Categories
shivanandalahari

சிவானந்தலஹரி 40வது ஸ்லோகம் பொருளுரை


சிவானந்தலஹரி ஸ்லோகம் 40 தமிழில் பொருள் (15 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokam 40)

Paul Brunton speech with Tamizh translation that is referred in the Shivanandalahari talk above.

தீ⁴யன்த்ரேண வசோ-க⁴டேன கவிதா-குல்யோபகுல்யாக்ரமைர்-
ஆனீதைஶ்ச ஸதாஶிவஸ்ய சரிதாம்போ⁴-ராஶி-திவ்யாம்ருதை:
ஹ்ருத்-கேதார-யுதாஶ்-ச ப⁴க்தி-கலமா: ஸாபல்யம்-ஆதன்வதே
துர்பி⁴க்ஶான்-மம ஸேவகஸ்ய ப⁴கவன் விஶ்வேஶ பீ⁴தி: குத :

धीयन्त्रेण वचोघटेन कविताकुल्योपकुल्याक्रमै-

रानीतैश्च सदाशिवस्य चरिताम्भोराशिदिव्यामृतैः ।

हृत्केदारयुताश्च भक्तिकलमाः साफल्यमातन्वते

दुर्भिक्षान् मम सेवकस्य भगवन् विश्वेश भीतिः कुतः

இது ஸ்லோகம்  எனக்கு ரொம்ப பிடிக்கிறது ஏன்னா,  என் ஸத்குருநாதர்   கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் வாழ்நாள் முழுக்க இத தான் பண்ணிண்டு இருந்தார்.

“ஹே விஸ்வேச” – உலகத்துல எல்லார்க்கும், விஸ்வத்துல எல்லார்க்கும் ஈசன், பரமேஸ்வரன்.  கல்லுக்குள் தேரைக்கும்  கருப்பை  உயிருக்கும் சாப்பாடு குடுக்கறவன். நான் அவனோட சேவகன். அப்டி இருக்கறச்ச எனக்கு  “விஸ்வேச துர்பிக்க்ஷாத்”.  பஞ்சம் வந்துருமோ, சாப்பாட்டுக்கு  கஷ்டம் வந்துருமோஅப்படிங்கற பயம் “பீ⁴தி: குத :”  – எனக்கு எப்படி அந்த பயம் வர முடியும் அப்டிங்கறார் .

அதுக்கு நானும் ஒரு வயல் வெச்சிருக்கேன். அதுல நானும் உழவு பண்ணி நான் தான்யம் விளைச்சிருக்கேன். அது நல்லா விளைஞ்சு கதிர் முத்தி எனக்கு கிடைச்சிருக்கு. அப்டி இருக்கிறச்ச எனக்கு என்ன பசிக்கஷ்டம், பஞ்சத்தை பத்தி   என்ன பயம் அப்டின்னு சொல்லறார். அது என்ன வயல் அதுல என்ன விளைச்சிருக்கார் னு எல்லாம் பாக்கலாமா?

“தீ⁴யன்த்ரேண”  – புத்தி என்கிற ஏத்தத்தை வெச்சிண்டு

“வசோ-க⁴டேன” – என்னோட வாக்குங்கற சால் (பானை மாதிரி தண்ணி collect பண்ற பாத்திரம்)

“கவிதா-குல்யோபகுல்யாக்ரமை:” –  கவிதை அப்படிங்கற, குல்யம்  அப்டினா வாய்க்கால். பெரிய வாய்க்கால், சின்ன வாய்க்கால் அது வழியா, புத்தி ங்கற ஏத்தத்தையும் வாக்குங்கற ஜலத்தையும் வெச்சிண்டு

“சதாசிவஸ்ய சரித அம்போராஸி திவ்யாம்ருதை:” – பரமேஸ்வரனோட சரிதம் என்கிற திவ்ய  “அம்போராஸி”- அம்ருதமான ஜலத்தை என்னுடைய கவிதை என்கிற வாய்க்கால் வழியா

