Categories
Announcement

கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் ஜயந்தி

பகவானின் பேரில் ஸ்தோத்திரங்களை படிக்கும் போது மூககவியாகவும், நாராயண பட்டத்திரியாகவும், வால்மீகி மஹரிஷியாகவும், சுகபிரம்மமாகவும் ஆகி, அப்படி மனம் ஒன்றிப் படித்து, இறுதியில் பகவானோடு கலந்த ஒரு மஹான் – கோவிந்த தாமோதர ஸ்வாமிகள். நாளை மாசி பூரட்டாதி, அவருடைய ஜயந்தி தினம் (25-2-2020 in India, 24-2-2020 in the US)

ஸ்வாமிகள் அவதரித்து இன்றோடு 90 வருடங்கள் ஆகியுள்ளன. ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்’ என்ற வள்ளுவர் வாக்கிற்கேற்ப, இல்லற வாழ்விலேயே இறைவனை காண முடியும் என்பதற்கு இலக்கணமாக திகழ்ந்தவர். அவருடைய வாழ்க்கையே, வால்மீகி ராமாயணத்தை போல ஒரு இலக்கியம் என்று எனக்கு தோன்றும். அதை எல்லோரிடமும் கூறுவதில் நான் எப்பொழுதும் ஆனந்தப் படுவேன். சில வருடங்களுக்கு முன்னால், ஒவ்வொருவரையும் பிடித்து வைத்து அதைச் சொல்வதைவிட, ஒலிப்பதிவு செய்து இணையத்தில் போட்டால், கேட்பவர்கள் கேட்கட்டும் என்ற எண்ணத்தில் இந்த வலைதளத்தில் பகிர ஆரம்பித்தேன். 7 வருடங்களில் இன்றோடு இந்த வலைத்தளத்தில் 10 லட்சம் முறை நீங்கள் எல்லோரும் இதை படித்திருக்கிறீர்கள் / கேட்டிருக்கிறீர்கள். ஒருவரும் கேட்க இல்லை என்று தனிமையில் ஒலிப்பதிவு செய்து போட்டதை, நிறைய பேர்கள் கேட்டு மகிழ்வதில் எனக்கு ஒரு குழந்தைத்தனமான சந்தோஷம். இதை ஸ்வாமிகளுடைய பிறந்த நாள் அன்று, அவர் எனக்கு அளித்த பரிசாக நினைக்கிறேன் 😊.

அதோடு இந்த ஒலிப்பதிவுகள் அநேகம் பேருக்கு சந்தோஷத்தையும், ஆறுதலையும், நம்பிக்கையையும் கொடுப்பதை பார்க்கிறேன். சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை போல ஸ்வாமிகளுடைய வாக்கைத் திருப்பிச் சொல்லும் என்னிடத்தில் பலரும் மிகுந்த அன்பு பாராட்டுகிறார்கள். என்னிடம் ஸ்தோத்ரங்கள் படிப்பவர்கள், என்னை வந்து பார்க்கும் போது அவர்களுடைய குழந்தைகள் என்னிடம் ஓடி வந்து விடுகிறார்கள். ஏனென்றால் என்னுடைய குரல் அவர்களுக்கு மிகவும் பரிச்சயமாக இருக்கிறது. குழந்தைகளும் இந்த ஸ்தோத்ரங்களைக் கற்றுக்கொள்கிறார்கள். அது மிகுந்த மனநிறைவை தருகிறது.

“குரும் பிரகாசாயேத் தீமான்” என்ற சம்ஸ்கிருதத்தில் ஒரு பழமொழி உள்ளது. ஒரு புத்திமான் தன்னுடைய குருவின் மஹிமையை உலகத்தில் தெரியப்படுத்த வேண்டும் என்று பொருள். ஸ்வாமிகளுடைய மஹிமை உலகில் பிரகாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் சொல்ல ஆரம்பித்தது, எனக்கு நல்ல நண்பர்களையும், நல்ல பேரையும், இனிமையான பொழுதுகளையும் அளித்தது. அளித்துக் கொண்டிருக்கிறது.

