சிவானந்தலஹரி 31, 32 வது ஸ்லோகம் பொருளுரை

சிவானந்தலஹரி ஸ்லோகம் 31, 32 தமிழில் பொருள் (18 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokams 31 and 32)
(15-3-2018 சாயங்காலம் ஒலிப்பதிவு செய்யப்பட்டது)

இன்னிக்கு மஹா ப்ரதோஷம். பார்வதி பரமேஸ்வராளை ரிஷப வாகனத்துல தரிசனம் பண்ணி, பரமேஸ்வரன் ஹாலாஹல விஷத்தை சாப்பிட்டு, உயிர்களை எல்லாம் காத்ததை நன்றியோடு நினைச்சு, அவரை வழிப்படற புண்ய தினம்.

இன்னிக்கு சிவானந்த லஹரில 31, 32வது ஸ்லோகங்கள் பார்க்கணும். அந்த ரெண்டு ஸ்லோகங்களும் பரமேஸ்வரனுடைய அந்த பரமோபகாரத்தை வியந்து போற்றி பேசற ரெண்டு ஸ்லோகங்கள். தேவர்கள் அம்ருதம் சாப்பிடறதுக்காக பரமேஸ்வரன் தான் முதல்ல விஷத்தை சாப்பிட்டார்.

இந்த 31வது ஸ்லோகம்,

नालं वा परमोपकारकमिदं त्वेकं पशूनां पते

पश्यन् कुक्षिगतान् चराचरगणान् बाह्यस्थितान् रक्षितुम् ।

सर्वामर्त्यपलायनौषधमतिज्वालाकरं भीकरं

निक्षिप्तं गरलं गले न गिलितं नोद्गीर्णमेव त्वया ॥ ३१॥

நாலம் வா பரமோபகாரகமித³ம் த்வேகம் பஶூநாம் பதே

பஶ்யந் குக்ஷிக³தாந் சராசரக³ணாந் பா³ஹ்யஸ்தி²தாந் ரக்ஷிதும் ।

ஸர்வாமர்த்யபலாயநௌஷத⁴மதிஜ்வாலாகரம் பீ⁴கரம்

நிக்ஷிப்தம் க³ரலம் க³லே ந கி³லிதம் நோத்³கீ³ர்ணமேவ த்வயா ॥ 31॥

ன்னு ஒரு ஸ்லோகம். ‘பஶூநாம் பதிஹி’ – பரமேஸ்வரன் எல்லா உயிர்களுக்கும் தலைவர். அதனால தான் எல்லா உயிர்களையும் இந்த ஆபத்துலேர்ந்து காப்பாத்தினார். அது சாதாரண காரியமா? இது ஒண்ணே உங்களுடைய பரமோபகாரத்தை உலகத்துக்கு தெரிவிக்கலையா? இதுக்கு மேல ஒண்ணு வேணுமா? ‘இத³ம் து ஏகம் ந அலம் வா’ – இது ஒண்ணு போதாதா உங்களுடைய பரமோபகாரத்தை வெளிப்படறதுக்கு? நீங்க விஷத்தை எடுத்து தேவர்கள் வேண்டின போது, ‘அபயம்’னு ஓலமிட்டபோது விஷத்தை எடுத்து சாப்பிடேள். ஆனா, ‘குக்ஷிக³தாந் சராசரக³ணான்’ – வயித்துக்குள்ளையும் எல்லா சராசரங்களும் இருக்கு உங்களுக்கு! ‘பா³ஹ்யஸ்தி²தாந்’ – வெளியிலேயும் அந்த மாதிரி தான் எல்லா சராசரங்களும் இருக்கு! அதனால ரெண்டு உள்ள இருக்கற சராசரத்தையும் வெளியில இருக்கறத காப்பாத்தி ‘ரக்ஷிதும் பஶ்யன்’ – எப்படி ரெண்டுத்தையும் காப்பாத்தறதுனு பார்த்துண்டு, ‘அதி ஜ்வாலாகரம் பீ⁴கரம்’ – பயங்கரமா நெருப்பை கக்கிண்டு வரக்கூடிய, பயத்தை உண்டாக்கக்கூடியதான, ‘ஸர்வாமர்த்ய பலாயநௌஷத⁴ம்’ – எல்லா தேவர்களையும் பயந்து ஓடச் செய்த ஒரு மூலிகை, விளையாட்டா சொல்றார். அந்த விஷம் அப்படி இருந்தது. எல்லா தேவர்களும் பயந்து ஓடுற ஒரு மூலிகையாட்டம் இருந்த – ‘க³ரலம்’ அந்த விஷம், ‘க³லேத்வயா நிக்ஷிப்தம்’ – உங்களால் கழுத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டதே! ‘ந கி³லிதம்’ – நீங்க அதை விழுங்கவும் இல்லை! ‘ந உத்³கீ³ர்ணம் ஏவ’ – அதை வெளியிலேஉமிழவும் இல்லை! எப்பேர்ப்பட்ட உபகாரம் பண்ணியிருக்கேள் நீங்க! அப்படீன்னு கொண்டாடறார்.

