது தனிமை
      கழிய அறிவு …… தரவேணும்

      குமர சமர முருக பரம
      குலவு பழநி …… மலையோனே

      கொடிய பகடு முடிய முடுகு
      குறவர் சிறுமி …… மணவாளா

      அமர ரிடரு மவுண ருடலு
      மழிய அமர்செய் …… தருள்வோனே

      அறமு நிறமு மயிலு மயிலு
      மழகு முடைய …… பெருமாளே.

    6. இயலிசையி லுசித வஞ்சிக்

      இயலிசையி லுசித வஞ்சிக் …… கயர்வாகி
      இரவுபகல் மனது சிந்தித் …… துழலாதே

      உயர்கருணை புரியு மின்பக் …… கடல்மூழ்கி
      உனையெனது ளறியு மன்பைத் …… தருவாயே

      மயில்தகர்க லிடைய ரந்தத் …… தினைகாவல்
      வனசகுற மகளை வந்தித் …… தணைவோனே

      கயிலைமலை யனைய செந்திற் …… பதிவாழ்வே
      கரிமுகவ னிளைய கந்தப் …… பெருமாளே.

    7. பரிமள களபசு கந்தச் சந்த

      பரிமள களபசு கந்தச் சந்தத் …… தனமானார்
      படையம படையென அந்திக் குங்கட் …… கடையாலே

      வரியளி நிரைமுரல் கொங்குக் கங்குற் …… குழலாலே
      மறுகிடு மருளனை யின்புற் றன்புற் …… றருள்வாயே

      அரிதிரு மருகக டம்பத் தொங்கற் …… றிருமார்பா
      அலைகுமு குமுவென வெம்பக் கண்டித் …… தெறிவேலா

      திரிபுர தகனரும் வந்திக் குஞ்சற் …… குருநாதா
      ஜெயஜெய ஹரஹர செந்திற் கந்தப் …… பெருமாளே.

    8. பாதி மதிநதி போது மணிசடை

      பாதி மதிநதி போது மணிசடை
      நாத ரருளிய …… குமரேசாபாகு கனிமொழி மாது குறமகள்
      பாதம் வருடிய …… மணவாளா

      காது மொருவிழி காக முறஅருள்
      மாய னரிதிரு …… மருகோனே

      கால னெனையணு காம லுனதிரு
      காலில் வழிபட …… அருள்வாயே

      ஆதி யயனொடு தேவர் சுரருல
      காளும் வகையுறு …… சிறைமீளா

      ஆடு மயிலினி லேறி யமரர்கள்
      சூழ வரவரு …… மிளையோனே

      சூத மிகவளர் சோலை மருவுசு
      வாமி மலைதனி …… லுறைவோனே

      சூர னுடலற வாரி சுவறிட
      வேலை விடவல …… பெருமாளே.

    9. ஏவினை நேர்விழி மாதரை
      ஏவினை நேர்விழி மாதரை மேவிய
      ஏதனை மூடனை …… நெறிபேணாஈனனை வீணனை ஏடெழு தாமுழு
      ஏழையை மோழையை …… அகலா

      நீள்மாவினை மூடிய நோய்பிணி யாளனை
      வாய்மையி லாதனை …… யிகழாதே

      மாமணி நூபுர சீதள தாள்தனி
      வாழ்வுற ஈவது …… மொருநாளே

      நாவலர் பாடிய நூலிசை யால்வரு
      நாரத னார்புகல் …… குறமாதை

      நாடியெ கானிடை கூடிய சேவக
      நாயக மாமயி …… லுடையோனே

      தேவிம நோமணி ஆயிப ராபரை
      தேன்மொழி யாள்தரு …… சிறியோனே

      சேணுயர் சோலையி னீழலி லேதிகழ்
      சீரலை வாய்வரு …… பெருமாளே.

    10. வரியார் கருங்கண்

      வரியார் கருங்கண் …… மடமாதர்

      மகவா சைதொந்த …… மதுவாகி

      இருபோ துநைந்து …… மெலியாதே

      இருதா ளினன்பு …… தருவாயே

      பரிபா லனஞ்செய் …… தருள்வோனே

      பரமே சுரன்ற …… னருள்பாலா

      அரிகே சவன்றன் …… மருகோனே

      அலைவா யமர்ந்த …… பெருமாளே.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.