நீங்கள் ஸ்வாமிகள் ஜயந்தியை எப்படி கொண்டாட போகிறீர்கள் என்று ஒருவர் கேட்டார். தினமும் போல அவருக்கு பிடித்தமான விஷ்ணு சஹஸ்ரநாமம், மூகபஞ்சசதீ, சுந்தரகாண்டம், நாராயணியம், சங்கர ஸ்தோத்திரங்களை படிப்பது தான் ஸ்வாமிகளுடைய ஜயந்தி விழாவாக அமையும் – ஸ்தோத்ர பாராயணங்கள் ஒலிப்பதிவு

அதோடு ஸ்வாமிகளுடைய அஷ்டோத்திரம் சொல்லி பூஜை செய்யலாம் என்று இருக்கிறேன் – கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அஷ்டோத்தரம்

5 replies on “கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் ஜயந்தி”

Certainly a great milestone, as you mentioned the devotion to swamigal should manifest in us through more recitations and bhagavat bhajanam🙏

May the almighty and sadhguru give you good health and well being in your endeavour, blessed to have a satsang like this

தங்களது செயல் எல்லோருக்கும் மிகவும் நன்மையையும் ஆனந்தத்தையும் அளிக்கிறது. குரு ஆசியினால் மேலும் வளரட்டும்.

ஸ்வாமிகள் குழந்தை போன்ற தோற்றம் கொண்டவராக இருக்கிறார் ! நான் தரிசனம் செய்யலை, குரல் கேட்கலை, உபதேசம் பற்றி ஒன்னும் தெரியாது என்ற குறை இப்போது அறவே இல்லை என்பது நிதர்சனமான சத்யம் ! அதை இந்த blog ஐ தொடர்ந்து follow செய்வதில் போயே போய்விட்டது என்பது பரம சத்யம் !
எங்கும் நிறை நாத பிரம்மம் மாதிரி கணபதி மாணாக்கர்கள் மூலம் ஸ்வாமிகள் global level ல பிரகாசிக்கிறது மனசுக்கு நிறைவைத் தருகிறது .
ஸ்வாமிகள் திருவடி சரணம் இப்புனித நன்னாளில் !

நமஸ்காரம் 🙏
எனக்கு ஸ்வாமிகளின் பரிச்சயம் உங்கள் மூலமாகத்தான். அவரை பற்றி நீங்கள் பகிர்ந்துகொள்ளும் ஒவ்வொரு பதிவும் என்னை ஆஸ்ச்சர்யத்தில் ஆழ்த்துகின்றன.
வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் focused ஆக தன்னுடைய பாராயணங்களை விடாமல் பண்ணிக்கொண்டு வைராக்கியத்தோடு பகவத்திருவடிகளை கெட்டியா பிடிச்சுண்டு வாழ்ந்துருக்கார். அதோடு இல்லாமல் தன்னை நாடி வரவாளுக்கு எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் ஆறுதல் மொழி சொல்லி அவா கவலை தீர பரிகாரமும் சொல்லிகுடுத்துருக்கார்.
பத்து வயசுலேயே வால்மீகி ராமாயணத்தை, சமஸ்க்ருதத்தில், story book படிக்கறமாதிரி ஆர்வத்தோட interesting ஆ படிப்பார்னு எல்லாம் நீங்கள் சொல்லி கேட்டுருக்கோம். எப்பேர்ப்பட்ட வாழ்க்கை வாழ்ந்துருக்கார்…. Just great.
மகா பெரியவா, ஸ்வாமிகள் மாதிரியான மஹான்களின் வாழ்க்கை சரித்திரத்தை கேக்கறதுக்கே ஒரு குடுப்பணை வேணுமே. அது எங்களுக்கு உங்க மூலமா கிடைச்சிருக்கு. We are extremely grateful to you for that. You are doing such a wonderful service to the mankind and with the blessings of Swamingal may you keep continuing this service for the sake of all of us.
🌺 🌺 கோவிந்த தாமோதர மாதவேத்தி 🙏 🙏 🌺 🌺

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.