Categories
Shankara Stothrani Meaning

மீனாக்ஷி பஞ்சரத்னம் 2, 3 ஸ்லோகங்கள் பொருளுரை; Meenakshi Pancharathnam slokams 2, 3 meaning

மீனாக்ஷி பஞ்சரத்னம் 2, 3 ஸ்லோகங்கள் பொருளுரை; Meenakshi Pancharathnam slokams 2, 3 meaning

மீனாக்ஷி பஞ்சரத்னத்ல அடுத்த 2 ஸ்லோகங்கள் பார்ப்போம்.

मुक्ताहारलसत्किरीटरुचिरां पूर्णेन्दुवक्त्रप्रभां
शिञ्जन्नूपुरकिङ्किणीमणिधरां पद्मप्रभाभासुराम् 
सर्वाभीष्टफलप्रदां गिरिसुतां वाणीरमासेवितां 
मीनाक्षीं प्रणतोऽस्मि सन्ततमहं कारुण्यवारांनिधिम् ॥२॥

முக்தாஹாரலஸத்கிரீடருசிராம் பூர்ணேந்து³வக்த்ர ப்ரபாம்

ஶிஞ்ஜந்நூபுரகிங்கிணிமணிதராம் பத்³மப்ரபாபாஸுராம்

ஸர்வாபீஷ்டப²லப்ரதா³ம் கி³ரிஸுதாம் வாணீரமாஸேவிதாம்

மீனாக்ஷீம் ப்ரணதோ³ஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம்நிதிம்

‘மீனாக்ஷி‘ –ராஜராஜேஸ்வரி, அதனால தலைல முகுடம் அணிந்து கொண்டிருக்கிறாள். அந்த முகுடத்துல முக்தாஹாரங்களெல்லாம் வெச்சு, அது ரொம்ப அழகா இருக்கு. “முக்தாஹாரலஸத்கிரீடருசிராம் பூர்ணேந்து³வக்த்ர ப்ரபாம்” –  அம்பாளுடைய முகம் பூர்ணசந்திரனைப் போல இருக்கு! ‘ராகாசந்த்³ரஸமானகாந்திவத³னா’ன்னு மூககவி சொல்வாரே அந்த மாதிரி.

இந்த இடத்துல எனக்கு, ‘ஆனந்தஸாகரஸ்தவ’த்லேர்ந்து ஒரு ஸ்லோகம் ஞாபகம் வர்றது. நீலகண்டதீக்ஷிதர்ன்னு ஒரு மஹாகவி! அபார மீனாக்ஷி பக்தர். அவர் மீனாக்ஷி தேவி மேல, ‘ஆனந்தஸாகரஸ்தவம்’ன்னு ஒண்ணு பண்ணிருக்கார். ரொம்ப அற்புதமான ஒரு ஸ்தோத்திரக்ரந்தம்! அந்த ஸ்லோகத்துல பாதி 50 ஸ்லோகம் வரைக்கும், பல விதமான தத்துவங்களையும்ஞானமார்க்கம், யோகமார்க்கம், பக்திமார்க்கம், கர்மமார்க்கம் எல்லாத்தையும் விசாரணை பண்ணி, இதெல்லாம் என்னால என்ன முடியும்? என்னால ஒண்ணுமே முடியாதும்மா இதெல்லாம். நான், உன்னை சரணாகதி பண்றேன்! எனக்கு அது ஒண்ணுதான் தெரியும். “மீனாக்ஷீம் விஶ்வஜனனீம் ஜனனீம் மமைவ ஶரணம் ப்ரபத்³யே”மஹாபெரியவா இதை எடுத்து பேசியிருக்கா இந்த வரியை! இதை திருப்பி  திருப்பி ஜபமா பண்ணிண்டுருக்கலாம் – “மீனாக்ஷீம் விஶ்வஜனனீம் ஜனனீம் மமைவ ஶரணம் ப்ரபத்³யே”…மீனாக்ஷீம் விஶ்வஜனனீம் ஜனனீம் மமைவ… “, அப்படின்னு இதை சொல்லிண்டே இருக்கலாம்னு சொல்லியிருக்கார். அவ்ளோ, பெரியவாளுக்கும் இஷ்டமான ஒரு க்ரந்தம் அது.