இந்த அடுத்த ஸ்லோகத்துலயும், நாம குழந்தைகள் ஏதாவது ஸாஹசம் பண்ணிணா ‘டேய்! என்னடா விளையாட்டுன்னு நினைச்சியா? இப்படி மேலேர்ந்து குதிக்கிறையே?’ அப்படீன்னு சொல்வோம். அந்த மாதிரி பரமேஸ்வரன் பண்ண இந்த காரியத்தை வியந்து சொல்றார். ‘என்ன விளையாட்டா பண்றேளே நீங்க!’ அப்படீன்னு சொல்ற மாதிரி சொல்றார்.

ज्वालोग्रः सकलामरातिभयदः क्ष्वेलः कथं वा त्वया

दृष्टः किं च करे धृतः करतले किं पक्वजंबूफलम् ।

जिह्वायां निहितश्च सिद्धघुटिका वा कण्ठदेशे भृतः

किं ते नीलमणिर्विभूषणमयं शंभो महात्मन् वद ॥ ३२॥

ஜ்வாலோக்³ர: ஸகலாமராதிப⁴யத³: க்ஷ்வேல: கத²ம் வா த்வயா

த்³ருʼஷ்ட: கிம் ச கரே த்⁴ருʼத: கரதலே கிம் பக்வஜம்பூ³ப²லம் ।

ஜிஹ்வாயாம் நிஹிதஶ்ச ஸித்³த⁴கு⁴டிகா வா கண்ட²தே³ஶே ப்⁴ருʼத:

கிம் தே நீலமணிர்விபூ⁴ஷணமயம் ஶம்போ⁴ மஹாத்மன் வத³ ॥ 32॥

ஹே ஶம்போ⁴! இந்த ‘ஜ்வாலோக்³ர:’ – பயங்கரமான தீ போல கொழுந்து விட்டு எரியக்கூடியதும், ‘ஸகல அமராதி ப⁴யத³:’ – எல்லாதேவர்களுக்கும் பயத்தைக் கொடுத்ததுமான, ‘க்ஷ்வேல:’ – இந்த விஷமானது, ‘த்வயா’ –உம்மால், ‘கத²ம் வாத்³ருʼஷ்டம்’ – யாராலயும் பார்க்கக் கூட முடியலை! எல்லாரும் பயந்து ஓடறா. நீங்க எப்படி அதைப் பார்த்தேள்? ‘கிம் ச கரே த்⁴ருʼத:’ –எப்படி அதை கைல எடுத்தேள்? ‘கரதலே கிம் பக்வஜம்பூ³ப²லம்’ – உங்க கைல அது என்ன நாவல் பழம்னு நினைச்சேளா? அதைக் கைலை எப்படி வெச்சுண்டே ள்? தாங்கினேள்? ‘ஜிஹ்வாயாம் நிஹிதஶ்ச ஸித்³த⁴கு⁴டிகாவா’ -எடுத்து வாயில வெச்சுண்டேளே! அது என்ன சித்த குளிகையா அது? மருந்து மாதிரி நினைச்சுண்டேளா? எடுத்து வாயில அதை வெச்சுண்டேளே! ‘கண்ட²தே³ஶே ப்⁴ருʼத:’ – அதைக் கழுத்துலேயும் பிடிச்சு வெச்சுண்டேளே! ‘அயம் தே கிம் நீலமணிஹி விபூ⁴ஷணம்’ – அது ஒரு நீலமணி! அலங்காரமா இருக்குனு சொல்லிட்டு கழுத்ததுல வெச்சிண்டேளோ! ‘மஹாத்மந் வத³’ –நீங்க தான் சொல்லணும் அப்படீங்கறார். கழுத்துல அந்த விஷம் தங்கிட்டதனால, பரமேஸ்வரனுக்கு நீலகண்டன், ‘ஸ்ரீ’ன்னா விஷம் ஸ்ரீகண்டன் அப்படீன்னு பல நாமங்கள்.

பரமேஸ்வரனுடைய இந்த பரமோபகாரத்தைப் பத்தி பேசும் போது, எல்லா பெரியவாளுமே அப்படித்தான்! சாதுக்கள் இந்த பூமில கஷ்டத்தை தான் தாங்கிண்டு, ஜனங்கள் சந்தோஷமா இருக்கணும் ன்னு நினைச்சுதான் எல்லாம் பண்றா! அதனால தான் நாம அவாளை என்னென்னிக்கும் கொண்டாடிண்டிருக்கோம். மஹா பெரியவாளை இன்னிக்கு இவ்ளோ கொண்டாடறோம்னா throughout the 100 years எவ்ளோ பொறுத்துண்டார். எவ்வளவெல்லாம் தாண்டி வந்தார். அதையெல்லாம் அவர் தாங்கிண்டு, நமக்கு அநுக்கிரஹம் பண்ணினார். ஆஸ்திகத்தை வளர்த்தார். இன்னிக்கு நாம அதோட பலனை அனுபவிச்சு சந்தோஷமா இருக்கோம்.

அதே மாதிரி ஸ்வாமிகள்! எத்தனைக் கஷ்டத்தை தானே பொறுத்துண்டு, ஜனங்களுக்கு இராமாயண பாகவதத்துல பக்தி ஏற்படும்படி எவ்ளோ பெரிய உபகாரம் பண்ணினார். தன் கஷ்டத்தை எல்லாம் தானே கண்டத்துல வெச்சிருந்தார். அவர் அந்த கஷ்டத்தைஅவரை தாக்கறதுக்கு allow பண்ணியிருந்தார்னா, உடம்பு போய்டும், 75 வருஷங்கள் இருந்து நமக்கு அநுக்கிரஹம் பண்ணியிருக்க முடியாது. புத்தியே பேதலிச்சு போயிருக்கும். அவ்ளோ கஷ்டங்கள் வந்தது அவருக்கு. ஆனா அவர் அதையெல்லாம் மனசுலையும் தாக்கறதுக்கு விடலை, வெளியிலையும் காமிக்கலை. வெளியில பரம சாந்தாரா இருந்ததுண்டு, ஜனங்களுக்கு ஸதா ஹிதோபதேசம் பண்ணிண்டு, கிருஷ்ண கதையும் ராம கதையும் சொல்லிண்டிருந்தார்.

