Categories
Stothra Parayanam Audio

திருப்புகழ் பாடல்கள் ஒலிப்பதிவு – 3

சில பெரிய திருப்புகழ் பாடல்கள் இங்கே.

பாடலைக் கேட்க பாடலின் தலைப்பில் உள்ள இணைப்பில் சொடுக்கவும்.

  1. சீலமுள தாயர் தந்தைசீலமுள தாயர் தந்தை மாதுமனை யான மைந்தர்
    சேருபொரு ளாசை நெஞ்சு …… தடுமாறித்தீமையுறு மாயை கொண்டு வாழ்வுசத மாமி தென்று
    தேடினது போக என்று …… தெருவூடே

    வாலவய தான கொங்கை மேருநுத லான திங்கள்
    மாதர்மய லோடு சிந்தை …… மெலியாமல்

    வாழுமயில் மீது வந்து தாளிணைகள் தாழு மென்றன்
    மாயவினை தீர அன்பு …… புரிவாயே

    சேலவள நாட னங்கள் ஆரவயல் சூழு மிஞ்சி
    சேணிலவு தாவ செம்பொன் …… மணிமேடை

    சேருமம ரேசர் தங்க ளூரிதென வாழ்வு கந்த
    தீரமிகு சூரை வென்ற …… திறல்வீரா

    ஆலவிட மேவு கண்டர் கோலமுட னீடு மன்று
    ளாடல்புரி யீசர் தந்தை …… களிகூர

    ஆனமொழி யேப கர்ந்து சோலைமலை மேவு கந்த
    ஆதிமுத லாக வந்த …… பெருமாளே.

  2. ஐங்கரனை யொத்தமனம்ஐங்கரனை யொத்தமன மைம்புலம கற்றிவள
    ரந்திபக லற்றநினை …… வருள்வாயேஅம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வ ழுத்தியுனை
    அன்பொடுது திக்கமன …… மருள்வாயே

    தங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்திபெற
    சந்திரவெ ளிக்குவழி …… யருள்வாயே

    தண்டிகைக னப்பவுசு எண்டிசைம திக்கவளர்
    சம்ப்ரமவி தத்துடனெ …… யருள்வாயே

    மங்கையர்சு கத்தைவெகு இங்கிதமெ னுற்றமன
    முன்றனைநி னைத்தமைய …… அருள்வாயே

    மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரட்சைபுரி
    வந்தணைய புத்தியினை …… யருள்வாயே

    கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையி லப்பரருள்
    கொண்டுஉட லுற்றபொரு …… ளருள்வாயே

    குஞ்சரமு கற்கிளைய கந்தனென வெற்றிபெறு
    கொங்கணகி ரிக்குள்வளர் …… பெருமாளே.

  3. நாளு மிகுத்த கசிவாகிநாளு மிகுத்த …… கசிவாகி
    ஞான நிருத்த …… மதைநாடும்
    ஏழை தனக்கு …… மநுபூதி
    ராசி தழைக்க …… அருள்வாயே
    பூளை யெருக்கு …… மதிநாக
    பூண ரளித்த …… சிறியோனே
    வேளை தனக்கு …… சிதமாக
    வேழ மழைத்த …… பெருமாளே.
  4. இசைந்த ஏறுங் கரியுரி போர்வையும்இசைந்த ஏறுங் கரியுரி போர்வையும் …… எழில்நீறும்இலங்கு நூலும் புலியத ளாடையு …… மழுமானும்

    அசைந்த தோடுஞ் சிரமணி மாலையு …… முடிமீதே

    அணிந்த ஈசன் பரிவுடன் மேவிய …… குருநாதா

    உசந்த சூரன் கிளையுடன் வேரற …… முனிவோனே

    உகந்த பாசங் கயிறொடு தூதுவர் …… நலியாதே

    அசந்த போதென் துயர்கெட மாமயில் …… வரவேணும்

    அமைந்த வேலும் புயமிசை மேவிய …… பெருமாளே.