“ஆனீதைஶ்ச” –  கொண்டு வந்திருக்கேன். எங்க கொண்டு வந்திருக்கேன் னா “ஹ்ருத்-கேதார யுதாஶ்-ச” – மனம் என்கிற வயலுக்கு கொண்டு வந்து

“ப⁴க்தி-கலமா:” – பக்திங்கற பயிரை விளைச்சி இந்த ஜலத்தை பாய்ச்சிண்டே இருந்ததுனால

“ஸாபல்யம்-ஆதன்வதே” – அது நன்னா விளைஞ்சிடுத்து . பலன் கொடுத்துடுத்து .இனிமே எனக்கு பசிக்கொடுமையே கிடையாது அப்டினு சொல்றார்.

ரொம்ப அழகானதொரு ஸ்லோகம்.

இது தான் ஸ்வாமிகளோட கொள்கையா  இருந்தது.  அவர் புத்தியை கொண்டு, வாக்கு கொண்டு பகவானுடைய சரித்திரங்களை படிக்கறது கேக்கறது சொல்றது, இத தான் தன்னுடைய கொள்கையா, ஏன் தன்னுடைய லக்ஷியமாவே, அடையவேண்டியது (இதுனு  வெச்சிண்டிருந்தார்). இது மூலமா       பக்தி வறதோ ஞானம் வறதோ பணம் வறதோ புகழ் வறதோ, அது எதையுமே அவர் கவனிக்கல. அவர் இத பண்ணனும், இது எங்க அப்பா தாத்தா எல்லாம் பண்ணிண்டு இருந்தா, அப்டினு பெரியவா கிட்ட போய் சொல்லி உத்தரவு வாங்கிண்டு, ஜன்மா முழுக்க காத்தால 5 மணிக்கு எழுந்தா ராத்ரி 10 மணி வரைக்கும் பகவானுடைய கதைகளை ரொம்ப ப்ரியமா படிச்சார்.

அந்த புத்திய எப்டி உபயோக படுத்துவார் னா .. அவர் மொதல்ல ரசிகர் பக்தர். அந்த புத்திய கொண்டு வேண்டாத interpretatation பண்ணாம இருக்கறதுக்கு புத்திய உபயோக படுத்துவார்.  எப்படி ரசிக்கணும் அப்டிங்கறதுக்கு புத்திய உபயோக படுத்துவார்.

வாக்கு நல்ல ஸ்பஷ்டமான வாக்க வெச்சிண்டு, இந்த “கவிதா-குல்யோபகுல்யாக்ரமை:” கவிதைங்கற பெரிய வாய்க்கால் சின்ன வாய்க்கால் மாதிரி … பகல் எல்லாம் ராமாயணம், பாகவதம் மாதிரி புராணங்கள்  அப்படிங்கற பெரிய வாய்க்கால் வழியா பாய்ச்சுவார். சாயங்காலம் ஆச்சுன்னா சிவானந்த லஹரி , மூகபஞ்சசதி மாதிரி ஸ்தோத்திரம் என்கிற சின்ன வாய்க்கால்ல் வழியா பாய்ச்சுவார் . அப்டி இந்த மாதிரி பகவானோட கதைகள், பகவானோட பேச்சு அதுலேந்து ஒரு நாள் கூட மனச எடுக்க மாட்டார். இந்த மாடர்ன் equipments  டிவி,mobile, newspaper எதுவுமே தொட மாட்டார். அங்க வர்ரவாளும் இத பத்தி எல்லாம் பேசவே முடியாது. பகவான் விஷயம் மட்டும் தான் கேக்கணும் பேசணும். அந்த ருசி இல்லன்னா அங்க போக முடியாது அவர் கிட்ட. அப்டி ஒரு மஹான். அப்படி பக்தி ஒண்ணுனாலயே, இந்த பக்தி பயிர் விளைச்சா ஞானம்கற கதிர் கிடைக்கும் னு நான் அவர் இடத்துல பார்த்தேன்.