புதுப் பெரியவாளும், எல்லாக் கஷ்டங்களையும் தான் பொறுத்துண்டு, குரு பக்தி எப்படி பண்ணனும்னு கடைசி நாள் வரைக்கும் பண்ணி காட்டினார். சித்தி ஆகறதுக்கு முந்தின நாள் சாயந்திரம் பிரதோஷம், போன பிரதோஷம், புதுப் பெரியவா வந்து வந்து ‘மஹா பெரியவாளுக்கு ஆரத்தி பண்ணு, கற்பூர ஹாரத்தி பண்ணு பண்ணு!’னு கேட்டுக் கேட்டு பார்த்துட்டு போயிருக்கார். அடுத்த நாள் கார்த்தாலே எழுந்து அதிஷ்டானத்தை ப்ரதக்ஷிணம் பண்ணி, கற்பூர ஹாரத்தி தானே பண்ணியிருக்கா. ஒரு நாள் விடாம தினம்அஞ்சாவது மணிக்கு பெரியவாளுக்கு கற்பூர ஹாரத்தி பண்றது, நானே நிறைய பார்த்திருக்கேன். அப்படி குரு பக்தி பண்ணி காமிச்சா.

இந்த இடத்துல, ருத்ராம்சமான ஹனுமார், அவர் வால்ல நெருப்பு வெச்சு ஊருக்குள்ளே கட்டி இழுத்துண்டு போறா, அடிக்கறா! ‘கொல்லு இவனை’அப்படீன்னு கத்தறா. பெண்களும் கொழந்தைகளும் சேர்ந்துண்டு கை கொட்டி சிரிச்சு கேலி பண்றா. ஹனுமார் சொல்றார், ‘பீடாம் குர்வந்தி ரக்ஷாம்ஸி நமேஸ்தி மனஸ ச்ரமஹ’ – இவா என்னை ஹிம்சை பண்றா தான். ஆனா என் மனசுல சிரமமே இல்லை! ஏன்னா இது ராம கார்யம்னா! எனக்கு ஒண்ணும் இல்லை. என் மனசுல சிரமம் இல்லை. இப்போ, பகல்ல ஊருக்குள்ளே கூட்டிண்டு போறா. நான் இந்த இலங்கையோட அமைப்பைப் பார்த்துக்கறேன் அப்படீங்கறார்.

அந்த மாதிரி, மஹா பெரியவா கிட்ட சில foreign ladies வந்து, ‘நாங்க social service பண்ணிண்டிருக்கோம். ஆனா எங்களுக்கு இந்த ஈஸ்வர பக்தி, நம்பிக்கை எல்லாம் இல்லை. இது தப்பா!’ ன்னு கேக்கறா. பெரியவா சொல்றா, ‘நீங்க social service பண்றது ரொம்ப நல்லது. ஆனா, ஒரு ஈஸ்வரன்னு ஒருத்தன் இருக்கான்னு தெரிஞ்சிண்டு, அதை மனசுல வாங்கிண்டு, நீங்க பண்ற இந்த serviceஐ ஈஸ்வரார்ப்பணமா, ஒரு பூஜையா நினைச்சு பண்ணிணேள்னா, உங்களுக்கு உங்களுடைய கார்யங்கள்ல ஏதாவது இடைஞ்சல் வந்தாலோ, ஜனங்களுடைய ஆதரவு கம்மியா இருந்தாலோ, இல்லை, இதுக்கு எதிர்ப்பு காமிச்சாலோ உங்களுக்கு frustration வராது. எதோ பகவானுடைய காரியம்ன்னு பண்ணிண்டு போனா, உங்களுக்கு ஒரு ஆத்மதிருப்தியும் ஒரு சந்துஷ்டியும் இருக்கும். போகப் போக சித்தசுத்தி ஏற்படும். பகவான் அந்த சித்தசுத்தியை அநுக்கிரஹம் பண்ணுவார்!’ அப்படீன்னு சொல்லிக் குடுக்கறா. அவாளும் ரொம்ப சந்தோஷமா ‘ஆஹா! ரொம்ப நல்ல தெளிவு கிடைச்சது எங்களுக்கு!’ ன்னு சொல்லிட்டு போறா.

