கனகதாரா ஸ்தோத்ரம் 1வது, 2வது ஸ்லோகங்கள் பொருளுரை (15 min audio in Tamizh giving meaning of Kanakadhara Stothram slokams 1 and 2)
अङ्गं हरेः पुलकभूषणमाश्रयन्ती भृङ्गाङ्गनेव मुकुलाभरणं तमालम् ।
अङ्गीकृताखिलविभूतिरपाङ्गलीला माङ्गल्यदास्तु मम मङ्गलदेवतायाः ॥
मुग्धा मुहुर्विदधती वदने मुरारेः प्रेमत्रपाप्रणिहितानि गतागतानि ।
माला दृशोर्मधुकरीव महोत्पले या सा मे श्रियं दिशतु सागरसम्भवायाः ॥
இது கனகதாரா ஸ்தோத்திரத்தில முதல் ஸ்லோகம். கனகதாரா ஸ்தோத்திரம் ஆச்சாரியாள் அனுகிரஹம் பண்ணின முதல் ஸ்லோகம், லக்ஷ்மிதேவி மேல. இது சம்பந்தப்பட்ட கதை எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். நானே விஸ்தாரமா ஷங்கர சரிதம் சொல்லும்போது சொல்லிருக்கேன். பிரம்மச்சாரி ஆசிரமத்துல ஆச்சாரியாள் பிக்ஷாசரணம் பண்றார். ஒவ்வொரு கிரஹமா போயி பவதி பிக்ஷாம் தேஹி அப்படின்னு கேட்கிறார். கேரளத்தில் துர்பிக்ஷமே கிடையாது. அங்கே எல்லாரும் சௌக்கியமா தான் இருக்கா. ஆனாலும் கர்ம வினைப் பயனால ஒரு பிராமண தம்பதி ரொம்ப வறுமையில் வாடிண்டு இருக்கா. அவாளுக்கு அனுகிரகம் பண்றதுக்கு ஆகவே அவாத்து வாசல்ல போயி, இந்தக் குழந்தை ஷங்கரர் போய் பவதி பிக்ஷாம் தேஹின்னு கேட்கிறார். அந்த அம்மா வெளியில வந்து பார்க்கிறா. பால சூரியனைப் போல ஜொலித்து கொண்டு ஒரு குழந்தை பிக்ஷை கேட்கிறது. ஆனால் கொடுக்கறதுக்கு ஒண்ணுமே இல்லையே ஒரு நெல்மணி கூட இல்லையேன்னு சொல்லி வருத்தமா உள்ள போறா, ஏதாவது இருக்கான்னு தேடுறா ஒரு பிறேயில ஒரு அழுகின நெல்லிக்காய் இருக்கு, இதைப்போய் கொடுப்பாளா என்று சொல்லி அழறா. சரி வேற என்ன பண்றது இருக்கறத தானே கொடுக்க முடியும். எடுத்துண்டு வாசல்ல வரா. இவரை பார்த்தவுடனே, இந்தக் குழந்தைக்கு இதை கொடுக்கிறதான்னு உள்ள போறா இப்படி நடையா நடக்கிறா. அவ மனசுல அன்பு இருக்கு, குடுக்குற எண்ணம் இருக்கு, ஆனா செல்வம் இல்லை. அப்புறம் ஏதோ ஒண்ணு இருக்கிறதை கொடுப்போம், அப்படின்னு கொண்டு வந்து அவருடைய கப்பரைல்ல போடுறா. ஆச்சார்யாள் புரிஞ்சுண்டுடறார். அப்போ இந்த கனகதாரா ஸ்தோத்திரத்தை சொல்லி லக்ஷ்மிதேவி கிட்ட வேண்டுகிறார். “தத்யாத் தயானு பவனோ த்ரவிணாம்புதாராம்
அஸ்மின் அகிஞ்சன விஹங்க சிஷௌ விஷண்ணே
துஷ்கர்ம கர்ம மப நீய சிராய தூரம்
