Categories
Bala Kandam

தாடகா வதம்


16. விஸ்வாமித்ரர் குழந்தைகளுடன் காமாஸ்ரமத்தில் தங்குகிறார். சரயுவும் கங்கையும் சங்கமிக்கும் கூடலில் நதிகளை வணங்கிய பின் தாடகா வனத்துள் நுழைகிறார்கள். ராமர் முனிவரின் உத்தரவின் பேரில் தாடகையுடன் போரிட்டு அவளைக் கொல்கிறார்.

[தாடகா வதம் (link to audi file. Transcript given below]

விஸ்வாமித்ரர் பலை அதிபலை மந்த்ரங்களை குழ்ந்தைகளுக்கு உபதேசம் பண்ணின பின்னே, சரயு நதிக் கரையா கூட்டிண்டு போறார். சரயுவும் கங்கையும் கலக்கற இடத்தில ஒரு ஆஷ்ரமம் இருக்கு, ராமர் கேக்கறார், “இது ரொம்ப புண்யமான ரம்யமான ஆஷ்ரமமா இருக்கே, இங்க யார் இருக்கா? இது யாரோட ஆஷ்ரமம்?”னு கேக்கறார். அப்போ விஸ்வாமித்ரர் சொல்றார், இங்க பரமேஸ்வரன் தபஸ் பண்ணிண்டு இருந்தார், காமதகனம் பண்ணார். அதனால இதுக்கு காமஷ்ரமம்ன்னு பேரு,

அது என்ன கதைன்னா, சூரபத்மன்ன்னு ஒரு அசுரன் இருக்கான், அவன் பரமேஸ்வரன் தவிர வேற யார் கையாலையும் வதம் கிடையாதுன்னு வரம் வாங்கிருக்கான். அவன வதம் பண்றதுக்கு, தேவர்கள், ஸ்வாமி தானா, அவன் சிவபக்தனா இருக்கறதனால, பரமேஸ்வரன் அவனை வதம் பண்ணமாட்டார், பரமேஸ்வர அம்சமா ஒரு குழந்தை பிறந்தா, அந்த குழந்தைய தேவசேனாதிபதியாக்கி, அவனைக் கொண்டு, இந்த சூரபத்மனை ஜெயிக்கலாம்னு, இவா பரமேஸ்வரன, அவர் தபஸ் பண்ணிண்டு இருக்காரே, சேனாதிபதி வேணுமேன்னு, தபஸை கலைக்கறதுக்கு மன்மதன அனுப்பறா.

மன்மதன் போய் மறஞ்சு இருந்து புஷ்ப-பாணத்தை போடறான், பரமேஸ்வரன் கண்ணை தொறந்து பாக்கறார், மன்மதனை பார்த்தவுடனே, நெற்றிக் கண்ணை தொறந்து, கோபத்துல அவனை எரிச்சுடறார். அப்போ, அப்புறம் கைலாசத்துக்கு போயிடறார். அந்த இடம் தான் அந்த காமஷ்ரமம்.

இதுக்கப்புறம் கதை என்ன ஆகறதுன்னா, பார்வதி பரமேஸ்வரனுக்கு பர்வதராஜ குமாரியா பொறந்து, பார்வதி தேவி பரமேஸ்வரனுக்கு கைங்கர்யம் பண்ணிண்டு இருக்கா. அவர் கோவிச்சுண்டு போனவுடனே, பார்வதி தபஸ் இருக்கா, ஒரு இலைய கூட சாப்பிடாம, தபஸ் இருக்கறதானால, அந்த அவஸரத்துல அம்பாளுக்கு, அபர்ணான்னு பேரு, அப்புறம் பரமேஸ்வரன் வந்து விளையாட்டு பண்ணிட்டு, ஒரு கிழவனா வந்து, “நீ என்ன, அந்த பரமேஸ்வரன் கிட்ட என்ன கண்டே, சிவபெருமானை போய் விரும்பறியேன்னு பேசறார். அவ கோவிச்சுக்கரா, அதுக்கப்புறம், அவர் தன்னை வெளிப்படுதிக்கறார், அப்போ பார்வதி, எங்க அப்பா கிட்ட பெண் கேட்டு, என்னை கல்யாணம் பண்ணிக்கோங்கோன்னு சொல்றா. சப்த ரிஷிகள அனுப்பிச்சு, பரமேஸ்வரன், பார்வதிய கல்யாணம் பண்ணிக்கறார், அந்த பார்வதி கல்யாணத்தின் போது, ரதிதேவி ப்ரார்த்தனைக்கு இணங்க, அம்பாள், மன்மதன உயிர்ப்பிச்சு குடுக்கறா. இந்த காமாக்ஷி, மன்மதன உயிர்பிச்சத மூகபஞ்சசதில, ஸ்ருதி சதகத்துல, ஒரு ஸ்லோகத்துல வரது.