அந்த மாதிரி பார்த்தா ஹனுமாருக்கு, ‘ராம கார்யம் பண்றோம்!’ அப்படீங்கிறது திருப்தி. ஸ்வாமிகளுக்கு, ‘மஹா பெரியவா சொன்னா. ராமாயண பாகவதம் படிக்க சொன்னா. படிச்சுண்டு இருக்கேன்’ அப்படீங்கிறதுனால அவாளுக்கு என்ன கஷ்டம் வந்தாலும், அந்த கஷ்டம் பாதிக்கறதில்லை. மஹா பெரியவாளுக்கு காமாக்ஷி! புதுப் பெரியவாளுக்கு மஹா பெரியவா, திருப்பதி வெங்கடரமண ஸ்வாமி! அப்படி அவாவா ஒரு தெய்வத்தை வெச்சுண்டு, அந்த தெய்வத்துடைய முகத்துல ஒரு சிரிப்பைப் பார்க்கணும்னா, அதுக்காக என் உயிரை வேணும்னாலும் கொடுக்கறேன் அப்படீன்னு தன்னுடைய கடமையை பண்ணிண்டே போயிருக்கா. அந்த காலத்துல நிறைய ப்ராம்மணா, almost எல்லா ப்ராம்மணாளுமே இந்த மாதிரி சாதுக்களா தன்னலமே இல்லாம, தன்னுடைய குரு வார்த்தையோ, இல்ல இஷ்ட தெய்வத்துக்காகவோ, இல்ல அப்பா அம்மாவுக்காகவோ, இல்ல தன்னுடைய டீச்சர்க்காகவோ தங்களுடைய lifeஐ dedicate பண்ணி, அதுல தனியான ஒரு திருப்திய கண்டிருக்கா.

அத மாதிரி, ‘பரமேஸ்வரன் ஹாலாஹல விஷத்தை சாப்பிட்டாரே! அவர் எப்படி பொறுத்துண்டார் இதை?”னு கேட்டா, அதுக்கு பதில் ‘மூகபஞ்சசதி’ ல இருக்கு. மந்தஸ்மிதசதகத்துல 21ஆவதுஸ்லோகம்.

