Categories
Govinda Damodara Swamigal

மச்சிதாஹா: மத்கத ப்ராணாஹா:

மச்சிதாஹா: மத்கத ப்ராணாஹா: (6 min audio in Tamizh, same as the script above)

ஸ்வாமிகள் கியாதி லாப பூஜைல மாட்டிக்காம இருக்கறதுக்கு அவருக்கு தனியாக ஒரு புத்தி இருந்தது அவர் அதை வச்சுண்டு சில கொள்கைகள் form பண்ணி அதை follow பண்ணிண்டு இருந்தார். அதுக்கு அவருக்கு வைராக்கியம் இருந்தது. அது ரொம்ப பெரிய விஷயம். ஆனா அவர் கீதைல இருந்து இந்த quotation சொல்வார்.

मच्चित्ता मद्गतप्राणा बोधयन्तः परस्परम्।

कथयन्तश्च मां नित्यं तुष्यन्ति च रमन्ति च।।10.9।।

तेषां सततयुक्तानां भजतां प्रीतिपूर्वकम्।

ददामि बुद्धियोगं तं येन मामुपयान्ति ते।।10.10।।

तेषामेवानुकम्पार्थमहमज्ञानजं तमः।

नाशयाम्यात्मभावस्थो ज्ञानदीपेन भास्वता।।10.11।।

“மச்சிதஹா மத்கதப்ரணாஹா போதயந்த: பரஸ்பரம் |

கதயந்தச்ச மாம் நித்யம் துஷ்யந்திச்ச ரமந்தி ச ||

தேஷாம் ஸதத யுக்தானாம் பஜதாம் ப்ரீதி பூர்வகம் |

ததாமி புத்தி யோகம்தம் ஏன மாம் உபயாந்தி தே ||

தேஷாமேவ அனு கம்பார்த்தம் அஹம் அஞ்ஞானஜம் தமஹ |

நாசயாமி ஆத்ம பாவஸ்தஹ ஞான தீபேன பாஸ்வதா ||

என்று ஒரு 3 ஸ்லோகங்கள் 10-வது அத்தியாத்துல வர்றது.

இந்த ஸ்லோகங்களோட அர்த்தம் என்னன்னா,

“மச்சிதாஹா” என்னிடத்தில் மனசை வைத்தவர்கள்

“மத்கதப்ரணாஹா” தன்னுடைய புலன்கள், உயிர் எல்லாமே எனக்காகவே வாழறவா.

“போதயந்த: பரஸ்பரம்:” என்னுடைய விஷயத்தையே ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிப்பா. ஸ்வாமிகள் “இந்த ஸ்லோகத்துக்கு ராமாயண ப்ரவசனம், பாகவதம் படிக்கறது, அப்படீங்கறது நான் ஒருத்தன் தான் சொல்வேன் “கீத ஞான யக்ஞா” பண்றவாள்ளாம் சொல்லாமாட்டா” அப்படீன்னு வேடிக்கையாக சொல்வார்.

கதயந்தச்ச மாம் நித்யம் – என்னையே பேசிண்டு, மத்த உலக விஷயங்களை பேசாம

துஷ்யந்திச்ச ரமந்தி ச – இதிலேயே திருப்திபட்டுண்டு இதுலேயே சந்தோஷப் பட்டுண்டு, “கரும்பும் துவர்த்து செந்தேனும் புளித்து அறக்கைத்ததுவே” அப்படீன்னு அருணகிரிநாதர் சொல்றமாதிரி, உலக விஷயங்கள் எல்லாம் அவாளுக்கு புளிச்சு போயிடறது. ஸ்வாமிகள் சொல்வார். “எனக்கு டியபிடீஸ் இருக்கு. பாதாம் ஹல்வா சாப்பிட முடியாது. இந்த ஸ்தோத்திரங்கள் படிக்கறதுதான் எனக்கு பாதாம் ஹல்வா” என்பார். அதுமாதிரி இந்த பஜனத்துலேயே திருப்தியா இருந்துண்டு. இதுனால என்ன பலச்ருதி இருக்கு. அதுல இருக்கற பலச்ருதி எல்லாம் வந்துடுத்தான்னு பார்க்க மாட்டார். இதை படிக்கறதே அவருக்கு பலனா இருந்தது. அப்படி எந்த பக்கதர்கள் என் பஜனைத்தை பண்றாளோ

தேஷாம் சதத யுக்தானாம் ”ஆடும் பரிவேல் அணிசேவலென பாடும் பணியே பணியாய் அருள்வாய்” அப்படி திருப்புகழை பாடிண்டே, பகவானோட கதையை பேசிண்டே இருக்கற அந்த பணி யாரு பண்றாளோ

“பஜதாம் ப்ரீதி பூர்வகம்”, பக்தியோடு என்னோட பஜனத்தை பண்ணுகிறவர்களுக்கு

“ததாமி புத்தி யோகம்தம் ஏன மாம் உபயாந்தி தே” – அவர்களுக்கு என்னை வந்து அடையும்படியான ஒரு புத்தி யோகத்தை நான் அளிக்கறேன்.

