Categories
Kanakadhara

கனகதாரா ஸ்தோத்ரம் 16வது, 17வது, 18வது ஸ்லோகங்கள் பொருளுரை

கனகதாரா ஸ்தோத்ரம் 16வது, 17வது, 18வது ஸ்லோகங்கள் பொருளுரை (9 min audio in Tamizh giving meaning of Kanakadhara Stothram slokams 16 to 18)

दिग्घस्तिभिः कनककुम्भमुखावसृष्ट-स्वर्वाहिनीविमलचारुजलप्लुताङ्गीम् ।
प्रातर्नमामि जगतां जननीमशेष-लोकाधिनाथगृहिणीममृताब्धिपुत्रीम् ॥१६॥

कमले कमलाक्षवल्लभे त्वं करुणापूरतरङ्गितैरपाङ्गैः ।
अवलोकय मामकिञ्चनानां प्रथमं पात्रमकृत्रिमं दयायाः ॥१७॥

स्तुवन्ति ये स्तुतिभिरमीभिरन्वहं त्रयीमयीं त्रिभुवनमातरं रमाम् ।
गुणाधिका गुरुतरभाग्यभागिनो भवन्ति ते भुवि बुधभाविताशयाः ॥१८॥

Series Navigation<< கனகதாரா ஸ்தோத்ரம் 14வது, 15வது ஸ்லோகங்கள் பொருளுரை

One reply on “கனகதாரா ஸ்தோத்ரம் 16வது, 17வது, 18வது ஸ்லோகங்கள் பொருளுரை”

முதலில் தாயார் லட்சுமியின் தோற்றம் கஜ லட்சுமியின் வடிவமாக போற்றப்பட்டு, தங்க கலசத்தில் புனித நீர் கொண்டு லோக பிதா, அவளுடைய பதியான விஷ்ணுவோடு சேர்த்து அபிஷேகம் செய்யும் காட்சி மனதில்.படம் பிடித்துக் காட்டுகிறார் போல் ஒர் அழகான வர்ணனை !

அடுத்து, “அம்மா தாயே தாமரை மலர் வாஸியே கருணா சமுத்திர மே கருணையின் இருப்பிடம் என அம்பாளை விளித்து அவள் புகழ் பாடும் விதம் அழகு செறிந்தது !

மூன்று வேதங்களின் ஸ்வரூபமான தாயார் லட்சுமியை இந்த ஸ்தோத்ரம் கொண்டு பாராயணம் செய்தால் கிடைக்கும் நன்மைகளைப் பட்டியலிடுகிறார் ஆசார்யாள்.
என்ன அவை! அறிவு, குணம், செல்வம் என இந்த இக லோக வாழ்வுக்கான தேவைகள் தாம் அவை,!
செல்வம் என்பது கடைசியாகச் சொல்லப்பட்டதைக் கவனிக்கவும் !
அறிவு, குணம் இருந்தால்தான் செல்வத்தைத் தக்க முறையில் செலவழிக்க புத்தி இருக்கும் அல்லவா?
தனம் தரும் கல்வி தரும், ஒரு நாளும் தளர்வரியா மனம் தரும் தெய்வ வடிவும் தரும் அன்பர் என்பருக்கே என்று பட்டர் சொன்னது இங்கு குறிப்பிடத் தக்கது! தேவியை உபாசிப்பவர்கள் கேட்டதெல்லாம் கொடுக்கக் காத்திருக்கிறாள் !
கருணை தெய்வமே கற்பகமே என்ற பாடல் ஞாபகம் வருகிறது அல்லவா?

மூக பஞ்ச சதியின் ஸ்லோகம் இங்கு அழகாக உதாரணத்துக்கு கையாளப் பட்டுள்ளது சிறப்பு!
நடன மேடையில் நீலப் பட்டாடை மேர்கட்டாக இருக்கிறது. கரிய கூந்தலை கரு நீளம் என வர்ணிப்பது உண்டு. அவள் கூந்தல் எனும் ஒளிப்படலம் நீல நிற விரிப்பாகவும், உண்ணக்காதுகளில் உள்ள குண்டலம் ரத்ன காந்தியால் ஒளிர்வதும், உன் கிருபை என்னும் கடாக்ஷம் நடன மேடை நர்த்தகியாக ஆடுவதும் மிக அழகாக விளக்கப்.பட்டுள்ளது !!
இது போன்று விளக்கம் கேட்கும்போது புராண காலத்திற்கே சென்று அம்பாளை தரிசிக்கும் உணர்வு தோன்றுகிறது !!
அபாரமான சொற்பொழிவு ! தெய்வீக மணத்துடன் !!
Apt post on apt day !!
ஜய ஜய ஜகதம்ப சிவே ….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.