நாராயணப் பிரணயினி நயனாம்புவாஹ:”
இந்த விஹங்க சிசு அப்படிங்கறர். இந்த சாதக பக்ஷியின் குஞ்சு போல, பசியில குஞ்சு வீல் வீல்ன்னு கத்தும். அந்தமாதிரி இவாளுடைய கஷ்டம். வறுமையில இருக்காளே, அம்மா துஷ்கர்மா இருக்குதான், வினைகள்னால தான் இவா கஷ்டப்படுற. ஆனா என் மேல அன்பு காமிச்சா. நான் உன்கிட்ட வேண்டிக்கிறேன். உன்னுடைய கருணைன்னு ஒண்ணு இருக்கே, அந்த கருணையினால் இவாளுக்கு நீ செல்வத்தை பொழியனும்ன்னு வேண்டிக்கிறார். அதே மாதிரி தங்க நெல்லிக்காய் ஒரு முகூர்த்த காலம் அவாத்து திண்ணையில மழையா கொட்றது. அவாளுடைய வறுமை நீங்கிடறது. இன்னைக்கும் இந்த ஸ்லோகத்தை பிரார்த்தனை பண்ணினால் துர்பிக்ஷம் போயி நம்மளுடைய தேவைக்கும், அதுக்கு மேல குடுக்குற மனசு இருந்தா கொடுக்கறத்துக்கும் வேண்டிய செல்வம் கிடைக்கும், அப்படின்னு பெரியவா சொல்லி இருக்கா. பெரியவா சொல்லி இந்த ஸ்தோத்திரத்தைப் படித்து எவ்வளவு பேர் வறுமையிலிருந்து மீண்டும் இருக்கா,
நம்ப இப்ப இருக்குற காலகட்டத்துல மனசுலயும் பலவிதமான பயங்கள் இருக்கு. இந்த ஸ்தோத்திரங்கள் அந்த பயத்தை போக்கும், அனுகிரஹத்து மூலமாவும் போக்கும். இந்த மாதிரி உயர்ந்த கருத்துக்களை மனசுல நினைக்கிறதுக்கே ஒரு பாக்கியம் இருக்கணும், அவ்வளவு அழகழகான உவமைகள், அழகான கவிதை, அதுல ஒரு பிரார்த்தனை, லக்ஷ்மி தேவி, எல்லா சிரேயஸும், விபூதியும் தன்னுடைய உடம்பால கொண்டு இருக்கிற ஒரு அழகான வடிவம். அந்த லக்ஷ்மி தேவியையும் கூட விஷ்ணு பகவானையும், தாயாரையும், பெருமாளையும் தியானம் பண்ணினாலே நமக்கு மங்களங்கள் கிடைச்சே தீரும். இந்த ஸ்தோத்திரத்தில, ஒவ்வொரு ஸ்லோகத்தில ஒவ்வொரு விதமா அம்பாளை கூப்பிடுறார். நான் அம்பாள்ன்னு சொல்றேன், நம்மளுடைய வழக்கம், ஆச்சாரியாளும் சரி, நம்ப பெரியவாளும் சரி அந்த சிவ விஷ்ணு அபேதம் அப்படிங்றதை அவ்வளவு அழகா காமிச்சி இருக்கா. எப்படி காமாக்ஷி அம்மன் கோயில்ல பெரியவா அம்மான்னு உருகுவாரோ, அதே மாதிரி வரதராஜர் கோவிலுக்கு போனா அங்க தாயார் சன்னதியில் நின்னு பிரார்த்தனை பண்ணுவார். அதே மாதிரி இங்க ஆச்சாரியாளும் எடுத்த உடனே முதல் ஸ்லோகமே லக்ஷ்மி தேவி மேல பண்ணியிருக்கார். ரொம்ப கவிதை நயம் மிகுந்தது, அழகழகான காட்சிகளை நம்ம கண்ணு முன்னால கொண்டுவரக்கூடிய ஒரு ஸ்தோத்திரம்.
