தோடகாஷ்டகம் தமிழில் பொருள்; Meaning of thotakashtakam in tamil

தோடகாஷ்டகம் தமிழில் பொருள்; Meaning of thotakashtakam in tamil

இன்னிக்கு சங்கர ஜயந்தி புண்யகாலம். உலகம் முழுக்க ஆசார்யாளோட ஜயந்தியை ரொம்ப ஆனந்தமா கொண்டாடிண்டிருக்கா. சங்கர ஜயந்தி அன்னிக்கு தோடகாச்சாரியாள் பண்ண “தோடகாஷ்டம்”ங்கற அந்த ஸ்தோத்திரத்தை சொல்லி ஆசார்யாளை நமஸ்காரம் பண்ணுவோம்.  மகாபெரியவா பண்ணி காண்பிச்சிருக்கா. இன்னிக்கு உலகம் முழுக்க ஆசார்யாளை கொண்டாடறான்னா, பெரியவா காண்பிச்ச குரு பக்திதான். பெரியவா அவ்வளவு ஆசையா சங்கர ஜயந்தியை கொண்டாடி, எல்லாரும் கொண்டாடணும்னு உத்ஸாகப்படுத்தி, எந்த ஊருல இருந்தாலும் அங்க ஒரு ரதத்துல ஆச்சார்யாளை எழுந்தருளப் பண்ணி, உத்சவங்களெல்லாம் நடத்தி, அப்படி ஒரு குரு பக்தி! பெரியவாளுடைய குருபக்தியை பார்த்தாலே, ஜனங்களுக்கு இப்படி கொண்டாடணும்னு தெரிஞ்சுப்போம்.

ஆந்திர தேசத்துல பெரியவா இருக்கும்போது, 68ல ஒரு அஞ்சு நிமிஷம் சமஸ்க்ருதத்துலேயும் ஒரு அஞ்சு நிமிஷம் தெலுங்குலேயும் ஆசார்யாளோட மஹிமையை பத்தி பேசியிருக்கா. இன்னிக்கி தான் முதல்தடவை நான் கேட்டேன். அவ்ளோ ஆனந்தமா இருந்தது. அதுல தோடகாச்சார்யாளைப் பத்தி சொல்லி,

गुरुपुंगव पुंगवकेतन ते समतामयतां नहि कोऽपि सुधीः

शरणागतवत्सल तत्त्वनिधे भव शंकर देशिक मे शरणम् ७॥

கு³ருபுங்க³ புங்க³வகேதந தே ஸமதாமயதாம் நஹி கோऽபி ஸுதீ:

ஶரணாக³தவத்ஸல தத்த்வநிதே ஶங்கர தே³ஶிக மே ஶரணம் 7

அப்படீன்னு சொல்லி ‘இதி ஸ்லோகோபி உபலப்யதே’ ‘தேஷாம் சிஷ்யேஷு தோடகாசார்யைஹி ஏகம் அஷ்டகம் விரசிதம்’ அப்படீன்னு சொல்லிட்டு, ‘அதுல இந்த மாதிரி ஒரு ஸ்லோகமும் இருக்கு!’, ‘தேஷாம் தோடகாசார்யாணாம் குருபக்திரஸபூர்ணானாம் அயம் ஸ்லோகம்’ – குருபக்தி ரஸத்தில் நிரம்பிய தோடகாச்சாரியாள் மூலம் இந்த ஸ்லோகம் பண்ணப்பட்டது. ‘ப ஶங்கர தே³ஶிக மே ஶரணம் இதி, அஸ்மாகம் தோடகாசார்யாணாம் அயம் ஸ்லோகமேவ ஶரணம்’ அப்படீன்னு சொல்றார் . ‘ப ஶங்கர தே³ஶிக மே ஶரணம்’ என்று ஒவ்வொரு அடியிலயும் முடியும் இந்த தோடகாஷ்டகம் என்ற ஸ்லோகம் “ஆசார்யாளுடைய சரணம் எனக்கு புகலிடம்!”னு அவர் சொல்றார். “அந்த ஸ்லோகம் நமக்கெல்லாம் புகலிடம்!”னு பெரியவா சொல்றா. இந்த ஸ்லோகத்தை சொல்லிண்டிருந்தா ஆசார்யாளோட அநுகிரஹம் கிடைக்கும்னு பெரியவாளுக்கு அதுல ரொம்ப நம்பிக்கை. பெரியவாளை யாராவது சின்ன குழந்தையா இருந்தாலும் சரி, எவ்வளவு பெரியவாளா இருந்தாலும் சரி, தோடகாஷ்டகம் சொல்லி நமஸ்காரம் பண்ணா, அந்த தண்டத்தை வெச்சுண்டு சிலைப் போல அத சொல்லி முடிக்கற வரைக்கும் பெரியவா அந்த நமஸ்காரத்தை ஏத்துப்பா. தான் ஏத்துக்கமாட்டா! ஆசார்யாளை நினைச்சு பண்றாளேன்னு ஆசார்யாளுக்கு மானசீகமா தானும் அந்த நமஸ்காரத்தை கொடுப்பா! அப்படி அதுல பெரியவாளுக்கு பக்தி.

அந்த ஸ்லோகத்துடைய அர்த்தத்தைப் பார்க்கலாமேனு ஒரு ஆசை.

विदिताखिलशास्त्रसुधाजलधे महितोपनिषत् कथितार्थनिधे

हृदये कलये विमलं चरणं भव शंकर देशिक मे शरणम् १॥

விதி³தாகி²லஶாஸ்த்ரஸுதாஜலதே மஹிதோபநிஷத் கதி²தார்த²நிதே

ஹ்ருʼ³யே கலயே விமலம் சரணம் ஶங்கர தே³ஶிக மே ஶரணம் 1

இதோட கதை எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். தோடகாச்சாரியாள்னு நாலு முக்கிய சிஷ்யர்கள்ல நாலாவதா இருந்தார். அது தவிர ஆசார்யாளுக்கு ஆறாயிரம் சிஷ்யர்கள் இருந்தான்னு சங்கர விஜயங்கள்ல எல்லாம் போட்டிருக்கு. ஆறாயிரம் சிஷ்யாள் இருந்தான்னு ஒரு ஸ்லோகம் கம்போடியாவுல இருந்த கல்வெட்டுல இருக்குன்னு பெரியவா அதை அவ்ளோ ஆசையா சொல்வா. இந்த தோடகர்ங்கிறவர் அதிகமா ஆச்சர்யாளுக்கு சிஸ்ருஷை பண்ணிண்டிருக்கார். அவருக்கு அவ்ளோ புத்தி போறாது அப்படீன்னு மத்தவாளோட எண்ணம். அவர் துணி தோய்ச்சுண்டிருப்பார். அந்த மாதிரி கைங்கர்யம் பண்ணிண்டிருப்பார். ஒருநாள் ஆசார்யாள் பாடத்துக்கு உட்கார்ந்திருக்கார். அந்த தோடகர் வரட்டும்னு சொல்லி காத்துண்டிருக்கார். மத்த சிஷ்யால்லாம் முகத்தை சுளிக்கறா. அவருக்கு என்ன புரியப்போறது. அவர் வந்த என்ன ஆகப்போறதுன்னு அவாளுக்கு எண்ணம். இதை ஆசார்யாள் புரிஞ்சுண்டு தான் இருந்த இடத்துலேயே தோடகருக்கு ஞானத்தை அநுகிரஹம் பண்றார். அங்கயிருந்து அந்த தோடகர் கையை தட்டிண்டு

விதி³தாகி²லஶாஸ்த்ரஸுதாஜலதே மஹிதோபநிஷத் கதி²தார்த²நிதே

ஹ்ருʼ³யே கலயே விமலம் சரணம் ஶங்கர தே³ஶிக மே ஶரணம் 1

அப்படீன்னு பாடிண்டு, குதிச்சுண்டு, “என்னுடைய குருநாதரான ஆசார்யாள் சாக்ஷாத் பரமேஸ்வரன்! அவர் எனக்கு ஞானத்தை அநுகிரஹம் பண்ணிட்டார்!”னு அவரை ஸ்தோத்ரம் பண்ணிண்டு குதிச்சுண்டு ஓடி வரார். அவரோட அந்த  நிலைமையை பார்த்துதான் மத்தவாள்லாம் புரிஞ்சுக்கறா. ஞானம்கிறது புஸ்தகம் படிச்சுத்தான் வரணும்ங்கிறது இல்லைன்னு.

அதுல அந்த first வார்த்தையே ‘விதி³தாகி²லஶாஸ்த்ரஸுதாஜலதே’ – இந்த சாஸ்திரங்கள்லாம் அமிர்தமயமா இருக்கு. அதோட உருவமா இருக்கார். அந்த சாஸ்திரங்களை எல்லாம் கரை கண்டவர் ஆசார்யாள்.

‘மஹிதோபநிஷத் கதி²தார்த²நிதே இந்த உபநிஷத் எதை பரம்பொருள்னு சொல்றதோ, அந்த அத்வைதத்துல சொல்லப்பட்ட பரம்பொருள் இங்க இதோ என் முன்னாடி குருவா இருக்காரே.

‘ஹ்ருʼ³யே கலயே விமலம் சரணம்’ – அந்த ஆசார்யாளுடைய விமலமான தூய்மையான அவருடைய சரணங்களை என் மனதில் தியானிக்கறேன்.

‘ப ஶங்கர தே³ஶிக மே ஶரணம்’ – ஹே சங்கர குருவே! எனக்கு நீங்கள் புகலிடமா இருக்க வேண்டும்.

அடுத்த ஸ்லோகத்துல,

करुणावरुणालय पालय मां भवसागरदुःखविदूनहृदम्

रचयाखिलदर्शनतत्त्वविदं भव शंकर देशिक मे शरणम् २॥

கருணாவருணாலய பாலய மாம் வஸாக³ரது:³²விதூ³நஹ்ருʼ³ம்

ரசயாகி²லத³ர்ஶநதத்த்வவித³ம் ஶங்கர தே³ஶிக மே ஶரணம் 2

‘கருணாவருணாலய’ – ‘வருணாலயம்’னா ஜலம். ஜலம் இருக்கிற கடல். ‘கருணா வருணாலய’ னு கூப்படறார். கருணைக் கடலே!

‘மாம் பாலயம்’ – என்னைக் காப்பாத்துங்கோ.

‘பவஸாக³ரது:³²விதூ³நஹ்ருʼ³ம்’ – இந்த பவ சாகரத்துல விழுந்து என் மனசு தத்தளிச்சு தளர்ந்து போய்டுத்து.

‘ரசயாகி²லத³ர்ஶநதத்த்வவித³ம்’ – எல்லா தர்சனங்களோட தத்துவத்தையும் நான் இருக்கிற நிலைமையில் படிச்சு புரிஞ்சுக்க முடியாது. நீங்களே எனக்கு புரிய வெச்சுடுங்கோ.

‘ப ஶங்கர தே³ஶிக மே ஶரணம்’ – ஹே சங்கர குருவே! நீங்கள்தான் எனக்கு புகலிடம்.

भवता जनता सुहिता भविता निजबोधविचारण चारुमते

कलयेश्वरजीवविवेकविदं भव शंकर देशिक मे शरणम् ३॥

வதா ஜனதா ஸுஹிதா விதா நிஜபோ³விசாரண சாருமதே

கலயேஶ்வரஜீவவிவேகவித³ம் ஶங்கர தே³ஶிக மே ஶரணம் 3

உங்களால ‘ஜனதா ஸுஹிதா விதா’ – நீங்க இந்த ஞான உபதேசம், இந்த பக்தி க்ரந்தங்கள் எல்லாம் பண்ணிக் கொடுத்ததுனால ஜன சமூகமே அதுனால ஒரு மறுமலர்ச்சி அடைஞ்சி உலகமே ரொம்ப சந்தோஷப்படறது.

‘நிஜபோ³விசாரண சாருமதே’ – ‘நிஜபோதம்’னா ஆத்மா போதம். தன்னைப் பற்றின அறிவு. அந்த விசாரம் பண்றதுக்கு உங்களைவிட,

‘சாருமதே’ – தெளிந்த புத்தி கொண்டவர்கள் யாரும் இல்லை. அந்த ஆத்ம விசாரம் பண்றதோட வழியை நீங்கள்தான் தெளிவாக தெரிந்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள்தான் அத மத்தவாளுக்கு சொல்லியும் கொடுக்க முடியும்.

‘கலயேஶ்வரஜீவவிவேகவித³ம்’ – ஈஸ்வரன் ஜீவன் அதோட வித்யாசம் அந்த விவேகத்தை எனக்கு அருளுங்கள்.

ஶங்கர தே³ஶிக மே ஶரணம்’ – ஹே சங்கர குருவே! நீங்களே எனக்கு புகலிடம்.

भव एव भवानिति मे नितरां समजायत चेतसि कौतुकिता

मम वारय मोहमहाजलधिं भव शंकर देशिक मे शरणम् ४॥

ஏவ வாநிதி மே நிதராம் ஸமஜாயத சேதஸி கௌதுகிதா

மம வாரய மோஹமஹாஜலதிம் ஶங்கர தே³ஶிக மே ஶரணம் 4

‘பவான்’னா பரமேஸ்வரன். ‘பவான் ப ஏவ’ – நீங்கள்தான் பரமேஸ்வரன் என்று ‘நிதராம் ஸமஜாயத’ – இதை நான் எப்பவோ புரிஞ்சுண்டேன்.

அதனால ‘சேதஸி கௌதுகிதாஎன் மனசுல உத்ஸாகம் குதூகலம் பொங்கி வழியறது. இது எனக்கு தெரிஞ்சுதே! இதுக்குமேல எனக்கு என்ன வேணும்? என்னுடைய ஆசார்யன் சாக்ஷாத் ஈஸ்வர ஸ்வரூபம்ங்கிறது இன்னிக்கு நான் உணர்ந்தேன்.

முருகன் தனிவேல் முனிநம் குருவென்று
அருள்கொண்டு அறியார் அறியுந் தரமோ
உருவன்று அருவன்று உளதன்று இலதன்று
இருளன்று ஒளியன்று என நின்றதுவே!

என்று சொன்னார் அவர். அந்த ஒரு secondல அந்த ஈஸ்வரனே எனக்கு குருவா வந்திருக்கார்ங்றபோது எல்லா பயமும் போயிடும். அவர்கிட்ட சரணாகதி பண்ணா போறும் வேற என்ன எனக்கு வேணும் அப்படீங்கிற ஒரு குதூகலம்.

‘ப ஏவ வாநிதி மே நிதராம் ஸமஜாயத சேதஸி கௌதுகிதா

மம வாரய மோஹமஹாஜலதிம் ஶங்கர தே³ஶிக மே ஶரணம் ||’

இந்த பரமேஸ்வரனே எனக்கு குருவா வந்திருக்கார். அவரை நான் சரணாகதி பண்ணியிருக்கேன். அவர் பாதங்களை பற்றியிருக்கேன். ‘புகலிடம்’னா சரணம்ங்கிறதுக்கு sanctuaryங்கிற மாதிரி. ‘சரணாலயம்’னு சொல்றாளே அந்த மாதிரி. எங்க இருந்தா நமக்கு பயம் கிடையாதோ அந்த இடம். அது நான் இருக்கேன். ஆனா ஒரே ஒரு காரணத்துனால நான் வழி தவறி போறதுக்கு வாய்ப்பிருக்கு. இது கிடைச்சாச்சு தான். ஆனா ‘மோஹமஹாஜலதின்னு ஒண்ணு இருக்கு. ‘மோஹம்’னா எது துக்கத்தை கொடுக்குமோ அதுல சந்தோஷம்னு நினைச்சு போயி விழறது. அந்த மோஹக் கடல்ல நான் திரும்பவும் போய் விழுந்துடாம என்னை காப்பாற்றுங்கள். ‘மம வாரய மோஹமஹாஜலதிம்’ –  அந்த மோஹக் கடல்ல திரும்பவும் போய் நான் விழுந்துடாமல் என்னை உங்களோட பாதத்துல பிடிச்சு வெச்சுக்கோங்கோ!

सुकृतेऽधिकृते बहुधा भवतो भविता समदर्शनलालसता

अतिदीनमिमं परिपालय मां भव शंकर देशिक मे शरणम् ५॥

ஸுக்ருʼதேऽதிக்ருʼதே ³ஹுதா வதோ விதா ஸமத³ர்ஶனலாலஸதா

அதிதீ³னமிமம் பரிபாலய மாம் ஶங்கர தே³ஶிக மே ஶரணம் 5

அதிகமாக புண்யம் பண்ணவா – ‘ஸுக்ருʼதேऽதிக்ருʼதே’

‘ப³ஹுதா’ – பல வருஷங்களா பல புண்யங்கள் பண்ணவா! இப்போ மத்த சிஷ்யாளெல்லாம் இருக்காளே. இவாள்லாம் எவ்வளவோ புண்யம் கார்யம் பண்ணியிருக்கா. எவ்வளவோ புத்திமான்களா இருக்கா.

‘பவிதா ஸமத³ர்ஶனலாலஸதா’ – அவாளுக்கு தான் அந்த ‘ஸமத³ர்ஶனம்’ங்கிற  ஞானத்தை அடைய வேண்டும்ங்கிற ஊக்கம் ரொம்ப புண்யம் பண்ணவாளுக்குத்தான் வர்றது. ஆனா நான் அதி தீனன். அது எல்லாம் ஒண்ணுமே தெரியல. எனக்கு புண்யமும் பண்ணத் தெரியல. எனக்கு அந்த மாதிரி ஞான நாட்டமும் இல்லை. ஹே சங்கர குரு! எனக்கு நீங்கதான் கதி!

‘அதிதீ³னமிமம் பரிபாலய மாம்’ – நீங்க காப்பாத்தறதுன்னு தீர்மானம் பண்ணிட்டா எனக்கு ஒரு qualificationனும் வேண்டாம். நான் ஒரு புண்யமும் பண்ண வேண்டாம். ஒரு விதமான ஞான நாட்டமும் எனக்கு வேண்டாம். நீங்க முடிவு பண்ணியாச்சுன்னா, அப்புறம் நான் உங்க பாரம். எனக்கு ஒரு பாரமும் கிடையாதுன்னு சொல்றார். அதுனால என்னை காப்பாத்துங்கோன்னு சொல்லி நமஸ்காரம் பண்றது ஒண்ணுதான் எனக்கு தெரியும். அதை நான் பண்றேன்.

जगतीमवितुं कलिताकृतयो विचरन्ति महामहसश्छलतः

अहिमांशुरिवात्र विभासि गुरो भव शंकर देशिक मे शरणम् ६॥

ஜக³தீமவிதும் கலிதாக்ருʼதயோ விசரந்தி மஹாமஹஸஶ்ச²லத:

அஹிமாம்ஶுரிவாத்ர விபாஸி கு³ரோ ஶங்கர தே³ஶிக மே ஶரணம் 6

‘ஜக³தீமவிதும்’ – உலகத்தைக் காப்பாத்தறதுக்காக,

‘மஹாமஹஸ:’ – பெரிய மஹான்கள்! ஒளி பொருந்திய நிறைய மஹான்கள்,

‘கலிதாக்ருʼதயோ விசரந்தி’ – இந்த உலகத்துல, ‘ச²லத:’ – பார்த்தா தெரியாது. நாம ஏதோ நினைச்சுண்டு இருப்போம். அவாளை மஹான்களா அடையாளம் கண்டுகொள்ளக் கூட நமக்கு தெரியாம இருக்கலாம். ஆனா உலகத்துல இந்த மாதிரி,

शान्ता महान्तो निवसन्ति सन्तो वसन्तवल् लोकहितं चरन्तः |

तीर्णाः स्वयं भीमभवार्णवं जनान् अहेतुनान्यान् अपि तारयन्तः ||

சாந்தா மஹாந்தோ நிவஸந்தி ஸந்தோ வஸந்தவல் லோகஹிதம் சரந்த: |

தீர்ணா: ஸ்வயம் பீம பவார்ணவம் ஜநாந் அஹேதுநா (அ)ந்யாநபி தாரயந்த: ||

அப்படீன்னு ‘விவேக சூடாமணி’ல சொல்றார். அந்த மாதிரி மஹான்கள் இருப்பா.

ஆனா அந்த மாதிரி மஹான்களுக்கு நடுவுல, ‘ஹிமாம்ஶு’ன்னா சந்திரன். ‘அஹிமாம்ஶு’ன்னா சூரியன். ‘அஹிமாம்ஶுரிவாத்ர விபாஸி கு³ரோ’ – ஹே சங்கர குரு! மத்தவாள்லாம் நக்ஷத்ரம் மாதிரி இருக்கா. யாராவது ஒண்ணு ரெண்டு பேர் சந்திரன் மாதிரி இருப்பாளாம். நீங்க ஞானவான்களோட கூட்டத்துல சூரியன் மாதிரி ப்ரகாசிக்கறேள்.

‘அஹிமாம்ஶுரிவாத்ர விபாஸி கு³ரோ ஶங்கர தே³ஶிக மே ஶரணம்’ –  உங்களை நான் சரணடைகிறேன். இந்த வார்த்தை நாம ஆசார்யாளை 2500 வருஷம் முன்னாடி பாத்திருப்போமான்னு தெரியாது! அப்போ ஜன்மம் எடுத்தோமோ தெரியாது! அப்போ நமஸ்காரம் பண்ணோமா தெரியலை. இந்த வார்த்தை மஹா பெரியவாளுக்கு பொருந்தும் இல்லையா? எத்தனையோ மஹான்கள் நூறு வருஷத்துல. ஆனா, ‘அஹிமாம்ஶுரிவாத்ர விபாஸி கு³ரோ ஶங்கர தே³ஶிக மே ஶரணம்’ – நீங்கள்தான் எனக்கு கதி.

गुरुपुंगव पुंगवकेतन ते समतामयतां नहि कोऽपि सुधीः

शरणागतवत्सल तत्त्वनिधे भव शंकर देशिक मे शरणम् ७॥

கு³ருபுங்க³ புங்க³வகேதந தே ஸமதாமயதாம் நஹி கோऽபி ஸுதீ:

ஶரணாக³தவத்ஸல தத்த்வநிதே ஶங்கர தே³ஶிக மே ஶரணம் 7

‘கு³ருபுங்க³வ’ – குரு புங்கவர்களுக்குள்ள ரொம்ப ஸ்ரேஷ்டர்!

‘புங்க³வகேதந’ – ரிஷப கொடியுடைய பரமேஸ்வரனே நீங்கள்தான்.

‘தே ஸமதாமயதாம் நஹி கோऽபி ஸுதீ:’ – உங்களுக்கு சமமான புத்திமான் உலகத்துல யாருமே கிடையாது. இது வந்து அன்னிக்கும் பொருந்தும். இன்னிக்கும் பொருந்தும். ஏன்னா புத்தின்னு ஒண்ணு இருந்தா, அதை வெச்சு ஞான விசாரம் பண்ணனும். அந்த ஞான விசாரம் பண்றதுல வேற துணையே வேண்டாம். ஆசார்யாளுடைய க்ரந்தங்கள் மட்டுமே போறும். அவர் பண்ண  க்ரந்தங்கள், ஆசார்யாளுடைய பாஷ்யங்கள் இதுதான் intellectual லோட zenith. அதுதான் highest point. அதுதான் இதுக்குமேல என்னிக்கும் அந்த மாதிரி கிரந்தங்கள்  கிடையாது! இனிமேலும் வரபோறதில்லை! அப்பேற்பட்ட புத்திமான். அதைதான் அவர் சொல்றார்.

‘நஹி கோऽபி ஸுதீ:’ – இதுக்குமேல புத்திமான் யாருமே கிடையாது.

ஆனாலும் ‘ஶரணாக³தவத்ஸல’ – நீங்க புத்தியோட உங்ககிட்ட வந்தா, அவாளுக்கு புத்திப் பூர்வமா நீங்க வழி காண்பிக்கறேள். ஆனா என்னை மாதிரி ஒண்ணும் தெரியாதவன் வந்து உங்களை சரணாகதி பண்ணான்னா என்னையும் ஏற்றுக்கொள்றேள். ‘ஶரணாக³தவத்ஸல’ – சரணம்னு வந்தவாளை அன்பு பாராட்டற குணம் உங்ககிட்ட இருக்கு!

‘தத்த்வநிதே’ –  எந்த அத்வைத தத்துவம் துக்கத்தை போக்குமா அந்த அத்வைத தத்வத்தோட நிதி நீங்கள். அதுனால உங்களோட த்யானம்தான் எங்களுக்கு முடியும். அதுவே எனக்கு பரம சாந்தியா இருக்கு. அதுனால நான் உங்களை சரணாகதி பண்றேன் – ‘ப ஶங்கர தே³ஶிக மே ஶரணம்’.

विदिता मया विशदैककला किंचन काञ्चनमस्ति गुरो

द्रुतमेव विधेहि कृपां सहजां भव शंकर देशिक मे शरणम् ८॥

விதி³தா மயா விஶதை³ககலா கிஞ்சந காஞ்சனமஸ்தி கு³ரோ

த்³ருதமேவ விதேஹி க்ருʼபாம் ஸஹஜாம் ஶங்கர தே³ஶிக மே ஶரணம் 8

‘விதி³தா மயா விஶதை³ககலா’ – கசடற நான் எந்த கல்வியும் கற்கவில்லை. எனக்கு எந்த சாஸ்த்திரத்திலேயும் தெளிவான புத்தி இல்லை.

अज्ञातभक्तिरसमप्रसरद्विवेक– 
मत्यन्तगर्वमनधीतसमस्तशास्त्रम्
अप्राप्तसत्यमसमीपगतं मुक्तेः
कामाक्षि नैव तव स्पृहयति दृष्टिपातः 100

அஜ்ஞாதப4க்திரஸமப்ரஸரத்3விவேக- 
மத்யந்தக3ர்வமனதீ4தஸமஸ்தஶாஸ்த்ரம் |
அப்ராப்தஸத்யமஸமீபக3தம் ச முக்தே:
காமாக்ஷி நைவ தவ காங்க்ஷதி த்3ரு’ஷ்டிபாத: || 100||

(மூகபஞ்ச சதீ கடாக்ஷ ஶதகம்)

அப்படீன்னு சொன்ன மாதிரி, என்கிட்ட நீதான் தயவு பண்ணனும்னு சொல்றார் அவர். அந்த மாதிரி, ‘விதி³தா மயா விஶதை³ககலா’ – தெளிவா நான் ஒண்ணுமே படிச்சது இல்லை.

‘ந கிஞ்சந காஞ்சனமஸ்தி கு³ரோ’ – என்கிட்ட ஒரு பைசா கூட இல்லை. ஏன்னா, நான் சந்நியாசி. உங்ககிட்ட கொடுக்க பணமும் இல்லை. உங்களோட பெயரை இந்த உலகத்துல நிலை நாட்டறதுக்கு படிப்பும் இல்லை.

ஆனாலும், ‘த்³ருதமேவ விதேஹி க்ருʼபாம் ஸஹஜாம்’ – கிருபைங்கிறது உங்களோட கூடப் பொறந்த குணமா இருக்கு – ‘ஸஹஜாம்’. காரணம் இல்லாமல் கருணை பண்றது. “அவ்யாஜ கருணா மூர்த்தி” நீங்க. அதுனால அதை என் மேல காண்பிங்கோ. கிருபையை என் மேல காண்பிக்க வேண்டும்.

‘ப ஶங்கர தே³ஶிக மே ஶரணம்’ – ஹே சங்கர குரு! நான் உங்களுக்கு அடைக்கலம்.

இதுதான் தோடகாஷ்டத்துடைய 8 ஸ்லோகங்கள். இதோட,

श्रुति स्मृति पुराणानां आलयं करुणालयं |
नमामि भगवद्पाद शङ्करं लोकशङ्करं ||

ஶ்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலையம் கருணாலயம் |

நமாமி பகவத்3பாத3 ஶங்கரம் லோகஶங்கரம் ||

‘ஶங்கர:’ன்னா மங்களங்களை செய்பவர்ன்னு அர்த்தம். ‘சம்பு’ன்னு தக்ஷிணாமூர்த்திக்கு பெயர். அதாவது மங்களங்களின்  உற்பத்தி ஸ்தானம். அந்த

अज्ञानान्तर्गहन पतितान् आत्मविद्योपदेशै

त्रातुं लोकान् भव तव शिखा तापपाप च्यमानान् |

मुक्त्वा मौनं वटविटपिनो मूलतो निष्पतन्ती

शंभोर्मूर्तिश्चरति भुवने शंकराचार्यरूपा  ||

அஜ்ஞா நாந்தர்கஹநபதிதாந்ஆத்மவித்யோபதேசை:

த்ராதும் லோகாந் பவதவசிகாதாப பாபச்யமாநாந் |

முக்த்வா மௌனம் வடவிடபிநோமூலதோ நிஷ்பதந்தீ

சம்போர்மூர்த்தி: சரதி புவநே சங்கராசார்யா ரூபா ||

அப்படீன்னு ஒரு ஸ்லோகத்தை எடுத்துண்டு பெரியவா விஸ்தாரமா 5வது பாகம் “தெய்வத்தின் குரல்”ல 800 pages ஆசார்யாளோட சரித்திரம். அதைப் படிச்சே ஆகணும். அதை படிச்சா அதுல இந்த ஸ்லோகத்துக்கு மட்டும் ஒரு 20, 30 பக்கம் எழுதியிருப்பா. அஞ்ஞான காட்டுல விழுந்திருக்கேன். இன்னும் பலவிதமான பாப தாபங்கள்ங்கிற நெருப்பு வேற பிடிச்சு எரியறது. எப்படி நான் பொழைக்கறது. நான் இல்ல. இந்த ஜன சமூகமே விழுந்து கிடக்கு. தவிச்சிண்டிருக்கு. அப்போ இந்த காட்டுல தீ. ஜலம் இருக்கு. எங்க இருக்குன்னா? மேல எங்கயோ மலை மேல மடுவுல இருக்கு. அதுதான் தக்ஷிணாமூர்த்தி. அந்த மடுவுல இருக்கிற ஜலத்துக்கே, இந்த ஜனங்கள் மேல கருணை ஏற்பட்டு, மடுவா இருந்த ஜலம் கிளம்பி, சம்புங்கிற ஸ்வாமி, தக்ஷிணாமூர்த்தி, தேவர்கள் வேண்டிண்ட உடனே,

‘சம்போர்மூர்த்தி: சரதி புவநே சங்கராசார்யா ரூபா’ – அங்கேயிருந்து கிளம்பி ஒரு பெரிய ஆறா பெருக்கெடுத்து வந்து இந்த காட்டுத்தீயை அணைச்சது. அதுதான் சங்கராச்சாரியார் அப்படீன்னு ஒரு ஸ்லோகம்.

‘ஶங்கரம் லோகஶங்கரம்’ – உலகத்துக்கெல்லாம் நன்மைகளை மங்களங்களை செய்பவர் ‘ஶங்கரம்’.

அந்த சங்கராச்சாரியார் reformer கிடையாது. ‘ஶ்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலையம்’ – வேதம், தர்ம சாஸ்திரங்கள், புராணங்கள் இதையெல்லாம் வெச்சு ஒரு கோயில் கட்டினா அந்த கோயில்ல என்ன ஸ்வாமியை வைக்கணும்ணா ஆசார்யாளைத்தான் வைக்கணும்! சங்கராச்சாரியாளைத்தான் வைக்கணும்!

‘ஶ்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலையம் கருணாலயம்’ – வெறும் படிப்பு மட்டும் கிடையாது. அவருக்கு கருணையும் இருந்தது! கருணைக்கும் ஒரு கடலா இருந்தார். ‘அந்த ஆதிசங்கர பகவத்பாதாளை நமஸ்கரிக்கறேன்’ அப்படீன்னு இந்த ஸ்லோகத்துலேயும் அந்த தோடகாஷ்டத்தோட முடிவுல சொல்லி நமஸ்காரம் பண்றது.

மஹா பெரியவா ஆசார்யாள் மேல ஒரு ஸ்லோகம் பண்ணியிருக்கா. மஹா பெரியவா 100 வருஷம் இருந்தார். ‘கோபி ஸுதி4:’ னு சொல்ற மாதிரி புத்திமான்களுக்குள்ள அவ்வளோ ஸ்ரேஷ்டரா இருந்தார். ஆனா அவருக்கு தானா ஸ்லோகம் எழுதணும்ங்கிற ஆசையே வரலை! இருக்கிறத எல்லாம் படிப்போம். ஆசார்யாள் கிரந்தங்கள் எல்லாம் படிப்போம்னு அதையே திரும்ப திரும்ப பிரசாரம் பண்ணிண்டிருந்தார். அவர் ‘துர்கா பஞ்சரத்னம்’னு ஒண்ணு பண்ணியிருக்கார். அடுத்தது இந்த ஒரு ஸ்லோகம் ஆசார்யாள் மேல!

गुरुर्नाम्ना माहिम्ना  शङकरो यो विराजाते |

तदीयाङ्घ्रिगलद्रेणुगणायास्तु मनो मम ||

கு3ருர் நாம்னா மஹிம்னா ஶங்கரோ யோ விராஜதே |

ததீ3யாங்க்4ரிக3லத்3ரேணு 3ணாயாஸ்து மனோ மம ||

அப்படீன்னு ஒரு ஸ்லோகம். ‘நாம்னா ச மஹிம்னா ச’ – பேர்லேயும் சரி, மஹிமைலேயும் சரி எவருக்கு ‘ஶங்கரர்’ என்ற பெயரோ, ‘ஶங்கர:’ங்கிற ஆசார்யாளோட பேரே அவர் பொறந்த இந்த ‘வைகாசி சுக்ல பஞ்சமி’ யை வெச்சுண்டு வெச்சது. ‘கடபயாதி ஸங்க்யை’ ன்னு ஒண்ணு இருக்கு. அதைக் கொண்டு இந்த நாள்ல பொறந்ததுனால அவருக்கு ‘ஶங்கர:’ன்னு பேர் வைச்சா அப்பா. அந்த பேருக்கு ஏத்த மாதிரி மகிமையோட இருந்தவர் என்னோட குருநாதர். பேருக்கேற்ற மகிமையோட விளங்கினார்.

அவருடைய ‘அங்க்4ரிக3லத்3ரேணு’ – பாதத்தில் ஒரு துளியாக,

‘க3ணாயாஸ்து மனோ மம’ – இருக்கணும்னு ஆசைபடறேன்னு சொல்றா பெரியவா. என்ன ஒரு பக்தி! அப்படி பெரியவா எப்பவுமே ‘ஆசார்யாள் மாதிரி நீங்க’ அப்படீன்னு சொன்னா, ‘அவர் யானை மாதிரி காரியம் பண்ணினார் 32 வருஷத்துல. நாங்கள்லாம் அவர் பேரை வெச்சுண்டு இருக்கோம். ஆனா அவர் பேரு எங்களுக்கெல்லாம் எதுக்கு வெச்சிட்டு போய்யிருக்கார்னா அதுனாலாயாவது எங்களுக்கு ஒரு நாள் ஆத்ம சக்தி வந்து அதுனால நாங்க நல்ல காரியம் பண்ணலாமேன்னு வெச்சிருக்கா!’ அப்படீன்னு சொல்வார். இந்த ஸ்லோகத்தை பார்த்தா பெரியவாளோட வினய ஸம்பத் தெரியறது. ஆனா அப்படி வினயமா இருந்தே மஹாபெரியவான்னு ஒரு ஜோதி 100 வருஷங்கள் நமக்கு வழிகாட்டலேன்னா இன்னும் எவ்வளவோ கஷ்டபட்டிருப்போம். அதனால இந்த தோடகாஷ்டத்தை சொல்லி மஹாபெரியவாளையும் நமஸ்காரம் பண்ணனும். ஒரு வாட்டி இந்த ஸ்லோகத்தைப் படிச்சு முடிச்சுடறேன்.

விதி³தாகி²லஶாஸ்த்ரஸுதாஜலதே மஹிதோபநிஷத் கதி²தார்த²நிதே

ஹ்ருʼ³யே கலயே விமலம் சரணம் ஶங்கர தே³ஶிக மே ஶரணம் 1

கருணாவருணாலய பாலய மாம் வஸாக³ரது:³²விதூ³நஹ்ருʼ³ம்

ரசயாகி²லத³ர்ஶநதத்த்வவித³ம் ஶங்கர தே³ஶிக மே ஶரணம் 2

வதா ஜனதா ஸுஹிதா விதா நிஜபோ³விசாரண சாருமதே

கலயேஶ்வரஜீவவிவேகவித³ம் ஶங்கர தே³ஶிக மே ஶரணம் 3

ஏவ வாநிதி மே நிதராம் ஸமஜாயத சேதஸி கௌதுகிதா

மம வாரய மோஹமஹாஜலதிம் ஶங்கர தே³ஶிக மே ஶரணம் 4

ஸுக்ருʼதேऽதிக்ருʼதே ³ஹுதா வதோ விதா ஸமத³ர்ஶனலாலஸதா

அதிதீ³னமிமம் பரிபாலய மாம் ஶங்கர தே³ஶிக மே ஶரணம் 5

ஜக³தீமவிதும் கலிதாக்ருʼதயோ விசரந்தி மஹாமஹஸஶ்ச²லத:

