பாதாரவிந்த சதகம் 60வது ஸ்லோகம் பொருளுரை – அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே
नयन्तीं दासत्वं नलिनभवमुख्यानसुलभ-
प्रदानाद्दीनानाममरतरुदौर्भाग्यजननीम् ।
जगज्जन्मक्षेमक्षयविधिषु कामाक्षि पदयोः
धुरीणामीष्टे कः तव भणितुमाहोपुरुषिकाम् ॥
நயந்தீம்ʼ தா³ஸத்வம்ʼ நலினப⁴வமுக்²யானஸுலப⁴-
ப்ரதா³நாத்³தீ³னாநாமமரதருதௌ³ர்பா⁴க்³யஜனனீம்.
ஜக³ஜ்ஜன்மக்ஷேமக்ஷயவிதி⁴ஷு காமாக்ஷி பத³யோர்
து⁴ரீணாமீஷ்டே கரஸ்தவ ப⁴ணிதுமாஹோபுருஷிகாம்
இது பாதாரவிந்த ஶதகத்துல 60வது ஸ்லோகம். இதோட அர்த்தம் என்னனா?
ஹே காமாக்ஷி! உன்னுடைய பாதங்கள்,
“நலினப⁴வமுக்²யான்” நலினப⁴வ:னா தாமரையில் உதித்தவர், ப்ரஹ்மா.
ப்ரஹ்மா முதலியன்னு அர்த்தம்.
“நலினப⁴வமுக்²யான்” அப்படினு.. ப்ரஹ்மா முதலிய தேவர்களை,
“தா³ஸத்வம் நயந்தீம்” தன்னுடைய தாசனாக ஆக்கிகொள்கிறது. அப்பேற்பட்ட மஹிமை. எல்லாரும் வந்து நமஸ்காரம் பண்றா..காமாக்ஷினுடைய சரணம் எல்லாரையும் தன்னுடைய தாசர்களாக ஆக்கி கொள்கிறது.
“அஸுலப⁴ப்ரதா³நாத்³தீ³னாநாம்” ஏழைகளுக்கு தீனர்களுக்கு,
“அஸுலப⁴ப்ரதா³நாம்” னா ரொம்ப preciousஆன, சுலபமா எல்லார்க்கும் கிடைக்காத, ஆச்சர்யமான, நினைச்சுகூட பார்க்க முடியாத வைபவங்களையும், செல்வத்தையும் கொடுக்கறதுனால,
“அமரதருதௌ³ர்பா⁴க்³யஜனனீம்” அமரதருங்கிற கற்பகவிருக்ஷத்தை ஐயோ பாவம்னு கொண்டு வந்து விட்டுதுத்து..எல்லாரும் கற்பக விருக்ஷம் தரும்னு நினைச்சுண்டுஇருக்கா, ஆனா காமாக்ஷி பாதம் தரா மாதிரி தர முடிமா..அப்படிங்கிற பேச்சு வந்துடுத்து.
“ஜக³ஜ்ஜன்மக்ஷேமக்ஷயவிதி⁴ஷு ” இந்த உலகத்தின் ஜன்ம பிறப்பு, க்ஷேமம் அப்படினா பார்த்துக்கறது,
“க்ஷயம்” அழிக்கறது.
இந்த கார்யம் “விதி⁴ஷு” இந்த கார்யங்கள் பண்ணுவதில்,
“து⁴ரீணாம்” முதன்மையாய் விளங்கும், அதவாது ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் பண்ணா கூட, அவாளையே சிருஷ்டி பண்ணி அவாளுக்கு இந்த காரியத்தை கொடுத்ததே நீதானே ! அப்படிங்கிறமாதிரி..
“காமாக்ஷி பத³யோ:” இதில் காமாக்ஷி உன்னுடைய பாதங்களின்,
“தவ ப⁴ணிதுமாஹோபுருஷிகாம்”, ஆஹோபுருஷிகாம்’னா அப்பேற்பட்ட பௌருஷம், அப்பேற்பட்ட மஹிமை, ஸ்ருஷ்டி, ஸ்திதி லயம் பண்றது உன் பாதங்கள் தான். ப்ரஹ்மாதிதேவர்கள் வணங்குவதும் உன் பாதங்கள் தான். வந்து நமஸ்கார பண்ற ஏழைகளுக்கு நினைச்சது காட்டிலும் கொடுக்கறது உன்னுடைய பாதம் தான்.
இப்பேற்பட்ட பாதங்களின் “ஆஹோபுருஷிகாம்”, அப்பேற்பட்ட மஹிமையை,
“ப⁴ணிதும்” வார்த்தைகளால் வர்ணிப்பதற்கு,
“க:ஈஷ்டே” யாராலதான் முடியும், அப்படினு ஒரு ஸ்லோகம். அதனால காமாக்ஷினுடைய சரணத்தினுடைய மஹிமையை யாராலும் வர்ணித்து விட முடியாது, அப்படினு சொல்றார். ஆனால், இந்த கவியே, 100 ஸ்லோகங்களால இந்த பாதரவிந்த ஶதகத்துல, அவ்ளோ அழகா வர்ணிக்கிறார்.
