Categories
shivanandalahari

சிவானந்தலஹரி 19, 20 ஸ்லோகங்கள் பொருளுரை


சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் 19, 20 தமிழில் பொருள் (12 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokams 19 and 20)

சிவானந்தலஹரியில அடுத்த இரண்டு ஸ்லோகங்கள் பார்ப்போம். 19ஆவது ஸ்லோகம்

दुराशाभूयिष्ठे दुरधिपगृहद्वारघटके

दुरन्ते संसारे दुरितनिलये दुःखजनके ।

मदायासं किं न व्यपनयसि कस्योपकृतये

वदेयं प्रीतिश्चेत्तव शिव कृतार्थाः खलु वयम् ॥

து³ராசாபூ⁴யிஷ்டே² து³ரதி⁴பக்³ருʼஹத்³வாரக⁴டகே

து³ரந்தே ஸம்ஸாரே து³ரிதனிலயே து:³க²ஜனகே ।

மதா³யாஸம் கிம் ந வ்யபனயஸி கஸ்யோபக்ருʼதயே

வதே³யம் ப்ரீதிஸ்சேத்தவ சிவ க்ருʼதார்தா:² க²லு வயம் ॥

ன்னு ஸ்லோகம் து³ராசாபூ⁴யிஷ்டே²  – கெட்ட ஆசைகள் நிறைந்ததும், து³ரதி⁴ப – அதிபர்கள்னா bosses. துரதிப: னா கெட்ட அதிகாரிகள். க்³ருʼஹ த்³வார க⁴டகே – வீட்டு வாசல்ல போய் நின்னுண்டு, இந்த கெட்ட ஆசைகள் என்ன பண்றதுன்னா, யாராவது ஏதாவது பணம் கொடுப்பாளான்னு அவாளோட வீட்டு வாசல்ல போயி நிறுத்திடறது. அப்படி நின்னா துரந்தே – அதோட முடிவு எப்படி இருக்குன்னா, அதோட முடிவும் நன்னாயில்ல. அவமானப் பட வேண்டியிருக்கு. து³ரிதனிலயே  – பாவத்துக்கும் இருப்பிடமா இருக்கு. அவா சொன்ன காரியங்கள் எல்லாம் நாம பண்ணினா பாபம் வந்து சேர்றது து:³க²ஜனகே – இதுலேருந்து பணம் சம்பாதிச்சுண்டு வந்து சுகப்படப் போறோமோன்னு நினைக்கறோம். ஆனா அது துக்கத்துலதான் கொண்டு போய் விடறது. துன்பத்தை விளைவிப்பதான ஸம்சாரம் – இப்பேற்பட்ட பிறவிச் சூழலில் மதா³யாஸம் கிம் ந வ்யபனயஸி – நான் சுத்தி வந்துண்டிருக்கேன். இந்த ஆயாசம் என்னுடைய இந்த துன்பத்தை, களைப்பை, நீ ஏன் போக்க மாட்டேங்கற? கஸ்யோபக்ருʼதயே – கஹ ன்னா பிரம்மா. பிரம்மாவுக்கு அவருக்கு உபகாரம்  பண்ணலாம், அவர் சொன்ன வார்த்தையே இருக்கட்டும். என் தலையில எழுதினதே இருக்கட்டும். அதை அனுபவிக்கட்டும்னு விட்டுட்டியோ! ன்னு சொல்றார் – ஹே சிவ! வத – நீயே சொல்லு அயம் ப்ரீதிஸ்சேத்தவ – இது உனக்கு ப்ரீதியா இருந்தா க்ருʼதார்தா:² க²லு வயம் – நாங்கள் ரொம்ப கொடுத்து வெச்சவான்னு சொல்றார். அலுத்துக்கற மாதிரி சொல்றார்.

மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே

மூளாத் தீப்போல் உள்ளே கனன்று முகத்தால் மிகவாடி

ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்

வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர் வாழ்ந்து போதீரே.

