Categories
Kanakadhara

கனகதாரா ஸ்தோத்ரம் 3வது, 4வது ஸ்லோகங்கள் பொருளுரை

கனகதாரா ஸ்தோத்ரம் 3வது, 4வது ஸ்லோகங்கள் பொருளுரை (10 min audio in Tamizh giving meaning of Kanakadhara Stothram slokams 3 and 4)

கனகதாரா ஸ்தோத்திரத்தின் முதல் இரண்டு ஸ்தோத்திரத்தை பார்த்தோம். முதல் ஸ்லோகத்தில், பச்சை மாமலை போல் மேனி கொண்ட பெருமாளுடைய திவ்ய தேஹத்தை, வண்டுகளின் வரிசை போல தாயாருடைய கடாக்ஷம் போய் பார்த்துவிட்டு திரும்பி வரது, இது ஒரு மாலை போல இருக்குன்னு சொன்னார். அந்த லக்ஷ்மி தேவியின் கடாக்ஷம் எங்களுக்கு மங்களங்களை அளிக்கட்டும், அப்படின்னார். அடுத்த ஸ்லோகத்தில, நீலோத்பலம் போன்ற சுவாமியினுடைய தேஹத்தில பொன்வண்டுகளைப் போன்று ரீங்காரம் பண்ணும் தேவியினுடைய கடாக்ஷம், எங்களுக்கு செல்வத்தை அளிக்கட்டும், என்று வேண்டினார். இன்னைக்கு அடுத்த ரெண்டு ஸ்லோகங்கள் பார்ப்போம்

विश्वामरेन्द्रपदविभ्रमदानदक्षम् आनन्दहेतुरधिकं मुरविद्विषोऽपि ।

ईषन्निषीदतु मयि क्षणमीक्षणार्धम् इन्दीवरोदरसहोदरमिन्दिरायाः ॥३॥

விஶ்வாமரேன்த்3ர பத3 விப்4ரம தா3னத3க்ஷம்
ஆனந்த3ஹேதுரதி4கம் முரவித்3விஷோபி ।
ஈஷன்னிஷீத3து மயி க்ஷணமீக்ஷணார்த4ம்
இன்தீ3வரோத3ர ஸஹோத3ரமின்தி3ரா யா: ॥ 3