அந்த மாதிரி, இந்த பாதம் னா, அடியார்கள், ஸ்வாமிகள் ஞாபகம் வந்துரும். மஹான்கள் ஞாபகம் வந்துரும். மஹான்கள் பூமில வந்து அவதாரம் பண்ணும் போது,அவாளுடைய மஹிமை – அந்த தெய்வமே அங்க வந்துவிடுகிறது. எல்லாருகிட்டயுமே நாமத்தை சொன்னா தெய்வீகம் வரும்னு இருந்தாக்கூட, கொஞ்சம் கூட வேற எந்த விதமான ஆசாபாசங்களும் இல்லாமல், அந்த தெய்வத்தையே வழிபட்டு, அந்த தெய்வீகத்துல நிரம்பியிருக்கறதுனால, அந்த மஹான்கள், அவாளுடைய நடத்தை, அவாளுடைய இந்த மாதிரி ஏழைகளுக்கு கொடுத்தல், எல்லாரும் அவாள வந்து நமஸ்காரம் பண்றதும், உலகத்தையே அவா காப்பாத்தறதும், இதெல்லாம் பார்க்க பார்க்க, நமக்கு அந்த பக்தர்களுக்கு இது சாதாரண வஸ்துவே கிடையாது, நம்ப ஏதோ வாயால பேசறோமே, அந்த மாதிரியா இது, பேசமுடியுமா பெரியவாளை பத்தி, அப்படினு தோன்ற அந்த வியப்பு, இது ஒரு ‘phenomenon’ இது ஒரு சாதாரண event கிடையாது… அப்படினு அந்த மஹான்களின் மஹிமையை நினைக்கறோம்.
அந்த feelingஅ இந்த ஸ்லோகத்துல சொல்றார். ஆனால், அந்த மாதிரி மஹான்களுக்கு, சிஷ்யர்கள் ஏற்பட்டு, அந்த சிஷ்யர்கள் சில inspired momentsல, ரொம்ப அழகா அந்த மஹான்களை பற்றி சொல்றா. அது மூலமாதான் உலகத்துக்கு தெரியறது.
நேற்று ஸ்வாமிகளுடைய ஜெயந்தி வைபவம். ஸ்வாமிகளுடைய அஷ்டோத்திரத்தை பிரும்மஸ்ரீ. சுந்தர்குமார் பண்ணியிருக்கார்.
அதை எப்பவும் படிக்கறது தான், ஆனால், நேற்று படிக்கும் போது, அவ்ளோ பேரானந்தமா இருந்தது. பிரும்மஸ்ரீ.சுந்தர்குமார் 12 வருஷங்கள் ஸ்வாமிகள் கிட்ட நெருங்கி பழகி, நிறைய கேட்டுண்டிருக்கார். அவர் bank வேலையை விட்டுவிட்டு, தானே பிரியப்பட்டு இந்த ராமாயணம், பாகவதம்லாம் கத்துண்டு, அதை ப்ரவசனம் பண்ண ஆரம்பிச்சார். அவருடைய ப்ரவசனங்கள்ல நூற்றுக் கணக்கான ஸ்லோகங்களை quote பண்ணுவார். சாய் சமாஜத்துல அவர் பிரவசனம் பண்ணும் போது, ஸ்வாமிகள் போய் கேட்டு இருக்கார்.
பெரியவா சந்நிதியில ஸ்வாமிகளை பார்த்தவுடனே, சுந்தர்குமார்க்கு அவ்ளோ ஆச்சர்யம், ஆனந்தம். தெரிஞ்சுண்டு வந்து இவரை நமஸ்காரம் பண்ணி, இவர் கிட்ட நிறைய கேட்டுண்டார். ஸ்வாமிகள் சொல்லி மூல பாராயணம் நிறைய பண்றதுனு வச்சுண்டு இப்பவும் பண்ணிண்டு இருக்கார். இப்பவும் ஆராதனை பொழுது, அங்க வந்து ஒரு சப்தாஹம் பண்ணி சமர்ப்பிச்சுட்டு, அந்த ஆராதனை வைபவத்துல வருஷம் தவறாம வந்து கலந்துண்டு, ரொம்ப ஆடி, பாடி சந்தோஷப்படுவார்.
குருவை எப்படி கொண்டாடணும்னு நமக்கு காட்டி தருகிறார். அவர் ஸ்வாமிகள் ஸித்தியான பொழுது, இந்த அஷ்டோத்திரத்தை எழுதினார். இந்த அஷ்டோத்திரம், அவர் ஸ்வாமிகள் சொல்லி, அந்த மூல பாராயணம் பண்ணது, அந்த ராமாயண பாகவதம் அந்த கிரந்தங்கள்ல, கீதையில இருக்கற வார்த்தைகளையே, நிறைய இந்த அஷ்டோத்திரத்துல வந்து விழுந்து இருக்கு. அது ஸ்வாமிகளுடைய அனுக்கிரஹம் தான். ஸ்வாமிகள் ராமாயணத்திலும், பாகவத்திலும் எதை ரொம்ப emphasize பண்ணுவாரோ, ரொம்ப எடுத்து சொல்லுவாரோ, அதையெல்லாம், அவர் கொண்டு வந்துருக்கார். அதெல்லாம் அவர் நினைச்சு பண்ணவில்லை, குருவாயூரப்பன்னுடைய அனுக்கிரஹம், காமாக்ஷினுடைய அனுக்கிரஹம். இதுல சில நாமா நேத்தி படிக்கும் போது, எனக்கு ரொம்ப மனசுக்கு சந்தோஷத்தை கொடுத்தது. நடுவுல நடுவுல என்னுடைய சில அனுபவங்களையும் சொல்லி, ஏன் இந்த நாமம் எனக்கு இவ்ளோ சந்தோஷத்தை கொடுக்கறதுங்கிறதையும் நான் உங்களுக்கு சொல்றேன்..