ன்னு சுந்தரர் பாடின மாதிரி நீங்க நன்னா வாழ்ந்துண்டிருங்கோ. நான் இப்படி கஷ்டத்தை சொல்றேன். ஒண்ணும் பண்ணலியே! ன்னு கேட்கறார்.அந்த மாதிரி இங்க என்னோட கஷ்டத்தை நீங்க கண்ணெடுத்து பார்க்கமாட்டேங்கறேள். சிவ க்ருʼதார்தா:² க²லு வயம் – இதுதான் உங்களுக்கு த்ருப்தினா சரி. என்ன பண்றது? அப்படியாவது உங்க த்ருப்திக்கு நாங்க காரணமாக இருக்கோம். இந்த மாதிரி அலையறதுல உங்களுக்கு த்ருப்தினா சரி! இப்படியே இருக்கோம்! என்கிற மாதிரி சொல்றார்.

இது அப்படியே இருக்கட்டும்னு அர்த்தம் இல்லா. இதுலேருந்து எங்களை விடுவிக்கணும் பெருமானேன்னு பிரார்த்தனை. பரமேஸ்வரன் ஒரருத்தன் நினைச்சா தான் ஏதோ கோடியில ஒருத்தர் அந்த மாதிரி இந்த பந்தங்கள்ல இருந்து விடுபட முடியும். முக்கியமா மஹான்கள் எல்லாருமே இதைச் சொல்றா. இந்த காலத்துல சம்பாதிச்சாதான் சாப்பிட முடியும், அதுக்காக படிப்புங்கிற மாதிரி ஒரு காலத்துல வந்து நாம நிக்கறோம். 50 வருஷம் முன்னாடி கூட பிராம்மணாள் நீச சேவகம் போகக் கூடாது. முடிஞ்ச வரைக்கும் தன்னிச்சையா இருக்கணும். நம்முடைய படிப்பை வெச்சுண்டு நாம தைர்யமா இருக்கலாம்னு மஹா பெரியவாளெல்லாம் சொல்லிண்டிருந்தா. இப்ப டாலர்ல சம்பாதிச்சா அதுதான் மதிப்பாயிருக்கு. ஸ்வாமிகளை நீ பாகவதமே படிச்சிண்டிருன்னு அவ்ளோ கஷ்டம் இருக்கும்போது கூட மகா பெரியவா அவரை வந்து அந்த வேலை என்ற பந்தத்துலருந்து விடுவிச்சார். ஏன்னா அவருடைய உயர்ந்த நன்மையை நினைச்சதுனால அப்படி சொன்னா. அப்படி சொல்லக் கூடியவர்கள் மஹான்கள் தான். ரமண பகவான் முருகனார்ங்கிறவரை அவருடைய பதவியிலேருந்து விலகி தன்னிடத்துலேயே இருக்கும்படி பண்ணார். அது உலகத்துக்குப் புரியாது. ஆனா அதுனால குடும்பத்துக்கு கஷ்டமோ ஒண்ணும் வராது. என்ன தலையில எழுதியிருக்கோ அது படி நடக்கும்.

அப்படி மஹான்கள் அந்த பந்தத்துல இருந்து விடுவிக்க முடியும். பரமேஸ்வரன் தான் விடுவிக்க முடியும். அப்படி என்னை விடுவிக்கணும்ங்கிற பிரார்த்தனையை இந்த மாதிரி ரொம்ப இரக்கப்படும்படியான வேண்டுதல் வெச்சு ஆதி சங்கரர் சொல்றார். காமாக்ஷிகிட்ட மூக கவியும்

जननि भुवने चङ्क्रम्ये‌sहं कियन्तमनेहसं
कुपुरुषकरभ्रष्टैर्दुष्टैर्धनैरुदरम्भरिः ।
तरुणकरुणे तन्द्राशून्ये तरङ्गय लोचने
नमति मयि ते किञ्चित्काञ्चीपुरीमणिदीपिके ॥