सादृश्यं कलशाम्बुधेर्वहतियत्कामाक्षिमन्दस्मितं

शोभामोष्ठरुचाम्बविद्रुमभवामेताद्भिदांब्रूमहे।

एकस्मादुदितं पुराकिलपपौ शर्वः पुराणः पुमान्

एतन्मध्यसमुद्भवं रसयते माधुर्यरूपंरसम्॥२१॥

ஸாத்³ருʼஶ்யம் கலஶாம்பு³தே⁴ர்வஹதியத்காமாக்ஷிமந்த³ஸ்மிதம்

ஶோபா⁴மோஷ்ட²ருசாம்ப³வித்³ருமப⁴வாமேதாத்³பி⁴தா³ம்ப்³ரூமஹே।

ஏகஸ்மாது³தி³தம் புராகிலபபௌ ஶர்வ: புராண: புமாந்

ஏதந்மத்⁴யஸமுத்³ப⁴வம் ரஸயதே மாது⁴ர்யரூபம் ரஸம்॥ 21॥

ன்னு ஒரு ஸ்லோகம். “காமாக்ஷியினுடைய மந்தஸ்மிதத்தை, பாற்கடலுக்கு, வெள்ளை வெளேர்னு இருக்கு ‘வெள்ளையா சிரிக்கறானு!’ சொல்வோமே, அந்த மாதிரி, வெண்மையை அடிக்கடி சொல்வார். அதைப் பாற்கடலுக்கு சமானமா ‘ஸாத்³ருஶ்யமா’ சொல்லலாம். வெள்ளையாவும் இருக்கு. அம்பாளுடைய அதரம் சிவப்பா இருக்கற மாதிரி, இந்த பாற்கடல்லயும் பவளம் இருக்கு! ஆனா ஒரு வித்தியாசம். பாற்கடலை முன்ன கடைஞ்ச போது ஒரு ரசம் வந்தது. அது ஹாலாஹல விஷம். அதை பரமேஸ்வரன் மடக்குனு குடிச்சுட்டார். காமாக்ஷியினுடைய மந்தஸ்மிதத்துலேர்ந்து இனிமைன்னு ஒரு ரசம் வந்துண்டே இருக்கு. அதை ரஸிச்சு ரஸிச்சு இன்னிக்கும் குடிச்சிண்டே இருக்கார்!” ன்னு சொல்றார். அப்படி அந்த காமாக்ஷியினுடைய மந்தஸ்மிதம்ங்கிற அம்ருத ரஸம், அதைக் குடிக்கறதுனால பரமேஸ்வரனுக்கு இந்த ஹாலாஹலம் ஒண்ணுமே பண்ணலை.

அந்த மாதிரி, எல்லா ப்ராம்மணாளுமே சாதுக்களா இருந்தான்னா, இந்த இடத்துல அவாளுடைய பத்தினிமார்களை நினைச்சுப் பார்க்கணும். போன தலைமுறை வரைக்குமே, ப்ராம்மணாள்லாம் தன்னலமில்லாத, ஏழ்மையை விரும்பி ஏத்துண்டு, பேராசையில்லாம இருந்தா, ஒரு ரெண்டு தலைமுறை முன்னாடி வரைக்கும்! அதுவும் பெரியவா சொல்லி பண்ணிணானா, ஒண்ணும் கஷ்டத்தை நினைக்கறதில்லை. அதுல அவாத்து மாமி, ஒரு வைதீகான்னா, ஒரு திவஸம் பண்ணி வெச்சுட்டு வந்த போது ‘ஒரு ரூவா கொடுத்தா’ ன்னா, ‘இருக்கட்டும்னா. நன்னா சாப்பாடு போட்டாளா?’ ன்னு கேட்டு, அடுத்து தன் பிள்ளையையும் வைதீகத்துக்கு, வேதம் படிக்கறதுக்கு அனுப்பறான்னா எவ்வளவு பெரிய தியாகம். அப்படி ஒரு தலைமுறை பண்ணினதுனால தான் இன்னிக்கு வேதம் மிஞ்சியிருக்கு நமக்கு. ப்ராம்மண சமூகத்துல, அந்த பெண்கள் பண்ணிண தியாகத்தை நினைச்சு பார்க்கணும்.

அது ஏன் இன்னிக்கு தோணித்துன்னா, இன்னிக்கு காரடையான் நோன்பு. அவா அந்த மாதிரி பெண்கள் கணவன் நன்னா இருக்கணும்னு வேண்டிக்கறா. கணவன் கொழந்தைகளுக்காக தன்னுடைய வாழ்க்கையையே அற்பணிக்கறா. பெரியவா வேத தர்மத்தை சொல்லும் போது, ‘பெண்கள் தர்மத்தைக் காப்பாத்தியிருக்கா! நம்ம தேசத்துல எப்போவுமே பெண்கள் தர்மத்தைக் காப்பாத்தியிருக்கா!’ ன்னு ரொம்ப பெருமையா சொல்றா.அதை பெரியவா ரொம்ப feel பண்ணி சொல்றா. இன்னிக்கு மூக பஞ்சசதி பாராயணம் பண்ணிண்டிருந்தேன். அதுல பாதாரவிந்த சதகம் 100 ஸ்லோகம் முடிச்சவுடனே, 101ஆவது ஸ்லோகம் ஒண்ணு இருக்கு.

