சங்கரர் மண்டனமிஸ்ரரை வென்றது (17 min audio file. Same as the script below) நேற்றைய கதையில், சுப்ரமண்ய ஸ்வாமியோட அவதாரமாகவே பூமியில வந்து, கர்ம மீமாம்சையை, வேதத்தை, வேதத்துல சொல்லி இருக்கிற கர்மாக்களை, எல்லாரும் புஷ்களமாக பண்ணும் படியாக அனுக்கிரஹம் பண்ணின குமாரில பட்டருடைய கதையைப் பார்த்தோம். அவர் அக்னி ஸ்வரூபமா இருக்கிறதுனால கடைசியில அக்னியிலேயே மறைஞ்சுட்டார். குமாரிலபட்டர் சங்கரர் கிட்ட “நீங்க மாஹிஷ்மதியில இருக்கக் கூடிய மண்டனமிஸ்ரரை போய் பார்க்கணும்” அப்படின்னு வேண்டிக்கறார். […]
Series: Sri Shankara Charitham
பத்மபாதர் கதை (17 min audio file. Same as the script below) நேற்றைய கதையில், ஆதி சங்கரர் மண்டனமிஸ்ரரை வாதத்துல ஜெயிச்சு, அப்பறம் மண்டனமிஸ்ரர் ஸுரேஸ்வராச்சார்யாள் அப்படீங்கற பேர்ல ஸன்யாசம் எடுத்துண்டு ஆதி சங்கரரோடு கிளம்பினதும், மண்டனமிஸ்ரருடைய பூர்வாஸ்ரம மனைவி ஸரஸவாணி, ஆச்சார்யாள் வேண்டுதல்படி ச்ருங்கேரில சாரதாம்பாளாக குடி கொண்டு உலகத்துக்கு அருள் பண்ணிண்டு இருக்கற விவரமெல்லாம் சொன்னேன். இன்னிக்கு, பத்மபாதரோட கதையை பார்ப்போம். பத்மபாதர் ஆதி சங்கரர் கிட்ட முதல்ல வந்து சேர்ந்த […]
ஸ்ரீ சங்கர சரிதம் – பதிமூன்றாம் பகுதி – ஞானப் பாதை யாருக்கு? தோடகாஷ்டகம் தான் நமக்கு (19 min audio file. Same as the script below) நேற்றைய கதையில் பத்மபாதாச்சார்யாள் ஆதி சங்கரருக்கு காசியிலே முதல் சிஷ்யராக வந்து சேர்ந்தது, அவர் குரு பக்தியினால் தாமரை தாங்கிய தாளராக, பத்மபாதராக ஆனது, காபாலிகன் கிட்டேயிருந்து நரசிம்ம மூர்த்தியோட அனுக்ரஹத்துனால ஆச்சார்யாளை காப்பாத்தினது, அவர் எழுதிய பஞ்சபாதிகா இதெல்லாம் பார்த்தோம். இன்னிக்கு இன்னும் இரண்டு […]
சங்கர திக்விஜயம் (23 min audio file. Same as the script below) நேற்றைய கதையில் ஹஸ்தாமலகாச்சார்யாளும், தோடகாச்சார்யாளும் நம்முடைய சங்கர பகவத்பாதாள் கிட்ட வந்து சேர்ந்தது, பக்தி பண்ணிணது எல்லாம் சொல்லிண்டிருந்தேன். நேத்திக்கு சொல்லும் போது நமக்கெல்லாம், ஞானப்பாதை ரொம்ப கடினமானது. பாமரர்களா இருக்க கூடிய நாம், பக்தியினால் தான் பகவானை அடைய முடியும், அப்படீன்னு சொல்லிண்டு இருந்தேன். ஆனா அந்த பக்தியையே, கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் போன்ற மஹான்கள், ஞான மார்கம் போல […]
காஞ்சி சங்கரர் (14 min audio file. Same as the script below) நேற்றைய கதையில் ஆதி சங்கரர் தன்னோட ஆறாயிரம் சிஷ்யர்களோட பாரத தேசம் முழுக்க மூணு முறை பாத யாத்திரையாக திக்விஜயம் பண்ணினதை ஸ்தோத்திரங்கள் மூலமா சொல்லிண்டு இருந்தேன். மஹா பெரியவா சொல்றா “ஆச்சார்யாள் பண்ணின இந்த திக்விஜயம் national integration-ஆ முடிஞ்சுடுத்து. எல்லாரையும் ஒரே வேத மதத்துக்கு கீழ கொண்டு வந்து, நாம எல்லாரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் அப்படிங்கற […]
சங்கர ஜயந்தி ஸர்வ உத்கிருஷ்டமான புண்ய காலம் (10 min audio file. Same as the script below) நேற்று வரையில் பதினைந்து நாட்களில் ஆதி சங்கரருடைய சரித்ரத்தை ஸ்மரித்தோம். இன்னிக்கு சங்கர ஜயந்தி புண்ய காலம். ஆதி சங்கரருடைய மகிமையைப் பற்றியும் இந்த சங்கர ஜயந்தி எப்படி சர்வோத்க்ருஷ்டமான புண்ய காலம் என்பதைப் பற்றியும், மஹா பெரியவா தெய்வத்தின் குரலில் சொல்லி இருப்பதை இப்போது வாசிக்கிறேன். ஸ்ரீ ஆதி சங்கரரின் மகிமை, அவருக்கு முன்னிருந்த எழுபத்திரண்டு […]
கடந்த பதினாறு நாட்களில் இந்த வலைதளத்தில் பகிர்ந்த ஸ்ரீ சங்கர சரிதம் உபன்யாசங்களை தொகுத்து, திருத்தங்கள் செய்து, ஒரு புத்தகம் போல அமைத்து இருக்கிறேன். தரவிறக்கி, அச்சிட்டு, படிக்க வசதியாக இருக்கும் என்ற எண்ணத்தில் இதைச் செய்துள்ளேன். இணைப்பு இங்கே ஸ்ரீ சங்கர சரிதம் Have created a Tamizh book from the 16 recent posts on Sri Shankara charitham, so that readers can download, print and read comfortably. Link here https://valmikiramayanam.in/sri%20shankara%20charitham.pdf
தோடகாஷ்டகம் தமிழில் பொருள்; Meaning of thotakashtakam in tamil இன்னிக்கு சங்கர ஜயந்தி புண்யகாலம். உலகம் முழுக்க ஆசார்யாளோட ஜயந்தியை ரொம்ப ஆனந்தமா கொண்டாடிண்டிருக்கா. சங்கர ஜயந்தி அன்னிக்கு தோடகாச்சாரியாள் பண்ண “தோடகாஷ்டம்”ங்கற அந்த ஸ்தோத்திரத்தை சொல்லி ஆசார்யாளை நமஸ்காரம் பண்ணுவோம். மகாபெரியவா பண்ணி காண்பிச்சிருக்கா. இன்னிக்கு உலகம் முழுக்க ஆசார்யாளை கொண்டாடறான்னா, பெரியவா காண்பிச்ச குரு பக்திதான். பெரியவா அவ்வளவு ஆசையா சங்கர ஜயந்தியை கொண்டாடி, எல்லாரும் கொண்டாடணும்னு உத்ஸாகப்படுத்தி, எந்த ஊருல இருந்தாலும் […]