அஹிமாம்ஶுரிவாத்ர விபாஸி கு³ரோ ஶங்கர தே³ஶிக மே ஶரணம் 6

(‘புரோ’ன்னு ஒரு பாடம் இருக்குகு³ரோ’ன்னு ஒரு பாடம் இருக்கு)

கு³ருபுங்க³ புங்க³வகேதந தே ஸமதாமயதாம் நஹி கோऽபி ஸுதீ:

ஶரணாக³தவத்ஸல தத்த்வநிதே ஶங்கர தே³ஶிக மே ஶரணம் 7

விதி³தா மயா விஶதை³ககலா கிஞ்சந காஞ்சனமஸ்தி கு³ரோ

த்³ருதமேவ விதேஹி க்ருʼபாம் ஸஹஜாம் ஶங்கர தே³ஶிக மே ஶரணம் 8

ஶ்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலையம் கருணாலயம் |

நமாமி பகவத்3பாத3 ஶங்கரம் லோகஶங்கரம் ||

கு3ருர் நாம்னா மஹிம்னா ஶங்கரோ யோ விராஜதே |

ததீ3யாங்க்4ரிக3லத்3ரேணு 3ணாயாஸ்து மனோ மம ||

‘அஹிமாம்ஶுரிவாத்ர விபாஸி கு³ரோ’ ன்னே வெச்சுக்கலாம் ஏன்னா பெரியவா ஒரு வாட்டி lectureல ‘கு³ரோ’ ன்னு சொல்லியிருக்கார். பூர்த்தி பண்ணிக்கட்டுமா?  

ஜய ஜய சங்கர… ஹர ஹர சங்கர

நம: பார்வதி பதயேஹர ஹர மஹாதேவ

மகாபெரியவா 1968 சம்ஸ்க்ருதத்தில் சங்கர ஜயந்தி அன்று செய்த அனுக்ரஹ பாஷணம் Mahaperiyava anugraha bhaashanam during 1968 Shankara Jayanthi in Samskritham and Telugu

आदि शङ्कराचार्या: गुरु पुङ्गवा: | गुरु श्रेष्ठाः | तेषां वैशाख मास शुक्ल पक्षीय पूर्णिमा दिवसे, पूर्णिमा मध्ये, शंकर जयन्ति उत्सव: | पञ्चम्यां तेषां जन्मदिनम् | केचित् जन्मोत्सवरूपेण वैशाख शुक्ल प्रथमां आरभ्य पञ्चमी पर्यन्तं उत्सवं कुर्वन्ति | अन्येऽपि केचित् तेषां जन्मदिनोत्सवं पञ्चमीं आरभ्य पूर्णिमा पर्यन्तं कुर्वन्ति | पञ्चम्या: पूर्वमपि पञ्चम्या: अनन्तरमपि कुर्वन्ति | ते गुरु पुङ्गवा: | गुरु श्रेष्ठाः | तेषां सुरेश्वराचार्या: पद्मपादाचार्या: हस्तामलकाचार्या: तोटकाचार्या: इति चत्वार: प्रधानशिष्या: | परन्तु शंकर विजयग्रन्थेषु षट्सहस्रं शिष्या: आचार्यं अन्वसरन् अनुसृतवन्त: इति ज्ञायते | ते गुरु पुङ्गवा: इत्युक्तम् | तेषां शिष्येषु तोटकाचार्यै: एकं अष्टकं विरचितम् | तत्र एवमेव गुरुपुंगव पुंगवकेतन ते | गुरुपुंगव पुंगवकेतन ते | समतामयतां नहि कोऽपि सुधीः । समतामयतां नहि कोऽपि सुधीः । शरणागतवत्सल तत्त्वनिधे भव शंकर देशिक मे शरणम् ॥ शरणागतवत्सल तत्त्वनिधे भव शंकर देशिक मे शरणम् ॥ इति श्लोकोपि उपलभ्यते | तेषां तोटकाचार्याणां गुरुभक्तिरसपूर्णानां अयं श्लोक: | भव शंकर देशिक मे शरणम् इति, अस्माकं तोटकाचार्याणां अयं स्लोकमेव शरणम् | शरणागतवत्सला: भगवद्पादा: | तेषां चरणं शरणमिति तोटकाचार्या: | अस्मात् प्रपञ्चस्यैव सर्वविध दु:खानामपि निवर्तकस्य अद्वैत तत्वस्य निधिरूपा: श्रीशंकर भगवद्पादा: | अथ एव तैरुक्तं ‘तत्वनिधे’ इति | शंकर भगवद्पादानां उपदेश: सश्रद्धं हृदये क्रियते चेत् सर्व दु:खानामपि हानि: | हृदयं तत्क्षण एव आन्दपूरितं भवति | क्रमेण अभ्यासेन आत्मा आनन्दमयो भवति | ततोऽपि आनन्दरूपो भवति | एतादृश महानुग्रह भाजनं भवाम: सर्वेऽपि वयम् | एतत् शंकर जयन्ती महोत्सव पुण्यकाले इति शुभम् |

Series Navigation<< ஸ்ரீ சங்கர சரிதம் புத்தக வடிவில் (Sri Shankara Charitham as a PDF book)
Share

Comments (1)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.