அதுல, இந்த முகம் சந்திரனைப் போல இருக்குங்கிறதை சொல்லும்போது, 50க்கு மேல, பாக்கி அம்பது அறுபது ஸ்லோகம், அம்பாளுடைய ரூபலாவண்யத்தை பாதாதிகேசம் வர்ணனை பண்றார். அதுல முகத்தை சொல்லும்போது, “இந்த பிரம்மா உன்னுடைய முகத்தை சந்திரன் போல பண்ணணும்னு ஆரம்பிச்சார்! அந்த சந்திரன்ல கருப்பு கருப்பா ஏதோ இருக்கே, அதெல்லாம் எடுத்து உன்னோட கேசபாரம் ஆக்கிட்டார்! அந்த களங்கம் இல்லாத சந்திரனை உன்னோட முகமா மாத்திட்டார்!”, அப்படின்னு சொல்றார். அந்த மாதிரி ரொம்ப ரசிக்கும்படியாவும் இருக்கும், அங்கங்கே இந்த sense of humorஉம் நன்னா இருக்கும். இந்த கவி வந்து, ‘கலிவிடம்பனம்’ன்னு ஒண்ணு பண்ணியிருக்கார், ‘சிவலீலார்ணவம்’ன்னு பண்ணியிருக்கார். அதெல்லாம் ரொம்பவே ஆனந்தமா இருக்கும். .

“பூர்ணேந்து³வக்த்ர ப்ரபாம்”இந்த சந்திரன்ல அம்பாளை த்யானம் பண்றது, மஹாபெரியவா, குருமூர்த்தி அவரை த்யானம் பண்றதுங்கிறது, நிறைய, எல்லா அம்பாள் ஸ்தோத்திரங்கள்லேயும் வர்றது!

“ஶிஞ்ஜந்நூபுரகிங்கிணிமணிதராம்”அம்பாளுடைய கால்ல சலங்கை, கிங்கிணி அப்படின்னு சத்தம் பண்ணக்கூடிய மணிகளோடு சேர்ந்த, கால்ல நூபுரத்தை அணிந்து கொண்டிருக்கிறாள். இந்த நூபுரத்தைப் பத்தி சொல்லும்போது, மூககவி, 100 ஸ்லோகம் பாதாரவிந்தத்தைப் பத்தி சொல்லிருக்கார், அதுல நெறைய அம்பாளுடைய நூபுரத்தைப் பத்தி சொல்றார். ரொம்ப வேடிக்கையா இருக்கற ஒண்ணை சொல்றேன்.

8வது ஸ்லோகம் பாதாரவிந்தத்துல,

विरावैर्माञ्जीरैः किमपि कथयन्तीव मधुरं
पुरस्तादानम्रे पुरविजयिनि स्मेरवदने
वयस्येव प्रौढा शिथिलयति या प्रेमकलह– 
प्ररोहं कामाक्ष्याः चरणयुगली सा विजयते 8

விராவைர்மாஞ்ஜீரை: கிமபி கத²யந்தீவ மதுரம்

புரஸ்தாதா³னம்ரே புரவிஜயினி ஸ்மேரவத³னே

வயஸ்யேவ ப்ரௌடாஶிதி²லயதி யா ப்ரேமகலஹ

ப்ரரோஹம் காமாக்ஷ்யா: சரணயுக³ளீ ஸா விஜயதே || 8 ||

அப்படின்னு ஒரு ஸ்லோகம். “மாஞ்ஜீரை:” – இந்த கால்ல இருக்கற சலங்கையினுடைய,  “விராவை:” – சத்தத்தை வெச்சிண்டு, “கிமபி கத²யந்தீவ மதுரம்” – ஏதோ மதுரமா பேசறமாதிரி, sweet nothing! அந்த மாதிரி, ஏதோ வேடிக்கையா பேசிண்டு, “புரஸ்தாதா³னம்ரே புரவிஜயினி ஸ்மேரவத³னே” – அம்பாளுக்கும் ஸ்வாமிக்கும் ஊடல், ப்ரணயகலஹம்! அப்போ ஸ்வாமி வேற வழி இல்லாம அம்பாளுடைய கோபத்தைப் பார்த்து, கால்ல விழுந்துடறார். “புரஸ்தாதா³னம்ரே புரவிஜயினி ஸ்மேரவத³னே” – ஆனா சிரிச்சுண்டே இருக்கார்! அவருக்கு தெரியும், அதனால சிரிச்சுண்டே நமஸ்காரம் பண்றார்! அந்த பாதத்துக்கு முன்னாடி, ஸ்வாமி, “புரவிஜயினி” – முப்புரங்களை ஜெயிச்சா என்ன? இங்க வந்து நமஸ்காரம் தான் பண்ணவேண்டிஇருக்கு! அவர் வந்து நமஸ்காரம் பண்றார் ஒரு புன்னகையோட!

