Categories
Narayaneeyam

அஜாமிளோபாக்யானம்

அஜாமிளோபாக்யானம் (28 min audio describing the story of Ajamila in Tamizh)

பகவத்கீதை 8வது அத்யாயம் 6வது ஸ்லோகம் மஹாபெரியவாளின் வியத்தகு விளக்கம்

7 replies on “அஜாமிளோபாக்யானம்”

அற்புதமான ப்ரவசனம் ! பகவான் நாமம்.மனதுக்கும் நாவுக்கும் இதம் , இனிமை நாவுக்கும் சுவை ! பழகினால்.அருமை தெரியும் ,!
அஜாமிலன் தெரிந்தோ தெரியாமலோ தன் பிள்ளையின் நாமாவை சொல்ல அங்கு விஷ்ணு பார்ஷதர்கள் தோன்றினார்கள் யாமணிடம் இருந்து உயிரை மீட்க! ஒரு முறை அறியாமல் சொன்னதற்கே இந்த பலன் என்றால் நாம் அருமை உணர்ந்து நாம ஜபம் செய்தால் எப்படி பகவான் உதவிக்கு ஓடி வருவார் என்பதற்கு சாக்ஷி இந்தக் கதை !
ராம ஜபத்தினால் இருநூறு வருஷங்களுக்கு முன் காளாஞ்சி மேடு கிராமத்தில் வசித்த துக்கிரீ பாட்டி என்றழைக்கப் பட்ட லட்சுமி பாட்டியின் கதை பெரியவா வாயிலாக நாம் அறிந்ததே !
ஊரில் யாருக்கு.கஷ்டமானாலும் தீர்க்கும் பரம ஔஷதமாக விளங்கியது அவளது ராம ஜபம்!!

இங்கு சுவாமிகள் எப்படி ஹோமம் செய்யும்போது சாஸ்த்ர விருத்தமா தக்ஷிணையாக ஹோமத்தில் பணம்.போடச் சொல்லி பக்தர்களிடம் பணம் வாங்குவதை எதிர்த்துக் கருத்து சொன்னது ரொம்ப நன்றாய் இருந்தது!
அஜாமிளன் கதை கேட்டு நாம் நாம ஜெபத்தின் அருமையை கற்க நாம ஜபம் ஒரு முறை அறியாமல் சொன்னதே எத்துணை பலனலித்தது என்பது மனதில் பதிவாக இருந்தது !!
அறியாமல் செய்த தவறுக்காக அரசன் தேர்க் காலில் தன் மகனை பலியிட்டது அறியாமல் செய்த தவறாயினும் தான் தண்டனையை ஏற்ற கதை தக்க உதாரணம் !
மிக எளிய ஆனால் வலிய சொற்பொழிவு !!
ஏகாதசி அன்று சிறந்த உபன்யாசம் கேட்ட திருப்தி.!!
ஜெய் ஜெய் ராம ராம.

எங்கள் வாழ்க்கை பயணம் தங்களது ப்ரவசனத்தினால் நல்வழியில் செல்கிறது
இப்பதிவு எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது ராம ராம ராம

ராமா ராமா!
நாமா நன்மையே செய்யும். நம்பிக்கையுடன் நாமத்தைக் கூறினால் நாமம் நம்மைக் கரையேற்றும்.

ஸ்ரீமந்நாராயணீயம் பாராயணம் ஷ்ரவண பாக்கியத்துடன், மிக அருமையான உபன்யாசமும்
கிடைக்க பகவான் எங்களுக்கு ஒரு பெரும் அனுக்ரஹம் செய்துள்ளார்.