இதோட அர்த்தம் என்னன்னா,
விஶ்வாமரேன்த்3ர பத3 விப்4ரம தா3னத3க்ஷம் – இந்திர பதவி, இந்திர பதவியில் பலவிதமான போகங்கள், கேட்டதெல்லாம் கொடுக்கும் கற்பக விருக்ஷம் இருக்கு, பார்க்கறதுக்கு ஒளிமயமான தேஹம், எப்பவுமே 25 வயசு, அளவற்ற செல்வம், பதவி இப்படி எல்லாம் இந்திர பதவில இருக்கு. அந்த இந்திர பதவியுடைய விப்ரமம், வைபவங்கள் அது விஷ்வம், அந்த எல்லாவிதமான போகங்களையும், இன்னும் அதுக்கு மேல என்ன எல்லாம் உண்டோ அது எல்லாத்தையும் தா3னத3க்ஷம் – இங்கேயே நமக்கு கொடுக்கக்கூடிய, தானம் பண்ண கூடிய திறமை கொண்ட லக்ஷ்மி தேவியின் கடாக்ஷம், ஆனந்த3ஹேதுரதி4கம் முரவித்3விஷோபி – முரன் என்ற அரக்கனுடைய, வித் விஷ: எதிரியான விஷ்ணு பகவானுக்கு, ஆனந்த3ஹேதுரதி4கம், அதிகமான ஆனந்தத்தை அளிப்பதில் காரணமாக இருப்பது அந்த தாயாருடைய கடாக்ஷம். இந்திராதி தேவர்கள், நம்ப எல்லாரும், லக்ஷ்மி தேவியினுடைய குழந்தைகள். நமக்கு ஆசைப்பட்டதெல்லாம் கொடுக்கிறா. விஷ்ணுபகவான் பிரிய பர்த்தா, அவரை பார்த்தா இவளுக்கு சந்தோஷம், இவளைப் பார்த்தால் அவருக்கு ஆனந்தம் அதிகமாகிறது,
ஆனந்த3ஹேதுரதி4கம் – அந்த இந்திராயா: லட்சுமிதேவியினுடைய ஈக்ஷணம் அப்படி என்றால் பார்வை, ஈக்ஷணார்த4ம் – பாதி பார்வை, அதாவது கடைக்கண் பார்வை, ஈஷது – அந்தக் கடைக் கண் பார்வையில் ஒரு சொட்டு, ஒரு க்ஷணம் மயினிஷீத3து – என்மேல் விழட்டும். அந்தக் கடாட்சம் எப்படி இருக்குன்னா, இன்தீ3வர ஸஹோத3ரமின்தி3ரா யா – நீலோத்பல புஷ்பத்தினுடைய மத்திய பாகம் அது ஒரு தனி அழகாக இருக்கும், அதுக்கு சமானமான அம்பாளுடைய கடாக்ஷம், அந்தக் கடைக்கண் பார்வையில் ஒரு துளி, என்மேல் அரை க்ஷணம் படட்டும், அப்படின்னு ஒரு அழகான ஸ்லோகம். “சர்வம் விஷ்ணு மயம் ஜகத்”அப்படின்னு எல்லாம் பெருமாள் உடையதுதான், ஆனாலும் நம்ம தாயார் கிட்ட கேட்டா எப்பவுமே நமக்கு வேண்டியது கேட்டால் கிடைக்கும் இல்லையா? கருணை ஜாஸ்தி. அந்த மாதிரி தாயார் பிரியமான தன்னுடைய குழந்தைக்கு, எல்லா போகங்களையும் கொடுப்பா.
மூகபஞ்சசதீல இதே மாதிரி ஒரு ஸ்லோகம் இருக்கு.

மூகோ விரிஞ்சதி பரம் புருஷ: குரூப:
கந்த3ர்பதி த்ரித3ஶராஜதி கிம்பசான: ।
காமாக்ஷி கேவலமுபக்ரமகால ஏவ
லீலாதரங்கி3தகடாக்ஷருச: க்ஷணம் தே ॥

ஹே காமாக்ஷி! லீலா தரங்கித கடாக்ஷ ருச: – விளையாட்டோடு கூடிய உன்னுடைய கடாக்ஷத்தினுடைய காந்தி, கேவலமுபக்ரமகால ஏவ – ஒரு க்ஷணம் பக்தன் மேல பட ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி, அந்த ஒரு க்ஷணத்துக்குள்ள மூகோ விரிஞ்சதி – ஊமையாக இருப்பவன், பிரம்மாவாக ஆகிடறான்.
பரம் புருஷ: குரூப: ரொம்ப குரூபமா, எல்லாரும் பாக்கறதுக்கு வெறுக்கும் படியாய் இருக்கக்கூடிய ஒரு புருஷன் கூட,
கந்த3ர்பதி – , மன்மதன் போல எல்லாரும் பார்த்துண்டே இருக்கணும்னு ஆசைப்படற அளவுக்கு அழகா ஆயிடறான், கிம்பசான: – அடுத்த வேளைக்கு என்ன சமைக்கிறது என்ற அளவில் தரித்திரனா இருக்கக்கூடிய ஒருத்தன், த்ரித3ஶராஜதி – தேவேந்திரநானாக ஆகிவிடுகிறான் அப்படின்னு ஒரு ஸ்லோகம் அந்த மாதிரி அம்பாளுடைய அனுகிரஹம் கிடைச்சா எல்லாமே கிடைச்ச மாதிரி,
ஆனால் அதற்கும் மேலான ஒரு ஆனந்தம் இருக்குன்னு தெரியறது, அது ஸுஸ்வரூபா ஆனந்தம் அதைத்தான் அம்பாள் பார்க்கும்போது அதிகமான ஆனந்தம் ஏற்படுகிறது, அப்படின்னு ஆச்சாரியாள் சொல்லுகிறார்.
அடுத்த ஸ்லோகம்