मूकानुग्रहकामाक्षीसद्भक्ताय नमोनम: |
மூகாநுக்ரஹ காமாக்ஷீ ஸத்பக்தாய நமோநம: |
அப்படினு 74வது நாமாவளி.
மூகனுக்கு அருளிய காமாக்ஷினுடைய உத்தம பக்தரான கோவிந்த தாமோதர ஸ்வாமிகளுக்கு நமஸ்காரம் என்று அர்த்தம்.
முதலில் நான் போன உடனே ஸ்வாமிகள், மூகபஞ்சஶதீ தான் எனக்கு 10 வருஷங்கள் தினமும் படிச்சார். 500 ஆவர்த்தி படிச்சார். அதை, இந்த ஸ்லோகத்துல, மூகனுக்கு அருளிய காமாக்ஷினுடைய உத்தம பக்தர் அப்படினு ரொம்ப அழகா சொல்லியிருக்கார். அவர்கிட்டயிருந்து கேட்டுண்டு நான் சில பேருக்கு சொல்லி தருவதால், எனக்கு மூகபஞ்சஶதீல நித்யம் பாராயணம் பண்றதுனால, அந்த நாமாவளி ரொம்ப பிடிச்சுருக்கு.
रामायणादिसदग्रन्थपाठयित्रे नमोनम: |
ராமாயணாதி ஸத்க்ரந்தபாடயித்ரே நமோநம:
ராமாயணம் முதலிய கிரந்தங்களை கற்பிப்பவருக்கு நமஸ்காரம், அப்படினு சொல்லி, அது பத்து வருஷம் அந்த மாதிரி அவர் மூகபஞ்சஶதீ படிச்சு நான் கேட்டேன், கேட்டு தெரிஞ்சுண்டேன். அதுக்கு அப்புறம், வால்மீகி ராமாயணம், கத்துக்கொடுத்தார். நான் அவர் கிட்ட படிச்சு காமிச்சு அவர் சொன்ன அர்த்தங்களலெல்லாம் ரத்னங்கள் என்று சொல்லணும். ரத்னங்களா கொட்டினார். அதெல்லாம் நான் பொறுக்கி வச்சுண்டுயிருக்கேன். அதை வச்சுண்டு இப்ப பகிர்ந்து, அது மூலமா சில பேர் சந்தோஷப்படறா..
पदच्छेदाक्षरव्यक्तिविशिष्टाय नमोनम: |
பதச்சேதாக்ஷர வ்யக்திவிசிஷ்டாய நமோநம:
ராமாயணம், பாகவதம், மூகபஞ்சஶதீ, நாராயணீயம் especially பதங்களை பிரித்து, எழுத்துக்களை ஸ்பஷ்டமாக உச்சரிப்பதை தனி சிறப்பாக கொண்டவருக்கு நமஸ்காரம். அப்படினு போட்ருக்கார்.
நான் முதல்ல விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயணம், classலாம் எடுக்கும் போது, என்ன இது இவ்ளோ பிரிச்சு, பிரிச்சு படிப்பாளானு எல்லார்க்கும் வியப்பாயிருக்கும். ஆனா, ஸ்வாமிகள் அப்படி தான் படிப்பார், அப்படி தான் படிக்கணும்னு சொல்லி கொடுப்பார். இப்ப இந்த நாராயணீயம் அவருடைய recording வெளிவந்து இருக்கிறதுனால, கேட்கறாவாளுக்கு புரியறது, அப்பா இவ்ளோ ஸ்பஷ்டமா, இந்த வயசிலேயேயும், பிரிச்சு பிரிச்சு அழகா பொருள் புரியும் படி படிக்கறாரேனு ரொம்ப ஆச்சர்யப்படறா.
श्रीमन्नारायणीयाब्धिनिर्मग्नाय नमोनम: |
ஸ்ரீமந்நாராயணீயாப்தி நிர்மக்நாய நமோநம:
நாராயணீயம் என்ற கடலில் மூழ்கினவருக்கு நமஸ்காரம் அப்படினு சொல்லி…
மூகபஞ்சஶதீ சாயங்காலம் படிப்பார், ராமாயணம் காலையில படிப்பார், நாராயணீயம் எப்பவும் படிப்பார், வருபவர்களுக்கெல்லாம் நாராயணீயம் படிப்பார். அதனால, மற்றது எல்லாமே இவ்ளோ 200 ஆவர்த்தி சப்தாஹம் பண்ணியிருக்கார், 200 ஆவர்த்தி நவாஹம் பண்ணியிருக்கார், 3000 ஆவர்த்தி சுந்தர காண்டம் பண்ணியிருக்கார், ஒரு கணக்கு.