ஜனனி பு⁴வனே சங்க்ரம்யேऽஹம் கியந்தமனேஹஸம்

குபுருஷகரப்⁴ரஷ்டைர்து³ஷ்டைர்த⁴னைருத³ரம்ப⁴ரி: ।

தருணகருணே தந்த்³ராசூன்யே தரங்க³ய லோசனே

நமதி மயி தே கிஞ்சித்காஞ்சீபுரீமணிதீ³பிகே ॥

ன்னு சொல்றார். ஜனனி – அம்மா பு⁴வனே சங்க்ரம்யேऽஹம் – இந்த மூவுலகத்துலயும் சுத்தி சுத்தி வரேன். எதுக்காகன்னா குபுருஷகரப்⁴ரஷ்டை: நிறைய கெட்ட புருஷர்களோட கையிலேருந்து நழுவி விழும் து³ஷ்டைர்த⁴னைருத³ரம்ப⁴ரி: – அவன் என்னென்னமோ பண்ணி சம்பாதிச்ச பணம். அந்த கெட்ட பணத்தை வாங்கிண்டு அதை வெச்சு வயிற்றை நிரப்பனும்ங்கிறதுக்காக நான் இப்படி சுத்தி சுத்தி வரேன். உலகம் முழுக்க சுத்திண்டிருக்கேன் கியந்தம் – எவ்ளோ நாள்தான் இப்படி இருக்கப் போறேன் தருணகருணே – கருணையே மிகுந்த உன் கடாக்ஷம் தந்த்³ராசூன்யே  – எப்பவும் சோம்பல் இல்லாத உன்னோட உள்ள துருதுருன்னு கடாக்ஷம்கிறார். அதாவது என்ன அர்த்தம்னா அந்த கடாக்ஷம் ஒருத்தனுக்கு கிடைச்சுதுன்னா,அவனுக்கு இந்த மாதிரி எல்லார் வீட்டு வாசல்ல நின்னு வயிற்றை நிரப்பற நிலைமை மாறிடும். எவ்ளோ பணக்காரனா இருந்தாலும் ஒரு வாட்டி கொடுப்பான். இரண்டு வாட்டி கொடுப்பான். அப்புறம் அலுத்துப்பான். ஆனா காமாக்ஷியினுடைய கடாக்ஷம் சோம்பல்  இல்லாமல் நமக்கு கொடுக்கும். அதுனால அம்மா, அந்த உன்னுடைய தரங்க³ய லோசனே – அலை போன்ற உன்னுடைய கடாக்ஷத்தை நமதி மயி தே கிஞ்சித் – என்மேல கொஞ்சம் போடக் கூடாதா? காஞ்சீபுரீமணிதீ³பிகே – காஞ்சிபுரத்துக்கு ஒரு மணிதீபம் போல விளங்கும் ஹே காமாக்ஷி உன்னுடைய கடாக்ஷம் எனக்கு கிடைச்சுடுதுன்னா இந்த மாதிரி கண்ட பேர் கிட்ட நான் போய் நிக்கற நிலைமை வராதேன்னு சொல்றார். மஹான்கள் எல்லாரும் அந்த பிரார்த்தனை பண்றா. உலகத்தாரை நம்ப வேண்டியதில்லை. நாம் பகவானை நம்பினா நமக்கு ஒரு வாழ்க்கை கொடுப்பார். தலையில எழுதியிருக்கிற சுக, துக்கங்கள் அந்தந்த வேளைக்கு வரும். இந்த நம்பிக்கை, தைரியம் வந்து, ஒருத்தரை பார்த்தாதான் அந்த மாதிரி ஒரு சத்குருவை பார்த்து, அவா நீ இந்த வழிபாடு பண்ணுன்னு சொல்லி அதை நாம கெட்டியா பிடிச்சிண்டு பண்ணினா தான் அந்த இரண்டு மணிநேரம் தினம் பண்றதுக்கு இடம் கொடுக்கறது. பகவான் வழிவிடறார். இது பண்ண முடியறதுன்னு தெரியும். இதை மூணு மணிநேரம் ஆக்கினா இன்னும் மேல மேல பஜனம் பண்ணினா அதனால ஒண்ணும் ஆபத்தே இல்ல. அதனால ரொம்ப சம்பத்துதான். அதுனால ரொம்ப க்ஷேமம்ங்கிறதை மஹான்கள் சொல்லி கொடுப்பா. நம்பி நாம பண்ணினோம்னா நாம் அதை அனுபவிக்கலாம்.