அந்த வணங்கும் பரமேஸ்வரனிடத்தில், ஏதோ அந்த சலங்கையினுடைய ஒலியினால, ஏதோ வேடிக்கை பேச்சு பேசறமாதிரி பேசி,  “வயஸ்யேவ ப்ரௌடாஶிதி²லயதி” – இந்தப்ரௌடா⁴’ – ரொம்ப சாமர்த்தியசாலியான ஒரு பெண். இவா ரெண்டு பேருக்கும் நடுவுல ஒரு தோழி போல , இந்த பாதம் இருந்துண்டு, இந்த சலங்கையை வெச்சிண்டு, ஏதோ ஒண்ணு பேசறமாதிரி பேசி, இந்தப்ரேமகலஹ ப்ரரோஹம் ஶிதி²லயதி” – இந்த பிரேமகலஹத்துக்கு காரணமா இருந்த அந்த கோபத்தையேஶிதி²லயதி” – போக்கிடறது! “காமாக்ஷ்யா: சரணயுக³ளீ ஸா விஜயதே” – அப்பேற்பட்ட உன்னுடைய சரணயுகளம் விளங்கட்டும் அப்படின்னு ஒரு ஸ்லோகம்.

இந்த, “ஶிஞ்ஜந்நூபுரகிங்கிணிமணிதராம்” அப்படின்னு படிச்சவுடனே அது ஞாபகம் வந்தது.

“பத்³மப்ரபாபாஸுராம்”தாமரை போன்ற ப்ரபை. மீனாக்ஷி தேவியுனுடைய முழு ஒளியும், தாமரை போன்ற அந்த வர்ணத்தில இருக்கு.

“ஸர்வாபீஷ்டப²லப்ரதா³ம்”எல்லா அபீஷ்டங்களையும் குடுக்கக்கூடிய அம்பாள்!

“கி³ரிஸுதாம்”மலையின் மகள்!

“வாணீரமாஸேவிதாம்” – “ஸசாமரரமாவாணி ஸவ்யதக்ஷிண ஸேவிதாஅப்படின்னு, ரெண்டு பக்கமும், லக்ஷ்மிதேவியும் சரஸ்வதிதேவியும், மீனாக்ஷிக்கு சேவை பண்றா!

“மீனாக்ஷீம் ப்ரணதோ3ஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம்நிதிம்” – ‘இந்த கருணைக் கடலான மீனாக்ஷி தேவியை நான் அடிக்கடி நமஸ்காரம் பண்றேன்!’ அப்படின்னு சொல்றார். இது 2வது ஸ்லோகம்.

இந்த மூணாவது ஸ்லோகம்,

श्रीविद्यां शिववामभागनिलयां ह्रीङ्कारमन्त्रोज्ज्वलां
श्रीचक्राङ्कितबिन्दुमध्यवसतिं श्रीमत्सभानायिकाम् 
श्रीमत्षण्मुखविघ्नराजजननीं श्रीमज्जगन्मोहिनीं 
मीनाक्षीं प्रणतोऽस्मि सन्ततमहं कारुण्यवारांनिधिम् ॥३॥

ஶ்ரீவித்³யாம் ஶிவவாமபா³நிலயாம் ஹ்ரீங்காரமந்த்ரோஜ்ஜ்வலாம்

ஶ்ரீசக்ராங்கித பி³ந்து³மத்யவஸதிம் ஶ்ரீமத்ஸபா நாயிகாம்

ஶ்ரீமத்ஷண்முக²விக்னராஜஜனனீம் ஶ்ரீமஜ்ஜக³ன்மோஹினீம்

மீனாக்ஷீம் ப்ரணதோ³ஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம்நிதிம் ||

” ஶ்ரீவித்³யாம்”அம்பாளப் பத்தி பெரியவா பேசும்போது, அம்பாள் தான் ஞானத்தைக் கொடுக்கிறா! அதனால அம்பாள் தான்ஸ்ரீவித்யை’ன்னு பேரு, அப்படின்னு சொல்லியிருக்கா! எனக்கு இந்த விசயத்துல இவ்ளோதான் தெரியும். அதுக்குமேல எனக்கு, இந்த ஸ்தோத்திரங்கள் படிக்கத்தான் தெரியும். அதனால, ‘மீனாக்ஷி ஸ்ரீவித்³யா ஸ்வரூபிணி’! “ஆதிக்ஷாந்த அக்ஷராத்மிகாம் வித்³யாம்” அப்படின்னு மூககவி சொல்றார்! அதுமாதிரி ஞானத்தைக் கொடுக்கிறவள் அம்பாள்.  