ஸ்வாமிகளோ, “இந்த கணக்குக்கெல்லாம் என்ன பா அர்த்தம்?” மஹான் தியாகராஜ சுவாமி, “நான் 96 கோடி பண்ணேன், ராமர் தரிசனம்கொடுத்தார்” சொன்னாரா?” பகவான்னுடைய கருணை கிடைச்சதுனால அவர் எனக்கு தரிசனம் கொடுத்தார் என்று எல்லா மஹான்களும் சொல்றா..அந்த மாதிரி கருணை ஏற்படற வரைக்கும் பஜணம் பண்ணனும்”, என்று சொல்லுவார். ஆனா பக்தர்களுக்கு இவ்ளோ, அரிய தபஸ் செய்கிறாரே என்பதால் இந்த number எல்லாம் ஒரு சந்தோஷம்.
நாராயணீயம் பாராயணத்தை அந்த மாதிரி ஒரு கணக்கே பண்ண முடியாது. அந்த நாராயணீயம் என்ற கடலில் மூழ்கினவர்ங்கறது பொருத்தமான வார்த்தை… அவ்ளோ அழகான ஒரு நாமாவளி.
அதே மாதிரி,
काकुस्थचरितानन्दभरिताय नमोनम: |
காகுஸ்த சரிதாநந்தபரிதாய நமோநம:
நாராயணீயம்ங்கிற கடல்ல மூழ்கினவர் என்கிற மாதிரி, ராமருடைய சரித்திரம் என்கிற ஆனந்தத்தால் நிறைந்தவருக்கு நமஸ்காரம்.
நான் கூட சொல்லியிருக்கேன், ஸ்வாமிகள் ராமாயணம் படிப்பதை, அந்த ஒரு ஸ்லோகம் கேட்டு, இதுல இவ்ளோ ஆனந்தம் இருக்க முடியுமா? அப்படினு நான், அந்த ராமாயணத்தை நானும் படிக்கணும்னு ஆசைப்பட்டேன், அனுக்கிரஹம் பண்ணார்.
स मे हरिश्रेष्ठ सलक्ष्मणं पतिं सयूथपं क्षिप्रमिहोपपादय।
चिराय रामं प्रति शोककर्शितां कुरुष्व मां वानरमुख्य हर्षिताम्।।
न किञ्चिदाहाहितमप्रियं वचो न वेत्ति रामः परुषाणि भाषितुम्।
कथन्नु रामे ह्यभिरामवादिनि ब्रवीषि दोषान्गुणनित्यसम्मते।।
எனக்கு சங்கீதம் பிடிக்கும் நல்ல சங்கீதம் நிறைய கேட்ருக்கேன் நேரிலேயே போய் டி.கே.ஜெயராமன், கே.வி.நாராயணஸ்வாமிலாம் கேட்ருக்கேன். ஸ்வாமிகளுடைய ராமாயணத்தை கேட்ட பின்ன, இது தான் உலகத்திலயே இனிமையான சங்கீதம் என்று நினைச்சுண்டு, அதையே கத்துண்டு, நான் படிச்சுண்டு இருக்கேன்.
यश:पूजनालाभेचछावर्जिताय नमोनम:
யஶஃபூஜந லாபேச்சா வர்ஜிதாய நமோநம:
புகழ், பெருமை, லாபம் இவற்றில் ஆசையற்றவருக்கு நமஸ்காரம்.
அதே மாதிரி,
तिरस्कृतसमस्तार्थ्यधनेच्छाय नमोनम: |
திரஸ்க்ருத ஸமஸ்தார்த்ய தநேச்சாய நமோநம:
எல்லோராலும் விரும்பப்படும் பணத்தின் மேல் ஆசையை அறவே ஒதுக்கியவருக்கு நமஸ்காரம்.
அப்படினு இந்த 20 வருஷங்கள், நான் அவர்கிட்ட அத்தனையும் கத்துண்டு இருக்கேன். எனக்கு பணம் அமெரிக்கால போய் சம்பாதிச்சுட்டு வந்து கொடுக்கற மனசு இருந்தது, கையில பணமும் இருந்தது. அப்ப அவர் சொன்னார், “கணபதி! எனக்கு பணம் வேண்டாம்.”
எங்க அப்பா கொஞ்சம் பணம் கொடுப்பார். In fact, நான் சம்பாதிச்சது எல்லாம் அப்பா கிட்ட கொடுத்துடனும், அப்பாவிடமிருந்து வாங்கிக்கணும்னு சொல்லியிருந்தார் ஸ்வாமிகள். ரொம்ப நாளைக்கு அது பண்ணிண்டு இருந்தேன். அப்பா “போதும்டா.., நீயே வச்சுக்கோனு” சொல்ற வரைக்கும். அந்த மாதிரி, “அப்பா கொடுக்கறது போதும், நீ எனக்கு பணம்கொடுக்காதே. நீ ராமாயணம் படிக்கணும். எனக்கு, அதுதான் வேணும்னு”, சொல்லிட்டார். நானும் பார்த்தேன் அவர்கிட்ட ஒரு கூட, அதுல நாலு காவி துணி, ராமாயணம் புஸ்தகங்கள், அவருக்கு கொடுத்த ஆனந்தத்தை, உலகத்துல வேற எதுவுமே கொடுக்கவில்லை.அதனால அவருக்கு நான் வெளியிலயிருந்து ஒண்ணு வாங்கிண்டு வந்து சந்தோஷப்படுத்த முடியாது, அப்படிங்கிற போது, எனக்கு சம்பாதிக்கறதுல interestயே கொறஞ்சு போயிடுத்து.
