கனகதாரா ஸ்தோத்ரம் 5வது, 6வது ஸ்லோகங்கள் பொருளுரை (7 min audio in Tamizh giving meaning of Kanakadhara Stothram slokams 5 and 6)
கனகதாரா ஸ்தோத்திரத்துல நாலு ஸ்லோகம் பார்த்து இருக்கோம், நாலுலியுமே, தேவியினுடைய கடாக்ஷம் சுவாமி மேலேயே இருக்கு. அந்தக் கடாக்ஷம் எனக்கு அனுகிரஹம் பண்ணனும், மங்களங்களை அளிக்கவேண்டும், செல்வத்தை அளிக்க வேண்டும் அப்படின்னு. இன்னும் சில ஸ்லோகங்கள், அதேமாதிரி பிரார்த்தனை பண்றார். இந்த அஞ்சாவது ஸ்லோகத்தில,
बाह्वन्तरे मधुजितः श्रितकौस्तुभे या हारावलीव हरिनीलमयी विभाति ।
कामप्रदा भगवतोऽपि कटाक्षमाला कल्याणमावहतु मे कमलालयायाः ॥५॥
பா3ஹ்வன்தரே மது4ஜித: ஶ்ரிதகௌஸ்துபே4 யா
ஹாராவலீவ ஹரினீலமயீ விபா4தி ।
காமப்ரதா3 ப4க3வதோபி கடாக்ஷமாலா
கல்யாணமாவஹது மே கமலாலயா யா:
அப்படின்னு இந்த அஞ்சாவது ஸ்லோகம். இதோட அர்த்தம் என்னன்னா, மது4 ஜித: மது என்கிற அரக்கனை ஜெயித்த விஷ்ணு பகவானுடைய, பாஹ்வந்தரே – பாஹுன்னா கைகள், பாஹ்வந்தரே ன்னா கைகளுக்கு இடையில், அதாவது மார்பில், திருமார்பில், ஶ்ரிதகௌஸ்துபே4, கௌஸ்துப மணி அணிந்து கொண்டிருக்கிறார், அந்த கௌஸ்துப மாலையை சுற்றி, அதாவது அது பக்கத்திலேயே, ஹரிநீலமயி ஹாராவலீவ, ஹரி நீல ரத்னம் அப்படின்னு ஒண்ணு இருக்கு, அது ரொம்ப அழகா இருக்கும், அது இருக்கிற இடத்தில செல்வம் பெருகும், அந்த, ஹரிநீலமயீ – அந்த ஹரிநீல கற்களாலான மாலை, ஹாராவலீவ – ஒரு மாலை இல்லை, வரிசையா மாலை, அந்த கௌஸ்துப மணியை அலங்கரிப்பது போல, வரிசையா அதுமேல ரத்னங்களாலான ஒரு மாலை, விபா4தி – ஒளி விடுகிறது, அப்படிங்கறார். இது எந்த மாலைன்னா, கடாக்ஷ மாலா, கமலாலயாயா: – தாமரையில் உதித்த, லக்ஷ்மிதேவியினுடைய கடாக்ஷ மாலை, இப்படி சுவாமியினுடைய மார்பில கௌஸ்துபத்துக்கு மேல விளங்கிக் கொண்டிருக்கிறது. இது காம பிரதா3 பக4வதோபி – நமக்கெல்லாம் ஆசையை பூர்த்தி பண்றதில்ல இந்த கடாக்ஷ மாலா, பகவதோபி – சுவாமிக்கே ஏதாவது ஆசைன்னா, இந்த கடாக்ஷம் தான் பூர்த்தி பண்றது, அப்படின்னு சொல்றார். அந்த லக்ஷ்மி தேவியினுடைய, கடாக்ஷம் மே கல்யாணமாவஹது – எனக்கு மங்களங்களை அளிக்கட்டும், அப்படின்னு ஒரு அழகான ஸ்லோகம். ஏன் பெருமாளையும், தாயாரையும் சேர்த்து சேர்த்து நினைக்கிறார்னா, தாயார் பெருமாளை விட்டு வரவே மாட்டா. நாராயணீயத்தில இரண்டாவது தசகத்திலேயே பட்டத்திரி சொல்றார்,
