சிவானந்தலஹரி 47வது ஸ்லோகம் பொருளுரை


சிவானந்தலஹரி ஸ்லோகம் 47 தமிழில் பொருள் (10 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokam 47)

Series Navigation<< சிவானந்தலஹரி 46வது ஸ்லோகம் பொருளுரைசிவானந்தலஹரி 48வது ஸ்லோகம் பொருளுரை >>
Share

Comments (1)

  • Sowmya Subramanian

    மனமென்னும் ராஜஹம்ஸம் பக்தியோடு வஸிக்க ஆரம்பித்தபின், “வறண்டு கிடந்த ஹ்ருதயக் காட்டில், ‘சம்பு த்யானம்’ என்கிற இளவேனிற்காலம் ஆரம்பிக்கிறது. பாப இலைகள் உதிர்ந்து, “மனஸில் இருக்கிற பக்தி, இவனுடைய ஹ்ருதயத்தில் கொடியா படர ஆரம்பிக்கிறது!” புண்ணியங்கள், நற்குணங்கள், நற்கர்மங்கள், ஜப மந்த்ரங்கள் எல்லாம் ப்ரகாசிக்கிறதா சொல்லி, கடைசியாக “ஞானானந்த அம்ருதமும், ப்ரம்மஞானமும் ஒளிவிடுகிறது” என்று இந்த ஸ்லோகத்தில் மிக அருமையாக சொல்கிறார் பகவத்பாதாள்.🙏🌸

    இங்க பரமேஸ்வரனை ‘சம்பு’ என்று குறிப்பிடுகிறார் பகவத்பாதாள். மஹாபெரியவா ‘சம்பு’வுக்கு அர்த்தம் சொல்லும் போது, “நித்திய சுகம் உற்பத்தியாகிற இடம்” என்றும், “பரமேஸ்வரன் அத்வைத ப்ரஹ்மமாக தக்ஷிணாமூர்த்தி ரூபத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கும்போது மோக்ஷானந்த உற்பத்தி ஸ்தானமாக இருப்பதால் அவருக்கு சம்பு என்று பெயர்.” என்று சொல்லியிருப்பார். இந்த ஸ்லோகத்தில் ஞானானந்த அம்ருதமும், பிரம்மஞானமும் பிரகாசிக்க ஆரம்பிக்கிறது. அது ‘சம்பு’ தானே கொடுக்க முடியும்?! அதனால் ‘சம்பு’ என்று பரமசிவனை குறிப்பிடுகிறார் போலும்!🙏🌸

    ‘ஈசன் எந்தை இணையடி நீழலே’ என்று சரண த்யானம் தான் ரொம்ப முக்கியம் என்று தெரிகிறது. மூகபஞ்சசதியில், ‘கவிதை என்கிற பிருந்தாவனத்தில் அம்பாள் உல்லாசமா இருக்கா’ என்று சொன்ன மேற்கோள் மிக அருமை! ஸ்வாமிகள் ரஸிகரா இருந்து அனுபவிச்சதை, நீங்களும் ரஸிச்சு, எங்களையும் அந்த ஆனந்த ரஸத்தில் மூழ்க வைக்கிறேள். அற்புதம்!👌🙏🌸

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.