அமெரிக்காலயிருந்து வா என்று சொன்னவுடனே வந்துட்டேன். இங்க வந்த பின்ன, சம்பாதிச்சு அவரை திருப்தி பண்ண முடியாது, அவரை இந்த பகவத் பஜனத்துநால தான் திருப்தி படுத்த முடியும், அப்படிங்கறது வந்து பார்த்து, பார்த்து நான் தெரிஞ்சுண்டேன்.
அப்படி, பணத்தில் அறவே பற்று அற்றவர். உண்மையான துறவி, அப்படினா நான் பார்த்தது, ஸ்வாமிகள்தான். ஆகாசத்துலே சூரியன் வந்துட்டு போறான், தண்ணி மேல போறது, மேகத்துல போயிட்டு இன்னொரு இடத்துல போய் மழையாக கொட்டுகிறது. அந்த மாதிரி அவர் மூலமா ஏதோ பணம் வரும், வேற எங்கேயோ போய் கொட்டும். அதுக்கு அவருக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் கிடையாது, அவர் கைகளால் பணத்தை தொடவே இல்லை .
அந்த பணம் யார்கிட்டே இருந்து வருது, அது எங்க போறது, அப்படிங்கிறத அவர் கவனிக்கவே மாட்டார். கொடுத்தவாளுக்கு அவாளுக்கு திரவிய சுத்தி ஏற்படும், வாங்கிண்டவாளுக்கு அது அனுகிரஹமா முடியும். அத தவிர அவருக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லாம இருந்தார், கடைசி வரைக்கும் அப்படி தான் இருந்தார்
भस्मभूषणजाज्वल्यललाटाय नमोनम: |
பஸ்மபூஷண ஜாஜ்வல்ய லலாடாய நமோநம:
விபூதியால் அலங்கரிக்கபட்டு ஒளிரும் நெற்றியையுடைவருக்கு நமஸ்காரம். எப்பவும் நெற்றியில் விபூதி இட்டுண்டு இருப்பார்.
எனக்கு பிரியமா ஸ்வாமிகள் ஒரு பெரிய சித்திரத்தை, என்கிட்ட மூகபஞ்சஶதீ படிக்கறவா கொடுத்தா. அதுல நான் விபூதி இட்டவுடனே ரொம்ப ஜொலிக்கறா மாதிரியிருந்தது. எல்லாரும் சொன்னா, ஆமாம் விபூதி இட்டவுடனே அப்படி ஜொலிக்கறதுனு. அந்த மாதிரி எப்பவும் நெத்தியில விபூதி இட்டுண்டு இருப்பார்.
मृदुपूर्वहितामोघ रम्यवाचे नमोनम: |
ம்ருதுபூர்வ ஹிதாமோக ரம்யவாசே நமோநம:
மிருதுவான இது ராமாயணத்துல ராமனை சொன்ன வார்த்தை. ராமன் மிருதுவா பேசுவான், “பூர்வ பாஷி” அப்படினு சொல்லிட்டு, இவன் சக்ரவர்த்தி திருமகன், இவன் கிட்ட எப்படி பேசறதுனு எல்லாரும் பயப்படும் போது, இவனே போய் பேசுவான், ஹிதமா பேசுவான், அமோகவாச்சேன்னா?
பேசிண்டே இருந்தாலும் ஒரு வார்த்தை கூட வீண் வார்த்தையாய் இருக்காது, அப்பேற்பட்ட வாக்கு.. இது ஸ்வாமிகளுக்கு அவ்ளோ பொருந்தும்.அந்த இனிமையா பேசறது அப்படிங்கிறதுக்கு ஒரு example சொல்றேன்..பெரியவா சித்தி அன்னிக்கு நான் சார் கிட்ட இருந்தேன். சார் கிட்ட வந்து விஷயத்தை சொன்னவுடனே, “நான் காஞ்சிபுரம் போகட்டுமா?” னு கேட்டேன். வேண்டாம் நீ இங்கேயே இரு” அப்படினு சொல்லிட்டார்.
அப்புறம் அதை ஸ்வாமிகள்கிட்ட சொன்னபோது, நீ தாங்க மாட்ட, பெரியவாளை பார்த்தா ரொம்ப உனக்கு துக்கம் ஜாஸ்தியாயிருக்கும், அப்படின்ற meaningல,நீ தாங்க மாட்ட, அதனால தான் சார்,இங்கேயே இரு என்று சொல்லிட்டார், ஸாரும் (ஸ்ரீ சிவன் ஸார் ) மஹாபெரியவா தான! அப்படினு சொன்னார்.