இதே அர்த்தத்தை மூக கவி கூட ஒரு ஸ்லோகத்துல சொல்றார். 65 ஸ்லோகம் பாதாரவிந்த சதகம்.

விவேகாம்ப⁴ஸ்ஸ்ரோதஸ்ஸ்னபனபரிபாடீஶிஶிரிதே

ஸமீபூ⁴தே  ஶாஸ்த்ரஸ்மரணஹலஸங்கர்ஷணவஶாத் ।

ஸதாம் சேத:க்ஷேத்ரே  வபதி தவ காமாக்ஷி சரணோ

மஹாஸம்வித்ஸஸ்யப்ரகரவரபீ³ஜம் கி³ரிஸுதே  ॥ 65 ॥

விவேகம் என்ற ஜலத்தை கொண்டு வந்து, அவர் அந்த புத்தி என்கிற ஏத்தம் வாக்கு என்கிற சால் னு சொன்ன மாதிரி இங்க “ஸ்நபன பரிபாடி”- எப்டி ஜலம் பாய்ச்சணும்கற திறமையோடு  விவேகத்தை கொண்டு

ஷிஷிரிதே – அந்த “சதாம் சேத: க்ஷேத்ரே” சாதுக்களாகிய அவா மனசு என்கிற வயல்ல விவேகம். எது right எது wrong இவ்ளோ தான் நம்மளால தெரிஞ்சுக்க முடியும்.

இந்த ஆன்ம விசாரம், பகவத்கீதா இந்த புஸ்தகம் எல்லாம், ஆச்சார்யாள் பாஷ்யம் எல்லாம் படிச்சா ஒண்ணும்புரியாது. நம்ம  practical ஆ என்ன பண்ண முடியும்னா எது right எது wrong னு அவ்ளோதான் தெரிஞ்சுக்க முடியும். அதுக்கு மேல நமக்கு இருக்கற அந்த கர்ம கிரந்தி, ஆசா பாசங்கள் எல்லாம் ரொம்ப ரொம்ப ரொம்ப strong ஆ இருக்கறதுனால, நம்ப ஏற்கனவே ஒரு level achieve பண்ணிட்டோம்னு நெனைச்சிண்டு இருந்தா ரொம்ப ஏமாந்து போயிடுவோம். அந்த விவேகம்னா எது right எது wrong னு தெரிஞ்சுக்கலாம்.

“ஸமீபூ⁴தே  ஶாஸ்த்ரஸ்மரணஹலஸங்கர்ஷணவஶாத்” – சாஸ்திர ஸ்மரணம் என்கற கலப்பையை கொண்டு, மனம் ஆகிய சேதஸ் ஆகிய வயலை “ஸமி பூதே” – மேடு பள்ளம் இல்லாம கொஞ்சம் சமன் பண்ணலாம். அப்டி பண்ணி வெச்சிண்டு இருந்தோம்னா, காமாக்ஷி சரணத்தை த்யானம் பண்ணா, அந்த காமாக்ஷி சரணம் “மகா சம்வித் ” உயர்ந்த ஞானம் என்ற பயிர் விளையறதுக்கு கதிர் விளையறத்துக்கு வேண்டிய “ப்ரகர வர பீஜம்” – ரொம்ப உத்தமமான பீஜம் என்னவோ  அந்த விதை என்னவோ அதை “கிரிஸுதே” உன்னோட பாதம் விளைக்கறது அப்டினு சொல்றார்.அப்படி பாதம் தான் ஞானத்துக்கான விதை போடறது. அந்த பக்தி பயிரை வளர்க்கறதுக்கும் அம்பாளோட நாமம் தான்.  பரமேஸ்வரனோட சரிதம் தான். அத பண்ணிண்டே இருந்தா ஞானம் வரும்

Paul Brunton அப்டிங்கறவரோட கிட்ட தட்ட அவரோட வாழ்க்கையோட முடிவுல ஒரு 5 நிமிஷம் speech கொடுத்திருந்தார். அது ரொம்ப அழகா இருந்தது. என்ன பாக்கியவான். எவ்ளோ ஒரு முற்றின விவேகியா இருக்கார் எவ்ளோ தெளிவுனு நான் ரொம்ப சந்தோஷ பட்டேன்.  அத தமிழில் translate பண்ணி இருக்கேன் .அதை உங்களுக்காக இங்க share பண்றேன்.

