Categories
Ayodhya Kandam

பரதன் கோபம்

bharatha kaikeyi
92. பரதன், ராமர் எங்கே என்று கேட்கும் போது, கைகேயி, தான் ராமரை காட்டிற்கு அனுப்பியதைக் கூறுகிறாள்.  ‘இப்போது நீயே அரசன். பட்டம் சூட்டிக் கொண்டு ஆட்சி செய்’ என்று கூறுகிறாள். பரதன் கடும் கோபம் அடைந்து கைகேயியை நிந்திகிறான். ‘ஒழுக்கத்தில் சிறந்த இந்த குலத்திற்கு பெரும் கேடு விளைவித்து விட்டாயே! உன் பாபத்திற்கு நீ நரகத்திற்கு தான் போவாய். ராமன் உனக்கு என்ன தவறிழைத்தான்? எனக்கு அழியாத பழியை தேடித் தந்து விட்டாய். நான் உன்னோடு இனி பேச மாட்டேன். ராமரை காட்டிலிருந்து அழைத்து வந்து அவனுக்கு முடி சூட்டி நான் அவனுக்கு அடிமையாக இருப்பேன்.’ என்று கூறுகிறான்.
[பரதன் கோபம்]

[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/92%20bharathan%20kaikeyi.mp3]
Categories
Ayodhya Kandam

பரதன் அயோத்தி திரும்பினான்

bharatha
91. பரதன் வசிஷ்டர் அனுப்பிய தூதர்களோடு அயோத்தி திரும்புகிறான். அயோத்தி நகரம் களை இழந்து காணப் படுவதைக் கொண்டு அரசரின் உயிருக்கு ஆபத்தாய் இருக்கும் என்று அனுமானம் செய்கிறான். தசரதர் அரண்மனையில் அவர் இல்லாததால் கைகேயி அரண்மனைக்கு சென்று அவளைக் காண்கிறான். கைகேயி, தசரதர் காலகதி அடைந்து விட்டதை தெரிவித்ததும் வருந்தி அழுகிறான்.
[பரதன் அயோத்தி திரும்பினான்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/91%20bharathan%20ayodhi%20thirumbinaan.mp3]

Categories
Ayodhya Kandam

அராஜகத்தால் வரும் ஆபத்துக்கள்

dasharatha_death_bed
89. தசரதர் காலகதி அடைந்ததை அறிந்து கௌசல்யா தேவியியும் மற்ற மனைவிகளும் புலம்பி அழுகிறார்கள். அயோத்தி நகரமே சோகத்தில் மூழ்குகிறது. எல்லோரும் கைகேயியை திட்டுகிறார்கள். மந்த்ரிகளும் பெரியோர்களும் தசரதரின் உடலை எண்ணெய் குடத்தில் பத்திரப் படுத்திவிட்டு சபையைக் கூட்டுகிறார்கள். ‘அரசன் இல்லாதிருந்தால் நாட்டிற்கு பல கேடுகள் விளையும். அதனால் உடனடியாக அதற்கு தீர்வு காண வேண்டும்’ என்று அவர்கள் வசிஷ்டரிடம் வேண்டுகிறார்கள்.
[அரசனில்லாத நாடு]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/89%20dasarathar%20deha%20rakshanam.mp3]

Categories
Ayodhya Kandam

பரத்வாஜர் தர்சனம்


82. கங்கையும் யமுனையும் சேரும் பிரயாகை என்ற இடத்தில் தவஸ்ரேஷ்டரான பரத்வாஜ முனிவரை ராமர் தரிசிக்கிறார். பரத்வாஜர் அவர்களை வரவேற்று உபசரித்து, அன்றிரவு புண்ய கதைகளை பேசியபடி கழிக்கிறார்கள். மறுநாள் காலை, முனிவர், ‘உங்கள் வனவாசத்தை ரம்யமான சித்ரகூட மலை அடிவாரத்தில் மந்தாகினி நதி தீரத்தில் கழிக்கலாம்’ என்று சொல்லி அங்கு செல்லும் வழியைக் கூறுகிறார். ராமரும் லக்ஷ்மணரும் சீதையும் அவர் சொன்ன வழியில் சென்று யமுனை நதியைக் கடந்து ஒரு பெரிய ஆலமரத்தை வணங்கி பின் மந்தாகினி தீரத்தை அடைந்தார்கள்.
[பரத்வாஜர் தர்சனம்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/82%20bharadwajar%20darshanam.mp3]