பெரியவா லக்ஷ்மி தேவியினுடைய ஒரு அனுக்கிரஹம் அப்படின்னு, ஆரம்பிச்ச உடனேயும், இன்னும் பல நிகழ்ச்சிகளை சொல்றா. வேதாந்த தேசிகர், அவர் சர்வ தந்த்ர ஸ்வதந்த்ரர்ன்னு பேரு, அதை பரிக்ஷை பண்ணனுங்கர்த்துக்காக ஒரு ஏழை பிராமணனை, எனக்கு கல்யாணம், திரவிய சகாயம் வேணுமன்னு அவரை போய் கேளு அப்படின்னு அனுப்பறா. வேதாந்த தேசிகர் ஒரு வைராக்கியவான். அதனால அவர் பணம் ஒன்னும் சேர்த்து வைச்சுக்க மாட்டார். அதனால சீண்டரத்துக்காக அப்படி ஒருத்தரை அனுப்புகிறா. இந்த இடத்தில பெரியவா சொல்றா மாப்பிள்ளை தான் பணம் கொடுத்து கல்யாணம் பண்ணிண்டார்ன்னுதெரிகிறது. இந்த மாதிரி சீதனம்கிறது, பெண்களை அவா அப்பா வெல்லாம் ஹிம்சை பண்றது எல்லாம் என்னைக்குமே நம்ம மதத்தில் கிடையாதுன்னு,
அப்புறம் வித்யாரண்யர்ன்னு அவருடைய கதையை சொல்கிறார் அது ரொம்ப நன்னா இருக்கும். வித்யாரண்யர் என்கிறவர் மஹா தபஸ்வி, ஆரண்யம் காடு போல அவ்வளவு எல்லா வித்தைகளும் தெரிஞ்சவர், வேதத்துக்கு பாஷ்யம் எழுதினவர், அவருக்கு வறுமை இருக்கு அப்ப மகாலக்ஷ்மிய குறித்து தபஸ் பண்றார்.மஹாலக்ஷ்மி பிரசன்னம் ஆனவுடனே என்ன வேணும்னு கேட்கிறா எனக்கு நவநிதிகளும் வேணும் அளவற்ற செல்வம் வேணும்னு கேட்கிறார் அம்பாள் சொல்ற இந்த ஜென்மத்துல உனக்கு செல்வம் இல்லையே அப்படின்னு சொன்ன உடனேயும் இவர் ஏதோ ஒரு சாமர்த்தியமாக பண்றோம்னு நெனச்சுண்டு அப்ப நான் சன்னியாசம் வாங்கிக்கிறேன் அப்படின்னு சொல்றார். உடனே சந்நியாசம் வாங்கிண்ட உடனே வேற ஜென்மா, முதலை கால விட்ட மாதிரி, உடனேயும் இவருக்கு அடுத்த ஜென்மா வந்துடறது. மழையாக கொட்டிடுறா, இவரை சுத்தி எங்க பாத்தாலும் தங்கமும் வைரமும் அவ்ளோ செல்வமா இருக்கு ஆனா சன்னியாசி தொட கூட கூடாது அப்ப எதுக்கு அம்பாள் இப்படி ஒரு விளையாட்டு பண்ணினாள்னு யோசிச்சு, அப்ப துருக்கர்களுடைய படையெடுப்பினால தேசம் முழுக்க கோயில்கள் எல்லாம் உடைச்சு அட்டகாசம் பண்ணிட்டு பேருக்கா அந்த மாலிக்காபூர். சரி, நமக்கு புத்தி இருக்கு, இப்போ செல்வமும் இருக்கு ஹரிஹரன், புக்கன் இரண்டு ஆடு மேய்க்கிறவாள பிடிச்சு அந்த நல்ல முகூர்த்தத்திலேங்கறதனாலேயே உடனே பட்டாபிஷேகம் பண்ணி அதுலதான் விஜயநகர சாம்ராஜ்ய உருவாகி, அங்கிருந்து கிளம்பி கம்பன்ன உடையார் வந்து இங்க மதுரையில யுத்தம் பண்ணி, திரும்பவும் கோயில்களை சிறப்பா எடுத்துக்கட்டி இதெல்லாம் நமக்கு தெரியும். அந்த கதையெல்லாம் பெரியவா சொல்றா. அப்படி லக்ஷ்மிதேவியினுடைய அனுக்கிரஹம் வேணும். இந்த ஸ்லோகத்தினுடைய அர்த்தத்தை பார்ப்போம்.