அத படிச்சு பாத்தேள்னா அவர்க்கு அந்த meditation த்யானம், புத்திய கொண்டு ஆன்ம வழில ஒரு முடிவான என்ன உண்டோ அது வரைக்கும் அவர் சொல்லிடறார். அந்த எடத்துல ஆனா அவர் இத ரொம்ப பக்தியோட அணுகனும் னு சொல்றார். அந்த த்யானமா பண்ணும் போது சிலபேர் தளர்ந்து போய்டறா அப்டின்னு சொல்றார். அப்டி தளரமா இருக்கறதுக்காக நம்முடைய மதத்துல மஹான்கள் தன்னுடைய தியானத்தின் மூலமாக எந்த அகப்படாத அந்த உள்ளுக்குள்ள இருக்கற அந்த “நான்” என்கிற பரம்பொருள் உண்டோ அந்த பரம்பொருளை நமக்காக ஒரு காமாட்சியாக, சந்திரமௌலீஸ்வரராக, ராமராக ,க்ருஷ்ணராகவும் எடுத்து குடுத்து அவாளுக்கு ஒரு க்ருஷ்ணாஷ்டமி, ராம நவமி, பிள்ளையார் சதுர்த்தினு பண்ணி அப்டி மனசு தளரமா திரும்ப திரும்ப   கொண்டு போய் அந்த பகவான் இடத்துல வைக்கறதுக்கு…மனசுக்கோ பி⁴ன்னம் வேண்டிருக்கு,  பி⁴ன்ன ருசியா இருக்கு.ஒவ்வொரு நாளும் ஒரு டேஸ்ட் வேண்டிருக்கு. அதுக்கும் ஒரு இடம் கொடுத்து, எல்லா தெய்வங்களையும் வழி பட்டு , அப்புறம் ஒரு இஷ்ட தெய்வம், அந்த தெய்வத்தின் மேல் த்யானம் அப்டின்னு இந்த வாழ்க்கையோட பயன் என்னவோ அந்த காரியத்த பண்றதுக்கு, தளராம அந்த பகவானுடைய கதைகளை திரும்ப திரும்ப படிக்கறதுக்கு, அதுவும் தனிமைல ஒக்காந்து பண்றதுக்கு, அந்த தியானத்தை, அழகான வழி காமிச்சு குடுத்திருக்கா, அத அந்த Paul Brunton elaborate பண்ணல. அவர்க்கு அந்த புத்தியில் தான்  நம்பிக்கையோ என்னவோ , blind faith அப்படிங்கற பக்தில நம்பிக்கை வரலையா னு தெரியல. இதை பத்தி சொல்லலை.

 

அவர் ரொம்ப பாக்கியவான் என்று நான் நெனைச்சிண்டு இருந்தேன் , ஆனா SAR புக்ல ‘மறதி’ ங்கற topic ல கோவிந்த தீக்ஷிதர் பத்தி சொல்லி இருக்கார்.. ரொம்ப ரொம்ப அழகான அந்த சிவன் SAR   உடைய “ஏணிப்படிகளில் மாந்தர்கள்” புக்ல இருக்கற மஹான்களோட சரித்ரத்தை படிக்கறதும், இந்த சிவானந்த லஹரில இவர் சொல்ற  ” தீ⁴யன்த்ரேண வசோ-க⁴டேன கவிதா-குல்யோபகுல்யாக்ரமைர்- ஆனீதைஶ்ச ஸதாஶிவஸ்ய சரிதாம்போ⁴-ராஶி-திவ்யாம்ருதை:”  அப்டினு பரமேஸ்வரனோட சரித அம்போராஷி திவ்யாம்ருதம் “ஏணிப்படிகளில் மாந்தர்கள்” தான். அதை படிச்சாலும் இதே பக்தி பயிர் வளர்ந்து ஞானம் ஆகிய கதிர் நமக்கு கிடைக்கும். இத “SAR” ரே சொல்லிருக்கார், இத படிச்சுண்டே இருனு.

