mooka pancha shathi stothram

Kamakshi11
காஞ்சி காமாக்ஷி தேவியின் பேரில் 500 ஸ்லோகங்களை கொண்ட அழகான ஸ்தோத்திரம் மூக பஞ்ச சதீ. இது 5 சதகங்களை கொண்டது.

1. ஆர்யா சதகம் 
2. பாதாரவிந்த சதகம் 
3. ஸ்துதி சதகம் 
4. கடாக்ஷ சதகம் 
5. மந்தஸ்மித சதகம்

இதை இயற்றியவர் மூக கவி. ‘மூகன்’ என்றால் ஊமை என்று அர்த்தம். ஊமையாக இருந்த ஒரு பரம பக்தர், காஞ்சீபுரத்தில் குடி கொண்டுள்ள ஜகன்மாதா காமாக்ஷியின் கிருபா கடாக்ஷத்தையும், அவளுடைய தாம்பூல உச்சிஷ்டத்தையும் பெற்று, உடனே அமிருத சாகரம் மாதிரி ஐந்நூறு சுலோகங்களைப் பொழிந்து தள்ளி விட்டார். அதைத்தான் மூக பஞ்ச சதீ என்கிறோம். ‘பஞ்ச’ என்றால் ஐந்து; ‘சதம்’ என்பது நூறு. நூறு சுலோகங்கள் கொண்ட தொகுப்புக்கு ‘சதகம்’ என்று பெயர்.

காமாக்ஷி அம்பாளின் நாம ரூபங்களின் மகிமையை ‘ஆர்யா’ என்ற விருத்தத்தில் நூறு சுலோகங்கள் (ஆர்யா சதகம்). அவளுடைய பாதார விந்தங்களின் பெருமையைப் பற்றி மட்டும் நூறு சுலோகங்கள் (பாதாரவிந்த சதகம்), ஸ்துதிக்கு உகந்த அவளது குணங்களைப் பற்றி நூறு சுலோகங்கள் (ஸ்துதி சதகம்), அம்பாளின் கடாக்ஷ வீக்ஷண்யத்தைப் பற்றி மாத்திரம் நூறு சுலோகங்கள் (கடாக்ஷ சதகம்), தேவியின் புன்சிரிப்பின் ஸெளந்தர்யத்தைப் பற்றியே நூறு சுலோகங்கள் (மந்தஸ்மித சதகம்) என்றிப்படி மொத்தம் ஐந்நூறு சுலோகங்களைப் பொழிந்து விட்டார் மூகர் என்று சிலாகித்து சொல்கிறார் மஹா பெரியவா.

இது மஹா பெரியவாளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்தோத்திரம். அம்பாளைப் பற்றிய ஸ்தோத்திர கிரந்தங்களுக்குள் மிகவும் சிறந்தது என்று புகழ்கிறார். அவர் காமகோடி கோக்ஷஸ்தானம் மூலமாக இந்த ஸ்தோத்திரத்தை புஸ்தகமாக வெளியிட்டு, பல பக்தர்களிடம், இஹ பர சௌபாக்யத்துக்காக தினமும் இதை படிக்கும்படி பரிந்துரை செய்திருக்கிறார். ஸ்தோத்திர வடிவமாக இருப்பதால், நேரம், இடம், தகுதி, பாராமல் எவரும் எவ்விடத்திலும் எந்நேரத்திலும் பக்தியோடு இதை பாராயணம் செய்யலாம்.  சிறு வயதில் திக்குவாய் இருந்த ஒருத்தர், மஹா பெரியவா சொல்லி மூக பஞ்ச சதீ படித்து சங்கர பாஷ்யத்துக்கு வாக்யார்த்தம் சொல்லுகிற அளவுக்குப் பெரிய பண்டிதர் ஆகி விட்டார்.

ஒரு சமயம் ஒரு பண்டிதர் காமாக்ஷி அம்பாள் மீது புதிய சுப்ரபாதம் இயற்றி பேராசிரியர் வீழிநாதன் மூலமாக மஹா பெரியவாளிடம் சமர்ப்பித்தார். அன்றைய தினம் மஹா பெரியவா மௌன விரதம். அடுத்த முறை மஹா பெரியவாளை வீழிநாதன் மாமா சந்தித்து அந்த புதிய சுப்ரபாதம் பற்றி கேட்ட போது, பெரியவா “மூக பஞ்ச சதி இருக்கும் போது அம்பாள் மீது இன்னொரு ஸ்தோத்ரம் இயற்ற வேணுமா?” என்று கேட்டிருக்கிறார். பெரியவாளுக்கு மூக பஞ்ச சதியின் மேல் அத்தனை அபிமானம். அத்தனை பக்தி.