அடுத்த ஸ்லோகத்துல

सदा मोहाटव्यां चरति युवतीनां कुचगिरौ
नटत्याशाशाखास्वटति झटिति स्वैरमभितः ।
कपालिन् भिक्षो मे हृदयकपिमत्यन्तचपलं
दृढं भक्त्या बद्ध्वा शिव भवदधीनं कुरु विभो ॥

ஸதா³ மோஹாடவ்யாம் சரதி யுவதீநாம் குசகி³ரௌ
நடத்யாசாசாகா²ஸ்வடதி ஜ²டிதி ஸ்வைரமபி⁴த: ।
கபாலின் பி⁴க்ஷோ மே ஹ்ருʼத³யகபிமத்யந்தசபலம்
த்³ருʼட⁴ம் ப⁴க்த்யா ப³த்³த்⁴வா சிவ ப⁴வத³தீ⁴னம் குரு விபோ⁴ ॥

சிவ  – சிவனே விபோ – எங்கும் நிறைந்தவனே. ஸதா³ மோஹாடவ்யாம் சரதி – எப்பொழுதும் மோகம் என்ற, மதிமயக்கம் என்ற காட்டில் என்னுடைய மனமாகிய குரங்கு சரதி – திரியறது யுவதீநாம் குசகி³ரௌ நடதி – பெண்களுடைய ஸ்தனங்கள் என்ற மலைகள்ல நடனமாடறது. ஆசாசாகா²ஸ்வடதி – ஆசைங்கிற கிளைகள்ல ஜ²டிதி ஸ்வைரமபி⁴த: – இஷ்டப்படி இங்கேயும் அங்கேயும் குதிக்கிறது. இப்படி இருக்கிற என் மனசுங்கிற குரங்கை, ஒரு குரங்கு பனைமரத்துல ஏறி கள்ளை குடிச்சிட்டு கீழ இறங்கிவரும்போது அதை ஒரு தேளும் கடிச்சிடுத்துன்னா என்னம்மா இருக்குமோ, அந்த மாதிரி நம்ம மனசு இருக்கு. நம் மனசு ஏற்கனவே குரங்கு போல சஞ்சலமானது. அதுல காமமாகிய கள்ளையும் குடிச்சு க்ரோதமாகிய தேளும் கடிச்சா எப்படி இருக்குமோ அந்த மாதிரி நாம behave பண்ணிண்டு இருக்கோம். இந்த மனசை எப்படித் தான் மீட்கறது? எப்படித் தான் பகவான் கிட்ட போறதுன்னா கபாலின் பி⁴க்ஷோ – ஒரு கபாலத்தை வெச்சிண்டிருக்கிற பிக்ஷு ரூபத்துல பகவான் வந்து தர்சனம் கொடுக்கிறார். நாம பகவான்கிட்ட போய் அது இது வேணும்னு பிச்சை கேட்கறோம். ஆனா அந்த பகவானே நம்ம கிட்ட பிக்ஷு ரூபத்துல வரும்போது என்ன பண்ணலாம்னா மே ஹ்ருʼத³யகபிமத்யந்தசபலம் – இப்படி ஓரேடியா சலிசிண்டி இருக்கற என்னுடைய மனமாகிய குரங்கை, உன்கிட்ட கொடுத்துடறே என்கிறார். பிக்ஷைகாரனுக்கு ஏதாவது கொடுக்கணும். இவர் சொல்றார். நீ வந்து அங்க இங்க பிக்ஷைக்கு போற. நீ ஒரு குரங்கையும் கூட்டிண்டு போனேன்னா இன்னும் யாராவது 2காசு கூடப் போடுவா. அதுனால த்³ருʼட⁴ம் ப⁴க்த்யா ப³த்³த்⁴வா – என் மனக்குரங்கை உன்கிட்ட கொடுக்கிறேன். நீ பக்திங்கிற கயிறாய் கொண்டு இதை நன்னா கட்டிபோட்டு வெச்சுக்கோ சிவ ப⁴வத³தீ⁴னம் குரு விபோ⁴ – உன்னுடைய அதீனமாக என்னுடைய மனசை ஆக்கிக்கொள் ன்னு ஒரு அழகான ஒரு பிரார்த்தனை.

மனசை பகவான் கிட்ட ஒப்படைச்சா தான் நாம இதுலேயிருந்து மீள முடியும்ங்கிறதுக்கு அழகான ஒரு ஸ்லோகம்.