மொதல் partla விவேகம் வரத்துக்காக சார் புக்ல அந்த first partla தெரிஞ்சுக்கலாம்.அந்த மஹான்கள் சரித்ரத்தை திரும்ப திரும்ப படிக்கணும். அந்த approach , அந்த மஹான்கள், குருநாதர், தெய்வம் அந்த பக்தி அது வந்து இந்த விசாரத்தை எல்லாம்  காட்டிலும் meditation காட்டிலும் மேலானது அப்டிங்கறதை Paul Brunton சொல்லல , ஆனா SAR அத சொல்லிருக்கார்.மறதி அப்படிங்கற topic ல.

சார் புக்ல விவேகிக்கு மேல சாது. சாதுங்கறவன் தன்னலமற்றவன்.  அதுக்கு மேல எல்லா ஆசா பாசங்களையும் விலக்கி சன்யாசம் வாங்கிண்டு பகவானோட உண்மையை உணர முயற்சி செய்கிறவனுக்கு முற்றின விவேகி னு சொல்றார் அந்த முற்றின விவேகிக்கு, இந்த Paul Brunton கடைசில முற்றின விவேகியா இருந்திருக்கலாம். SAR சொல்றார், அந்த முற்றின விவேகிக்கு பக்தி னா என்னனு தெரியாம இருக்கலாம். ஆனா பகவான் sincere ஆக இருக்கற முற்றின விவேகிக்கு அடுத்த ஜன்மத்துல பக்தியை கொடுத்து அவனை தெய்வ சாது நிலைக்கு உயர்த்துவார் என்று சொல்றார். அப்டி அந்த தெய்வ சாது நிலல இருந்து பகவானுடைய பக்தி பண்ணிண்டு இருந்தால்தான் பகவானுடைய அனுகிரஹத்தால்தான் அதற்கு மேலான ஆன்மீக நிலைகளான துறவி ,ஞானி எல்லாம் சித்திக்கும் அப்டின்னு SAR ரொம்ப ஸ்பஷ்டமாவே சொல்றார். அத படிச்ச போது எனக்கு ரொம்ப ஆனந்தமா இருந்தது .

அந்த மாதிரி, இதுல என்னன்னா, பக்தி இப்போ நம்ம உலக பாசத்துல   இருக்கறவா பக்தியும் பண்ணலாம். இதுலேந்து விடுவிக்கும்னு இருக்கு. ஆனா பக்திங்கற போர்வைலே பாசங்கள் எல்லாம் ரொம்ப ஜாஸ்தி பண்ணிண்டே போறதால அந்த ஞான மார்கத்துல இருக்கறவாளுக்கு இந்த பக்தி மேல ஒரு respect வர மாட்டேங்கறது. சும்மா ஆடி பாடிண்டு குதிச்சுண்டு  நல்ல சாப்டுண்டு picnic மாதிரி tour எல்லாம் போயிண்டு  இத பண்ணிண்டே இருந்தா  எந்த மஹான்கள் பசி தாகத்தை மறந்து நிஷ்டைல இருக்காளோ அந்த நிலைமை திடீர்னு வந்துருமா அப்படின்னு கேக்கறா. அது வாஸ்தவம் தான். அது வராது. அதுக்கு வேண்டிய sincerity வேணும். அதுக்கு பக்தி ஸ்வாமிகள் மாதிரி முக்ககுணங்களையும் கடந்ததாக இருக்கணும்.