आधून्वन्त्यै तरलनयनैराङ्गजीं वैजयन्तीम्

आनन्दिन्यै निजपदजुषामात्तकाञ्चीपुरायै ।

आस्माकीनं हृदयमखिलैरागमानां प्रपञ्चैः

आराध्यायै स्पृहयतितरामदिमायै जनन्यै ॥

ஆதூன்வன்த்யை தரலநயனைராங்கஜீம் வைஜயன்தீம்

ஆனன்தின்யை நிஜபதஜுஷாமாத்தகாஞ்சீபுராயை |

ஆஸ்மாகீனம் ஹ்ருதயமகிலைராகமானாம் ப்ரபஞ்சை:

ஆராத்யாயை ஸ்ப்ருஹயதிதராமதிமாயை ஜனன்யை ||

பஸ்மமா போயிட்ட மன்மதனை, இன்னிக்கும் மூவுலகத்தையும், ஜெயிக்கும்படியா கொடி கட்டி பறக்கவிட்டாள் அம்பாள், அப்படின்னு இந்த ஸ்லோகத்துல வரது.

அப்படி, இது பரமேஸ்வரன் ஆஷ்ரமம் அப்படின்னு, சொன்னவுடனே, அங்க உள்ள போறா. அங்க இருக்கற ரிஷிகள் எல்லாம் சிவபக்தர்கள், அவா வந்து, ஞானகண்னால வந்திருக்கறது யார்னு தெரிஞ்ச்சுண்டு, விச்வாமித்ரரரையும் குழந்தைகளையும் வரவேற்று, அங்க தங்க சொல்றா.

விஸ்வாமித்ரர் அவாள பத்தி, சிஷ்யா: தர்ம பரா: நித்யம் தேஷாம் பாபம் ந வித்யதே அப்படின்னு, இவா சிவ பக்தர்கள், இவாள் இடத்துல  ஒரு பாபமும் கிடையாது, தர்மமே வடிவானவர்கள், அப்படின்னு புகழ்ந்து சொல்றார். அன்னிக்கு அங்க தங்கிட்டு, அடுத்தநாள் கார்த்தால எழுந்து படகுல ஏறி போறா.

பெரும் ஜலம் மோதறாமாதிரி சத்தம் கேக்கறது, இது என்னன்னு கேக்கறார் ராமர். கைலாசத்துல பிரம்மா, பரமேஸ்வரன் குளிக்கறதுக்காக, மனசால ஒரு சரஸ்-ஐ ஒரு குளத்தை நிர்மாணம் பண்ணார். அந்த சரஸ்லேர்ந்து கிளம்பி ஒரு நதி வந்தது, அதுதான் சரயுநதி, அந்த சரயு நதி இங்க, கங்கையோட கலக்கறது. அந்த ரெண்டு நதியும் கலக்கற சத்தம் தான் இந்த :வாரினோ, வாரி கட்டித:  இந்த கூடல்ல இந்த சங்கமத்தில, இந்த நதிகளை வணங்கிக்கோங்கோ, நமஸ்காரம் பண்ணுங்கோன்னு சொல்றார். குழந்தேளும் அப்படி பண்றா

அதி தார்மிகௌ அப்படின்னு வால்மீகி சொல்றார், பெரியவா சொன்னா கேட்டுண்டு தர்மத்தை நடத்தி காமிக்கறதனால ராம லக்ஷ்மணாள அதி தார்மிகௌ ன்னு சொல்றார்.

அதுக்கப்புறம் அந்த நதிய கடந்து போனா, ஒரு பயங்கரமான காடு வறது, இது என்ன இப்படி பயங்கரமா இருக்கே, ஓரு பசு பக்ஷி இல்ல, எல்லாம் பாலைவனமாட்டம் காய்ஞ்சு கிடக்கு, கருப்பு கருப்பா,  என்ன இப்படி இருக்கேன்னு கேட்டவுடனே, “இங்க தாடகான்னு ஒருத்தி இருக்கா, அவ ஒரு யக்ஷிணி, அவளுக்கு ஆயிரம் யானை பலம், அவ கோபத்துனால இந்த இடத்தை இதுமாதிரி பண்ணிட்டா”ன்னு விஸ்வாமித்ரர் சொல்றார். “யக்ஷிணிகளுக்கு ஏது அவ்வளவு பலம்?”ன்னு ராமர் கேக்கறார். அவா கொஞ்சம் பலம் படைச்சவாதானேன்னு.

அப்போ விஸ்வாமித்ரர் சொல்றார், சுகேதுன்னு ஒரு யக்ஷன் இருந்தான், அவன் ப்ரம்மாட்ட தபஸ் பண்ணான், பிரம்மா அவனுக்கு ஒரு பெண் குழந்தைய குடுத்தார், அந்த குழந்தைக்கு ஆயிரம் யானை பலம் குடுத்திருந்தார், அவள் தான் தாடகா, அவள் வளர்ந்து, சுந்தன்னு ஒருத்தன கல்யாணம் பண்ணிண்டா, மாரிசன்னு அவாளுக்கு ஒரு பிள்ளை, இந்த சுந்தன், அகஸ்திய முனிவரை ஹிம்சை பண்ணவுடனே, அவர் அவனை வதம் பண்ணிட்டார், இந்த தாடகாவும், மாரிசனுமா அகஸ்தியரை கொல்லப் போனா, அப்போ அவர் இவாள, ராக்ஷக்ஷர்களா போங்கோன்னு சபிச்சுட்டார், அந்த தாடகை இந்த பிரதேசத்த ஆக்ரமிச்சிண்டுருக்கா, நீ இந்த தாடகைய வதம் பண்ணு, ராமா அப்படின்னு சொல்றார்.