இந்த ஸ்லோகத்தில் “முகுலாபரணம் தமாலம்”, தமால மரம்ன்னு ஒரு மரம் அது பச்சை வர்ணத்தில் இருக்கு ,அதுல முக்குலாபரணம் தமாலம், அப்படின்னா மொட்டுக்கள் சின்னச்சின்ன பூ மொட்டெல்லாம் இருக்கு. இந்த மொட்டுக்களால் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு தமால விருக்ஷம். அந்த விருட்சத்து மேல, “பிருங்காகனேவ”, பிருங்க: வண்டு. பிருங்காங்கனா அப்படினா பெண் வண்டு என வச்சுக்கலாம், பொன்வண்டுன்னும் வெச்சுக்கலாம். அந்த மொட்டுகளோடு கூடிய மரத்தின்மேல் வண்டுகள் அமர்ந்திருப்பது போல “ஹரேஹே”, மஹா விஷ்ணுவினுடைய அங்கம், சரீரம், சரீரத்திலே “புளக பூஷணம்”, புளகம் மயிர் கூச்சல் ஏற்படறது. அது ஏன் ஏற்பட்டிருக்குன்னா தாயார் பார்க்கிறா, அது பார்த்த சந்தோஷத்தில் இவருக்கு மயிர் கூச்சல் ஏற்பட்டிருக்கு, மஹாலக்ஷ்மினுடைய பார்வை அதுல வந்து உட்கார்ந்து இருக்கிற பொன்வண்டு மாதிரி இருக்கு அப்படின்னு சொல்றார், “அங்கீ கிருதாகில” – சமஸ்த ஐஸ்வரியங்களும் உலகத்தில யாருடைய அங்கமோ அப்படி மகாலக்ஷ்மின்னுடைய வடிவமே ஐஸ்வர்யங்கள் நிரம்பியது, எப்படி பகவான் கீதையில எல்லா விபூதிகளும் என்னிடமிருந்து உண்டானவை அப்படின்னு சொல்றாரோ, அதேமாதிரி தாயாரும் ஐஸ்வரிய வடிவம். மங்கள தேவதாயா: பரம மங்கள வடிவம், லக்ஷ்மிதேவி தான் அந்த லக்ஷ்மியினுடைய அபாங்க லீலா கடைக்கண் பார்வையின் அழகு, கடைக்கண் பார்வையின் லீலை எதை ஆச்ரயிச்சிருக்குன்னா “ஹரேஹே அங்கம்” அதாவது லக்ஷ்மி தேவி ஆசையா விஷ்ணு பகவானே பாக்கறா அப்படின்னு சொல்றார். அந்த பார்த்ததுனால மங்கள வடிவமான எல்லா ஐஸ்வர்யங்களின் ஸ்வரூபமான லக்ஷ்மிதேவி, மகாவிஷ்ணுவை பாத்ததுனால அவருக்கு பூளகம் ஏற்படுகிறது. இது எப்படி இருக்குன்னா தமால விருக்ஷம் மொட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் போது அது மேல் பொன்வண்டுகள் வைத்துக் கொண்டிருப்பது போல இருக்கு, அப்படின்னு சொல்றார். இந்த லக்ஷ்மி தேவியின் உடைய கடாக்ஷம் ஆனது, “மாங்கல்ய தா அஸ்து” மங்களங்களை அளிப்பதாக எனக்கு “மம மாங்கல்யதா அஸ்து” எனக்கு தாயாருடைய கடாக்ஷம் மங்களங்களை அளிக்கட்டும். அப்படின்னு அழகான ஒரு ஸ்லோகம் இந்த மாதிரி அம்பாள் பார்த்தவுடனே சுவாமிக்கு ரோமாஞ்சனம் ஏற்படுகிறது. அது ஒரு ஆபரணம் மாதிரி இருக்குங்கறதே மூக கவியும் சொல்றார்.