அவரோட அந்த ராமாயணம் கதை சொல்றதே, பகவானை எப்படி கதைகள் மூலமா பக்திய வளத்துக்கணும்ங்கறதுக்கு எனக்கு ஸ்வாமிகள் தவிர வேற ஒருத்தரையும் சொல்ல தெரியல. நான் பார்த்தது அவர் ஒருத்தர் தான். அப்டி அந்த கதைகளை வந்து கொஞ்சம் கூட கர்வம் இல்லாம ஒரு ஜாதி பேதமோ, ஒரு ஆண் பெண் பேதமோ , எந்த ஒரு பேதமும் இல்லாம ஸ்வாமிகள் வந்து தன்னை மேலயே நெனச்சுக்க மாட்டார். எல்லார்க்கும் கீழ அடியார்க்கு அடியாரா நெனைச்சிண்டு, அந்த ராமரோட பக்தன் அப்டிங்கறத தவிர வேற ஒரு qualification இல்லாம தன்னை படிச்சவன்னோ , எந்த விதத்துலயும் தன்ன பெரியவனா நெனைக்கமா ரொம்ப ரொம்ப humble ஆக, ரொம்ப ஆழ்ந்து அனுபவிச்சு அந்த கதைகளை சொல்வார் அப்டி இருக்கிறவர் கிட்ட அந்த கதைகள கேட்டா, அந்த ரிஷிகளோட வாக்கியத்துலயே அவர்க்கு ரொம்ப நம்பிக்கை. வயசானபோது ஸ்வாமிகளுக்கு பிரவசனம் பண்ண முடியல.எல்லாரும் பிரவசனம் பண்ணுங்கோளேன் , பாராயணத்தை விட்டுட்டு அப்டினு சொன்னா. அதுக்கு அவர் அது வேண்டாம் . என்னோட வாக்குல என்ன வருமோ, அந்த ரிஷிகளுடைய வாக்கு வ்யாசரோட ஸூக்தி , சுகருடைய அம்ருதம் ,வால்மீகியுடைய ராமாயண கவிதை இதை படிக்கிறேன் நான். இத படிச்சாலே உங்களுக்கு அதனால க்ஷேமம் ஏற்படும் னு சொல்லி அந்த text மேல அவருக்கு இருந்த நம்பிக்கை. அப்டி அவர் வந்து உபாசனையா பண்ணார். அந்த மாதிரி பண்ணாஇந்த சிவானந்த லஹரில சொல்ற மாதிரி…எல்லா மஹான்களும் சொல்லிருக்கா “புத்தியை வாங்கி நின் பதாம்புயத்தில் புகட்டி அன்பால் நின் முக்தியை வாங்க அறிகின்றிலேன்” அப்டினு சொல்றார். புத்திங்கறது பகவானோட கதைகளை மனசுல செலுத்தறதுக்கு உபயோக படுத்தணும், வாக்கு உபயோக படுத்தணும்..வாக்க வந்து புத்தி support பண்ணல னா கூட வாக்கால பாராயணம் பண்ணிண்டே இருந்தா புத்தி ஒரு நாள் கூட வரும். பகவான் அதையும் காமிச்சு கொடுப்பார். எந்த வழில போனா அவர அடையாளமோ அத நான் ஒனக்கு ததாமி ,” புத்தி யோகம் தம் ஏன மாம் உபயாந்திதே” அப்டினு அவர் சொல்லிருக்கார்.

அதனால, குரு சொன்ன வார்த்தைய நம்பிm பகவானோட சரிதங்கள் ஸ்தோத்திரங்கள் படிக்கறது, நமக்கு இந்த பக்தி ஞானம் எல்லாத்தையும் குடுக்கும் அப்டினு இந்த ஸ்லோகம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்தது

நம: பார்வதி பதயே !! ஹர ஹர மஹாதேவ !!