” உன்னுடைய ரூபத்துல மயங்கி லக்ஷ்மிதேவி பக்தர்களுடைய கிருஹத்தில் கூட இல்லாம அடிக்கடி உன் கிட்ட வந்துடுடறா, அதனால லக்ஷ்மி தேவி ரொம்ப நாள் ஒரு இடத்தில் தங்க மாட்டா, சலித்துக் கொண்டே இருப்பாள், அங்கங்கே போயிண்டே இருப்பான்னு ஒரு பேச்சு வந்துடுத்து”, அப்படின்னு சொல்றார், அதை சொல்லிட்டு நம்பாத்துல எப்படி லக்ஷ்மிதேவி நிரந்தரமா தங்கணும் அப்படிங்கறதுக்கும் ஒரு உபாயம் சொல்றார், அத வேடிக்கையா சொல்றார், அவர் என்ன சொல்றார், இந்த மாதிரி லக்ஷ்மிதேவி ஒரு இடத்தில தங்காம போயிண்டே இருக்கா அப்படிங்கறத்துக்கு எனக்கு வேற ஒரு காரணம் தோன்றுகிறது, “யார் உன்னுடைய தியானத்தையும், உன்னுடைய குண கீர்த்தனங்களையும் பண்ணிக்கொண்டு இருக்கிறார்களோ, யார் உங்கிட்ட பக்தியா இருக்காளோ அவாளுடைய இடத்தில் போனவுடனே, லக்ஷ்மிதேவி அங்கேயே நிரந்தரமாக தங்கி விடுகிறாள். அதனால மத்த பக்தர்களுடைய கிருஹத்தில ரொம்ப நாள் இருக்கிறது இல்லை”, அப்படின்னு சொல்றார். அதுல என்ன அர்த்தம், நம்ம ஆத்துல லக்ஷ்மி கடாக்ஷமா இருக்கணும்னா, நம்ப விஷ்ணு பகவானை பஜிக்கணும், இரண்டு பேரையும் சேர்த்து பஜிக்கணும், அப்படிங்கறது தான் அர்த்தம்.
லக்ஷ்மீ:, தாவகராமணீய க,ஹ்ருʼதைவ, இயம் பரேஷு, அஸ்தி²ரேதி, உன்னிடத்தில் ரமித்து பரேஷு, மத்தவாளிடத்துல,அஸ்தி²ர: ஸ்திரமா இருக்க மாட்டேங்கறா, அப்படிங்கறதுக்கு
‘அஸ்மின், அந்யத³பி ப்ரமாணம், அது⁴நா வக்ஷ்யாமி, லக்ஷ்மீ பதே ।’ வேற ஒரு பிரமாணமும் இருக்கு, நான் இன்னிக்கு சொல்றேன்,
‘யேத்வத்³த்⁴யாநகு³ணாநுகீர்தந,ரஸாஸக்தா ஹி, ப4க்தா ஜநா:’,
குருவாயூரப்பா யாரு உன்னிடத்தில், த்⁴யாநகு³ணாநுகீர்தந, ரஸாஸக்தா ஹி உன்னுடைய தியானம், குண கீர்த்தனம் இதுல ரொம்ப விருப்பத்தோடு ஈடுபட்டு இருக்கிறார்களோ அந்தப் பக்த ஜனங்களுடைய ,’தேஷ்வேஷா, வஸதி ஸ்தி²ரைவ’ லக்ஷ்மி தேவி ஸ்திரமாக வாசம் பண்ணுகிறாள்.
த³யிதப்ரஸ்தாவ,த³த்தாத³ரா, தன்னுடைய பிரியமான பர்த்தாவினிடத்தில் பக்தியோடு இருக்கானே, அப்படின்னு இந்த பக்தனிடத்தில் அதிகமா ஆதரவு காண்பிக்கிறா, அப்படின்னு சொல்றார் அதனால நம்ம பெருமாளையும், தாயாரையும் சேர்ந்து தியானம் பண்ணனும், அதைத்தான் வரிசையாக ஆச்சாரியாள் ஸ்லோகங்களில் காமிச்சுண்டே வரார். அடுத்த ஸ்லோகமும் அதே மாதிரி.