பவித்ரய ஜக³த்த்ரயீவிபு³த⁴போ³த⁴ஜீவாதுபி:⁴
புரத்ரயவிமர்தி³ன: புலககஞ்சுலீதா³யிபி:⁴ ।ப⁴வக்ஷயவிசக்ஷணைர்வ்யஸனமோக்ஷணைர்வீக்ஷணை:
நிரக்ஷரஶிரோமணிம் கருணயைவ காமாக்ஷி மாம் ॥ 87 ॥
காமாக்ஷி மன்மத²ரிபோரவலோகனேஷு
காந்தம் பயோஜமிவ தாவகமக்ஷிபாதம் ।ப்ரேமாக³மோ தி³வஸவத்³விகசீகரோதி
லஜ்ஜாப⁴ரோ ரஜனிவன்முகுலீகரோதி ॥
One reply on “கனகதாரா ஸ்தோத்ரம் 1வது, 2வது ஸ்லோகங்கள் பொருளுரை”
அற்புதமான விளக்கம்! கேட்டுண்டே இருக்கத் தோனரது!
ஆசார்யாள் முதல் ஸ்லோகம்! எனக்கு இந்த ஸ்லோகம் சொல்லும்போது பெரியவா கூப்பிட்டு ஆசீர்வாதம் செய்தார் ” அம்பாள் கடாக்ஷம் பரிபூர்ணமானிருக்கு உனக்குன்னு சொல்லி ஆசி வழங்கினார் ! இன்றும் பசுமையாக மனசில்.நிற்கிறது!
விஷ்ணுவின் திரு மார்பில் உறையும் லக்ஷ்மி, எங்கும் மங்கலத்தை வாரி வழங்கும் செல்வி!! நீல மேகம் போல் விளங்கும் விஷ்ணு உந்தன் அன்பால் மெய்யுருகி புளகாங்கிதம் அடைந்து, அளவற்ற செல்வம் அடைந்தான்!!
திருமாலின் மேல் வைத்த உன் விழிகளை என் மேலும் திருப்பினால் நானும்.உந்தன் கருணையால் செல்வம் பெற்று வளமான, நிறைவான வாழ்வை அடைவேன்! அதனால் தாயாய் கூர்ந்து என் மேல் உன் விழிப் பார்வையை திசை திருப்புவாய் அம்மா!!
நீலோத்பல மலரைப் பார்த்து அலைந்து திரியும் வண்டு, தன் சுய குணமான பரப்பதும், திரிவதுமான வேரை விடுத்து, உன் விழி மயக்கம் கொண்டு, திருமாலின் வண்ண முகம் அதில் கண்டு, மயங்கும்…கொஞ்சும்!! தேனிக்கூட்டம் இங்கு ஒர் மாலை போல் தோற்றம் அளிக்கிறது!
அப்படிப்பட்ட நின் திரு விழிகளை என் மேலும் திருப்புவாயாகில் ஆலமரம் போல் அழிவற்ற செல்வம் அடைவேன் தாயே, சமுத்திரத்தில் தோன்றிய உன் கடாக்ஷம் என் மேல் விழட்டும், திரும்படடும்!!
எத்தகைய அழகிய வர்ணனை,!!
ஆசார்யாள் உவமான உபமேயங்களில் வல்லவர்!!
வழக்கம் போல் தக்க மூக பஞ்ச சதியின் ஸ்லோகங்கள் தக்க இதங்களில் சொல்லி அருமையான ஒர் போஸ்ட்!!
ஜய ஜய சங்கரா….