மேலும் கிருஷ்ணர் சொல்றார்

“தேஷாமேவ அனுகம்பார்த்தம்” அவர்களுக்கு மட்டுமே கருணையினால்

“அஹம் அஞ்ஞானஜம் தமஹ நாசயாமி” நான் அவர்களுடைய அஞ்ஞான இருளை போக்குகிறேன். எப்படி என்றால்

“ஆத்ம பாவஸ்தஹ” அவா மனசுல நான் குடியிருந்து,

“ஞான தீபேன பாஸ்வதா” ஞான தீபத்தை அவா மனசுல ஏத்தி வச்சு அதனால அந்த அஞ்ஞான இருளை போக்குகிறேன்.

அப்படீன்னு இந்த ஸ்லோகங்களுக்கு அர்த்தம். அதுக்கு ஒரு எடுத்துக்கட்டாக ஸ்வாமிகள் இருந்தார். நம் கண் முன்னாடி பார்த்தோம். அப்படி அவர் இடையறாத பஜனத்தினால் தெய்வ பக்தி. பக்தியினால் வைராக்யம், வைராக்யத்தால் கியாதி லாப பூஜையிலிருந்து எல்லாம் விடுபட்டு ஞானத்தோடு விளங்கியதை பார்த்தோம்.

ஆனா ஸ்வாமிகளோட பெருமை என்னன்னா “இப்படி நீங்க பேரானந்தத்துல திளைச்சிருக்கேளே, எனக்கு ஒரு வழி சொல்லுங்கோன்னு நமஸ்காரம் பண்ணவாளுக்கு, “நீ இந்த மூகபஞ்ச சதியை திரும்ப திரும்ப படி, விஷ்ணு சஹஸ்ரநாமத்தை படி உயர்வற உயர்நலமான மோஷத்தை அடைவாய்” அப்படீன்னு தன் கையால எழுதி கொடுத்து தன் கையெழுத்து போட்டு குடுப்பார். அப்படி அவர் அந்த நம்பிக்கையும் உறுதியும் கொடுத்தார். “தெய்வ பக்தியில நீயும் லாயக்குதான். நீயும் வா” அப்படீன்னு பகவான்கிட்ட அழைச்சுண்டு போறதுக்கு கையை பிடிச்சு கூட்டிண்டு போவார்.

நாம எப்படி பகவான் கிட்ட போக முடியும்? அவருக்கு அந்த புத்தி யோகம் இருந்தது. ஞான வைராக்கியம் இருந்தது. ஜனங்கள் கிட்ட ஈஷிக்காம, மாட்டிக்காம இருந்தார். நமக்கு அதெல்லாம் இல்லையே. பணத்துல ஆசை இருக்கு புகழ்ல ஆசை இருக்கு. கௌரவத்துல ஆசை இருக்கு. இப்படியெல்லாம் இருக்கோமே. ஏதோ ஒரு ஸ்தோத்திரம் படிக்கிறோம். இதெல்லாம் ஒரு பக்தியில சேர்த்தியான்னு, அடிக்கடி தோணறது.

ஆனா அவர் வாக்கு இருக்கு. அந்த 3 ஸ்லோகத்துல – இந்த ஸ்தோத்திர பாராயணம் பண்ணு. “மச்சித்தஹா மத்கத ப்ராணாஹா போதயந்த: பரஸ்பரம்” அப்படீன்னு சொல்லி இருக்கு. ஸ்தோத்ர புஸ்தகத்தை எடுத்து வச்சுண்டு ஒரு கொஞ்ச நேரம் படிக்கறதுல ஒரு சந்தோஷம் இருக்கு இல்லையா, அதை நாம பிடிச்சுண்டா போதும். அப்புறம் பகவானை அடையறதுக்கு, ஸ்வாமிகள் பாதத்துல போயி சேருவதற்கு என்ன புத்தி யோகம் வேணுமோ, அதை அவரே குடுத்துடுவார் அப்படீன்னு ஒரு நம்பிக்கை.

