Govinda Damodara Swamigal

ஸ்ரீ மஹா பெரியவாளிடம் அத்யந்த பக்தி கொண்டு நம் தெய்வ மத புராணங்களுக்காக தம் வாழ்வையே அர்பணித்த ஒரு மஹான் ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் என்ற ஞான தபோதனர் ஆவார் (ஆங்கரை பெரியவா என்றும் திருவல்லிக்கேணி பெரியவா என்றும் பக்தர்களால் அறியப்படுபவர்) பூர்வாஸ்ரமத்தில் கல்யாணராம பாகவதர் என்று அழைக்கப்பட்ட அந்த மஹான், மஹாபெரியவாளின் உத்தரவின் பேரில் தம் வாழ்நாள் முழுவதும் ஸ்ரீமத் ராமாயணம், ஸ்ரீமத் பாகவதம், மூல பாராயணமும் ப்ரவசனமும் செய்து வந்தார். பணம், புகழ், கெளரவம் எதையும் எதிர்பாராது பகவானை பாடுவதையே தம் கடமையாக உயிர்மூச்சாக கொண்டு வாழ்ந்தார்.

மஹா பெரியவாள், ஸ்வாமிகளை ஒவ்வொரு வருடமும் கோகுலாஷ்டமியை ஒட்டி தாம் இருக்கும் இடத்திற்கு வந்து, பாகவத சப்தாஹம் செய்யப் பணித்து, தானே அமர்ந்து மணிக் கணக்காக பாராயணத்தையும் ப்ரவசனத்தையும் கேட்டு ‘படனம் மதுரம் பிரவசனம் மதுரதரம். சப்தாஹம் மலை போன்ற காரியம். பாகவதருக்கு தான் சிரமம். நமக்கெல்லாம் ஆனந்தம்’ என்று கொண்டாடினார் என்றால் ஸ்வாமிகளின் மஹிமையை நாம் புரிந்து கொள்ளலாம்.

அந்த மகானின் கருணைக்கு பாத்திரமாகி, ஸ்வாமிகளிடம் வால்மீகி ராமாயணத்தை பாடம் கேட்டு, அப்போது எடுத்த குறிப்புகளை கொண்டு வால்மீகி ராமாயணம் என்னும் தேனை துளித் துளியாக (இந்த இணையதளத்தில் ஒலிப் பேழைகளாக) பகிர்ந்து வருகிறேன்.

ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகளை தரிசித்த போது எனக்கு கிடைத்த சில அனுபவங்களைப் பேசி இங்கே பதிவு செய்துள்ளேன்.

 1. யௌவன வன சாரங்கீம்
 2. குழந்தையிலிருந்தே ராமபக்தி
 3. பெண்களிடம் கருணை
 4. மாயவரம் பெரியவா
 5. அனுக்ரஹம் பலவிதம்
 6. பருத்தியூர் கிருஷ்ண சாஸ்த்ரிகள்
 7. சுக தாதம் தபோநிதிம்
 8. ராம: கமலபத்ராக்ஷ:
 9. சம தன ஜனாஹா:
 10. யத் பாவம் தத் பவதி
 11. சிவன் சார் அபய வாக்கு
 12. கோவிந்த தாமோதர குணமந்திர
 13. வேகம் கெடுத்தாண்டவேந்தன் அடி போற்றி
 14. மநீஷாம் மாஹேந்த்ரீம்
 15. குஷர் குஷநாபர் காதி
 16. நமஸ்தேஷாம் மஹாத்மனாம்
 17. பக்ஷிணோபி ப்ரயாசந்தே
 18. கருணா வருணாலய பாலய மாம்
 19. க்யாதி லாப பூஜாஸு வைமுக்யம்
 20. சுஸ்ருவே மதுர த்வனி:
 21. செந்தமிழாற் பகர் ஆர்வம் ஈ
 22. யா நிஷா சர்வபூதானாம்
 23. த்வம் யஷோபாக் பவிஷ்யதி
 24. பற்றுக பற்றற்றான் பற்றினை
 25. ஆஸிதம் ஷயிதம் புக்தம்
 26. ஸூக்ஷ்மேபி துர்கம தரேபி
 27. மச்சிதாஹா: மத்கத ப்ராணாஹா:

மேலே உள்ள ஸ்வாமிகளின் மஹிமைகளை சில பக்தர்கள் கேட்டு எழுதி ஒரு புத்தக வடிவமாக ஆக்கித் தந்தார்கள். அதை இங்கே படிக்கலாம் – Book 1- கோவிந்த தாமோதர குணமந்திர சுந்தர வதனாரவிந்த (click on the link to read the above audio recordings transcribed as a book in tamizh by devotees of Swamigal)

ஸ்வாமிகளைப் பற்றி மேலும் சில நினைவுகளைப் பேசி, எழுதி இங்கே பதிவு செய்துள்ளேன். Book 2-http://valmikiramayanam.in/?p=1517 சமீபத்திய சிவன் சார், மஹாபெரியவா, ஸ்வாமிகள் நினைவுகள், உபதேசங்கள் Book 3-http://valmikiramayanam.in/?p=1845

என் ஸத்குருநாதர் வால்மீகி ராமாயணத்தை வாழ்ந்து காட்டிய மகான். அவரைப் பற்றி பேசினாலே புண்யம். கோவிந்த தாமோதர ஸ்வாமிகள், வால்மீகி ராமாயணத்தை வாழ்ந்து காட்டியதை என் மழலை மொழியில் இந்த ஒரு புத்தகத்தில் எழுதியுள்ளேன் –>Book 4வாழ்ந்து காட்டிய மகான் (968 KB PDF file டவுன்லோட் செய்து நிதானமாக ஆழ்ந்து படித்து அனுபவிக்கவும். Download enabled. Use save button to download. Unicode standards. No additional fonts required.)


ஸ்ரீ சிவன் சார்

shivan-sir

ஸ்ரீ மஹா பெரியவாளின் பூர்வாஸ்ராம தம்பியாக அவதரித்த ஸ்ரீ சிவன் சார், தன்னையும் துறந்த துறவியாக விளங்கினார். நம் ஸ்வாமிகள் அவரை மஹாபெரியவாளின் மற்றொரு உருவமாகவே நினைத்து வணங்கி வந்தார். சிவன் சாரை தரிசித்த போது, அவரிடம் எனக்கு கிடைத்த சில அனுக்ரஹங்களை இங்கே பகிர்ந்துள்ளேன் http://valmikiramayanam.in/Shivan%20Sar%20Ganapathy.pdf


இந்த இணைய தளத்தில் உள்ள ராமாயண பிரவசனங்களில் உங்களுக்கு ஒரு திருப்தி ஏற்பட்டால், அது என் ஸத்குருநாதர் காலடியில் நான் சில நாட்கள் அமர்ந்ததின் அடையாளம்.

இந்த பிரவசனங்களில் பிழைகளும் குறைகளும் இருக்கலாம். ஏனென்றால் வால்மீகி ராமாயணத்தைப் பற்றிப் பேசத் தேவையான சம்ஸ்க்ருத ஞானமோ, சாஸ்த்ர படிப்போ, ராம பக்தி ரஸானுபாவமோ, ஆசார அனுஷ்டானமோ, விவேக வைராக்யமோ, குரலினிமையோ எதுவும் என்னிடம் இல்லை. ஆனாலும் வால்மீகி ராமாயணத்தில் உள்ளதை உள்ளபடி குழந்தைகளுக்கு சொல்ல விரும்பி, என் குருநாதரின் மகிமையை நம்பி, இந்த சொற்பொழிவுகளை ஆரம்பித்திருக்கிறேன். பெரியோர்கள் பிழைகளை பொறுத்துக் கொள்ள வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன்.

கணபதி ஸுப்ரமண்யன்

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *