கோவிந்த தாமோதர குணமந்திர (5 min audio in Tamizh, same as the script above) நான் ஸ்வாமிகளை பற்றி இதற்கு மேல் ஷேர் பண்ணினால், அதில் சொந்த கதை கொஞ்சம் இருக்கும், ஸ்வய புராணம் கொஞ்சம் வரும். ஆனால் அதன் மூலமாக உங்களுக்கு என் மேல் ப்ரியம் ஏற்பட்டு நாம freinds ஆக இருக்கலாம் என்றால் அதில் எனக்கு மிகவும் சந்தோஷம்தான். ஸ்வாமிகளை ரசிக்க தெரிந்தவர்கள் friends ஆ கிடைச்சா எனக்கும் சந்தோஷம்தான், ஆனால் […]
Author: Ganapathy Subramanian
சிவன் சார் அபய வாக்கு
சிவன் சார் அபய வாக்கு (6 min audio in Tamizh, same as the script above) ஸ்வாமிகள் கிட்ட நான் முதன்முதலில் போன போது “நம்ம சுந்தரத்தோட பிள்ளையா? வா வா” என்று சொல்லி என்னைச் சேர்த்துக் கொண்டார். எங்கப்பா பேர்ல இருந்த மதிப்பினால் என்னை அருகில் வர அனுமதித்தார். ஸ்வாமிகள் காலடியிலே உட்கார்ந்து இருக்கிறேன் என்றதால் சிவன் சார் என்னை அவர் அருகில் அமர்த்திக் கொண்டார். சிவன் சாரை தரிசனம் பண்ணி அவருக்கு […]
யத் பாவம் தத் பவதி
யத் பாவம் தத் பவதி (7 min audio in Tamizh, same as the script above) “यद्भावं तद्भवति” (யத் பாவம் தத் பவதி) அப்படின்னு, எதை நினைக்கிறோமோ அதாவே ஆகிவிடுவோம் அப்படின்னு ஒரு பழமொழி இருக்கு. ஸ்வாமிகள் 36 வயசுல மஹாபெரியவா கிட்ட உத்தரவு வாங்கிண்டு பகவத் பஜனமே பண்ணிண்டு இருந்தார். அதுலேர்ந்து ஸ்வாமிகள் மஹாபெரியவாளையே த்யானம் பண்ணிண்டு இருந்தார், அதுனால அவர் மஹாபெரியவாளாவே ஆகிவிட்டார். “ஸாமீப்யம்” அப்படின்னு மஹாபெரியவா கூப்பிட்டு அனுப்பிச்சு […]
ஶம தன ஜனாஹா:
ஶம தன ஜனாஹா: (6 min audio in Tamizh, same as the script above) நம்ம ஸ்வாமிகளை பத்தி நெனச்சாலே, பேசினாலே, படிச்சாலே, கேட்டாலே ஒரு, தனியான ஒரு ஆனந்தம். தனியான ஒரு நிம்மதி ஏற்படறது, அப்படிங்கறது, ஒரு பெரிய பாக்கியம். அது தான் ஒரு அனுக்ரஹம். இந்த அனுக்ரஹத்தை நமக்கு குடுக்கறதுக்காகதான், நம்ம ஓட்டமா ஓடிண்டு இருக்குற நம்ம Life ல, ஒரு நிமிஷம் நின்னு அவரை த்யானம் பண்ணி, அதனால ஒரு […]
ராம: கமலபத்ராக்ஷ: (7 min audio in Tamizh, same as the script above) ஸ்வாமிகளை முதல்ல வேத அத்யயனத்துல தான் போட்டிருக்கா, ஆனா அந்த காலத்துல வேதம் படிச்சா வைதீகத்துக்கு போகணும், வைதீகத்துக்கு போனால் பிராமணார்த்தம் சாப்பிடணும், இவருக்கு வயிறு trouble இருந்ததாலே, ஒரு பதினைஞ்சு வயசுல இங்கிலீஷ் படிப்புக்கு போட்டிருக்கா, ஆறாம் கிளாஸ்ல. ஸ்வாமிகள், “நான் சென்னைக்கு வந்தபோது மஹாபெரியவா பிரவசனம் கேட்டேன், வேதம் படிச்சா ஆரோக்கியம் வரும், வேதம் படிச்சா Nerves […]
சுக தாதம் தபோ நிதிம்