ஸ்த்ரி வதம் பண்ணனுமான்னு யோசிக்காதே, முன்னே இந்திரன் விரோசனன் பெண்ணை வதம் பண்ணான், விஷ்ணு பகவான் காவியமாதாவை வதம் பண்ணார், அந்த மாதிரி, உலகத்துக்கு கெடுதல் நினைக்கிரவாளை பெண்ணா இருந்தாலும் வதம் பண்ணலாம், அப்படின்னு சொல்றார்.

ராமர், “நான் கிளம்புபோது எங்க அப்பா என்கிட்டே, விஸ்வமித்ரர் சொல்கிற பேச்சை கேளுங்கோன்னு சொன்னார், அதனால நீங்க சொன்ன படி நான் பண்ணறேன்”, அப்படின்னு வில்லை எடுத்து நாண்-அ சுண்டி விடறார், டங்காரம் பண்றார், அந்த சத்தத்தை கேட்டவுடனே, கடுங்கோபமா, சத்தம் போட்டுண்டு, இடி போல சத்தம் போட்டுண்டு இந்த தாடகா வரா, வந்து இவா மேல கல்லு மண்னு எல்லாம் கொட்டறா, யாரங்கேன்னு கத்தறா, அப்போ ராமர் லக்ஷ்மனன்ட்ட, நான் இவ கைய கால வெட்டி போட்டுடறேன், எங்கயும் போகமுடியாது அப்படின்னு சொல்றார், அப்போ அவ மறைஞ்சிருந்து அடிக்க ஆரம்பிக்கறா, அப்போ விஸ்வாமித்ரர்,

அலம் தே க்ருணயா ராம பாபைஷா துஷ்டசாரிணீ

இவள் கெட்ட நடத்தை கொண்டவள், இவள் கிட்ட கருணை காமிக்காதே ராமா, அப்படின்னு சொல்றார். மறைஞ்சிருந்து அடிக்கறா அவ, ராத்திரி ஆச்சுன்னா ராக்ஷஷர்களுக்கு இன்னும் பலம் ஜாஸ்தி ஆயிடும், விரைந்து காரியத்தை முடின்னு சொல்றார். துரிதபடுத்தறார்.

உடனே, ராமர், சப்தவேதின்னு, எங்க இருந்து சப்தம் வரதோ, அதை பாத்து, அம்படிக்கற அந்த வித்தைய கொண்டு, ஒரு அம்பு போட்டு அவள் மார்பை பிளந்துடறார். இந்த தாடகா வதம் ஆனா பின்னே, அந்த பிரதேசமே குபேர பட்டினத்துல இருக்கற நந்தவனம் போல ஆயிடறது.

ஸ்வாமிகள், பாகவதம் படிக்கறதுனால, கிருஷ்ணபரமாத்மா காளிய மர்த்தனம் பண்ணி அவனை அடக்கின பின்ன, அதுக்கு முன்னாடி விஷமா இருந்த யமுனை, பகவானோட பாத ஸ்பர்ஸத்துனால அமிர்தாமா ஆயிடுத்து, அப்படிங்கறதை, அதையும், இந்த ராமன், தாடகா வதம் பண்ணவுடனே, அந்த தாடகாவனம், நந்தவனமா ஆயிடுத்து, அப்படின்னு இந்த ரெண்டுத்தையும் சேர்த்து சொல்வார்.

இந்த தாடகாவதம் ஆனவுடனே, இந்த்ராதி தேவர்களெல்லாம் வந்து, விஸ்வாமித்ரர் கிட்ட இந்த ராமனுக்கு, அஸ்த்ர வித்தைகளை எல்லாம் சொல்லிகொடுங்கோ, இவனால பெரிய காரியங்கள் நடக்கப் போறதுன்னு சொல்றா.

குரு பேச்சை ராமர் கேட்டதால எல்லா தெய்வங்களும், சந்தோஷமடைகிறது, இந்த அஸ்த்ர வித்தைகள் கத்துண்டது, வாமன சரித்ரம், இதெல்லாம் நாளைக்கு….

ஜானகி காந்த ஸ்மரணம் ஜய் ஜய் ராம ராம

 

Series Navigation<< விஸ்வமித்ரர் பலை அதிபலை மந்திரங்களை உபதேசித்தார்விஸ்வாமித்ரர் ராமருக்கு அஸ்த்ரங்களை உபதேசித்தார் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.