Categories
shivanandalahari

சிவானந்தலஹரி 27, 28 ஸ்லோகங்கள் பொருளுரை

சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் 27, 29 தமிழில் பொருள் (8 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokams 27, 28)

சிவானந்த லஹரில அடுத்த இரண்டு ஸ்லோகங்கள் பார்ப்போம். 27வது ஸ்லோகம்.

करस्थे हेमाद्रौ गिरिश निकटस्थे धनपतौ

गृहस्थे स्वर्भूजाऽमरसुरभिचिन्तामणिगणे ।

शिरस्थे शीतांशौ चरणयुगलस्थेऽखिलशुभे

कमर्थं दास्येऽहं भवतु भवदर्थं मम मनः ॥ २७॥

கரஸ்தே² ஹேமாத்³ரௌ கி³ரிஶ நிகடஸ்தே² த⁴நபதௌ

க்³ருʼஹஸ்தே² ஸ்வர்பூ⁴ஜாऽமரஸுரபி⁴சிந்தாமணிக³ணே ।

ஶிரஸ்தே² ஶீதாம்ஶௌ சரணயுக³ளஸ்தே²ऽகி²லஶுபே⁴

கமர்த²ம் தா³ஸ்யேऽஹம் ப⁴வது ப⁴வத³ர்த²ம் மம மந: ॥ 27॥

பகவானுக்கு நம்மால என்ன கொடுத்துட முடியும்? அவர்கிட்ட எல்லாமே இருக்கு, அப்படீன்னு சொல்றது இந்த ஸ்லோகம்.  ‘கரஸ்தே² ஹேமாத்³ரௌ’ – உன்னுடைய கைகள்ல பொன் மலையான மேரு மலையே இருக்கு.  திரிபுர சம்ஹாரத்தின் போது மேருமலையையே வில்லா  எடுத்துண்டு போனார்.  அப்படி தங்க மலை இருக்கு உன் கைல… ‘நிகடஸ்தே² த⁴நபதௌ’.. ‘கி³ரிஶ!’ – மலையில் உறைபவரே!  உன் பக்கத்துல தனபதியான குபேரன் எப்பவும் நின்னுண்டு இருக்கான்.  உனக்கு தோழன், தாஸன்.  என்ன வேணும்னாலும் அவன் கிட்ட கேட்டுக்கலாம். ‘க்³ருʼஹஸ்தே² ஸ்வர்பூ⁴ஜாऽமர ஸுரபி⁴ சிந்தாமணி க³ணே’ – உன்னோட க்ருஹத்துல, ‘ஸ்வர்பூ⁴ஜா’ – அப்படீன்னா கற்பக விருக்ஷம்.  ‘அமர ஸுரபி⁴’ – அப்படீன்னா காமதேனு.  ‘சிந்தாமணி’ – இதெல்லாம் கேட்டதை கொடுக்கக் கூடிய இரத்தினம், பசு, மரம்.  இதெல்லாம் உன்னுடைய வீட்டுலேயே இருக்கு.  ‘ஶிரஸ்தே² ஶீதாம்ஶௌ’ – உன்னுடைய தலையில குளுகுளுன்னு சந்திரன் இருக்கு. ‘சரணயுக³ளஸ்தே² அகி²லஶுபே⁴’ – உன்னுடைய திருவடிகளில் எல்லா மங்களங்களும் உறைகின்றன. அந்த திருவடியை தியானம் பண்றவாளுக்கு மங்களங்கள் கிடைக்கும். அப்படி இருக்கறச்சே, ‘கமர்த²ம் தா³ஸ்யேऽஹம்’… ‘கம் அர்த²ம் தா³ஸ்யேऽஹம்’ – என்ன ஒரு பொருளை உனக்கு நான் கொடுத்துட முடியும்? பகவானுக்கு ஒரு மண்டகபடி கோவில்ல பண்றோம்னா, நமக்கு பக்தி ஏற்படறதுக்கும், நம்மளுடைய மமகாரம் போறதுக்காகவும், இது என்னோடதுன்னு நினைக்காம, இது பகவானுக்கு ஒப்படைக்கறதுக்காக என்று பண்றோமே தவிர, அவருக்கு அதுனால ஆகப் போறது ஒண்ணும் இல்லை, அப்ப என்ன தான் கொடுக்கறது அப்படீன்னு கேட்டா, ‘ப⁴வது ப⁴வத³ர்த²ம் மம மந:’ – என்னுடைய மனம் உன் பொருட்டாக ஆகட்டும். என்னோட மனசையே கொடுக்கறேன் அப்படீங்கறார். பகவானுக்கு நாம ஏதோ கொடுத்துட்டோம்னு நினைக்கறது, சூரியனுக்கு கற்பூர ஹாரத்தி பண்ற மாதிரியும், ஸமுத்திரத்துல போய், ஸமுத்திர ஜலத்தை எடுத்து அர்க்கியம் பண்ற மாதிரியும்தான். அதனால பகவானுக்கு நம்மளுடைய மனசைத் தான் கொடுக்கணும் அப்படிங்கிற தாத்பர்யம்.

இந்த மனசை எப்படி கொடுக்கறது? அப்படி மனசை கொடுத்தா என்ன கிடைக்கும்னா, நம்முடைய மனசை நாம பகவானுக்கு அர்ப்பணம் பண்ணா, நமக்கு முக்தி கிடைக்கும்.  அந்த முக்தில நாலு விதமா சொல்வா. ‘ஸாரூப்யம் – அப்படீன்னா பகவானுடைய அதே உருவமா நம்மளும் ஆயிடறது.  ‘ஸாமீப்யம்’னா பகவான் எங்க இருக்காரோ, அங்க பக்கத்துல நெருங்கி இருக்கறது.  ‘ஸாலோக்யம்’ – அப்படிங்கிறது அவர் எந்த உலகத்துல இருக்காரோ அந்த உலகத்துல நம்மளும் இருக்கறது. ‘ஸாயுஜ்யம்’ – அப்படீன்னா இரண்டற கலக்கறது. இந்த நாலு விதமான முக்தி சொல்வா.

அடுத்த ஸ்லோகத்துல, என்ன காரியம் பண்ணினா மனசு பகவானிடத்தில் இருக்கும்? அப்படி இருந்தா அதுவே முக்தி தான்.  இங்கேயே ஜீவன்முக்தன் ஆயிடலாம் அப்படீன்னு சொல்றார்.

सारूप्यं तव पूजने शिव महादेवेति संकीर्तने

सामीप्यं शिवभक्तिधुर्यजनतासांगत्यसंभाषणे ।

सालोक्यं च चराचरात्मकतनुध्याने भवानीपते

सायुज्यं मम सिद्धमत्र भवति स्वामिन् कृतार्थोऽस्म्यहम् ॥ २८॥

ஸாரூப்யம் தவ பூஜநே ஶிவ மஹாதே³வேதி ஸங்கீர்தநே

ஸாமீப்யம் ஶிவப⁴க்திது⁴ர்யஜநதாஸாங்க³த்யஸம்பா⁴ஷணே ।

ஸாலோக்யம் ச சராசராத்மகதநுத்⁴யாநே ப⁴வாநீபதே

ஸாயுஜ்யம் மம ஸித்³த⁴மத்ர ப⁴வதி ஸ்வாமிந் க்ருʼதார்தோ²ऽஸ்ம்யஹம் ॥ 28॥

இங்கேயே நான் க்ருதார்த்தனா இருக்கேன். செய்ய வேண்டியதை செய்துவிட்டேன். அடைய வேண்டியதை அடைஞ்சுட்டேன் அப்படீன்னு சந்தோஷமா சொல்றார்.  எனக்கு ஸித்தி கிடைச்சுடுத்து. முக்தின்னா இறந்த பின்ன தான் முக்தின்னு இல்லை. எனக்கு இங்கேயே முக்தி கிடைச்சுடுத்து. ‘ஸாரூப்யம் தவ பூஜனே’ – உன்னுடைய பூஜை பண்றது தான் ஸாரரூப்யம். விபூதி, ருத்ராக்ஷம் அணிஞ்சுண்டு, தன்னையே சிவமாக பாவிச்சுண்டு, சிவ பூஜை பண்ணா இங்கேயே நமக்கு ஸாரூப்ய முக்தி கிடைச்சுடுத்து. பஞ்சாயதன பூஜையில கூட,