முன்னமேயே இதை சொல்லியிருக்கேன். ஸ்வாமிகள் கிட்ட அவருடைய சமஸ்க்ருத வாத்யார் சுந்தர காண்ட ப்ரவசனத்தின் போது இந்த சிவானந்த லஹரி ஸ்லோகத்தை எங்கேயாவது பொருத்தமா சொல்லுன்னு கேட்டார். ஸ்வாமிகள் எங்கே சொன்னார்னா

ஹனுமார் சீதாதேவியை பார்த்து அவருக்கு நம்பிக்கை ஏற்படும்படியா பேசிண்டே வரார். அப்ப சீதாதேவி, “ராமலக்ஷ்மணா எப்படி இருப்பா. நீ அவாளை பார்த்திருக்கேன்னு சொல்றியே. அவாளோட அங்க அடையாளங்களை நீ சொல்லுன்னு கேட்கறா.அப்பா ஹனுமார் ஆரம்பிக்கறார்

रामः कमलपत्त्राक्ष: सर्वसत्त्वमनोहरः। रूपदाक्षिण्यसम्पन्नः प्रसूतो जनकात्मजे।।

ராம: கமல பத்ராக்ஷ: ஸர்வ ஸத்வ மனோஹர: |

ரூப தாக்ஷிண்ய ஸம்பன்ன: ப்ரஸுதோ ஜனஹாத்மஜே ||

ராமர் தாமரைப் போன்ற கண்ணழகு படைத்தவர் ஸர்வ ஸத்வ மனோஹர: – எல்லா பிராணிகளுடைய மனதையும் அபகரிக்கக் கூடிய அவருடைய அந்த கண்ணழகுன்னு சொல்றார். இந்த இடத்துல ஸ்வாமிகள் சொல்வார் – ஹனுமார் சீதாதேவி கிட்டசொல்றாராம். நாங்கள் எல்லாம் வானரா. எங்களை மனசுக்கு ஒப்பிடுவா. ஒரு க்ஷணம் கூட மனசு ஒரு இடத்துல நிக்காதவா. எங்களை எல்லாம் இந்தமாதிரி ராமகாரியத்துல ஈடுபடுத்தி இன்னிக்கு வந்து நான் உங்களை தர்சனம் பண்ணினேன்னா அந்த ராமனுடைய கண்ணழகுல மயங்கி அவன் பேச்சை கேட்டு நாங்க அவனுடைய  காரியத்தை பண்றோம்’ னு அந்த இடத்துல இந்த சிவானந்த லஹரி ஸ்லோகத்தை சொல்லி ஆதீனம்ன்னு ராமர் எங்களையெல்லாம் அடிமை ஆக்கிண்ட்டார். அவருடைய கண்ணழகுனாலன்னு சொன்னாராம். ஸ்வாமிகளோட சமஸ்க்ருத பண்டிட் ரொம்ப அதை கொண்டாடினார்னு சொல்வார். “நான் வர்றவாகிட்ட எல்லாம் இதையொரு test மாதிரி பண்ணிண்டிருக்கேன். இவ்ளோ பொருத்தமா யாரும் சொன்னது இல்லை. சந்தோஷம்பா. உன்னோட வாத்யார்னு சொல்லிக்கறதுல நான் பெருமைபடறே” ன்னு அந்த சிரோன்மணி சொன்னாராம். இந்த ஸ்லோகத்தை இன்னிக்கு பார்த்தோம்.அடுத்த 21 வது ஸ்லோகம் நாளைக்கு பார்ப்போம்.

நம: பார்வதீ பதயே…ஹர ஹர மஹாதேவ

Series Navigation<< சிவானந்தலஹரி 17, 18 ஸ்லோகங்கள் பொருளுரைசிவானந்தலஹரி 21வது ஸ்லோகம் பொருளுரை >>

2 replies on “சிவானந்தலஹரி 19, 20 ஸ்லோகங்கள் பொருளுரை”

please note in yiur description mookapanchashathi which sloka and which shathaka i have to search please tell me janani bhuvani comes in which shathaka

Leave a Reply to meenakshiCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.