ஒரு முறை நாராயணா என்னும் தன் மகனுக்கிட்ட நாமத்தை அஜாமிளன் உரைத்ததனால் யம படர்களிடமிருந்து விஷ்ணு பார்ஷதர்கள் மூலம் மீட்கப்பட்டான். நாமத்தின் வடிவமான விஷ்ணு சஹஸ்ரநாமம் பாபப்பிராயச்சித்தமாக உள்ளது.
ஸ்ரீ ஸ்வாமிகளின் வைராக்கியமான பக்தியையும், அவர் நகைச்சுவை உணர்வையும் நீங்கள் விளக்கிக் கூறும்போது அவரின் தரிசனம் கிடைக்கவில்லையே என்று ஏக்கமாக உள்ளது.
ஸ்ரீ சார், “பகவானை வழிபடுவதைத் தவிர மற்றவை அனைத்தும் பயனற்றவை.” என்று சொன்னது மனதிலேயே நன்றாக ஆழமாக பதிந்துள்ளது.
மேலும் மஹாபெரியவாளின் வாக் அமுதத்தினாலே நாம மகிமையையும், காரியத்திற்கு இடையில் நாம ஜெபத்தையும் இறைவனை, நினைப்பதும் தான் பிறவிப்பயன் என்று சொல்லிய அருளுரை முத்தாய்ப்பு.
நா இருக்கு, நாமா இருக்கு, வாக்கினாலே நம் வாழ்வின் பாதையில் மாற்றமும் இருக்கும்.
ஹரே ராமா ஹரே ராமா! ராமா ராமா ஹரே ஹரே! ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண! கிருஷ்ண கிருஷ்ண ஹரேஹரே!
🙏🌼🌹

மிக அழகான சொற்பொழிவு. கேட்க கேட்க மிகவும் ஆனந்தமாக இருந்தது. ஸ்வாமிகளின் பாகவத விளக்கத்தை துணைக்கொண்டு உங்களுடைய அழகான மொழியில் நாராயணீய ஸ்லோகத்தை கொண்டு விளக்கிய முறை மிக அருமை.

‘நாமத்தை உணர்ந்து சொன்னாலும், போகிறபோக்கில் உணராமல் சொன்னாலும், நாமத்திற்கு என்று ஒரு ப்ரபாவம் உண்டு, பாவங்களை பொசுக்கிவிடும் தன்மை உள்ளது’ என்று நமக்கு இக்கதை மூலம் மனிதன் நரகங்களை தவிர்ப்பதற்கு வழி கூறுகிறார்.

‘இரண்டு அக்ஷரமுள்ள ‘சிவ’ நாமாவை அகஸ்மாத்தாக ஒருதரம் மனிதர்களால் சொல்லப்பட்டால், அதுவே ஸமஸ்த பாபத்தையும் உடனே அழித்துவிடுகிறது’ என்று பாகவதத்தில் வருகிறது.
‘யத்-த்வயக்ஷரம் நாம கிரேரிதம் ந்ருணாம்
ஸக்ருத் ப்ரஸங்காத் அகம் ஆசு ஹந்தி தத் |’
ஸத்தியங்களுக்கெல்லாம் மேலான ஸத்யமாக, தக்ஷ யக்ஞத்தில் ப்ராண த்யாக ஸமயத்திலே ஸாக்ஷாத் அம்பாள் சொன்னதாக சுகாசார்யாள் வாயினால் வந்திருக்கிற வாக்யம் இது.

ராம பட்டாபிஷேக சர்க்கத்தில் ஒரு ஸ்லோகம்:
ராமோ ராமோ ராம இதி ப்ரஜாநாம் அபவன் கதா: |
ராமபூதம் ஜகத் அபூத் ராமே ராஜ்யம் பிரஷாஸதி ||
‘ஜனங்களெல்லாம் ராமா ராமா என்று ராமருடைய கதைகளையே பேசிக்கொண்டு உலகம் ராம மயமாக ஆனந்த மயமாக ஆகிவிட்டது.’ என்று வருகிறது.

மஹாபெரியவா ‘ஹர’ நாமம் மற்றும் ‘கோவிந்த’ நாமங்களின் சிறப்புகளை சொல்லும்போது, “தனியாக நாம் பல நாமங்களையும், மந்திரங்களையும் சொல்லி ச்ரேயஸ் அடைந்து, வையகம் துயர் தீர, நாம் கோஷ்டியாக ஞானஸம்பந்தர் காட்டிக்கொடுத்த ‘ஹர’ நாமத்தையும், ஆச்சார்யாள் காட்டிக் கொடுத்த ‘கோவிந்த’ நாமத்தையும் கோஷம் செய்ய வேண்டும்.” என்கிறார்.

நம: பார்வதீ பதயே.. ஹரஹர மஹாதேவ 🙏🙏

ஸர்வத்ர கோவிந்த நாம சங்கீர்த்தனம்.. கோவிந்தா கோவிந்தா🙏🙏

अत्यद्भुतम् भगवन्नाम महिमा🙏🙏🙏🙏

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.