தேஹோ தேவாலய: ப்ரோக்த: ஜீவோ ப்ரஹ்ம: ஸநாதன: |

த்யஜேத் அக்ஞான நிர்மால்யம் ஸோஹம் பாவேந பூஜயேத் ||

ன்னு ஒரு ஸ்லோகம் சொல்வா.  நம்முடைய அக்ஞானம்தான் நிர்மால்யம். அதை தூக்கிப் போட்டுடணும்.  இந்த உடம்பு தேவாலயம். இதுக்குள்ள பகவான் இருக்கார் அப்படிங்கிற எண்ணத்தோட அந்த பூஜையை பண்ணனும்.  ஒரு குழந்தையை நாம்ம குளிப்பாட்டி அலங்காரம் பண்ணா நமக்கு ஒரு சந்தோஷம் ஏற்படறது. ஏன்னா நாம எந்த சுகத்தை அனுபவிக்கறோமோ, நமக்கு பிரியமான குழந்தைக்கு அதைப் பண்ணும் போது, நமக்கு சுகம் கிடைக்கறது. அந்த மாதிரி பகவானை பூஜிக்கணும். ஸ்வாமிகள் ஒரு குருவாயூரப்பன் பஞ்சலோக விக்ரகம் வெச்சுண்டு இருந்தார். அதுக்கு பூஜை பண்ணும்போது பார்க்கணும். குழந்தையை கொஞ்சற மாதிரி, கொஞ்சி கொஞ்சி ஆசையா பூஜை பண்ணுவார். அப்படி பண்ணும் போது அவரே குருவாயூரப்பனா ஆயிட்டார். ஆஞ்சன் நம்பூதிரி, ஸ்வாமிகளை பார்க்கும்போதே ‘குருவாயூரப்பா’ ன்னு கூப்பிடுவார். அந்தமாதிரி ‘ஸாரூப்யம்’ பூஜையில இருந்தே கிடைச்சுடறது.

‘ஶிவ மஹாதே³வேதி ஸங்கீர்தனே ஸாமீப்யம்’ – பகவானை சிவா, மஹாதேவா, பரமேஸ்வரா அப்படீன்னு அவருடைய நாமங்களைச் சொல்லி அவரோட புகழைப் பாடும்போது, ‘ஸாமீப்யம்’ – ரொம்ப பக்கத்துல போயிட்ட மாதிரி ஒரு சந்தோஷம் கிடைக்கறது. ஒருத்தரை நினைக்கும் போது தானே அவாளுடைய குணங்களை நினைக்கறோம். அப்போ அவா பக்கத்துல இருக்கிற மாதிரி ஒரு சந்தோஷம் கிடைக்கறது நமக்கு. அந்த நிலை பகவானுடைய சங்கீர்த்தனத்துனாலேயே கிடைக்கும்.

‘ஶிவப⁴க்தி து⁴ர்யஜநதா ஸாங்க³த்ய ஸம்பா⁴ஷணே ஸாலோக்யம்’ – சிவ பக்தி நிறைந்த ஜனங்களோடு கூடி,  அவாளோட பேசறதே ஸாலோக்ய முக்தி. பகவான் எந்த கைலாசத்துல இருக்காரோ, அங்க இருந்தா என்ன சந்தோஷம் கிடைக்கும்ங்கிறது சிவபக்தி இருக்கக் கூடிய ஜனங்களோட பழகினாலே நமக்கு அந்த ஸாலோக்ய முக்தி கிடைக்கும்.

‘சராசராத்மக தநுத்⁴யாநே ப⁴வாநீபதே ஸாயுஜ்யம்’ – எங்கும் பகவான் நிறைஞ்சு இருக்கார்… அப்படிங்கிற ‘சராசராத்மக தநுத்⁴யாநே’ – எல்லா அசையும் பொருள், அசையாத பொருள், எல்லா உருவங்களும் பரமேஸ்வரனுடைய ஸ்வரூபம் தான் அப்படீன்னு த்யானம் பண்றது ஸாயுஜ்ய முக்தி. இப்படி இந்த பக்தியை மஹான்கள் define பண்ணும் போது, அதுவே ஆத்ம விசாரம், முக்திக்கு ரொம்ப நெருக்கத்துல இருக்கு.  இந்த மாதிரி, மாத்தி மாத்தி இதையே பண்ணிண்டிருந்தோம்னா போரும்.

ஏதோ கொஞ்சம் பணம் இருந்தா பகவானுக்கு ஒரு சேவை பண்ணலாம். ஆனா எது அதைக் காட்டிலும் ரொம்ப உயர்ந்த விஷயம்? இப்படி அவனுடைய ஸ்தோத்திரத்தை பண்ணனும். பூஜையை பண்ணனும். அவனுடைய பக்தர்களோட இருக்கணும். எங்கும் பகவான் இருக்கார் அப்படீன்னு எல்லாத்துலேயும் பரமேஸ்வரனை பார்க்கறதுக்கு மனசை பழக்கணும் அப்படிங்கிற வழி சொல்றார் பணம் இருந்தா பகவானுக்கு நீ என்ன கொடுக்க முடியும்? அதுக்கும் மேலான… உன் மனசை கொடு. உன் மனசை இந்த காரியங்களிலெல்லாம் செலுத்து. அப்போ உனக்கு உயர்ந்த முக்திக்கு நிகரான உத்தம பக்தி ஏற்படும் அப்படீன்னு இந்த ஸ்லோகத்துல ஆச்சார்யாள் சொல்லித் தர்றார். ‘கண்டேன் அவர் திருப்பாதம். கண்டறியாதன கண்டேன்’ அப்படீன்னு மஹான்கள் அந்த பகவானுடைய அனுபவத்தை பாடறா இல்லையா? அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை தியானித்து இருப்பதே ஸாயுஜ்ய முக்தி. ஒவ்வொரு முக்தியும்.. ஒண்ணுக்கு மேல ஒண்ணு சொல்வா. இது எல்லாமே பக்தியினால கிடைக்கும் அப்படீன்னு சொல்றார்.

நம: பார்வதீ பதயே… ஹர ஹர மஹாதேவ

Series Navigation<< சிவானந்தலஹரி 26வது ஸ்லோகம் பொருளுரைசிவானந்தலஹரி 29வது ஸ்லோகம் பொருளுரை >>

5 replies on “சிவானந்தலஹரி 27, 28 ஸ்லோகங்கள் பொருளுரை”

ஸாயுஜ்யம், ,ஸாமீப்யம், ,ஸாலோக்யம்,,, ஸாயுஜ்யம் என்று முக்தி நாலு
விதமாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.

ஸ்ரீ பரமேஸ்வர பூஜையால் ஸாரூப்ய முக்தியும், நாம ஸங்கீர்த்தனத்தால்
ஸாமீப்ய முக்தியும், சிவ பக்தர்களின் ஸஹவாசத்தால்(ஸத் ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம்)
ஸாலோக்ய முக்தியும், த்யானத்தால் ஸாயுஜ்ய முக்தியும் சித்திக்கின்றன! என்று ஆசார்யாள்
சொல்கிறார்.!!

அடுத்த ஸ்லோகத்தில்தங்களையே நினைந்து ,த்யானம் செய்து, சரணமாக அடைந்து
ஹே பரமேஸ்வர! தங்களையே வேண்டிக் கொள்கிறேன். தங்கள் கருணா கடாக்ஷத்துக்கு
பல காலமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்!. எனக்குமதை தயைகூர்ந்து அருள வேண்டும்
என பரமேஸ்வர அவதாரமான ஆசார்யாள் ஈஸ்வரனிடம் வேண்டுவது இங்கு விந்தை!
ஈதுதான் சுகம் என்ற விஷய ஞானத்தை எனக்கு உபதேசிக்க வேண்டும் என வினயத்துடன்
வேண்டுகிறார்!!!!
கொஞ்சம்க்னானமிருந்தாலே கர்வம் மேலிடுகிறது சாமானியனுக்கு!
ஆஅனால் வினய ஸம்பத் என்பதை ஆசார்யாளிடம் நாம்கற்க வேண்டும்!!

விஷய சுகம் அனித்யம்!ஆஅதலால் ப்ரும்ம சுகம் என்பதனை அருள வேண்டும்
என ப்ரார்த்திக்கிறார்!

என்ன அழகான கருத்து! ஆசார்யாள் எழுதின அத்தனை ஸ்லோகங்களிலும்
வினய ஸம்பத் வெளிப்படுகிறது. நம் வாழ்வில் நாமும் பின்பற்றி உய்வடைவோமாக!!

ஜய ஜய சங்கரா….

நம சிவாய நம சிவாய
உள்ளம் உருகி வெள்ளமாய் பெருகி எடுக்கும்படி இருக்கு விளக்கம்.
அந்த பரமேஸ்வரனை பக்தி செய்ய நம் உடல் மனம் ஆவி அனைத்தும் அவருக்கு சமர்ப்பிக்க வேண்டும். அந்த பரமேஸ்வரனின் கருணை பார்வையை பெற அவரிடம் யாசிக்க வேண்டும். நம் மனதில் பக்தி ரசம் பெருக்கெடுக்க யாசிக்க வேண்டும். உண்மையில் நாம் அனைவரும் அவரிடம் எல்லாம் யாசிக்கும் பேர்வழிகள் தான். அவருக்கு என்று கொடுக்க என்ன இருக்கிறது. எல்லாம் அவருடையது நாம் வெரும் பாதுகாப்பு செய்பவர் மட்டுமே ( trustee)
ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்வார் நமக்கு பக்தியை பிச்சை அளிக்கும்படி.

நாம் அந்த பக்தி நிலையில் நின்று பரமனை நினைந்து பூஜை செய்து, ஸத்ஸங்கத்துடன்இருந்து, மேலும் மேலும் பக்தி பெருக பிரார்த்திப்போம், ஆசார்யாள் சொன்னது போல் பக்தியின் மூலம் முக்தி பெறுவது திண்ணம்.

மிகவும் அனுபவித்து எழுதியுள்ளேள் . படிப்பதற்கு பேரானந்தமாய் இருக்கு. இன்னும் நான் வேறு என்ன சொல்லமுடியும்?
||சிவாய நம: ஓம்||

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.