சுக தாதம் தபோநிதிம் (6 min audio in Tamizh, same as the script above) தண்டாமரையின் உடன் பிறந்தும் தண்டே நுகரா மண்டூகம் வண்டே கானத்திடை இருந்து வந்தே கமல மது உண்ணும் பண்டே பழகி இருந்தாலும் அறியார் புல்லர் நல்லோரை கண்டும் களித்தங் உறவாடி தம்முள் கலப்பர் கற்றோரே. அப்படின்னு ஒரு தமிழ் பாட்டு “தாமரைக்கு பக்கத்திலேயே பிறந்தாலும் இந்த தவளைக்கு தேனோட ருசி தெரியறதோ? எங்கிருந்தோ வண்டு தான் வந்து, அந்த […]
பருத்தியூர் கிருஷ்ண சாஸ்த்ரிகள் (6 min audio in Tamizh, same as the script above) ஸ்வாமிகளோடு நாம இருந்தா, ஒண்ணு பகவத் விஷயம், இல்லேன்னா மஹான்களோட சரித்தரம், இதைத் தான் கேட்க முடியும். அதிலும் மஹான்களோட சரித்திரங்களை அடிக்கடி சொல்லிண்டு இருப்பார். மாயவரம் பெரியவா பத்தி சொல்கிற மாதிரி, பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரிகள் அப்படின்னு ஒரு மஹான் இருந்தார். அவரைப் பத்தியும் அடிக்கடி சொல்லுவார். அந்த கிருஷ்ண சாஸ்திரிகள் இளமையிலே வேத அத்யயனம் முடித்தப் […]
அனுக்ரஹம் பலவிதம் (5 min audio in tamizh, same as the script above) ஸ்வாமிகள் SSLC முடித்தவுடனே, ரயில்வேயில ஆள் எடுப்பதாக கேள்விப்பட்டு ஒரு interview-க்கு போனாராம். அவரோட சிநேஹிதர் அதே ஊரில் கூடப் படித்தவர், அவரோட பேர் ஸ்வாமிகள் சொன்னார். எனக்கு இப்போத மறந்துவிட்டது, அந்த சிநேஹிதரும் அந்த interview-க்கு வந்திருக்கார். இரண்டு பேரும் interview attend பண்ணியிருக்கா. அந்த interview-ல் “நீ ஸம்ஸ்க்ருத ஸ்டூடென்ட்-னு சொல்லறியே… ரகு வம்சத்திலிருந்து ஏதாவது ஸ்லோகம் […]
மாயவரம் பெரியவா
மாயவரம் பெரியவா (6 min audio in tamizh, same as the script above) கோவிந்த தாமோதர ஸ்வாமிகள், தன்னோட பாகவத படனத்துக்கும், பாகவத ப்ரவசனத்துக்கும் மாயவரம் சிவராமக்ருஷ்ண சாஸ்த்ரிகள்னு ஒரு மஹானை ‘மானசீக குருவா’ வெச்சுண்டு இருந்தார் … மாயவரம் பெரியவான்னு சொல்லுவா “எனக்கு அவர் கிட்ட தான் ஹீரோ worship!” அப்படின்னு ஸ்வாமிகள் சொல்வார். அந்த நாள்ல மன்னார்குடி ராஜு சாஸ்த்ரிகள்னு ஒருத்தர் இருந்தார். அவர் நூற்றுக் கணக்கான குழந்தைகளுக்கு சாப்பாடு போட்டு […]
பெண்களிடம் கருணை
பெண்களிடம் கருணை (5 min tamizh audio, same as the script above) ஸ்வாமிகள் எப்போதுமே ஸ்த்ரீகளிடத்தில் கருணையா இருப்பார்னு சொல்லிண்டு இருந்தேன். ஸ்வாமிகளோட அம்மா அவரோட மூணு வயசுல முக்தி அடைஞ்சுட்டா. அவா அம்மா ரொம்ப ப்ரியாமாக இருப்பாளாம். “அந்த அன்பு எனக்கு கிடைக்காம போயிடுத்து. பூர்வ ஜன்மத்தில் ஏதோ பாவம் பண்ணி இருக்கேன். இந்த ஜன்மத்திலாவது பெண்களிடத்தில், எந்த விதத்திலும் அவாளை புண்படுத்தாம நடந்துக்கணும்” என்று நினைச்சு ரொம்ப ஜாக்கிரதையா அன்போடு பழகுவார். […]