पुरामारारातिः पुरमजयदम्बस्तवशतैः

प्रसन्नायांसत्यांत्वयि तुहिनशैलेन्द्रतनये।

अतस्ते कामाक्षि स्फुरतु तरसा कालसमये

समायाते मातर्मममनसि पादाब्जयुगलम्॥१०१॥

புராமாராராதி: புரமஜயத³ம்ப³ஸ்தவஶதை:

ப்ரஸந்நாயாம்ஸத்யாம்த்வயி துஹிநஶைலேந்த்³ரதநயே।

அதஸ்தே காமாக்ஷி ஸ்பு²ரதுதரஸா காலஸமயே

ஸமாயாதே மாதர்மமமநஸி பாதா³ப்³ஜயுக³ளம்॥ 101॥

ன்னு ஒரு ஸ்லோகம். ‘மாராராதி:’ – மதனனை ஜெயிச்ச பரமேஸ்வரன்! ‘புரா’ – முன்னொரு காலத்தில்உன்னை 100 ஸ்லோகத்துனால சந்தோஷப் படுத்தினார். ‘ஸ்தவஶதை: ப்ரஸந்நாயாம் ஸத்யாம் த்வயி’ – நீ ப்ரஸன்னமாயிருக்கும் அந்த வேளையில், 100 ஸ்லோகம் சொல்லி உன்னை சந்தோஷப்படுத்தின அந்த அநுக்கிரஹத்தால ‘புரமஜயது’ – முப்புரத்தை ஜெயிச்சார். ‘துஹிந ஶைலேந்த்³ர தநயே’ – மலையரசனின் மகளே! ‘அதஸ்தே காமாக்ஷி ஸ்பு²ரது தரஸா காலஸமயே ஸமாயாதே’ – காலன் வரும் அந்த சமயத்தில், என்னுடைய மனசில், ‘மாத:’ – உன்னுடைய ‘பாதா³ப்³ஜயுக³ளம்’ – உன்னுடைய பாதத் தாமரைகள் இரண்டும் என்னுடைய மனத்தில் காலன் வரும் வேளையில் ஸ்புரிக்கட்டும்! தோன்றட்டும்! அப்படீன்னு ஒரு பிரார்த்தனை.

இன்னிக்கு தோணித்து, இந்த பெண்கள் காரடையான் நோன்பு போது, நான் சொன்ன மாதிரி அந்த சாதுக்களுக்கு துணையா இருக்கும் போது, ஆண்கள் வெளி உலகத்துல கார்யங்கள் பண்றா. அவா, ‘பரமேஸ்வரன் முப்புரத்தை எரிக்கப் போன போது பார்வதி தேவி சந்தோஷப்பட்டா, போய் அவர் சுலபமா ஜெயிச்சிட்டு வந்தார்’ங்கற மாதிரி, அந்த பெண்கள், ‘ இன்னிக்கு ஆத்துக்காரர் வெளியில போறார். அவர் சௌக்கியமா போய், ஜெயிச்சுட்டு வரணும். சந்தோஷமா இருக்கணும்’, ன்னு வேண்டிண்டா ‘பதிவ்ரதாங்கனாபீஷ்ட பலதாயை நமோ நம:’ ன்னு அவா வேண்டிக்கறதுனால, அந்த கணவன் நன்னா இருக்கணும்னு நினைக்கறதுனால, ஆம்பிளைகள் ஜெயிச்சுட்டு வர்றா. இந்த ரெண்டாவது part ஸ்லோகத்துல, ‘அம்மா! அப்படி நான் இந்த பாதாரவிந்த சதகத்துல இருக்குற 100 ஸ்லோகத்தை நான் சொல்லியிருக்கேன். எனக்கு காலன் வரும் வேளையிலே, உன்னுடைய பாதாரவிந்தம் கிடைக்கணும்’அப்படீங்கிறது பெண்கள் சுமங்கலியா பர்த்தாவுக்கு முன்னாடி போகணும்னு வேண்டிப்பா இல்லையா, அப்படி, ‘அந்த நாள் வரும் போது எனக்கு யமனுடைய வாதை இல்லாம உன்னுடைய பாதத்துல என்னை சேத்துக்கோமா!’ ன்னு சொல்ற மாதிரி இந்த ஸ்லோகம் இருக்கு. அதனால இந்த பாதாரவிந்த சதகத்துல இருக்குற 100 ஸ்லோகத்தை சொல்லி, அம்பாள் கிட்ட பிரார்த்தனை பண்ணிண்டா, பெண்களுக்கு ,‘கணவனும் சந்தோஷமா இருப்பான். கடைசி வரைக்கும் அவாளுக்கு மாங்கல்யம் நிலைக்கும்!’ அப்படீன்னு தோணித்து.