कालाम्बुदालिललितोरसि कैटभारे: धाराधरे स्फुरति या तडिदङ्गनेव ।
मातुः समस्तजगतां महनीयमूर्ति: भद्राणि मे दिशतु भार्गवनन्दनायाः ॥६॥
காலாம்பு3தா3லீ லலிதோரஸி கைடபா4ரே:
தா4ராத4ரே ஸ்பு2ரதி யா தடித3ங்க3னேவ ।
மாதுஸ்ஸமஸ்தஜக3தாம் மஹனீயமூர்தி:
ப4த்3ராணி மே தி3ஶது பா4ர்க3வனந்த3னா யா: ॥
பிருகு என்கிற முனிவருக்கு பெண்ணாக லக்ஷ்மி தேவி ஒரு அவஸரத்தில அவதாரம் பண்ணினதனால,
தேவிக்கு பார்கவ நந்தனா, அப்படின்னு ஒரு நாமம், அந்த லக்ஷ்மி தேவி எங்க இருக்கா அப்படின்னா, பெருமாளுடைய திருமார்பில் இருக்கா, அது எப்படி இருக்குன்னா, காலாம்புதாலீ லலிதோரசி – நீருண்ட மேகம் போல் கருத்த அழகான, கைடபா4ரே : கைடபன் என்ற அசுரனை ஜெயித்த விஷ்ணு பகவானின், உர – மார்பில்
தா4ராத4ரே ஸ்பு2ரதி யா தடித3ங்க3னேவ – தடித்3ன்னா மின்னல் மேகத்துக்கு, தா4ராத4ரே அங்கனேவ அந்த மேகத்தின் இடையில் கரிய திருமாலின் மார்பில், விளங்கும் லக்ஷ்தேவி ஒரு மின்னலைப் போல ஜொலிக்கிறா, அந்த தாயாரினுடைய கடாக்ஷம் ப4த்3ராணி மே தி3ஶது – எனக்கு மங்களங்களை அளிக்கட்டும்.
இந்த மேகத்துக்கு நடுவிலே மின்னல், அப்படின்ன உடனே, மூக பஞ்சஷதில ஒரு ஸ்லோகம் இருக்கு அதுல காமாக்ஷி தேவியே ஒரு காருண்ய லக்ஷ்மி அப்படிங்கறார்.
कालाम्भोदे शशिरुचि दलं कैतकं दर्शयन्ती
मध्येसौदामिनि मधुलिहां मालिकां राजयन्ती ।
हंसारावं विकचकमले मञ्जुमुल्लासयन्ती
कम्पातीरे विलसति नवा कापि कारुण्यलक्ष्मीः ॥67॥
காலாம்போ4தே3 ஶஶிருசி த3லம் கைதகம் த3ர்ஶயன்தீ
மத்4யேஸௌதா3மினி மது4லிஹாம் மாலிகாம் ராஜயன்தீ ।
ஹம்ஸாராவம் விகசகமலே மஞ்ஜுமுல்லாஸயன்தீ
கம்பாதீரே விலஸதி நவா காபி காருண்யலக்ஷ்மீ: ॥
காமாக்ஷி தலையில் சந்திரப்பிறை இருக்கிறது, இது தாழம்பூவை தலையில் சூடிக் கொண்டிருப்பவளும், அம்பாளுடைய இடை மின்னல் போல வெட்டரது, அதுல ரோம ராஜி, வண்டுகளின் வரிசை போல இருக்கு, ஹம்சாராவம் விகசகமலே மஞ்ஜுமுல்லாஸயன்தீ – காமாக்ஷியினுடைய பாதங்களில் பரமஹம்சர்கள் சப்தித்துக் கொண்டிருக்கிறார்கள், இது லக்ஷ்மிதேவி தாமரை மேல் விளங்குவது போல் இருக்கிறது. இப்படி காருண்ய லக்ஷ்மியா, காமாக்ஷி இருக்கா, அப்படின்னு சொல்றார். அங்கேயும் இப்படியே ‘கருமேகத்தில் மின்னல்’ அப்படிங்கற உபமானம் சொல்கிறார், மூக கவி, லக்ஷ்மி தேவிக்கு. அப்படி அந்தப் பெருமாளையும், தாயாரையும் தியானம் பண்ணினா, நமக்கு எல்லா மங்களங்களையும் அருள்வார்கள். இந்த ஸ்லோகங்களை எல்லாம் சொல்றதுக்கே அவ்வளவு அழகா இருக்கு.
காலாம்பு3தா3லீ லலிதோரஸி கைடபா4ரே:
தா4ராத4ரே ஸ்பு2ரதி யா தடித3ங்க3னேவ ।
மாதுஸ்ஸமஸ்தஜக3தாம் மஹனீயமூர்தி:
ப4த்3ராணி மே தி3ஶது பா4ர்க3வனந்த3னா யா: ॥
கோபிகா ஜீவன ஸ்மரணம்! கோவிந்தா! கோவிந்தா!!