Categories
Ayodhya Kandam

சீதாதேவி கங்கா நதியிடம் பிரார்த்தனை


81. கங்கையை கடக்கும் போது சீதை ‘கங்கா மாதா! நாங்கள் நல்ல படியாக வனவாசத்தை கழித்து திரும்பி வந்தால், உன் கரையில் உள்ள கோயிலில் தெய்வங்களுக்கு சிறப்பான பூஜைகள் செய்கிறோம். உன் கரையில் வசிப்பவர்களுக்கு அன்னதானம் செய்கிறோம்’ என்று வேண்டிக் கொள்கிறாள். ராமர் அன்றிரவு தன் அம்மாவைப் பற்றி கவலைப்பட்டு லக்ஷ்மணரை அயோத்திக்கு திரும்ப போகச் சொல்கிறார். லக்ஷ்மணர் ‘ராமா! நானோ சீதையோ உன்னைப் பிரிந்து ஒரு நிமிடம் கூட உயிர் வாழ மாட்டோம். பரதன் அவர்களைப் பார்த்துக்கொள்வான். கவலைப் படாதே’ என்று சொல்லி சமாதானம் செய்கிறார்.
[சீதாதேவி கங்கை நதியிடம் பிரார்த்தனை]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/81%20seethai%20gangai.mp3]

Categories
Bala Kandam

வால்மீகி முனிவர் ராமாயணத்தை லவ குசர்களுக்கு கற்றுத் தந்தார்

6. வால்மீகி முனிவர் தாம் படைத்த ராமாயண காவியத்தை லவ குசர்களுக்கு உபதேசித்தார். அவர்கள் அதை முதலில் காட்டில் முனிவர்களுக்கு பாடி காண்பிக்கிறார்கள். பின்னர் அவர்கள் ராமர் அழைப்பை ஏற்று, அஸ்வமேத மஹா மண்டபத்தில் ராமர் முன்னிலையிலேயே அந்த காவ்யத்தை பாடுகிறார்கள்.

Categories
Bala Kandam

வால்மீகி ராமாயணம் பிறந்த கதை

5. வால்மீகி முனிவர் தமஸா நதியில் ஸ்நானத்திற்கு செல்கிறார். வழியில் வேடன்ஒருவன் அம்பால் ஒரு பக்ஷியை அடித்ததைப் பார்த்து சோகத்தால் அவர்சொன்ன வார்த்தைகள் அனுஷ்டுப் சந்தத்தில் ஒரு ஸ்லோகமாக வெளிப்படுகிறது. வியப்படைந்த முனிவருக்கு பிரம்மதேவர் தர்சனம் தந்து, நாரதர் சொன்ன ராம சரிதத்தை, அனுஷ்டுப் சந்தத்தில் ஸ்லோகங்களாகஇயற்றி விஸ்தாரமாக, ஒரு காவியமாக பாடும்படி அநுக்ரகம் செய்தார்.

Categories
Bala Kandam

ஸங்க்ஷேப ராமாயணம்

4. இந்த உலகில் ‘சத்யம், தர்மம், அழகு, படிப்பு, வீரம், ஒழுக்கம் என்று எல்லாநல்ல குணங்கள் கொண்ட மனிதன் யாரேனும் உண்டா?’ என்று வால்மீகிமுனிவர் கேட்க, நாரத பகவான் ‘உண்டு. அவர் தான் இக்ஷ்வாகு வம்சத்தில்வந்த தசரத குமாரர் ஸ்ரீராமர்’ என்று கூறி வால்மீகி முனிவருக்கு ராமசரித்திரத்தை சுருக்கமாக நூறு சுலோகங்களில் உபதேசித்தார். இது ஸங்க்ஷேப ராமாயணம் எனப்படும் வால்மீகி ராமாயணத்தின் முதல் ஸர்கம்.

Categories
Bala Kandam

வழிப்பறிக் கொள்ளைக்காரன் வால்மீகி முனிவராக ஆனதெப்படி?

3. வழிப்பறிக் கொள்ளைக்காரன் வால்மீகி முனிவராக ஆனதெப்படி?

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம என்றிரண்டு எழுத்தினால்.

Categories
Bala Kandam

ராமாயணத்தை ஏன் அடிக்கடி கேட்க வேண்டும்?

Swamigal reading Srimad Valmiki Ramayana

2. வால்மீகி ராமாயணத்தை ஏன் அடிக்கடி கேட்க வேண்டும்? காதுகள் என்கிற மடல்களில், வால்மீகி முனிவரின் முகம் என்கிற தாமரையில் இருந்து வெளிப்பட்ட ராமாயணம் என்னும் தேனை அடிக்கடி வாங்கி, விருப்பத்தோடு குடிப்பவர்கள், உபத்ரவம் மிகுந்த ஸம்ஸாரத்திலிருந்து விடுபட்டு சாஸ்வதமான விஷ்ணு பகவானின் பதத்தை அடைவார்கள்.