இதே 100 ஸ்லோகத்தை ஆண்களும் ஜபிக்கலாம். அப்போ, ‘தன்னுடைய நன்மையை விரும்பக்கூடிய ஒரு பெண், அவளை சந்தோஷப்படுத்தினா, அவளுடைய ஒரு சிரிப்புக்காக என்ன கஷ்டம் வேணும்னாலும் படலாம்! நம்ம தர்மத்தைக் காப்பாத்தினா அவ சந்தோஷப் படுவா, ஆதரிப்பா!’ அப்படிங்கற மாதிரி ஒரு மனைவி கிடைக்கறதுக்கு இந்த first partல அப்படி வேண்டிக்கலாம். Second partல ‘நான் இருக்கற காலம் என் மனைவி இந்த மாதிரி கூட அனுசரணையா இருக்கணும். ‘அவ காலத்துக்கு அப்புறம் அடுத்த நாளே, அம்மா! என்னையும் உன் பாதத்துல சேத்துக்கோ!’னு வேண்டிக்கலாம். அந்த மாதிரி ஒரு அழகான ஸ்லோகம்.

पुरामारारातिः पुरमजयदम्बस्तवशतैः

प्रसन्नायांसत्यांत्वयि तुहिनशैलेन्द्रतनये।

अतस्ते कामाक्षि स्फुरतु तरसा कालसमये

समायाते मातर्मममनसि पादाब्जयुगलम्॥१०१॥

இந்த உலகத்துல பகவான் சில பேருக்கு அதிகமா சில திறமைகளைக் கொடுக்கறார். இந்த உலகம் அவாளுக்கு ஒண்ணும் பிரதி பண்ண முடியாது. அவா அந்தத் திறமைகளைக் கொண்டு உலகத்துக்கு serve பண்ண வேண்டியது தான். அப்படி பண்ணும் போது இந்த மாதிரி பரமேஸ்வரனுக்கு பார்வதியினுடைய மந்தஸ்மிதம் மாதிரி ஒரு support கிடைக்கும். அதைக் கொண்டு, பகவானுடைய கார்யத்தைப் பண்ணிண்டே போனா மேலான சந்துஷ்டியும், சித்த சுத்தியும், பக்தி, வைராக்கிய, ஞானமும் கிடைக்கும்.

நம: பார்வதீ பதயே… ஹர ஹர மஹாதேவ

Series Navigation<< சிவானந்தலஹரி 30வது ஸ்லோகம் பொருளுரைசிவானந்தலஹரி 33 வது ஸ்லோகம் பொருளுரை >>
Share

Comments (4)

 • Lakshmi Prasanna

  Thanks for the article.

  HARA HARA SHANKARA JAYA JAYA SHANKARA

 • Ramanathan Swaminathan

  Aha arbutham Ganapathyji. Thank you for sharing

 • Prasanna Kumar

  Ganapathy sir

  மிகவும் அழகான விளக்கம்

  sir, eagerly waiting for further slokams. please continue. i am posting your audio recordings in my whatsapp group. There are so many rasikas for your sivanandha lahari pravachanam

 • I agree that Brahmins preserved Vedas by keeping that as their primary focus and livelihood. Many non Brahmins also helped in that. Times have changed as most born in the Brahmin community have taken vaisya traditions and earning by professions or business. But all of us can protect and preserve Vedas by supporting the Veda patasalas.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.