Categories
Ayodhya Kandam

பரதனின் உயர்ந்த ராமபக்தி

bharatha vasishta
96. வசிஷ்டர் பரதனை விமரிசையாக சபைக்கு வரவேற்று அவனை முடி சூட்டிக் கொள்ளும்படி வேண்டுகிறார். பரதன் அவரைக் கண்டித்து ‘அயோத்தியும் நானுமே ராமனின் சொத்து. தசரதருக்கு பிறந்த நான் எப்படி ராமனின் சொத்தை அபகரிப்பேன்? என் மனம் மாறாமல் இருக்க இங்கிருந்தே வனத்தில் இருக்கும் தர்ம வடிவான ராமரை வணங்குகிறேன். சுமந்திரரே! படை கிளம்பட்டும். நாமும் புறப்படுவோம்.  ராமனை காட்டிலிருந்து அழைத்து வருவோம்’ என்று உத்தரவு இடுகிறான்.

[இங்கிருந்தே ராமரை வணங்குகிறேன்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/96%20bharathan%20rama%20bhakthi.mp3]

Categories
Ayodhya Kandam

ராமனே ராஜா

Tirta Ganga Palace
95. பரதனிடம் மந்திரிகள் முடி சூடிக்கொள்ளும்படி சொல்கிறார்கள். பரதன் அதை மறுத்து ‘அனைவரும் சென்று ராமனுக்கு காட்டிலேயே முடி சூட்டி அவனை அழைத்து வருவோம். சில்பிகளைக் கொண்டு அயோத்தியிலிருந்து கங்கை கரைக்கு ஒரு பாதை அமையுங்கள்’ என்று உத்தரவு இடுகிறான். அந்த ஆணைப்படி சில்பிகள் கிணறுகளும், குளங்களும், அணைகளும், நிழல் தரும் மரங்களும், தங்குமிடங்களும், கொண்ட ஒரு பாதையை வடிவமைக்கிறார்கள்.
[அயோத்தியிலிருந்து கங்கைக்கரைக்கு பாதை]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/95%20raman%20thaan%20rajaa.mp3]

Categories
Ayodhya Kandam

சுமந்திரர் சமாதானம்


85. சுமந்திரர் ராமரைக் காட்டில் விட்டு விட்டார் என்று கேட்ட தசரதரும் கௌசல்யையும் வேதனைப் படுகிறார்கள். அதைக் கண்டு சுமந்திரர் ‘அவர்கள் காட்டில் சந்தோஷமாகத் தான் இருக்கிறார்கள். ராமர் அருகில் இருப்பதால் சீதை பயப்படவே இல்லை. இப்படி ஒரு சத்தியப் பற்றோடு வாழ்ந்த அரசர், அவரிடம் அன்பு அகலாத மனைவி, தந்தை சொல் ஏற்று கானகம் சென்ற ஒரு பிள்ளை, அவனோடு சென்ற அவன் மனைவி, தம்பி, என்று இந்த சரிதத்தை எல்லோரும் உலகம் உள்ளவரை பேசுவார்கள். நீங்கள் வருந்த வேண்டாம்’ என்று சொல்லி சமாதானப் படுத்துகிறார்.
[சுமந்திரர் சாமாதானம்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/85%20sumanthirar%20samadaanam.mp3]

Categories
Ayodhya Kandam

பரத்வாஜர் தர்சனம்


82. கங்கையும் யமுனையும் சேரும் பிரயாகை என்ற இடத்தில் தவஸ்ரேஷ்டரான பரத்வாஜ முனிவரை ராமர் தரிசிக்கிறார். பரத்வாஜர் அவர்களை வரவேற்று உபசரித்து, அன்றிரவு புண்ய கதைகளை பேசியபடி கழிக்கிறார்கள். மறுநாள் காலை, முனிவர், ‘உங்கள் வனவாசத்தை ரம்யமான சித்ரகூட மலை அடிவாரத்தில் மந்தாகினி நதி தீரத்தில் கழிக்கலாம்’ என்று சொல்லி அங்கு செல்லும் வழியைக் கூறுகிறார். ராமரும் லக்ஷ்மணரும் சீதையும் அவர் சொன்ன வழியில் சென்று யமுனை நதியைக் கடந்து ஒரு பெரிய ஆலமரத்தை வணங்கி பின் மந்தாகினி தீரத்தை அடைந்தார்கள்.
[பரத்வாஜர் தர்சனம்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/82%20bharadwajar%20darshanam.mp3]

Categories
Ayodhya Kandam

குஹனும் லக்ஷ்மணரும்


79. ராமரும் சீதையும் தூங்கியபின் குஹன் லக்ஷ்மணரிடம்  ‘ராமனைக் காட்டிலும் ப்ரியமான ஒருவர் எனக்கில்லை. நான் முழித்து காவல் காக்கிறேன். நீங்களும் ஓய்வெடுங்கள்’ என்று வேண்டுகிறான். ஆனால் லக்ஷ்மணர் ‘இப்படி ராமரும் சீதையும் புல் தரையில் படுக்கும் நிலைமையில் எனக்கு எப்படித் தூக்கம் வரும்?’ என்று இப்படி இருவரும் ராமனின் குணங்களைப் பேசிக் கொண்டே அன்றிரவுப் பொழுதைக் கழிக்கிறார்கள். மறுநாள் அவர்கள் கங்கையை கடக்க குஹன் ஒரு படகை ஏற்பாடு செய்கிறான்.
[குஹனும் லக்ஷ்மணனும் சம்பாஷணை]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/79%20guhanum%20lakshmananum.mp3]