மூக பஞ்ச சதி புஸ்தகத்தின் ஸ்ரீமுகத்திலும் மஹாபெரியவா, ”அம்பாள் வாக்கிலிருந்து மூக கவி வாக்கிற்கும் மூக கவி வாக்கிலிருந்து நமக்கும் அனுக்ரஹம் செய்ய வந்திருக்கும் அற்புத ஸ்துதி இது” என்று சொல்லியிருக்கிறார். மேலும் “உலகத்திலே மிகச் சிறந்ததாக விளங்கும் இந்த ஸ்துதி நூலை படிப்பதால் மட்டுமே, அந்த க்ஷணத்திலேயே இந்த மஹாகவியோடும், இறுதியிலே பரதேவதையோடுமே ஒன்றாகும் நிலையை ஸாதகன் அடைகின்றான்” என்று ஆசீர்வாதம் பண்ணி இருக்கார்.

மூகபஞ்சசதீ மஹா பெரியவா ஸ்ரீமுகம் தமிழிலும் சம்ஸ்க்ருதத்திலும் (audio and transcript)

மஹா பெரியவா கல்யாணத்திற்கு பிள்ளை / பெண் தேடுபவர்களுக்கு ஆர்யா சதகத்திலிருந்து 91வது ஸ்லோகத்தையும். வறுமை நீங்க ஸ்துதி சதகத்திலிருந்து 74வது ஸ்லோகமும், உடல் உபாதைகள் நீங்க மந்தஸ்மித சதகத்திலிருந்து 94வது ஸ்லோகமும், ஞானம் சித்திக்க ஸ்தோத்திரம் முழுவதும் 5 முறை திரும்ப திரும்ப பாராயணம் பண்ண வேண்டும் என்று பரிந்துரை செய்திருக்கிறார்.

என்னுடைய சத்குருநாதர் ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னுடைய பத்தாவது வயதிலிருந்து தன்னுடைய 75வது வயதில் கடைசி நாள் வரை ஒரு நாள் தவறாமல் மூக பஞ்ச சதீ பாராயணம் செய்து வந்தார். அம்பிகையின் மேல் அமைந்த பக்தி கிரந்தங்களில் முக்கியமானதாக இந்த கிரந்தத்தை நினைத்தார். ஸ்வாமிகள் எனக்கு ஒவ்வொரு முறை பாராயணம் செய்யும் போதும், “மஹா பெரியவா தான் காமாக்ஷி! நீ இந்த ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்தால், மஹா பெரியவாளோட பரிபூரண அனுக்ரஹம் கிடைக்கும். உனக்கு லௌகீகத்திலும் ஆன்மீகத்திலும் மேன்மை உண்டாகும்” என்று கூறியுள்ளார்.

சம்ஸ்க்ருதத்தில் பெரிய எழுத்துக்களில் பாராயணத்திற்கு ஏற்றவாறு 500 ஸ்லோகங்களையும் புஸ்தக வடிவில் தொகுத்து வழங்கியுள்ளேன். பாட பேதம் இருந்தால் இது ஸ்வாமிகளின் பாடம்

https://valmikiramayanam.in/mooka-pancha-shati.pdf

தமிழிலும் 2, 3, 4 குறியீடுகளோடு பெரிய எழுத்தில் புத்தகமாக வழங்கியுள்ளேன். இந்த புத்தகத்தை கொண்டு, சம்ஸ்க்ருத உச்சரிப்பையும் தெரிந்து கொண்டு சரியாக படிக்கவும்.

https://valmikiramayanam.in/Mooka%20pancha%20shathi%20in%20tamizh%20script.pdf

இதன் ஒலி வடிவம் (ஆடியோ) சேர்த்துள்ளேன்

ஆர்யா சதகம் ஆடியோ https://valmikiramayanam.in/?p=1831

பாதாரவிந்த சதகம் ஆடியோ https://valmikiramayanam.in/?p=3461

ஸ்துதி சதகம் ஆடியோ https://valmikiramayanam.in/?p=3466

கடாக்ஷ சதகம் ஆடியோ https://valmikiramayanam.in/?p=3468

மந்தஸ்மித சதகம் ஆடியோ https://valmikiramayanam.in/?p=3470

mooka pancha shathi meaning index

1943ம் ஆண்டு வெளியிடப்பட்ட மூக பஞ்ச சதீ தமிழாக்கம்
https://valmikiramayanam.in/MookaPanchaShathi/1-AryaShatakam.pdf
https://valmikiramayanam.in/MookaPanchaShathi/2-PaadaaravindaShatakam.pdf
https://valmikiramayanam.in/MookaPanchaShathi/3-StuthiShatakam.pdf
https://valmikiramayanam.in/MookaPanchaShathi/4-KataakshaShatakam.pdf
https://valmikiramayanam.in/MookaPanchaShathi/5-MandasmithaShatakam.pdf

mooka pancha shathi is a beautiful stotram with 500 slokams on Kanchi Kamakshi. It has 5 shatakams –

1. aarya shatakam
2. paadaaravinda shatakam
3. stuti shatakam
4. kataksha shatakam and
5. mandasmitha shatakam

This stothram was Sri.Mahaperiyava’s all time favourite. He got it published through kamakoti koshastanam and recommended it to a lot of his devotees for iha para sowbhagyam. Since it is a stotram there is no restriction of time, place, eligibility etc. Anyone can read it anywhere, any time.

Once a poet wrote a new sahasranama on ambaal and sent it to Mahaperiyava through Professor Veezhinathan. That day Mahaperiyava was under mouna vratham. Next time when Veezhinathan mama met MahaPeriyava and wanted feedback on that new sahasranamam, Periyava said, “When there is mooka pancha shati, where is the need to compose another stotram on ambaal?” Such was his devotion and affection for mooka pancha shati.

In a srimukham to mooka pancha shathi book Mahaperiyava has said – This stotram is Ambaal’s own words that entered mooka kavi and has in turn reached us to get us Her grace.” அம்பாள் வாக்கிலிருந்து மூக கவி வாக்கிற்கும் மூக கவி வாக்கிலிருந்து நமக்கும் அனுக்ரஹம் செய்ய வந்திருக்கும் அற்புத ஸ்துதி இது.”

Mahaperiyava has advised those who are looking for a groom / bride to chant the 91st slokam from Arya shatakam, He has recommend 74th slokam from Stuti shatakam for deliverance from poverty, 94th from mandasmitha shatakam for deliverance from health issues and reading the whole stotram 5 times repeatedly to attain gnaanam.

My Sadguru Sri. Govinda Damodara Swamigal read it every single day from his tenth year till his last day at the age of 75 and held it as the most important work for Ambaal devotees. Every time Swamigal read it to me, He said – “Kamakshi and Mahaperiyava are one and the same. If you read this stotram you will get Mahaperiyava’s best blessings in both material and spiritual aspects.”

Have put together the 500 slokams in sanskrit as a large font, book format suitable for paarayanam.

https://valmikiramayanam.in/mooka-pancha-shati.pdf

Have also put together the 500 slokams in tamizh as a large font, book format suitable for paarayanam.

https://valmikiramayanam.in/Mooka%20pancha%20shathi%20in%20tamizh%20script.pdf

You can download, share with friends who may be interested. It will print nicely into A4 size. I have finalized the slokams based on Swamigal’s inputs. (meaning, if there is a paada bedam, what I got here is Swamigal’s paadam)

Have added the audio recording for arya shatakam here https://valmikiramayanam.in/?p=1831

Padaravinda Shatakam audio here https://valmikiramayanam.in/?p=3461

Stuthi Shatakam audio here https://valmikiramayanam.in/?p=3466

Kataksha Shathakam audio here https://valmikiramayanam.in/?p=3468

Mandasmitha SHatakam audio here https://valmikiramayanam.in/?p=3470

Found this nice Tamizh translation of mooka pancha shathi published in 1943 from Internet Archive
https://valmikiramayanam.in/MookaPanchaShathi/1-AryaShatakam.pdf
https://valmikiramayanam.in/MookaPanchaShathi/2-PaadaaravindaShatakam.pdf
https://valmikiramayanam.in/MookaPanchaShathi/3-StuthiShatakam.pdf
https://valmikiramayanam.in/MookaPanchaShathi/4-KataakshaShatakam.pdf
https://valmikiramayanam.in/MookaPanchaShathi/5-MandasmithaShatakam.pdf

For any questions, corrections related to the book, you can send me a mail at ganapathytqm@gmail.com

Ganapathy Subramanian

500 ஸ்லோகங்களையும் படிப்பதே சிறந்தது. ஆனாலும் மகான்கள் இதில் ருசி ஏற்படுவதற்காக சில ஸ்லோகங்களை குறிப்பட்டு சொல்லியுள்ளார்கள். கார்ய சித்தி அளிக்கும் சில ஸ்லோகங்களைப் பார்ப்போம்.

ஞானம் சித்திக்க: (to attain gnanam)

ஸ்தோத்திரம் முழுவதும் 5 முறை திரும்ப திரும்ப பாராயணம் பண்ண வேண்டும்.

அமிருதம் போன்ற வாக்கு சித்திக்க: (to get ambrosia like speech)

ஆர்யா சதக முடிவில் அம்பாளை ஆராதிக்கிறவனுக்கு அமிருதம் போன்ற வாக்கு சித்திக்கிறது என்று சொல்லியிருக்கிறது. அதனால் முதல் 100 ஸ்லோகங்களைப் பாராயணம் செய்கிறவர்களுக்கு நல்ல வாக்கு சித்திக்கும்.

திருமண வாழ்க்கையில் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்க: (for happiness in married life)

ஸ்தோத்திரம் முழுவதும் ஒரு பௌர்ணமியிலிருந்து இன்னோர் பௌர்ணமிக்கும் 5 தடவை பாராயணம் செய்ய வேண்டும்

கீர்த்தியோடு விளங்க: (to get fame)

मूकोSपि जटिलदुर्गतिशोको‌Sपि स्मरति यः क्षणं भवतीम्
एको भवति जन्तुर्लोकोत्तरकीर्तिरेव कामाक्षि ॥57॥

மூகோபி ஜடிலது³ர்க³திசோகோபி ஸ்மரதி ய: க்ஷணம் பவதீம் ।
ஏகோ பவதி ஸ ஜந்துர்லோகோத்தரகீர்திரேவ காமாக்ஷி ॥ (ஆர்யா சதகம் 57)

படிப்பில் சிறக்க: (to excel in education)

विद्ये विधातृविषये कात्यायनि कालि कामकोटिकले
भारति भैरवि भद्रे शाकिनि शाम्भवि शिवे स्तुवे भवतीम् ॥78॥

வித்³யே விதா⁴த்ருʼவிஷயே காத்யாயனி காலி காமகோடிகலே |
பா⁴ரதி பை⁴ரவி ப⁴த்³ரே ஶாகினி ஶாம்ப⁴வி ஶிவே ஸ்துவே ப⁴வதீம் || (ஆர்யா சதகம் 78)

கல்யாணத்திற்கு பிள்ளை/பெண் தேடுபவர்களுக்கு: (to get a good husband / wife)

स्मरमथनवरणलोला मन्मथहेलाविलासमणिशाला
कनकरुचिचौर्यशीला त्वमम्ब बाला कराब्जधृतमाला ॥91॥

ஸ்மரமத²னவரணலோலா மன்மத²ஹேலாவிலாஸமணிஶாலா |
கனகருசிசௌர்யஶீலா த்வமம்ப³ பா³லா கராப்³ஜத்ருʼதமாலா || (ஆர்யா சதகம் 91)

மனக்கவலைகள் நீங்க: (to get rid of worries)

कदा दूरीकर्तुं कटुदुरितकाकोलजनितं महान्तं सन्तापं मदनपरिपन्थिप्रियतमे
क्षणात्ते कामाक्षि त्रिभुवनपरीतापहरणे पटीयांसं लप्स्ये पदकमलसेवामृतरसम्

கதா³ தூ³ரீகர்த்தும் கடுது³ரித காகோல ஜனிதம்
மஹாந்தம் சந்தாபம் மத³னபரிபந்தி²ப்ரியதமே |
க்ஷணாத்தே காமாக்ஷி த்ரிபுவனபரீதாப ஹரணே
படீயாம்ஸம் லப்ஸ்யே பத³கமலசேவாம்ருதரஸம் ||  (பாதாரவிந்த சதகம் 22)

அம்பாளின் சரணங்களில் மனது லயிக்க: (to get paada bhakthi)

नखाङ्कूरस्मेरद्युतिविमलगङ्गाम्भसि सुखं
कृतस्नानं ज्ञानामृतममलमास्वाद्य नियतम्
उदञ्चन्मञ्जीरस्फुरणमणिदीपे मम मनो
मनोज्ञे कामाक्ष्याश्चरणमणिहर्म्ये विहरताम् ॥ 

நகா²ங்கூரஸ்மேரத்³யுதிவிமலக³ங்கா³ம்பஸி ஸுக²ம்
க்ருʼதஸ்னானம் ஜ்ஞாநாம்ருʼதமமலமாஸ்வாத்³ய நியதம் ।
உத³ஞ்சன்மஞ்ஜீரஸ்பு²ரணமணிதீ³பே மம மனோ
மனோஜ்ஞே காமாக்ஷ்யாஶ்சரணமணிஹர்ம்யே விஹரதாம் ॥ (பாதாரவிந்த சதகம் 48)

நவக்ரஹங்களின் அநுக்ரஹம் பெற: (to get blessings of navagraha)

दधानो भास्वत्ताममृतनिलयो लोहितवपुः विनम्राणां सौम्यो गुरुरपि कवित्वं कलयन्
गतौ मन्दो गङ्गाधरमहिषि कामाक्षि भजतां तमःकेतुर्मातस्तव चरणपद्मो विजयते

³தாநோ  பாஸ்வத்வாம்  அம்ருதநிலயோ லோஹித வபுஹு
வினம்ராணாம் சௌம்யஹ குருரபி கவித்வம் ச கலயன் |
³தோ மந்த³: க³ங்காதரமஹிஷி காமாக்ஷி பஜதாம்
தம: கேதுர் மாத:  தவசரண பத்மௌ  விஜயதே || (பாதாரவிந்த சதகம் 59)

கெட்ட வினைகள் நீங்க: (to get rid of bad karma)

विनम्राणां चेतोभवनवलभीसीम्नि चरण 
प्रदीपे प्राकाश्यं दधति तव निर्धूततमसि
असीमा कामाक्षि स्वयमलघुदुष्कर्मलहरी
विघूर्णन्ती शान्तिं शलभपरिपाटीव भजते ॥79॥

வினம்ராணாம் சேதோப⁴வனவலபீ⁴ஸீம்னி சரண-
ப்ரதீ³பே ப்ராகாச்யம் த³த⁴தி தவ நிர்தூ⁴ததமஸி ।
அஸீமா காமாக்ஷி ஸ்வயமலகு⁴து³ஷ்கர்மலஹரீ
விகூ⁴ர்ணந்தீ சாந்திம் சலப⁴பரிபாடீவ ப⁴ஜதே ॥ (பாதாரவிந்த சதகம் 79)

அஞ்ஞான இருள் நீங்க: (to get rid of ignorance)

नित्यं निश्चलतामुपेत्य मरुतां रक्षाविधिं पुष्णती
तेजस्सञ्चयपाटवेन किरणानुष्णद्युतेर्मुष्णती
काञ्चीमध्यगतापि दीप्तिजननी विश्वान्तरे जृम्भते
काचिच्चित्रमहो स्मृतापि तमसां निर्वापिका दीपिका

நித்யம் நிஸ்ச்சலதாம் உபேத்ய மருதாம் ரக்ஷாவிதிம் புஷ்ணதீ
தேஜசஞ்சய பாடவேன கிரணான் உஷ்ணத்³யுதேர் முஷ்ணதீ |
காஞ்சீமத்யகதாபி தீ³ப்தி ஜனனீ விஷ்வாந்தரே ஜ்ரும்பதே
காசித்சித்ரமஹோ ஸ்ம்ருதாபி தமஸாம் நிர்வாபிகா தீ³பிகா ||(ஸ்துதி சதகம் 9)

பெண்ணைப் பெற்றவர்கள் பெருமை அடைய: (to get good name through daughters)

ऐक्यं येन विरच्यते हरतनौ दम्भावपुम्भावुके
रेखा यत्कचसीम्नि शेखरदशां नैशाकरी गाहते
औन्नत्यं मुहुरेति येन महान्मेनासखः सानुमान्
कम्पातीरविहारिणा सशरणास्तेनैव धाम्ना वयम् ॥13॥

ஐக்யம் யேன விரச்யதே ஹரதனௌ த³ம்பா⁴வபும்பா⁴வுகே
ரேகா² யத்கசஸீம்னி ஶேக²ரத³ஶாம் நைஶாகரீ கா³ஹதே |
ஔன்னத்யம் முஹுரேதி யேன ஸ மஹான்மேனாஸக²: ஸானுமான்
கம்பாதீரவிஹாரிணா ஸஶரணாஸ்தேனைவ தா⁴ம்னா வயம் ||13 (ஸ்துதி சதகம் 13)

மனக் கவலை நீங்க: (to give up worries)

कृपाधाराद्रोणी कृपणधिषणानां प्रणमतां
निहन्त्री सन्तापं निगममुकुटोत्तंसकलिका
परा काञ्चीलीलापरिचयवती पर्वतसुता
गिरां नीवी देवी गिरिशपरतन्त्रा विजयते

க்ருபா தாரா து³ரோணீ கிருபண திஷணானாம் ப்ரணமதாம்
நிஹந்த்ரீசந்தாபம் நிக³ம முகுடோத்தம்ஸ கலிகா |
பரா காஞ்சீ லீலா பரிசயவதீ பர்வத ஸுதா
கி³ராம் நீவீ தேவீ கி³ரிஷ பரதந்த்ரா விஜயதே || (ஸ்துதி சதகம் 45)

சர்வக்ஞனாகி உலகத்தில் கீர்த்தியோடு விளங்க: (to become omniscient and get fame)

आरभ्भलेशसमये तव वीक्षणस्स
कामाक्षि मूकमपि वीक्षणमात्रनम्रम्
सर्वज्ञता सकललोकसमक्षमेव
कीर्तिस्वयंवरणमाल्यवती वृणीते

ஆரம்லேஷஸமயே தவ வீக்ஷணஸ்ய
காமாக்ஷி மூகமபி வீக்ஷணமாத்ரநம்ரம் |
ஸர்வஜ்ஞதா ஸகலலோகஸமக்ஷமேவ
கீர்திஸ்வயம்வரணமால்யவதீ வ்ருணீதே || (ஸ்துதி சதகம் 38)

வறுமை நீங்க: (to get rid of poverty)

खण्डीकृत्य प्रकृतिकुटिलं कल्मषं प्रातिभश्री 
शुण्डीरत्वं निजपदजुषां शून्यतन्द्रं दिशन्ती
तुण्डीराख्यै महति विषये स्वर्णवृष्टिप्रदात्री
चण्डी देवी कलयति रतिं चन्द्रचूडालचूडे ॥74॥

²ண்டீ³க்ருத்ய ப்ரக்ருதிகுடிலம் கல்மஷம் ப்ராதிபஶ்ரீ- 
ஶுண்டீ³ரத்வம் நிஜபத³ஜுஷாம் ஶூன்யதந்த்³ரம் தி³ஶன்தீ |
துண்டீ³ராக்²யை மஹதி விஷயே ஸ்வர்ணவ்ருஷ்டிப்ரதா³த்ரீ
சண்டீ³ தே³வீ கலயதி ரதிம் சந்த்³ரசூடா³லசூடே³ || (ஸ்துதி சதகம் 74)

கெட்ட புத்தி நீங்கி காமாக்ஷியின் அநுக்கிரஹம் பெற: (to get rid of perversions)

महामुनिमनोनटी महितरम्यकम्पातटी
कुटीरकविहारिणी कुटिलबोधसंहारिणी
सदा भवतु कामिनी सकलदेहिनां स्वामिनी
कृपातिशयकिङ्करी मम विभूतये शाङ्करी ॥ (ஸ்துதி சதகம் 81)

மஹாமுனிமனோனடீ மஹிதரம்யகம்பாதடீ-
குடீரகவிஹாரிணீ குடிலபோ³தஸம்ஹாரிணீ ।
ஸதா³ பவது காமினீ ஸகலதே³ஹிநாம் ஸ்வாமினீ
க்ருʼபாதிஶயகிங்கரீ மம விபூதயே ஶாங்கரீ ॥ 81

படிப்பையும் பணத்தையும் சேர்ந்தே அருளும் காமாக்ஷி: (to get knowledge and prosperity)

क्षीराब्धेरपि शैलराजतनये त्वन्मन्दहासस्य
श्रीकामाक्षि वलक्षिमोदयनिधेः किञ्चिद्भिदां ब्रूमहे
एकस्मै पुरुषाय देवि ददौ लक्ष्मीं कदाचित्पुरा
सर्वेभ्यो‌sपि ददात्यसौ तु सततं लक्ष्मीं वागीश्वरीम्

க்ஷீராப்³தேரபி ஷைலராஜதனயே த்வன்மந்த³ஹாஸஸ்ய ச
ஸ்ரீகாமாக்ஷி வலக்ஷிமோதயநிதே: கிம்சித்³பிதா³ம் ப்³ரூமஹே |
ஏகஸ்மை புருஷாய தே³வி ஸ த³தௌ³ லக்ஷ்மீம் கதாசித்புரா
ஸர்வேப்யோ‌sபி த³தா³த்யஸௌ து ஸததம் லக்ஷ்மீம் ச வாகீஷ்வரீம் ||

பந்த பாசங்களிலிருந்து விடுபட (தினம் மூன்று ஆவர்த்தி): (to get dispassion)

नीलोत्पलप्रसवकान्तिनिर्दशनेन कारुण्यविभ्रमजुषा तव वीक्षणेन
कामाक्षि कर्मजलधेः कलशीसुतेन पाशत्रयाद्वयममी परिमोचनीयाः

நீலோத்பல பிரஸவகாந்தி நித³ர்சநேன
காருண்யா விப்ரமஜூஷா தவ வீக்ஷணேன |
காமாக்ஷி கர்மஜலதே: கலஷீஸுதேன
பாத்ரயாத்³ வயமமீ பரிமோசனியா: || (கடாக்ஷ சதகம் 82)

ஞானம் பெற (தினம் மூன்று ஆவர்த்தி): (to attain wisdom)

यावत्कटाक्षरजनीसमयागमस्तेकामाक्षि तावदचिरान्नमतां नराणाम्
आविर्भवत्यमृतदीधितिबिम्बमम्ब संविन्मयं हृदयपूर्वगिरीन्द्रशृङ्गे

