By Mahaperiyava’s grace and Govinda Damodara Swamigal’s grace, I am glad to share the audio recording of Arya Shatakam from mooka pancha shathi in mp3 format. Even if you are not able to visit Kanchipuram , chant this stothram and Kamakshi devi will come and bless you where you are. ஆர்யா சதகம் 1-25 ஒலிப்பதிவு; Arya […]
Author: Ganapathy Subramanian
மஹாபெரியவா, வீழிநாதன் மாமா கிட்ட ஒரு தடவை, “நாம சூரியனை நோக்கி போயிண்டு இருந்தா நிழல், நம்மைத் தொடர்ந்து வரும். அந்த மாதிரி சாஸ்த்ரத்துல இருக்கிற ஒரு லக்ஷியத்தை வெச்சுண்டு, நாம அதை நோக்கிப் போயிண்டே இருந்தோம்னா, பணம், புகழ், பதவி எல்லாம், தானா நம்ம பின்னாடி வரும்.” அப்டீன்னு சொல்லியிருக்கா. இதை வந்து வீழிநாதன் மாமா, “நான் பல பிரசங்கங்கள்ல இதைச் சொல்லிடறது. ஒரு வாட்டி, கொல்லா சத்திரத்துல, பெரியவாளும் இருந்தா, வித்வான்களும் இருந்தா. அங்க […]
எங்கள் சத்குருநாதர் ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகளுடைய ஆராதனை வைபவம் பழுவூர் கிராமத்துல, ரொம்ப ‘அமோகமா’ நடந்தது. அதுல கலந்துக்கிற பாக்கியம் எனக்கு கிடைச்சது. இந்த வைபவம் ‘அமோகமா’ நடந்ததுங்கிற வார்த்தையை ரொம்ப specific ஆ நான் உபயோகப்படுத்தறேன். ஸ்வாமிகள் ஸந்யாசம் வாங்கிக்கணும், அப்டீன்னு ஆசைப்பட்டார். சிவன் சார்கிட்ட உத்தரவு கேட்டார். சிவன் சார், ‘வாங்கிக்க சொல்லுங்கோ, அமோகமா இருப்பார்’, அப்டீன்னு சொன்னார். அந்த வார்த்தையோட பலத்தை இன்னிக்கும் நாங்கள் அதை கண்கூடாகப் பாக்கறோம். இந்த ஒரு […]
ஸத்கதா ச்ரவணம்
கோவிந்த தாமோதர ஸ்வாமிகளுடைய 12வது ஆராதனை இன்னும் ரெண்டு நாட்களில் 26ம் தேதி (26-01-2017) திருச்சிக்கு பக்கத்தில் பழூர் என்ற அக்ரஹாரத்தில் அவருடைய அதிஷ்டானத்தில் அவருடைய பக்தர்கள் எல்லாரும் விமரிசையாக கொண்டாடப் போறா. ஸ்வாமிகள் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ராமாயண பாகவத பாராயண பிரவசனம் பண்ணிண்டு இருந்தார். மஹாபெரியவா ஸ்வாமிகள் கிட்ட நிறைய பாகவத சப்தாஹம் கேட்டிருக்கா. ஒரு வாட்டி பெரியவா உட்கார்ந்து பாகவதம் கேட்டுண்டு இருக்கா. அப்போ சுத்தி இருக்கும் ஜனங்கள் எல்லாம் பேசிண்டு கொஞ்சம் […]
தர்மாத்மா சத்யசந்தஸ்ச (Click on the link to hear a 24 min audio in tamil. Transcript given below) ஸ்ரீமத் வால்மீகி ராமாயண பாராயணத்தோட ஆரம்பத்துல தியான ஸ்லோகங்கள்னு, நம்ம ஸ்மார்த்த சம்பிரதாயத்துல ஒரு இருபது ஸ்லோகங்கள் சொல்றோம். அந்த இருபதாவது ஸ்லோகம், नमोस्तु रामाय सलक्ष्मणाय देव्यै च तस्यै जनकात्मजायै । नमोस्तु रुद्रेन्द्र यमानिलेभ्यः नमोस्तु चन्द्रार्क मरुद्गनेभ्यः ॥ நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய தேவ்யை ச தஸ்யை ஜனகாத்மஜாயை | […]