Series Navigation<< சிவானந்தலஹரி 39வது ஸ்லோகம் பொருளுரைசிவானந்தலஹரி 41வது ஸ்லோகம் பொருளுரை >>

2 replies on “சிவானந்தலஹரி 40வது ஸ்லோகம் பொருளுரை”

விவசாயிக்குப் பயிர்கள் நங்குவிளைந்தால் பஞ்சமில்லை!
அதே போல் பக்தர்களுக்கும் பக்தியாகிற பயிர் நன்றாக விளைந்திருந்தால் பஞ்சமே உண்டாகாது என்பதை ஆசார்யாள் நமக்குக் கற்பித்துள்ளார்கள்!
பக்தர்கலின் ஹ்ருதயமாகிற வயலில் பக்தி என்ற பயிர்கள்
நடப்பட்டிருக்கின்றன!
அவை பூர்ண பயனைக் கொடுப்பதற்காக ஈஸ்வரனுடைய
சரித்ரமாகிய ஆற்று ஜலத்தை புத்தியாகிற நீர் இறைக்கும்
இயந்திரத்தால் இறைத்து, வாக்காகிற குடத்தால் சாஹித்யமாகிற
வாய்க்கால் கண்ணி இவற்றின் வழியாக வயலுக்கு இடைவிடாமல்
பாய்ச்சிக்கொண்டே இருந்தால் அவை நன்றாக விளைந்திருக்கும்!

ஸ்ரீ பரமேஸ்வரனுடைய சரித்ரங்களை விளக்கும்ஸ்தத்ரங்கள்,
ஸாஹித்யங்களை ஸதா பஜனம் செய்தால் பக்தி
அபிவிருத்தியடையும்
என்ற அழகான கருத்தை வலியுறுத்தி சொல்லப்பட்ட ஸ்லோகம்!

இதற்கு உதாரணமாக வாழ்ந்து காட்டிய ஸ்வாமிகளைப் பற்றிக்
கேட்கும்போது மனம் உருகுகிறது! எப்படிப்பட்ட பக்தி, எளிய வாழ்க்கை!

ஸாதுக்களின் மனதே வயல் ,விவேகமென்னும் நீரைப் பாய்ச்சி,
சாஸ்த்ர ஞாநம் என்னும் கலப்பையைக்கொன்டு உழுதால்
அம்பாளின் சரணத்தில் ஆத்ம ஞானம் என்னும் பயிர் விளையும்!

மூக கவி மேற்கண்டவாறு சொல்லியுள்ளார்! ஞானிகள் எப்படி ஒரே
போல் சொல்லியிருக்கிறார்கள்!!

சிவன்ஸார் ஸ்வாமிகள் பற்றிக் குறிப்பிட்டது ஸ்வாமிகள் பற்றித்
தெரியாதவர்களுக்கும் அவரைப் பற்றிஉணர்த்துவதாக உள்ளது!!

ஈந்த ப்ரவசனம் கேட்பவர்கள் ஸ்வாமிகள்பற்றி முழுதும்
உணருகிறாற்போல் அமைந்துள்ளது! !
௳எலும் குரு பக்தி அவர் த்யானம் என்பது நன்றாக
விளங்குமாற்போல் விளக்கமாகச் சொல்லப்பட்டிருப்பது சிறப்பு!

ஸ்வாமிகள் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்திருக்கிறோம் என்பது
மட்டும் எனக்குப் பெருமையே அன்றி விவரமாக ஒன்றுமறியாமல்
நிர்மூடமாக இருந்திருக்கிறேன் என்பது வருந்தத் தக்கது. கணபதி
ரொம்பக் கொடுத்து வைத்தவர்!

குரு ஸ்மரணம் அம்பாள் ஸ்மரணத்துக்கு நிகரானது!
ஜய ஜகதம்ப சிவே…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.