யாவத்கடாக்ஷ ரஜநீ ஸமயாக³மஸ்தே
காமாக்ஷி தாவத³சிராந்நமதாம் நராணாம் |
ஆவிர்பவத்யம்ரு’ததீ³திதி பி³ம்ப³மம்ப³
ஸம்வின்மயம் ஹிருத³ய பூர்வ கி³ரீந்த்³ர ஶ்ரு’ங்கே³ || (கடாக்ஷ சதகம் 97)

நல்ல நண்பர்கள் கிடைத்து கீர்த்தியோடு விளங்க: (to get good friends)

पुम्भिर्निर्मलमानसैर्विदधते मैत्रीं दृढं निर्मलां
लब्ध्वा कर्मलयं निर्मलतरां कीर्तिं लभन्तेतराम्
सूक्तिं पक्ष्मलयन्ति निर्मलतमां यत्तावकाः सेवकाः
तत्कामाक्षि तव स्मितस्य कलया नैर्मल्यसीमानिधेः

பும்பிர்நிர்மலமானஸைர்வித³ததே மைத்ரீம் த்³ருʼடம் நிர்மலாம்
லப்³த்வா கர்மலயம் ச நிர்மலதராம் கீர்திம் லபந்தேதராம் ।
ஸூக்திம் பக்ஷ்மலயந்தி நிர்மலதமாம் யத்தாவகா: ஸேவகா:
தத்காமாக்ஷி தவ ஸ்மிதஸ்ய கலயா நைர்மல்யஸீமாநிதே: (மந்தஸ்மித சதகம் 89)

வியாதி நீங்க: (to get rid of ailments)

इन्धाने भववीतिहोत्रनिवहे कर्मौघचण्डानिल 
प्रौढिम्ना बहुलीकृते निपतितं सन्तापचिन्ताकुलम्
मातर्मां परिषिञ्च किञ्चिदमलैः पीयूषवर्षैरिव
श्रीकामाक्षि तव स्मितद्युतिकणैः शैशिर्यलीलाकरैः ॥94॥

ந்தானே பவவீதிஹோத்ரநிவஹே கர்மௌகசண்டா³னில- 
ப்ரௌடிம்னா ப³ஹுலீக்ரு’தே நிபதிதம் ஸந்தாபசிந்தாகுலம் |
மாதர்மாம் பரிஷிஞ்ச கிம்சித³மலை: பீயூஷவர்ஷைரிவ
ஶ்ரீகாமாக்ஷி தவ ஸ்மிதத்³யுதிகணை: ஶைஶிர்யலீலாகரை: || (மந்தஸ்மித சதகம் 94)

 

64 replies on “mooka pancha shathi stothram”

MOOKA PANCHA SHATHI in Tamil with meaning will be of great help to me. Also another request. For novice person like me, learn to chant audio format will guide to pronounce properly.

I learnt the sanskrit alphabets, but very very slowly only i am able to read. how to improve my speed, so that i can chant samskrutha version of mooka pancha shathi. pl help

Hello Ganapathhy Sir, Thanks for sharing Arya sathakam audio. It is very helpful to listen and learn chanting the ambaal slokam. Do you have any plans to share the audio for other sathakams? Look forward to your kind reply. Best, Jayaraman

Sir…is there a print of mooka panchasathi each sathagam with word by word meaning and full explation…it is in your blog and the book is printed in 1917 by Mr kalayana sundaram Kumbakonam janardhana press ..which is very useful to know each word of storheam….can I get a copy? Each sathagam is separate ly printed book

Namaskaram. Can any one help me with word by word meaning of all 500 slokas? Any book available or in the net?

https://www.youtube.com/watch?v=9l98-F67lYw

I came across this video in which mama talks about someone who has been helped by “Aarya Shatakam” and Maha Periyava. its from 34:27 till 36:15 mins. I am so thrilled to listen to this message as i have started the parayanam of “aarya shatakam” (samkrutha version) today. so happy to share this here.

Thank you so much for all the kainkaryam you have been doing.

Reading Mooka Pancha sati slokas at random since a couple of days. By the Grace of Mahaperiaval , I could learn about your Guru and your contribution today. Thanks.

What a blessed soul Sri Ganapathy sir,
Tirelessly bringing out the pearls of our Sanadana Darma in good, understandable and delectable language as well as audios. Our prayers to Sri Subramanya to bless you with all the best in life.
with respectful regards,

Thanks for the whole book with Sanskrit and Tamil however some schlokas are different from recent book which I have in Tamil on stuthi satakam I am happy I found this website with beautiful meaning and explanations !mahaperiyava mentions many times in his upadeshams and to hear it now feels as if he is talking periva pada my charanam!

sir, is it கோமளாங்கலதா or கோமலாங்களதா in the first slokam of Arya Shatakam? Thanks very much for your service.