ஸ்ருங்கேரி சாரதாம்பா காஞ்சி காமாக்ஷி (Click on the link to hear the above speech – 23 min audio in tamil) அம்பாள் கிருபையினால, ஒரு நாலு நாள் ஸ்ருங்கேரி க்ஷேத்திரத்துல போய் தங்கி இருந்து, சாரதாம்பாளை தரிசனம் பண்ணி, சந்திரமௌலீஸ்வர பூஜை எல்லாம் பார்த்து ரொம்ப ஆனந்தமா கழிச்சோம். (2016 வருட முடிவில்) திருவண்ணாமலைன்னு சொன்னாலே நம்ம சேஷாத்ரி ஸ்வாமிகள், ரமண பகவான் ஞாபகம் வர மாதிரி, இந்த ஸ்ருங்கேரி க்ஷேத்ரத்தை நினைச்சாலே, […]
மஹாபெரியவா ஆராதனை
இன்னிக்கு மகாபெரியவாளோட ஆராதனை. உலகம் முழுக்க நாம எல்லாரும் சந்தோஷமா கொண்டாடறோம். “ஒரு திருமுருகன் வந்தாங்கு உதித்தனன் உலகமுய்ய”, அப்டீன்னு கச்யப்ப சிவாச்சாரியார், முருகப் பெருமானுடைய அவதாரத்தை பத்தி கந்த புராணத்துல பாடின மாதிரி, ஸ்வாமிநாதனா வந்து அவதாரம் பண்ணி தர்ம செங்கோலை வெச்சுண்டு நூறு வருஷம், அருளாட்சி பண்ணிணா பெரியவா. மஹாபெரியவாளை நினைக்கறது, பூஜிக்கறதுனால நமக்குதான் க்ஷேமம். அவருக்கு ஒண்ணும் ஆகப்போறது இல்லை. அவரை தியானம் பண்ணோம்னா, அவரை கொண்டாடினோம்னா நமக்கு இக பர சௌபாக்யங்கள் […]
சூர்பனகை வந்தாள்
128. ராமர் ரிஷிகளோடும் சீதாதேவியோடும் பேசிக் கொண்டு இனிமையாக பொழுதைக் கழிக்கிறார். ஒரு நாள் அங்கே சூர்பனகை என்ற ராக்ஷசி வருகிறாள். அவள் ராமரைக் கண்டவுடன் காமவசப்பட்டு அவரிடம் “என்னை மணந்து கொள்” என்று கேட்கிறாள். ராமர் விளையாட்டாக “என் அருகில் என் பிரியமான மனைவி சீதை இருக்கிறாள். நீ என் தம்பி லக்ஷ்மணனிடம் கேள்” என்கிறார்.
ஹேமந்த ருது வர்ணனை
127. லக்ஷ்மணன் மிக அழகாக பனிக்காலத்தை வர்ணிக்கிறான். அப்போது அவன் பரதனின் த்யாகத்தையும் தவத்தையும் மெச்சி பேசியதை ராமர் ரசிக்கிறார். லக்ஷ்மணன் கைகேயியை பழித்து பேச, ராமர் அதைக் கண்டிக்கிறார்.
ஸரஸ்வதி பெரியவா
[ஸரஸ்வதி பெரியவா] (12 min audio) நான் ஸ்வாமிகளை தரிசனம் பண்ணின பதினைஞ்சு வயசுல இருந்து, மஹா பெரியவா ஸித்தி ஆகிற வரைக்கும், அந்த ஒரு எட்டு வருஷத்துல, ஸ்வாமிகள், அடிக்கடி “நீ போய் பெரியவாளை தரிசனம் பண்ணு. அவாதான் காமாக்ஷி. உனக்கு மூக பஞ்சசதி கிடைச்சிருக்கு, போயி பாத்துட்டு வா”, அப்டீன்னு சொல்லுவார். நான், காஞ்சிபுரத்துல வந்து பெரியவாளைத் தள்ளி நின்னு, தரிசனம் பண்ணிட்டு வந்துடுவேன்.