ஏன்னா நாம் பார்த்து ஸ்வாமிகள் ரொம்ப கருணையோடு இருந்தார். அவர் நம்ம கிட்ட “நான் கடைபிடிக்கிற கொள்கைகள் எல்லாம் நீங்களும் கடைபிடிக்கணும். இல்லேன்னா பலன் இல்லை” அப்படீன்னு சொல்லி பயமுறுத்தாம, “ஞானம் பிறக்கும். உண்மை விளங்கும். மூக பஞ்ச சதி ஸ்தோத்ரத்தை திரும்ப திரும்ப படி. விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லு. இடையறாத ராம நாம ஜபம் பண்ணு” என்று திரும்பத் திரும்பச் சொல்லி நம்பிக்கை குடுத்தார். அப்பேற்பட்ட ஸத்குரு நமக்கு கிடைச்சிருக்கார். அவரை தியானம் பண்றது – அது தான் நமக்கு கார்யம்.

கோபிகா ஜீவன ஸ்மரணம்… கோவிந்தா! கோவிந்தா!

Series Navigation<< ஸூக்ஷ்மேபி துர்கம தரேபிசுஸ்ருவே மதுர த்வனி: >>

One reply on “மச்சிதாஹா: மத்கத ப்ராணாஹா:”

ஸ்ரீ குருப்யோ நம:
சதா பகவத் த்யானத்தில் திளைத்து , அவர்தம் அடியாருடன் உறவு கொண்டு வாழ்வோருக்கு வேறு எந்த சிந்தனையும் தோன்றாது! இது அனுபவத்தில் உணர்ந்தால் தெரியும்!
கீதையில் சொன்னபடி வாழ்வதென்பது நம் போன்ற சாமானியருக்குக்
கடினமானதாகத் தோன்றினாலும்,கடமைகளைச் செய்தவாறு அதனுள்
மூழ்காமல் தாமரை இலைத் தண்ணீர் போன்ற வாழ்வை வாழப்
பழகிக்கொள்ள இறைவன் இணையடி நீழல்தான் தஞ்சம்!!
கீதையில் சொல்லிய வாழ்வு வாழ பகவத் த்யானம், அவனது
புகழ் கேட்டு,பாடி அதனூடே
வாழப்பழக வேண்டும். அதற்கு சத் சங்கம் அமைய வேண்டும்!
பஜ கோவிந்தத்தில் ஸத்ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
நிச்சங்கத்வே நிர்மோஹத்வம் நிர்மோஹத்வே நிச்சல தத்வம்
நிஸ்சல தத்வே ஜீவன் முக்தி:ஏன்று வரும் அதை வாழ்வில் கடை
பிடித்தால் ஸ்வாமியகள் வாழ்ந்த வாழ்க்கையைவாழலாம்!!

திருப்புகழில் ஸ்வாமிமலைஅதிகாரத்தில் அவாமரு வினாவசுதை
என்ற திருப்புகழ் இதனை அழகாக விளக்குகிறது..
வாழ்வில் ஏற்படும் துன்பங்களுக்கு ஏது பொன்னாசை,மண்ணாசை,
பெண்ணாசை.இவற்றிலிருந்து மீள, என் அஞ்க்னானதை ஒழித்து
உன் திருவடித் தாமரைகளில் சேர்த்துக்கொள்ள எந்னை வாவென்று
அருள்வாயே ! உனை மறத்தல் என்ற குற்றம் இல்லாத
அடியார்களாலும்,,அரிய பெரிய தவ முனிவர்களாலும் த்யானம்
செய்யப்படும் உன் திருவடிகளைத் தந்தருள்வாயே என்று
அருணகிரியார் பாடுகிறார்! ஏன் ? திருவடித்யானம் இருந்தால்
மற்ற எண்ணங்கள் தோன்றாது..மற்ற அடியார்களிடமும்
அவரது திருவடி நீழல் பற்றியே பேசுவோம்.
மூல மந்திரம் ஓதலிங்கிலை என்ற திருப்புகழில் கூடு
கொண்டு உழல்வேனை அன்போடு ஞான நெஞ்சினர்
பாலிணங்கிடு கூர்மை தந்தினி ஆள வந்தருள்
பெருமாளே என கீதையில் சொன்ன கருத்தையே
வலியுறுத்துகிறாற்போல் தோன்றுகிறது.
தாமரைய்லைத் தண்ணீர் போல்வாழப் பழக நிறைய தபஸ்
பண்ண வேண்டும் ஸ்வாமிகள் போல்!!

நம் அன்றாட வாழ்வில்கூடியமானவரை இறை
சிந்தனையுடன் அவர்பாதம்பற்றி வாழப் பழக
வேண்டும்!
ஜய ஜய சங்கரா….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.