கோமளாங்கலதா is correct. இந்த pdf ல் correct பண்ணி விட்டேன். http://valmikiramayanam.in/Mooka%20pancha%20shathi%20in%20tamizh%20script.pdf
எல்லா ல ள ஒரு முறை சரி பார்த்து விட்டேன். நன்றி. BTW சம்ஸ்க்ருதத்தில் ல ள வித்யாசம் கிடையாது. பெரியவா எல்லாம் எப்படி சொன்னாளோ அப்படி சொல்ல வேண்டியது தான்.

நன்றி, sir. உங்க audio-file கேட்டுண்டே இரண்டு pdf-ஐயும் படிச்ச போது தான் audio-text mismatch doubt வந்துது. பெரியவா எல்லாம் எப்படி சொன்னாளோ அதை அப்படியே நீங்க audio and text மூலமா சொல்லி தரேள். pause பண்ணி சொல்லிப் பார்த்துட்டு அடுத்த ஸ்லோகம் play-pause- text படிக்க ரொம்ப சௌகர்யமா இருக்கு. மறுபடியும் எல்லா பாடங்களுக்கும் நன்றி.

Can you please translate the sentences in English prior to the shlokas (for the benefit of non-tamil readers)? Thanks in advance

Namaskaram. I just happened to see that you have written the meanings and summary also for mooka panchasati. I also understand that you also have CDs to help us with chanting the same. In fact I am desperately looking for all the above. Can I buy them from place? Please help me. Thanks very much again. Namakaran

Thank you very much. I shall look into the web site. I am blessed . Thanks again.

What a wonderful work by Ganapathy Subramanian sir! All the Devotees of Periyava & Kamakshi were very thankful to you.. Its very easy to access lyrics, audio, meaning & benefits of specific slokas.. Thanks alot for your wonderful effort.. Periyava Charanam.

How enchanting…!This is by far the most enthralling and invigorating race side by side with Soundaryalahari, though more one to one in thrust. with the “sakhya” approach to Sri Ambal…”Bhavani thwam dhaasay mayi vithara dhrishtincha karuna…..”simply elevating to sublime heights..

Shri Mathre Namaha; Shri Gurubhyo Namaha. While looking for G. V. Ganesa Iyer’s Bhashyam on Mooka Pancha Shathi, I stumbled upon your blog! Thank you very much for the Audio version. It is of great help. Namaste, Ramaa

I am really blessed to see your work today! Especially the Tamil version with the numbered consonant. It is of great help for people like me to chant without mistake by the grace of Kamakshi and Periyava! Thank you very much Sir!

Thankyou very much for the links for the shlokas as well as the explanations . This is very useful for me to learn this shloka especially located in a distant land where ordering this book has been quite challenging in this uncertain times. Grateful for the uploads!

Can anyone please tell me this Sloka in English or Reference from where it is taken ?

ஞானம் சித்திக்க: (to attain gnanam)

ஸ்தோத்திரம் முழுவதும் 5 முறை திரும்ப திரும்ப பாராயணம் பண்ண வேண்டும்.

அமிருதம் போன்ற வாக்கு சித்திக்க: (to get ambrosia like speech)

ஆர்யா சதக முடிவில் அம்பாளை ஆராதிக்கிறவனுக்கு அமிருதம் போன்ற வாக்கு சித்திக்கிறது என்று சொல்லியிருக்கிறது. அதனால் முதல் 100 ஸ்லோகங்களைப் பாராயணம் செய்கிறவர்களுக்கு நல்ல வாக்கு சித்திக்கும்.

மிக நல்ல செயல்.நன்றி தங்களுக்கு.
காமாட்சி அம்பாள் அருளுடனும் மஹாபெரியவர் அருளும் பெற்று வாழ்க வளமுடன்.

Pranams Sir All this is amazing but alas ! I can only read telugu text – can you please take the trouble making this available in Telugu also

Found the explanations very useful. Provides Gist as well as Depth of Ambal’s OMNIPOTENCE. WORTHWHILE LEARNING EXPERIENCE. PRANAMS.

Namaskarams Sir!
Do you also have samskritha version ( shlokas and audio file for chanting) of Mookasaaram?
Thank you –
Kamakshi Natarajan

Namaskaram. Is it possible to get meanings in English for the different verses of each satakam. I see the tamizh meanings.

Namaskaram. What will be the slokas to be recited to benefit child with autism. Please reply. Thank you and God Bless you

Namaskaram Sir, Do we have a hard copy of Mooka Pacha Shathi written by Swamiji..Where can i order if its available ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.