126. ராமர், சீதையோடும் லக்ஷ்மணனோடும் அகஸ்தியர் உத்தரவின்படி பஞ்சவடிக்கு வருகிறார். வழியில் ஜடாயு என்ற கழுகு அரசர் அவர்களை பார்த்து “நான் உன் தந்தை தசரதரின் நண்பன். இங்கு உங்களுக்கு அருகில் இருந்துகொண்டு முடிந்த உதவிகளைச் செய்கிறேன். சீதை தனியாக இருக்கும்போது அவளை பார்த்துக் கொள்கிறேன்.” என்று கூறுகிறார்.
Author: Ganapathy Subramanian
உத்தவ கீதையில் வரும் 24 குருக்கள் (30 min Audio in tamizh. Transcript given below) ஸ்ரீமத்பாகவதத்தில் உத்தவ கீதையில் வரும் 24 குருக்கள் மஹாபெரியவாளைப் பத்தி எல்லாரும் அவா, அவா அனுபவங்களை பகிர்ந்துக்கும் போது, நமக்கு இந்த மாதிரி ஒரு பாக்கியம் கிடைக்கலையே, ஒரு பொள்ளாச்சி ஜெயம் பாட்டி மாதிரியோ, ஒரு தியாகுத் தாத்தா மாதிரியோ, நாம மஹாபெரியவாளுக்குக் கைங்கர்யம் பண்ணி, அவாளோட நெருங்கியிருந்து, அவாளை அனுபவிக்கலையே அப்டீன்னு, ரொம்ப குறையா வர்றது. ஆனா அதுக்கு […]
அகஸ்தியர் விஷ்ணுதனுஸ் அளித்தார்
125. ராமர், சீதையோடும் லக்ஷ்மணனோடும் அகஸ்தியரை தரிசிக்கிறார். அகஸ்தியர் அவர்களை மிகுந்த அன்போடு வரவேற்று உபசரித்து, அவர்களுக்கு உணவு அளிக்கிறார். பின் அகஸ்தியர் ராமருக்கு விஷ்ணு பகவானின் வில்லையும் அம்புறாதூணியையும் அளித்து “எப்படி இந்திரன் வஜ்ராயுதத்தை கொண்டுள்ளானோ, அது போல ராமா, வெற்றியின் பொருட்டு நீ இந்த விஷ்ணு தனுசை ஏற்றுக் கொள். ” என்று வாழ்த்துகிறார்.
அகஸ்தியர் மஹிமை
124. ராமர், சீதையோடும் லக்ஷ்மணனோடும் அகஸ்தியர் ஆஸ்ரமத்திற்கு செல்லும் வழியில், அகஸ்த்ய முனிவரின் மஹிமையை அவர்களுக்கு சொல்கிறார். அகஸ்தியர், வாதாபி இல்வலன் போன்ற ராக்ஷசர்களை அழித்ததும், விந்திய மலையின் கர்வத்தை அடக்கியதும், தென் திசைக்கே அகஸ்தியர் அபயம் அளித்ததும் கூறி “மிகுதியுள்ள வனவாசத்தை அகத்தியருக்கு தொண்டு செய்து இனிமையாக கழிப்போம்” என்று கூறுகிறார்.
ரிஷிகளோடு பத்து வருடங்கள்
123. ராமர் சீதையோடும் லக்ஷ்மணனோடும் பத்து வருடங்கள் தண்டக வனத்தில் பல முனிவர்களின் ஆஸ்ரமங்களில் இனிதே கழிக்கிறார். ஓரிடம் போகும் வழியில் ஒரு ஏரியின் உள்ளிருந்து இனிமையான சங்கீதமும் நாட்டிய சப்தமும் கேட்கிறது. ராமர் அருகிலிருந்த தர்மப்ருத் என்ற முனிவரிடம் என்ன இந்த ஆச்சர்யம் என்று கேட்கிறார். தர்மப்ருத் “மாண்டகர்னி என்ற முனிவர் தவத்தை கலைக்க இந்திரன் ஐந்து அப்சரஸ் ஸ்திரீகளை அனுப்பினான். அந்த முனிவர் தன் தவத்தால் இளமையை வரவழைத்துக் கொண்டு இந்த ஏரியின் உள்ளே […]
ஸீதா ராம ஸம்பாஷணை