  5. பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடுபத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு
    பட்சிந டத்திய …… குகபூர்வபச்சிமதட்சிண வுத்தர திக்குள
    பத்தர்க ளற்புத …… மெனவோதுஞ்

    சித்ரக வித்துவ சத்தமி குத்ததி
    ருப்புக ழைச்சிறி …… தடியேனுஞ்

    செப்பென வைத்துல கிற்பர வத்தெரி
    சித்தவ நுக்ரக …… மறவேனே

    கத்திய தத்தைக ளைத்துவி ழத்திரி
    கற்கவ ணிட்டெறி …… தினைகாவல்

    கற்றகு றத்திநி றத்தக ழுத்தடி
    கட்டிய ணைத்தப …… னிருதோளா

    சத்தியை யொக்கஇ டத்தினில் வைத்தத
    கப்பனு மெச்சிட …… மறைநூலின்

    தத்துவ தற்பர முற்றுமு ணர்த்திய
    சர்ப்பகி ரிச்சுரர் …… பெருமாளே.

  6. பக்கரைவி சித்ரமணிபக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
    பட்சியெனு முக்ரதுர …… கமுநீபப்பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
    பட்டுருவ விட்டருள்கை …… வடிவேலும்

    திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு
    சிற்றடியு முற்றியப …… னிருதோளும்

    செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
    செப்பெனஎ னக்கருள்கை …… மறவேனே

    இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்
    எட்பொரிய வற்றுவரை …… இளநீர்வண்

    டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள
    ரிப்பழமி டிப்பல்வகை …… தனிமூலம்

    மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு
    விக்கிநச மர்த்தனெனும் …… அருளாழி

    வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
    வித்தகம ருப்புடைய …… பெருமாளே.

  7. உடுக்கத் துகில்வேணு நீள்பசிஉடுக்கத் துகில்வேணு நீள்பசி
    யவிக்கக் கனபானம் வேணுநல்
    ஒளிக்குப் புனலாடை வேணுமெய் …… யுறுநோயைஒழிக்கப் பரிகாரம் வேணுமுள்
    இருக்கச் சிறுநாரி வேணுமொர்
    படுக்கத் தனிவீடு வேணுமிவ் …… வகையாவுங்

    கிடைத்துக் க்ருஹவாசி யாகிய
    மயக்கக் கடலாடி நீடிய
    கிளைக்குப் பரிபால னாயுயி …… ரவமேபோம்

    க்ருபைச்சித் தமுஞான போதமு
    மழைத்துத் தரவேணு மூழ்பவ
    கிரிக்குட் சுழல்வேனை யாளுவ …… தொருநாளே

    குடக்குச் சிலதூதர் தேடுக
    வடக்குச் சிலதூதர் நாடுக
    குணக்குச் சிலதூதர் தேடுக …… வெனமேவிக்

    குறிப்பிற் குறிகாணு மாருதி
    யினித்தெற் கொருதூது போவது
    குறிப்பிற் குறிபோன போதிலும் …… வரலாமோ

    அடிக்குத் திரகார ராகிய
    அரக்கர்க் கிளையாத தீரனும்
    அலைக்கப் புறமேவி மாதுறு …… வனமேசென்று

    அருட்பொற் றிருவாழி மோதிர
    மளித்துற் றவர்மேல் மனோகர
    மளித்துக் கதிர்காம மேவிய …… பெருமாளே.

  8. ஈனமிகுத் துளபிறவிஈனமிகுத் துளபிறவி …… யணுகாதே
    யானுமுனக் கடிமையென …… வகையாகஞானஅருட் டனையருளி …… வினைதீர
    நாணமகற் றியகருணை …… புரிவாயே

    தானதவத் தினின்மிகுதி …… பெறுவோனே
    சாரதியுத் தமிதுணைவ …… முருகோனே

    ஆனதிருப் பதிகமரு …… ளிளையோனே
    ஆறுதிருப் பதியில்வளர் …… பெருமாளே.

  9. இத்தரணி மீதிற் பிறவாதேஇத்தரணி மீதிற் …… பிறவாதே
    எத்தரொடு கூடிக் …… கலவாதே
    முத்தமிழை யோதித் …… தளராதே
    முத்தியடி யேனுக் …… கருள்வாயே
    தத்துவமெய்ஞ் ஞானக் …… குருநாதா
    சத்தசொரு பாபுத் …… தமுதோனே
    நித்தியக்ரு தாநற் …… பெருவாழ்வே
    நிர்த்தஜெக ஜோதிப் …… பெருமாளே.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.