ஸ்துதி சதகம் 50வது ஸ்லோகம் பொருளுரை – அம்மா! ஞானிகளின் சன்னிதிக்கு என்னை அழைத்துச் செல்ல வேண்டும்
पुरस्तान्मे भूयःप्रशमनपरः स्तान्मम रुजां
प्रचारस्ते कम्पातटविहृतिसम्पादिनि दृशोः ।
इमां याच्ञामूरीकुरु सपदि दूरीकुरु तमः-
परीपाकं पाकं झटिति बुधलोकं च नय माम् ॥
5 replies on “அம்மா! ஞானிகளின் சன்னிதிக்கு என்னை அழைத்துச் செல்ல வேண்டும்”
Aneha koti Namaskarams to Sri Swamigal

என்ன புண்ணியம் செய்தோமோ இன்று ஒவ்வொரு க்ஷணமும் பகவத் தியானம் செய்ய கிடைக்க பேறு பெற்றோம்.
ஞானிகள் சந்நிதி கிடைக்க ஸ்ரீ ஸ்வாமிகளை வேண்டுவோம்.

அந்த மஹா பெரியவாளும், ஸ்ரீ ஸ்வாமிகளும் மூக பஞ்சசதி பாராயணம் மூலம் நம்மை ஏணிப்படிகளில் மேலே ஏறுவதற்கு ஸ்ரீ சிவன் சாரையும் பிரார்த்திப்போம்.
பக்தி என்னும் சாகரத்தில் எத்தனையோ பேர் மூழ்கி பிறவி என்னும் பெருங்கடலை கடக்க முடியும். அதற்கு குருவருளும் திருவருளும் வேண்டும்.நம் ஸனாதன மதத்தில் ஸ்வயம் ப்ரகாசமாக விளங்கும் நம் ஆத்மா எனப்படும் நிஜ ஸ்வரூபத்தை குரு மூலம் அறிய முடியும். அவருக்கு கிடைத்த ஞான வெளிச்சத்தால் நமக்கு வழி தெரிகிறது. இருட்டு விலகுகிறது. இதற்கு பக்தி ஒரு கருவி. இதை அழகாக விளக்கி விட்டீர்கள் இந்த ஆராதனை நாளில். நன்றிகள்.
பாலா திரிபுரசுந்தரி காமாக்ஷி இருவருமே ஒருவரேதான் !
கம்பா நதிக் கரையில் சிறு வீடு கட்டி விளையாடிய காமாக்ஷி, துன்பங்களைத் களைவதில் அக்கறை கொண்டவள் !
அப்படிப் பட்ட அம்பாளின் அருள் கடாக்ஷம் நம் மேல் விழட்டும் என்பது பொருள்!
அதிலே புன்சிரிப்பு பற்றி வர்ணனை, இருட்டில் சந்திரன், அன்றலர்ந்த தாமரை என்பதாக ராமர்வன வாசம் புறப்படும்போது
சொன்ன விளக்கம் அருமை !
பெரியவாளை ராமர் போலவும், ஸ்வாமிகள் ஆஞ்சநேய ஸ்வாமிகள் போலவும் உதாரணம் காட்டியது மெருஹுட்டியது இந்த போஸ்டுக்கு !
இந்த ஸத் சங்கத்தில் இணைந்தது மாபெரும் பாக்யம் !
குருப்ரசாதம், அம்பாள் அனுகிரகம் !
கோவிந்தா தாமோதர ஸ்வாமிகள் பற்றிய சிந்தனை மனதில் நிரம்பி இருக்க காமாக்ஷி சன்னதியில் பிரார்த்திப்போம்





கோவிந்த damadora swaminae namaha
Gurumoorthae thvaam namami
Kamakshi
Gurumoorthae thvaam namami kamakshi
Gurumoorthae thvaam namami kamakshi
What a beautiful explanation. Thank you so much Anna