“ஶிவவாமபா³நிலயாம்”பரமேஸ்வரனுடைய வாமபாகத்தில் உறைபவள். இந்த இடத்திலயும்ஆனந்தஸாகரஸ்தவ’த்தில ஒரு ஸ்லோகம் ஞாபகம் வர்றது! மஹாபெரியவா கூட இதை எடுத்து, விஸ்தாரமா உபன்யாசம் பண்ணியிருக்கா.

அந்த நீலகண்டகவி சொல்றார், “அம்மா, இந்த பரமேஸ்வரனுக்கு, ‘காமனைக் கண்ணால் எரித்தவர்’, ‘காலனைக் காலால் உதைத்தவர்’, இப்படின்னு பல பட்டப்பேர். இந்தகாமனை கண்ணால் எரித்தவர்’ங்கறது, இடதுபக்கம் நீ இருக்கே! பாதி கண்ணு உன்னோடது! அப்படி இருக்கறச்சே, அவர் எப்படி அந்தகாமனைக் கண்ணால் எரித்தவர்’ன்னு சொல்ல முடியும்? நீ தானே பாதி கண்ணு! சரி இதாவது போனா போகட்டும். ‘காலனைக் காலால் உதைத்தவர்’ங்கற பேரை அவர் எப்படி தட்டிண்டு போகமுடியும்? எந்த கால் உதைச்சது? இடதுகால்தானே! அது உன் கால்தானே! அதோட, ‘காலனை காலால் உதைத்தவர்’ன்னு எப்படி பரமேஸ்வரனை சொல்றது? உன்னையில்ல சொல்லணும்!”, அப்படின்னு வேடிக்கை பண்றார். அந்த மாதிரி, “ஶிவவாமபா³நிலயாம்”.

“ஹ்ரீங்காரமந்த்ரோஜ்ஜ்வலாம்” – ‘ஹ்ரீங்காரம்’ங்கற மந்திரத்தில் ஜொலிப்பவள்!

“ஶ்ரீசக்ராங்கித பி³ந்து³மத்யவஸதிம்”ஸ்ரீசக்கரத்தின் பிந்து மத்தியில் வசிப்பவள்.

“ஶ்ரீமத்ஸபாநாயகீம்” – “ஶ்ரீமத்ஸபாநாயிகாம்”, “நாயகீம்” ரெண்டு version இருக்கு. “ஶ்ரீமத்ஸபாநாயிகாம்” – தேவர்களுடைய சபையில் வணங்கப்படுபவள்.

ஶ்ரீமத்ஷண்முக²விக்னராஜஜனனீம் “ஷண்முகருக்கும், விக்னராஜருக்கும் அம்மா. பிள்ளையாருக்கும் முருகனுக்கும் அம்மா. இந்த இடத்துல மூகபஞ்சசதில ஒரு ஸ்லோகம் இருக்கு (மந்தஸ்மித ஶதகம்),

हेरम्बे गुहे च हर्षभरितं वात्सल्यमङ्कूरयत्
मारद्रोहिणि पूरुषे सहभुवं प्रेमाङ्कुरं व्यञ्जयत्
आनम्रेषु जनेषु पूर्णकरुणावैदग्ध्यमुत्तालयत्
कामाक्षि स्मितमञ्जसा तव कथङ्कारं मया कथ्यते 75

ஹேரம்பே³ கு³ஹே ச ஹர்ஷபரிதம் வாத்ஸல்யமங்கூரயத்

மாரத்³ரோஹிணி பூருஷே ஸஹபுவம் ப்ரேமாங்குரம் வ்யஞ்ஜயத்

ஆனம்ரேஷு ஜனேஷு பூர்ணகருணாவைத³க்³த்யமுத்தாலயத்

காமாக்ஷி ஸ்மிதமஞ்ஜஸா தவ கத²ங்காரம் மயா கத்²யதே || 75||

‘”ஹேரம்பே³ ச”பிள்ளையார்ட்டையும், “கு³ஹே ச”முருகன்ட்டையும், உன்னுடைய மந்தஸ்மிதம் வாத்ஸல்யத்தைக் காமிக்கறது. அதே பரமேஸ்வரன்ட்ட பிரேமையை காமிக்கறது! நமஸ்க்காரம் பண்றாவாள்ட்ட கருணையைக் காமிக்கறது. இதோட பெருமையை நான் எப்படி சொல்லமுடியும்?’, அப்படின்னு ஒரு அழகான ஸ்லோகம்.

அந்த மாதிரி, “ ஶ்ரீமத்ஷண்முக²விக்னராஜஜனனீம் ஶ்ரீமஜ்ஜக³ன்மோஹினீம்”உலகத்தையே மோகிக்கறா, மோகிக்கப்பண்ணறா அம்பாள். எனக்கு இது தோணும், இந்த பிள்ளையாரையும் முருகரையும் பெற்றெடுத்துனாலேயே, அவள்ஜகன்மோஹினீயா இருக்கா, அப்படின்னு, அம்மாவா இருக்கும் போது தான் அந்த அழகு!

“மீனாக்ஷீம் ப்ரணதோ³ஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம்நிதிம்” -கருணைக்கடலான மீனாக்ஷி தேவியை இடையறாது வணங்குகிறேன் அப்படின்னு சொல்றார்.

இந்தஶ்ரீமஜ்ஜக³ந்மோஹினீம்”ங்கறது இதேஜகன்மோஹினீ”ங்கர வார்த்தை மூகபஞ்சசதில ஒரு ஸ்லோகத்துல வர்றது. (ஸ்துதி ஶதகம்)

आलोके मुखपङ्कजे दधती सौधाकरीं चातुरीं
चूडालङ्क्रियमाणपङ्कजवनीवैरागमप्रक्रिया
मुग्धस्मेरमुखी घन्सतनतटीमूर्च्छालमध्याञ्चिता
काञ्चीसीमनि कामिनी विजयते काचिज्जगन्मोहिनी 17

ஆலோகே முக²பங்கஜே ³தீ ஸௌதாகரீம் சாதுரீம்

சூடா³லங்க்ரியமாணபங்கஜவனீவைராக³மப்ரக்ரியா

முக்³ஸ்மேரமுகீ² னஸ்தனதடீமூர்ச்சா²லமத்யாஞ்சிதா

காஞ்சீஸீமனி காமினீ விஜயதே காசிஜ்ஜக³ன்மோஹினீ || 17 ||

“காஞ்சீஸீமனி”காஞ்சியின் நிலையில் ஒரு ஸ்திரீ விளங்குகிறாள்! அந்த பெண்காசிஜ்ஜக³ன்மோஹினீ “, உலகத்தையே மயக்கறா!

எப்படின்னா, “ஆலோகே” – பார்வையினாலும்,

முக²பங்கஜே ச”முகத்தாமரையினாலும்,

ஸௌதாகரீம் சாதுரீம்  ³தீ” – இந்த இடத்துலஸௌதாகரீ”ன்னா அமிர்தம்ன்னு ஒரு அர்த்தம், ‘அந்த பார்வையும், முகமும், அமிர்தம்போல இருக்குஅப்படின்னு ஒரு அர்த்தம் சொல்லலாம். ‘ஆலோகே‘ – அந்த பார்வை அமிர்தம்போல இருக்கு, முகம் சந்திரனை போல இருக்கு, இப்போகூட ஆச்சாரியாள், அம்பாளை சொல்லும்போது, “பூர்ணேந்துவக்த்ரப்ரபாம்”ன்னு சொன்னாரில்லையா,  அந்த மாதிரி சொல்லலாம்.

“சூடா³லங்க்ரியமாண பங்கஜவனீ வைராக³மப்ரக்ரியா”  – “பங்கஜவனம்” – ஒரு தாமரைக்காடு அல்லது தாமரை ஓடைக்கு,வைராகமம்”விரோதத்தை காண்பிக்கக்கூடிய, அதாவது, சூரியன் வந்தா தாமரை மலரும், சந்திரன் வந்தா தாமரை வாடும், அதனால சந்திரன் தாமரைக்கு எதிரி, அப்படிங்கற மாதிரி கவித்துவமா சொல்றார். அப்படி இருக்கக்கூடிய சந்திரனைசூடா³லங்க்ரியமாண” – தலைல அலங்காரமாக அணிந்து கொண்டிருப்பவளும்!  