आमीलिताक्षमधिगम्य मुदा मुकुन्दम् आनन्दकन्दमनिमेषमनङ्गतन्त्रम् ।

आकेकरस्थितकनीनिकपक्ष्मनेत्रं भूत्यै भवेन्मम भुजङ्गशयाङ्गनायाः ॥४॥

ஆமீலிதாக்ஷமதி4க3யம முதா3 முகுன்த3ம்
ஆனந்த3கன்த3மனிமேஷமனங்க3 தன்த்ரம் ।
ஆகேகரஸ்தி2தகனீனிகபக்ஷ்மனேத்ரம்
பூ4த்யை ப4வன்மம பு4ஜங்க3 ஶயாங்க3னா யா: ॥ 4

பு4ஜங்க3 ஶய: அப்படிங்கறது, பாம்பணை மேல் பாற்கடலில் பள்ளி கொண்டு இருக்கும் அனந்த சயனப் பெருமாள், அந்த பெருமாளுடைய, அங்கனா- மனைவி லக்ஷ்மி தேவி. இந்தப் பாற்கடல் இவா ரெண்டு பேருக்கும் பிடிச்ச இடம் பாற்கடலில் தான் லக்ஷ்மி தேவி பிறந்தாள். அதனால அவளுக்கு அது பிறந்த இடம். சுவாமி எப்பவுமே பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கிறார், அதனால அவா ரெண்டு பேரும் எப்பவுமே அங்க ஆனந்தமாய் இருக்கா.
நாராயணீயத்தில லக்ஷ்மி தேவி பாற்கடலில் இருந்து ஆவிர்பவித்ததையும், எல்லாரும் பார்த்து ஆனந்த பட்டதையும், இந்திராதி தேவர்கள் லக்ஷ்மி தேவிக்கு அபிஷேகம் பண்ணினதையும், ரிஷிகள் வேத மந்திரங்களைச் சொல்லி ஆராதித்ததையும், அப்புறம் லக்ஷ்மி தேவி விஷ்ணு பகவானுக்கு மாலையிட்டதையும், உடனே சுவாமி தாயாரை எடுத்து தன்னுடைய மார்பில் வைத்துக் கொண்டதையும், அந்த மார்பில் அமர்ந்து கொண்டு லக்ஷ்மிதேவி எல்லாரையும் கடாக்ஷிப்பதனால உலகமே ரொம்ப புஷ்டி கரமாக, ரொம்ப ஆனந்தமயமாக ஆகிவிட்டது, அப்படின்னு இந்த எட்டாவது ஸ்லோகத்தை சுவாமிகள் ரொம்ப விரும்பி, அந்த இரண்டாவது வரியை மூன்று தடவை படிப்பார்.

உரஸா, தரஸா மமா நிதை2 நாம்
பு4வ நா நாம் ஜநநீம் அநந்ய பாவாம்
த்வ து3ரோ விலஸத்த தீ3க்ஷண ஸ்ரீ-
பரி வ்ருஷ்ட்யா பரி புஷ்ட மாச விஷ்வம் (28.8)