Categories
Ayodhya Kandam

ராமனுடைய வைராக்கியம்

69. தசரதர் தன்னுடைய சொந்த செல்வத்தை, வனம் செல்லும் ராமனுக்கு அளிக்க விரும்புகிறார். அனால் கைகேயி அதைத் தடுக்கிறாள். ராமன் ‘யானையைக் கொடுத்த பின் அதைக் கட்டும் சங்கிலிக்கு ஆசைப் படுவரோ? ராஜ்யத்தைக் கொடுத்த பின் எனக்கு செல்வம் எதற்கு?’ என்று சொல்லி விடுகிறான். ராமனிடத்தில் என்ன குற்றம் கண்டாய் என்று கேட்கும் மந்திரிக்கு கைகேயி ஏதும் பதில் சொல்லவில்லை.
[ராமனுடைய வைராக்கியம்]

Categories
Ayodhya Kandam

சுமந்த்ரர் கைகேயியை கோபித்தல்

68. ‘தசரதரிடம் எந்த தவறுமில்லை. கைகேயி பிடிவாதத்தால் ராமர் வனவாசம் போகிறார்’ என்று புரிந்து கொண்ட சுமந்த்ரர் கைகேயியை கடிந்து பேசுகிறார் ‘இந்திரனைப் போன்ற பெருமை படைத்த தசரதரை உன் பிடிவாதத்தால் கலங்கச் செய்கிறாய். அது பெரும் தவறு. உன் அம்மாவுடைய பிடிவாத குணம் உனக்கு அமைந்துள்ளது. அதனால் உனக்கு கடுமையான கெட்ட பெயர் தான் ஏற்படும். இப்படி செய்யாதே. தசரதர் வாக்கு மாற மாட்டார். நீயே மனதை மாற்றிக் கொண்டு ராமனுக்கு பட்டம் சூட்டு.’ என்று கூறுகிறார். கைகேயி அதற்கு செவி சாய்க்கவில்லை.
[சுமந்த்ரர் கைகேயியை கோபித்தல்]

Categories
Ayodhya Kandam

ராமர் தசரதரிடம் உத்தரவு பெற்றார்


67. மயக்கம் தெளிந்து தசரதர் ராமனிடம் ‘ராமா, நான் கைகேயினால் வஞ்சிக்கப் பட்டேன்.என்னை சிறையில் அடைத்து விட்டு நீ அரசனாகி விடு’ என்கிறார். ராமர் ‘தந்தையே, உங்கள் சத்தியத்திற்காக நான் எதையும் கைவிடத் தயாராக உள்ளேன். ராஜ்யத்தை பரதனுக்கு அளியுங்கள். நான் வனவாசத்தை முடித்துவிட்டு விரைவில் திரும்ப வந்து உங்கள் பாதங்களைப் பற்றுவேன்’ என்று கூறுகிறார்.
[ராமர் தசரதரிடம் உத்தரவு பெற்றார்]

Categories
Ayodhya Kandam

அயோத்யா ஜனங்களின் புலம்பல்

66. ராமர் வனவாசம் போவதை அறிந்த அயோத்யா நகர ஜனங்கள் ராமருடைய குணங்களை புகழ்ந்து ‘நாம் ராமரோடு காட்டிற்கு சென்று விடலாம். இந்த அயோத்தி பாழடைந்து காடாகட்டும். ராமர் இருக்குமிடமே அயோத்தி ஆகிவிடும்’ என்கிறார்கள். ராமர், சுமந்திரர் மூலம் தன் வருகையை தெரிவித்து தசரதரை தரிசிக்கிறார். தசரதர் மயங்கி விழ ராமரும் லக்ஷ்மணரும் அவரை தூக்கி படுக்கையில் கிடத்துகிறார்கள்.
[அயோத்யா ஜனங்களின் புலம்பல்]

Categories
Ayodhya Kandam

ராமர் தன் செல்வத்தை தானமளிக்கிறார்

65. ராமர் தன் செல்வத்தை பிரம்மணர்களுக்கும் ஏழைகளுக்கும் யாத்ரா தானமாக அளிக்கிறார். தன் சொந்த பலத்தை நம்பாமல் தெய்வத்தையே நம்பி இருக்கும் த்ரிஜடர் என்ற ப்ராம்மணரின் தேஜஸை உலகிற்கு வெளிப்படுத்தி, அவருக்கு கணக்கற்ற பசுக்களை தானம் அளிக்கிறார். பிறகு தந்தையிடம் விடைபெற சீதையோடும் லக்ஷ்மணனோடும் ராமர் தசரதர் அரண்மனைக்கு செல்கிறார்.
[ராமர் தன் செல்வத்தை தானமளிக்கிறார்]