“முக்³ஸ்மேரமுகீ²” – அழகான புன்சிரிப்போடு கூடிய முகத்தை கொண்டவளும்!

“கனஸ்தனதடீ”கன ஸ்தனங்கள் கொண்டவளும்.

“மூர்ச்சா²லமத்யாஞ்சிதா”மெலிந்த இடுப்பை கொண்டவளும்!

அப்படி அந்த காமாக்ஷி தேவி, “காஞ்சீஸீமனி காமினீ விஜயதே காசிஜ்ஜக³ன்மோஹினீ “இப்படி ஜகன்மோஹனம் பண்ணிண்டு, காமாக்ஷி காஞ்சிபுரத்தில இருக்காள், அதே மாதிரி ஜகன்மோஹினியா மீனாக்ஷிகாஞ்சி காமாக்ஷி, மதுரை மீனாக்ஷி, காசி விசாலாக்ஷி எல்லாமே அம்பாள்தானே! அந்த ஜகன்மோஹினியா மீனாக்ஷிதேவி இருக்கா! அவளை, “ ஶ்ரீமத்ஷண்முக²விக்னராஜஜனனீம்”அந்த கணபதிக்கும் முருகனுக்கும் அம்மாவான, எனக்கும் அம்மாவான, கருணைக்கடலான மீனாக்ஷியை வணங்குகிறேன் அப்படின்னு சொல்றார்.

ஶ்ரீவித்³யாம் ஶிவவாமபா³நிலயாம் ஹ்ரீங்காரமந்த்ரோஜ்ஜ்வலாம்

ஶ்ரீசக்ராங்கித பி³ந்து³மத்யவஸதிம் ஶ்ரீமத்ஸபாநாயகீம்

ஶ்ரீமத்ஷண்முக²விக்னராஜஜனனீம் ஶ்ரீமஜ்ஜக³ன்மோஹினீம்

மீனாக்ஷீம் ப்ரணதோ³ஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம்நிதிம் ||

ரொம்ப அழகான ஒரு ஸ்லோகம்! இன்னிக்கு இதோட பூர்த்தி பண்ணிப்போம்.

Series Navigation<< மீனாக்ஷி பஞ்சரத்னம் முதல் ஸ்லோகம் பொருளுரை; Meenakshi Pancharathnam slokam 1 meaningமீனாக்ஷி பஞ்சரத்னம் 4, 5 ஸ்லோகங்கள் பொருளுரை; Meenakshi Pancharathnam slokams 4, 5 meaning >>

One reply on “மீனாக்ஷி பஞ்சரத்னம் 2, 3 ஸ்லோகங்கள் பொருளுரை; Meenakshi Pancharathnam slokams 2, 3 meaning”

ஜய ஜய ஷங்கர ஹர ஹர ஷங்கர 🙏🙏
ரத்ன மகுடமாக இருக்கு , மீனாக்ஷி பஞ்ச ரத்ன விளக்கம்.
ஸ்ரீ சக்கரத்தில் மத்தியில் வசிப்பவளே, கணபதிக்கும், சுப்ரமண்யருக்கும், எனக்கும் தாயான மீனாக்ஷியே! அனந்த கோடி நமஸ்காரங்கள்.
ஆனந்த ஸாகர ஸ்தவமும், மூக பஞ்சசதி உவமை அருமை, கவிஞர்கள் ஏகோபித்தமாக அம்பாளை உபாசனை செய்வது நன்றாக விளங்குகிறது.
மேலும் ஸ்ரீ பெரியவா மந்திர உபதேசம் ,”
மீனாக்ஷீம் விஶ்வஜனனீம் ஜனனீம் மமைவ ஶரணம் ப்ரபத்³யே” என்று மீனாக்ஷியை சரணம் அடைய ஆனந்த ஸாகர ஸ்தலத்தில் இருந்து காண்பித்து கொடுத்திருக்கார்.
அம்பாளின் பாத தியானமும், பரமேஸ்வரன், பார்வதி ப்ரணய கலஹத்தில் பரமேஸ்வரன் அம்பாளின் பாதத்தில் சரண் அடைந்தார் என்ற ஹாஸ்யமான வரிகளின் விளக்கமும் மேலும் பக்தி பாதையில் பயணம் செய்ய அருமையான, அருள் நிறைந்த பதிவு.
“மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததமஹம் காருண்ய வாராய் நிதிம்”.🌹🌹

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.