122. சீதை ராமரிடம், “நீங்கள் பொய் பேச மாட்டீர்கள். பிறன் மனைவியை ஏறெடுத்தும் பார்க்க மாட்டீர்கள். ஆனால் ராக்ஷசர்களைக் கொல்வேன் என்று ரிஷிகளிடம் வாக்களித்தீர்கள். நம்மிடம் எந்த தவறும் செய்யாத ராக்ஷசர்களை ஏன் கொல்ல வேண்டும்? காட்டில் தபஸ்விகளாக இருந்து விடலாமே” என்று கேட்கிறாள். ராமர் “ஜனகர் மகளான நீ கேட்பது சரி தான். ஆனால் தபஸ்விகளான இந்த ரிஷிகள் என்னிடம் அபயம் கேட்டார்கள். நான் ரிஷிகளை என்னைச் சேர்ந்தவர்களாக நினைக்கிறேன். அதனால் ராக்ஷசர்களைக் கொன்று அவர்களின் […]
சுதீக்ஷ்ணர் ஆஸ்ரமத்தில் ராமர்
121. ஸ்ரீராமர், சீதாதேவியோடும் லக்ஷ்மணரோடும் சுதீக்ஷ்ணரின் ஆஸ்ரமத்தில் அன்றிரவுப் பொழுதை இனிமையாக கழிக்கிறார். மறுநாள் வைகறைப் பொழுதில் துயில் விழித்து, அருகில் உள்ள குளத்தில், மலர்களின் மணம் வீசும் குளிர்ந்த நீரில் ஸ்நானம் செய்கிறார்கள். அனுஷ்டனங்களை முடித்துவிட்டு முனிவரிடம் விடை பெறுகிறார்கள். வணங்கிய ராமரை முனிவர் எழுப்பிக் கட்டி அணைத்து அன்பு பாராட்டி பிற முனிவர்களின் ஆஸ்ரமங்களையும் அவற்றை சூழ்ந்திருக்கும் இயற்கை அழகையும் விரிவாக புகழ்ந்து, ‘நலமாக சென்று வா. மீண்டும் ஒருமுறை இங்கு திரும்பி வா’ […]
முனிவர்களுக்கு அபயம்
120. ராமர், சரபங்கர் ஆஸ்ரமத்திலிருந்து கிளம்புகிறார். தண்டக வனத்து முனிவர்கள் ராமரிடம் வந்து ராக்ஷசர்களால் தங்களுக்கு ஏற்படும் துன்பங்களைக் கூறி தங்களை காப்பாற்றுமாறு வேண்டுகிறார்கள். ரிஷிகள் காமத்தையும் கோபத்தையும் தவத்தினால் கடந்து செல்ல முயன்று வருவதால், சாபம் கொடுக்க விரும்பாமல் க்ஷத்ரியரான ராமரிடம் முறையிடுகிறார்கள். ராமர் அவர்கள் பிரார்த்தனையை ஆணையாக ஏற்று, அவர்களுக்கு அரக்கர்களிடமிருந்து அபயம் அளிக்கிறார். பின்னர் ராமர் சுதீக்ஷ்ணர் என்ற முனிவரை சென்று வணங்குகிறார். சுதீக்ஷ்ணர் அவர்களை வரவேற்று உபசரிக்கிறார். [தண்டகவனத்து முனிவர்களுக்கு அபயம்] […]
சரபங்கர் தர்சனம்
119. ராமர் சரபங்கர் ஆஸ்ரமத்தை தேடி வருகிறார். அருகில் செல்லும் போது, ராம லக்ஷ்மணர்கள், அங்கு இந்திரன் முனிவர்களுடன் வந்திருப்பதை பார்த்து வியக்கிறார்கள். சரபங்கர், ராமரை வரவேற்று உபசரித்து ‘ராம! இந்திரன் என்னை பிரம்ம லோகத்திற்கு அழைத்து செல்ல வந்திருந்தான். பிரியமான அதிதியான நீ வருவதை அறிந்து, உன்னை பார்க்க காத்திருக்கிறேன். என் புண்யங்களை உனக்கு அர்பணிக்கிறேன்.’ என்று கூறி விடை பெறுகிறார். தானே ஒரு அக்னி குண்டத்தை அமைத்து அதில் இறங்குகிறார். பூத உடலை உகுத்துவிட்டு, […]
விராத வதம்
118. தண்டக வனத்தில் திடீர் என்று விராதன் என்ற ஒரு கோரமான அரக்கன் வந்து சீதையை கவர்ந்து செல்கிறான். ராமரும் லக்ஷ்மணரும் அவனுடன் யுத்தம் செய்து அவனை கீழே வீழ்த்துகிறார்கள். விராதன் ராமரை யார் என்று அறிந்து ‘ராம! நான் ஒரு கந்தர்வனாக இருந்தேன். குபேரனின் சாபத்தால் அரக்கன் ஆகிவிட்டேன். உன் தயவால் நான் இன்று சாப விமோசனம் அடைந்தேன். என்னை எந்த ஒரு ஆயுதத்தாலும் கொல்ல முடியாது. என் உடலை ஒரு குழி வெட்டி புதைத்து விடுங்கள். […]