பாதாரவிந்த சதகம் 52வது ஸ்லோகம் பொருளுரை – உயர்ந்த ரஸிகத்தன்மையை அளிக்கும் மூக பஞ்ச சதி ஸ்தோத்ரம்
पुरस्तात्कामाक्षि प्रचुररसमाखण्डलपुरी-
पुरन्ध्रीणां लास्यं तव ललितमालोक्य शनकैः ।
नखश्रीभिः स्मेरा बहु वितनुते नूपुररवैः
चमत्कृत्या शङ्के चरणयुगली चाटुरचनाः ॥
2 replies on “உயர்ந்த ரஸிகத்தன்மையை அளிக்கும் மூக பஞ்ச சதி ஸ்தோத்ரம்”
அம்பாளுடைய பாதங்களே ரஸிகத் தன்மையை வெளிப்படுத்துகிறது என்று சொல்லும் அழகான ஸ்லோகம். மஹாபெரியவா காட்டும் ரஸிகத்தன்மையை விளக்கியது மிக அருமை.
தேவலோக ஸ்திரீகளின் நாட்டியத்தை அம்பாளின் பாதங்கள் ரஸிக்கிறது இந்த ஸ்லோகத்தில். ஆச்சார்யாள் காட்டும் ‘விபஞ்ச்யா காயந்தீ’ என்கிற ஸௌந்தர்யலஹரி ஸ்தோத்திரத்தில் அம்பாள் சாக்ஷாத் ஸரஸ்வதியின் வீணா நாதத்தையும் ஈஸ்வர கானத்தையும் ரசிக்கிறாள். ஸங்கீதத்தில் அம்பாள் நிரம்ப ஆனந்தமடைகிறாள்; சொக்கி லயித்து விடுகிறாள். அவ்வப்போது தலையை அசைத்து ரஸிக்கிறாள்.
மஹாபெரியவா இந்த ஸ்லோகத்தை விளக்கும்போது, “கேட்பவர்கள் தங்கள் ஆனந்தத்தை வெளிப்படுத்துவதே பாடுகிறவரை மேலும் உத்ஸாஹப்படுத்தும். நல்லதைக் கவனித்து, சட்டென்று அதில் ரஸிப்பைத் தெரியப்படுத்த வேண்டும். ஒருவர் நன்றாகப் பாடாவிட்டால்கூட நாம் ஆனந்தப்பட்டுக்கொண்டு உத்ஸாஹப் படுத்தினால், அதனாலேயே அவர்களுக்கு நல்லதாக ஒன்றிரண்டு ஸங்கதி விழும்.
நன்றாக மனஸ் விட்டு ரஸிக்க வேண்டும். நாம்தான் பெரியவர் என்று உம்மணாமூஞ்சி மாதிரி உட்கார்ந்திருக்கக் கூடாது. அல்லது, தனக்குத்தான் விஷயம் தெரியும் என்று மூஞ்சியைக் கடுகடு என்று வைத்துக் கொண்டோ குற்றம் பார்த்துச் சுளித்துக் கொண்டோ இருக்கக் கூடாது. கேட்கிறவன் தப்பு எடுக்கவே வந்திருக்கிறான் என்று தெரிகிறபோது, வித்வானுக்கு ஒரு விலவிலப்பு ஏற்பட்டு இருக்கிற கல்பனா சக்தியும் ஓடிப் போய்விடும்! பாட்டு, எழுத்து, படிப்பு, விளையாட்டு எதிலுமே இப்படித்தான்.
அம்பிகை ஆனந்தத்தோடு உத்ஸாஹப்படுத்தப் படுத்த ஸரஸ்வதி பரமாத்புதமாகக் கானம் பண்ணிக்கொண்டே போகிறாள்.” என்கிறார்.
‘தலையை ஆட்டிக் கொண்டிருந்த அம்பாள், சிரக்கம்பம் (தலையை ஆட்டி ஆமோதிப்பது) மட்டும் போதாது என்று இரண்டு பாராட்டு வார்த்தை சொல்ல நினைத்து ஆரம்பித்தாள். அம்பாளுடைய பேச்சின் இனிமையில் தன் வீணை நாதம் அடிபட்டுப் போனதைப் பார்த்து ஸரஸ்வதி தன்னுடைய பாட்டை நிறுத்திவிட்டுத் தலையைக் குனிந்து கொண்டு விட்டாள். அந்த வீணையை வெளியில் தெரியாதபடி உறையினால் மூடி மறைத்து விட்டாள்.’ என்று ஸ்லோகம் முடிகிறது.
மஹாபெரியவா ஒவ்வொன்றையும் ரஸித்து, நம்மையும் ரஸிக்க வைக்கும் விதமே அலாதியானது.🙏🙏
அம்பாளுடைய பேச்சின் இனிமையில் சரஸ்வதிதேவி ஸ்தம்பித்து விட்டது போல, இந்த தேவமாதர்கள், நாட்டியத்தை வாய்விட்டு பாராட்டினால் ஸ்தம்பித்து விடப் போகிறார்களே என்று எண்ணி, அம்பாள், பாதங்களில் உள்ள சலங்கை ஒலியினாலேயே பாராட்டை தெரிவித்து விட்டாள் போலும்.