தாயார், பு4வநாநாம் ஜநநீ – நிகண்டுல கூட, லோக மாதா, லோக ஜனனி அப்படின்னு லக்ஷ்மி தேவிக்கு பேரு.
அனன்ய பாவாம், வேறு எங்கும் மனசு வைக்காம சுவாமி கிட்டயே மனச வெச்சிருக்கிற, அந்த புவனானாம் ஜனனீம், உரஸா தன்னுடைய மார்பில் – மமாநிதை2 நாம் – உடனே வெச்சிண்டு கௌரவப்படுத்திறார். தரஸா – உடனே வந்து மாலையிட்ட உடனே மார்பில வச்சுண்டுட்டார்.
த்வ து3ரோ விலஸத்த தீ3க்ஷண ஸ்ரீ-
பரி வ்ருஷ்ட்யா – உன்னுடைய மார்பில் இருந்து கொண்டு, ஈக்ஷணஶ்ரீ – அந்த லக்ஷ்மி தேவியினுடைய கடாக்ஷ செல்வம்,
பரி வ்ருஷ்ட்யா பரி புஷ்ட மாச விஷ்வம் –
விஷ்வத்துக்கே பரி புஷ்டியை தந்து கொண்டிருக்கிறது அப்படின்னு ஒரு அழகான ஸ்லோகம்
இந்த ஸ்லோகத்தில் அவா ரெண்டு பேரும் பார்த்துகறது, ஆனந்தப்படறது தான். இன்னொரு ஸ்லோகம் சொல்றார்‌ ஆச்சார்யாள்,
ஆமீலிதாக்ஷமதி4க3ம்ய முதா3 முகுன்த3ம், முதா3 – ரொம்ப சந்தோஷத்தோடு, ஆமீலிதாக்ஷம் – கண்கொட்டாமல் தன்னுடைய பார்யையான லக்ஷ்மி தேவியை, பர்த்தாவான மகாவிஷ்ணு, முகுந்தம் பார்த்துண்டே இருக்கார், அதை பார்த்துவிட்டு, அதிகம்ய – இந்த அம்பாளுடைய கடாக்ஷம், நிமிர்ந்து பார்த்த உடனேயும் அவர் தன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதைப் பார்த்து, ஆனந்த கந்தம் – ஆனந்தத்தை அளிப்பதும், அனிமேஷம் – அப்படியே வியப்பில் கண்கொட்டாமல் பார்த்துண்டு, அனங்க தந்த்ரம் – ஆசையை உண்டு பண்ணுவதுமான, பு4ஜங்க3 ஶயாங்க3னா யா: –
மகாலக்ஷ்மியினுடைய, தான் கொஞ்சம் வெட்கத்தில் கண்ணை மூடிக்கொள்றா
ஆகேகரஸ்தி2தகனீனிகபக்ஷ்மனேத்ரம் – பாதி மூடிண்டு கருவிழிகளோடும் இமைகளோடு அழகாக விளங்கும் அந்த லக்ஷ்மி தேவியினுடைய கடாக்ஷம், மம பூ4த்யை பவேத் – எனக்கு ஐஷ்வர்யத்தை அளிப்பதாக ஆகட்டும், என்று ஒரு அருமையான பிரார்த்தனை. இந்த மனைவியினுடைய அன்பு பார்வைக்கு, கணவன் கட்டுப்பட்டு அவளுக்கு பிரியமானதை பண்ணுவான், குழந்தைக்கு செல்வத்தை கொடுங்கோ அப்படின்னா கொடுப்பான்,
அப்படிங்கறதுக்கு மூகபஞ்சசதீல ஒரு ஸ்லோகம்
काकोलपावकतृणीकरणेऽपि दक्षः
कामाक्षि बालकसुधाकरशेखरस्य ।
अत्यन्तशीतलतमोऽप्यनुपारतं ते
चित्तं विमोहयति चित्रमयं कटाक्षः ॥64॥