சாதாரணமா என்ன சொல்லுவா, எனக்கு கால் சரியில்லை. அதனால, உனக்கு கால் சரியில்லை, அந்த கூட்டத்துல போனா கஷ்டப்படிருப்ப. அதனால சிவன் சார் தன்னுடனே இருக்க சொல்லிட்டார்.அப்படினு சொல்லுவா, ஸ்வாமிகள் வந்து, எனக்கு ஏதோ பெரியவா பக்தி இருக்கிறா மாதிரியும், அந்த பெரியவா பக்தியினால நான் பார்த்தா ரொம்ப கஷ்டப்படுவேங்கிறா மாதிரி, அந்த இனிமையான வாக்கு, நமக்கு பெரியவா பக்தி வரத்துக்காக சொல்றது..அதே மாதிரி, நான் மயிலாப்பூர் ஒரு ஆத்துல இருந்தேன். அந்த ஆத்துக்குல ஸ்வாமிகள் சந்நியாசம் வாங்கிண்ட பின்ன, ரெண்டு வாட்டி வந்தார். எங்க அம்மா அப்பா பூர்ண கும்பம் கொடுத்து வரவேற்று, அந்த hallல உட்காரவைச்சு அவருக்கு பூஜை பண்ணி, பாத பூஜை பண்ணி, கற்பூர ஹாரதி பண்ணி, நாள் முழுக்க திருப்புகழும், கந்தர் அலங்காரமும்லாம் சொல்லிண்டு இருந்தேன்.
திருவடி யுந்தண்டை யுஞ்சிலம் புஞ்சிலம் பூடுருவப்
பொருவடி வேலுங் கடம்புந் தடம்புயம் ஆறிரண்டும்
மருவடி வான வதனங்க ளாறும் மலர்க்கண்களுங்
குருவடி வாய்வந்தென் னுள்ளங் குளிரக் குதிகொண்டவே.
அப்படியெல்லாம் பாடிண்டு இருந்தேன். அந்த பாத தீர்த்தத்தை சாப்பிட்டேன்.
ஸ்வாமிகள் எங்கள் கிருஹத்தில் சாப்பிட்டார். ரெண்டுவாட்டியும் சாப்பிட்டார்.
முதல்வாட்டி அவர் வந்துட்டு போனார், எனக்கு கல்யாணம் ஆச்சு.”ருக்மிணி கல்யாணம்” படிச்சார். அடுத்த வாட்டி அவர் வந்து ”ருக்மிணி கல்யாணம்” படிச்சுட்டு போனார். என் தம்பிக்கு கல்யாணம் ஆச்சு. அந்த ஆத்துக்கு வந்து இருக்கார்.
நான் அதுக்கு அப்புறம் அவர் பக்கத்துல இருக்கணும்னு திருவெல்லிக்கேணில ஒரு ஆகம் வந்தவுடனே, இங்கேயும் வந்துட்டேன்.ஸ்வாமிகள் ஒரு ரெண்டு வருஷம் கழிச்சு சொல்றார்.கணபதிக்கு என் மேல உண்மையான அன்புங்கறதுக்கு, இந்த திருவெல்லிக்கேணில புது வீடு கட்டி இருக்கேன், இங்க வாங்கோன்னு அவன் கூப்படலை, ஏன்னா படி ஏறுவதற்கு ஸ்ரமபடுவேன்னு அவனுக்கு தெரியும், அப்படினார், எனக்கு அவ்ளோ தூரம் அவர் கிட்ட உண்மையான அன்பு இருக்கானு எனக்கு தெரியலை, ஆனா அவருக்கு என் மேல அப்படியொரு அன்பு இருந்தது.
Teacher student னா, teacherங்கிறவர் good teacher அப்படினா, நல்ல படியா விஷயங்களை சொல்லிகொடுக்கறது, தெளிவா சொல்லிக்கொடுக்கறது, புரியும் படியா, இது நல்ல teacher.
Kind teacher அப்படினா அதிகமா பணம் எதிர் பார்க்காம, ஏதோ ஒரு மதிச்சு கத்துண்டா போறும், அப்படினு இருக்கறது kind teacher. ஸ்வாமிகள் வந்து good teacher இல்ல, he is teacher par excellence”.
அவ்ளோ நன்னா சொல்லி தந்தார்.kindங்கிறத்துக்கு பணமே வேண்டாண்டார், மதிப்பும் அவர் எதிர்பார்க்க மாட்டார். ஆனா அப்படி அன்பை கொட்டினார், அப்படி அனுக்கிரஹம் பண்ணார். எனக்கு சுந்தர காண்டம் படி கல்யாணம் ஆகும்னார், கல்யாணம் ஆச்சு.. பொண்ணு பிறந்தா மாதங்கினு பேர் வச்சார். அப்புறம் ராமாயணம் படி முழுக்க, அப்படினு சொல்லி, பிள்ளை பிறந்தான். நான் ஸ்வாமிகள் சித்தியான பின்ன, ஒரு ஜோசியர் கிட்ட போனேன்.ஒரு 10 நாள் ரொம்ப மனசு பாரமா இருந்தது. அந்த ஜோசியர் உன் ஜாதகத்துல கல்யாணம் ரொம்ப delay ஆகும், பிள்ளை குழந்தை இல்லை அப்படிலாம் சொல்றார். நினைச்சுண்டே ஸ்வாமிகளுடையஅனுக்கிரஹம் என்னோட ஜாதகத்தையே மாத்தி எழுதிட்டார்னு. இன்னுமொன்னு சொன்னார் ஜோசியர், உனக்கு 2 ல குரு இருக்கார், அதனால எங்க போனாலும், America போனாலும், Antarctica போனாலும், ஆதித்ய ஹ்ருதயம் படிப்ப, சுந்தரகாண்டம் படிப்ப..ஸஹஸ்ரநாமம் படிப்பேனாம். இது போறும்னு சொல்லிட்டேன், கிளம்பி வந்துட்டேன்.அப்படி ஒரு கருணை கடல்.
108 நாமாவளியும் ரொம்ப அழகா இருக்கு, த்யான ஸ்லோகமும் அவ்ளோ அழகா இருக்கு. அதோட ஸ்வாமிகளே ராம பத்ராக்ஷிதர் அப்படினு ராம “பத்ராச்ரய:” அப்படினு ஒரு மஹான் இருந்தார். அவரை குருவா கொண்ட சிஷ்யர்,
“ஸ்ரீராம பத்ராச்ரித ஸத்குருனாம்
பாதாரவிந்தம் பஜதாம் நராணாம்
ஆரோக்கியம், ஐஸ்வர்யம், அனந்த கீர்த்தி:
அந்தே விஷ்ணு: பதமஸ்தி நித்யம்”அப்படினு ஒரு ஸ்லோகம்..
இது வந்து ராம கர்ணாம்ரித்தில வருது, இதை படிச்சுண்டே வரும் போது ஸ்வாமிகள் ஒருநாள் வி.ஜே.ர் மாமா கிட்ட காமிச்சார். VJR மாமா ரொம்ப புத்திமான், அதனால இதை பார்த்தவுடனே “ஆஹா” னு சொல்லிட்டு,
“ஸ்ரீராம சந்த்ராச்ரித ஸத்குருனாம்
பாதாரவிந்தம் பஜதாம் நராணாம்
ஆரோக்கியம், ஐஸ்வர்யம், அனந்த கீர்த்தி:
அந்தே விஷ்ணு: பதமஸ்தி நித்யம்”
அப்படினு ஸ்வாமிகளுக்கு மங்கள ஸ்லோகம் எழுதியிருக்கார்.இந்த த்யான ஸ்லோகம், இந்த அஷ்டோத்திரம்,இந்த மங்கள ஸ்லோகங்கள் இதெல்லாம் படித்தால் ஸ்வாமிகளுடைய த்யானத்துல இருக்கலாம். அவருடைய அனுகிரஹம் கிடைக்கும்.
நம: பார்வதி பதயே.ஹர ஹர மஹாதேவா…
8 replies on “அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே”
ஸ்வாமிகள் ஜயந்தியை ஒட்டி அவருடைய அஷ்டோத்திரத்திலிருந்து சில நாமாவளிகளையும், அந்த நாமாவளிகளோடு உங்கள் வாழ்க்கையில் ஸ்வாமிகளோடு கூடிய அநுபவத்தையும் மிக அற்புதமாக பகிர்ந்துள்ளீர்கள். கேட்க கேட்க ஆனந்தமாக இருந்தது. அதை மூகபஞ்சசதி ஸ்லோகத்தோடு இணைத்துக் கூறியது மிகப் பொருத்தம்.
நூறு ஸ்லோகங்களில் அம்பாளின் பாதாரவிந்தங்களின் அழகை பாடுகிற மூககவி, காமாக்ஷியின் பாதத் தாமரைகளின் பெருமைகளை யாரால் விளக்க முடியும் என்கிறார்.
ஆச்சார்யாளும் ஆனந்தலஹரி முதல் ஸ்தோத்திரத்தில்,
भवानि स्तोतुं त्वां प्रभवति चतुर्भिर्न वदनैः
प्रजानामीशानस्त्रिपुरमथनः पञ्चभिरपि ।
न षड्भिः सेनानीर्दशशतमुखैरप्यहिपतिः
तदान्येषां केषां कथय कथमस्मिन्नवसरः ॥ १
ப⁴வாநி ஸ்தோதும் த்வாம் ப்ரப⁴வதி சதுர்பி⁴ர்ந வத³நை:
ப்ரஜாநாமீஶாநஸ்த்ரிபுரமத²ந: பஞ்சபி⁴ரபி ।
ந ஷட்³பி:⁴ ஸேநாநீர்த³ஶஶதமுகை²ரப்யஹிபதி:
ததா³ந்யேஷாம் கேஷாம் கத²ய கத²மஸ்மிந்நவஸர: ॥ 1॥
“அம்பா பவானி! நான்கு முகங்கொண்ட படைப்பாளியான பிரம்மாவால் உன் குணங்களை புகழ்ந்து பேச முடியவில்லை. ஐந்து முகங்கள் கொண்ட திரிபுரத்தை அழித்த சிவனாலும், ஆறு முகங்களைக் கொண்ட தேவர்களின் படைகளின் தளபதி சுப்ரமண்ய ஸ்வாமியாலும் மற்றும் ஆயிரம் தலைகளைக் கொண்ட ஆதிஷேஷனாலும் கூட
உன்னுடைய குணங்களை விவரிக்கவும் புகழ்ந்து பேசவும் இயலாது. மற்றவர்களால் எப்படி முடியும்?” என்று வினய ஸ்வரூபமாக ஆச்சாரியாள் ஸ்தோத்திரம் செய்கிறார். 🙏🙏🙏🙏
could you please share the Tamil translation of our Swamy’s astothara namavali?
Use aksharamukha.appspot.com to convert to any language you want
Thank you sir.
Thank you very much.
நமஸ்காரம். ஸ்வாமிகள் மீது ஸ்ரீ சுந்தரகுமார் அவர்களால் பக்தி / அனுபவ பூர்வமாக இயற்றப்பட்ட அஷ்டோத்திரத்தில் சில ரத்தினங்களை எடுத்து உங்கள் கருத்துக்களை கூறிய விதம் அருமை. பரம ஆனந்தம்.குரு பக்தி என்பது contagious , in a very postive manner. அவருக்கு மஹா பெரியவாள் மீது இருந்த பக்தி, மஹாபெரியவாளுக்கு ஸ்ரீ ஆசார்யாள் மீது இருந்த குரு பக்தி ஸ்ரீ ஆசார்யாளுக்கு தக்ஷிணாமூர்த்தி/காமாக்ஷி மீது இருந்த பக்தி ..அது போலவே உங்களுக்கு ஆங்கரை பெரியவா மீது இருக்கும் குரு பக்தி…இப்படி லௌகீக வாழ்க்கையிலும் பக்தி செலுத்த முடியும் என்ற நம்பிக்கை உடைய பலரில் ஒருவரான உங்களிடமும் நான் அதே பக்தியை காண்கிறேன், செலுத்துகிறேன். ஆஸ்ரயிக்கிறேன்.
குரு பார்க்கக் கோடி நன்மை. கணேஷ்ஜீ உங்களுக்குக் குரு கடாக்ஷம் பரிபூர்ணம்.
தங்களுடைய கட்டுரையால் அடியேனுக்கு தங்கள் குரு மேல் அலாதி பக்தி பாசம் அன்பு எல்லாம் வரது. எல்லார் ஆத்திலும் பண்ற பாராயணத்துல நீங்க இருக்கேள். அடியேன் பாக்கியம்! பக்தி ஞானம் வளரட்டும் தங்கள் கருணையால்!
எப்படிப்பட்ட குரு கடாக்ஷம் உங்களுக்கு ! நினைச்சுக்கூட பார்க்க முடியாத அளவுக்கு குரு அன்பைப் பொழிஞ்சிருக்கார்! பூர்வ ஜன்ம ஸுகிர்தம் , யாருக்கும் கிடைக்காத பொக்கிஷம் ! அதுனாலேதான் உங்க வாக்கில ஸரஸ்வதி தேவி குடியிருக்காள்! ஒரு தப்பு தவறும் பொறுக்க மாட்டாத அளவுக்கு perfection to the core! நீங்க பாடம் எடுக்கறதும், பாராயணம் கேட்டுப் பின் அதைத் திரு த் து ம் போதும் கவனிச்சிருக்கேன் ! Par excellence !!
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பதன் உதாரணம் நீங்கதான்! அத்தனை குரு அனுக்ரஹம், கடாக்ஷம்!
ஸ்ரீ ஸுந்தர்குமார் ரோட அஷ்டோத்ரம் மிக அருமை! வார்த்தைகள் அனாயாஸமா ஸ்வாமிகள் பற்றிய உண்மை ஸ்வரூபம் தெரிகிறாமாதிரி வந்து விழுந்திருக்கு! அவரைப் பற்றி விமரிசிக்கத் துளிக்கூட அருகதை அற்ற் ஆத்மா நான்! மனைவியை இழந்த போதிலும் குரு பக்தியுடன் வந்து இங்கு எல்லா பாராயணங்களும் பண்ணி தன் சொந்த நஷ்டங்கள் எதுவுமே வெளியே தெரியாமல் பூர்ண பக்தியுடன் குரு அஞ்சலி செஞ்சது பார்த்து என் போன்றோர் நிறைய கத்துக்கணும்.
தாமரையில் உதித்த ப்ரம்மதேவர், தேவர்கள் அனைவரையும் உன் ஆணைக்குக் கட்டுப்பட வைத்ததோடு, ஏழை எளியவர்களுக்கு அரிய பொருள்களை வாரி வழங்கும் கற்பக வ்ருக்ஷத்தையே தாழச் செய்வது போல் அதைவிட அதிகமாக வாரி வழங்கும் வண்மை கொண்டு, ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரச் செயல்களை ப்ரம்மா விஷ்ணு, ருத்ரர் மூலம் செயல்படுத்தும் தேவியின் திருவடி மகிமையைக் கூறுவார் எவருமே இல்லை. அதற்கு மேல் ஈஸ்வரர், ஸதாசிவத்தில் ஒடுக்கிய உலகைத் தன் அருளால் மறுபடியும் அனுக்ரஹம் செய்கிறாள் ராஜேஸ்வரி. எட்டு திக்பாலர்களான அக்னி, யமன் நிருதி, வாயு குபேரன் ஈசானன், ஸோமன் மற்றும் ப்ரம்மா விஷ்ணு, ருத்ரன் திக்பாலகர்கள் இந்திரன்,காமேஸ்வரன், ராஜராஜன், இவர்கள் அனைவருக்கும் தேவியே ஈஸ்வரி ஆவாள்!
எத்தகைய பொருள் செறிந்த
அம்பாளின் மகிமையை எடுத்துச் சொல்லும் ச்லோகம் இது!
இந்த இடத்தில் ஸ்வாமிகளுக்கு இது மிகப் பொருத்தமாக கணபதி உபயோகம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது!
குரு ஷரணம். ஜய ஜய ஜகதம்ப சிவே