“காகோலபாவகத்ருணீகரணேபித3க்ஷ:”
காகோலம் – விஷம், அது எப்படி இருக்குன்னா நெருப்புப் போல பொங்கிண்டு வரது, அதை த்ருணீகரணேபி த3க்ஷ: அதை த்ருணமாய் நினைக்கக்கூடிய திறமை படைத்தவரான, பா3லகஸுதா4கரஶேக2ரஸ்ய, பா3லகஸுதா4கர: – அப்படின்னா பாதி சந்திரன் – பிறைச் சந்திரனை, ஷேக2ரஸ்ய- தலையில் அணிந்து கொண்டு இருக்கும் சந்திரமவுளீஷ்வரர், நெருப்பைக் கக்கிக் கொண்டு வரும் ஹாலஹால விஷத்தை கூட ஒன்னும் இல்லை என்று சொல்லி எடுத்து குடிச்சவர், இப்ப தலையில சந்திரனை வைச்சிண்டு இருக்கார், அதனால அதுல ஒரு குளிர்ச்சி, அப்படி இருக்கிறவர்
‘அத்யன்தஶீதலதமோப்யனுபாரதம் தே’, அத்யன்தஶீதலமா இருக்கு உன்னுடைய கடாக்ஷம், பக்தர்கள் கிட்ட முக்கியமா அப்படித்தான் இருக்கு, ஆனா அந்த கடாக்ஷம் பரமேஸ்வரனுடைய, சித்தம் விமோஹயதி அனுபாரதம், இடைவிடாமல் அவருடைய சித்தத்தை மோஹிக்க பண்ணுகிறதே. அவர் எவ்வளவு தைரியசாலியாக இருந்தாலும் உன்னுடைய ஒரு பார்வைக்கு மயங்கி நீ சொன்னத கேட்கிறார் அப்படின்னு சொல்றார். சித்ரமயம் கடாக்ஷ: என்ன ஆச்சரியம் உன்னுடைய கடாக்ஷத்தின் மஹிமை, அப்படின்னு சொல்றார் அப்படி அந்த திவ்ய தம்பதிகளை நினைத்து, அவாளுக்குள்ள இருக்கிற அந்த பரஸ்பர பிரியத்தை நெனச்சு, அவா சந்தோஷமா இருக்கும் போது நாம ஒரு வரம் கேட்டா, அத அவா குடுப்பா, நமக்கு வேண்டிய செல்வங்களையெல்லாம் தாயார் கொடுப்பா.
கோபிக ஜீவன ஸ்மரணம் கோவிந்தா! கோவிந்தா !!

Series Navigation<< கனகதாரா ஸ்தோத்ரம் 1வது, 2வது ஸ்லோகங்கள் பொருளுரைகனகதாரா ஸ்தோத்ரம் 5வது, 6வது ஸ்லோகங்கள் பொருளுரை >>

One reply on “கனகதாரா ஸ்தோத்ரம் 3வது, 4வது ஸ்லோகங்கள் பொருளுரை”

அம்பாளும் விஷ்ணுவும் ஒருத்தொருக்கு ஒருத்தர் பிரியம் செலுத்திக் கொள்வதும், அவர் பார்க்காத தருணத்தில் கடைக் கன் பார்வை பார்ப்பதும், விஷ்ணு தேவியை கண்கொட்டாமல் பார்ப்பதும், அவள் நாணுவதும் மிக அழகாக வர்ணிக்கப்பட்டுள்ளது! கற்பனையிலே மனதில் ரம்யமாக இருக்கு !!
நிஜ வாழ்வில் நடப்பதை படம் பிடித்துக் காட்டுவதாக அழகான வர்ணனை !!
அப்படிப்பட்ட ஆனந்த நிலையில் இருந்து அவள் கடை கண் பார்வை தீனனான என் மேல் விழட்டும்ன்னு ஆசார்யாள் இங்கு சொல்றது அந்த ஏழை ஸ்த்ரீக்கு கடாக்ஷம் கிடைப்பதற்காக!! தாயார் தன் குழந்தைகள் கஷ்டப்படுவதைப் பொறுக்க மாட் டாள் அல்லவா?
எனக்கு ரொம்ப பிடித்த ஸ்லோகம் இது!!
உரஸா தரஸா என்ற ஸ்லோகம் ஸ்வாமிகள் விரும்பிப் படிப்பார்ந்நு கேட்க சந்தோஷமா இருக்கு
விஷ்ணு தன் மார்பில் சீதா தேவியத் தரித்து, அவள் கடை கன் நோக்கால் லோகத்தை ரக்ஷிக்கும் நினைவே அழகா இருக்கு! ஸ்த்ரீகளுக்கு உயர்ந்த ஸ்தானத்தில் அமர்த்துவது காலம் காலமாக இருந்து வருவது இதலிருந்து தெரிகிறது,. இந்தக் காலத்தில் ரொம்ப படித்த ஸ்த்ரீகள் male chauvinism என்று சொல்லித் திரிகிறார்கள். இதற்கெல்லாம் நம் பண்டைய புராண இதிகாசங்கள் சான்று இல்லை என்பதனைக்.காண்பிக்க!!
ஜய ஜய சங்கரா…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.