Categories
shivanandalahari

சிவானந்தலஹரி 52வது ஸ்லோகம் பொருளுரை


சிவானந்தலஹரி 52வது ஸ்லோகம் பொருளுரை(8 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokam 52)

கோவிந்த நாம மகிமை – கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அருள்வாக்கு

காமாக்ஷி கடாக்ஷம் என்னும் கருமேகம்

Series Navigation<< சிவானந்தலஹரி 51வது ஸ்லோகம் பொருளுரைசிவானந்தலஹரி 53வது ஸ்லோகம் பொருளுரை >>

3 replies on “சிவானந்தலஹரி 52வது ஸ்லோகம் பொருளுரை”

அழகான ஸ்லோகம். மிக அருமையான விளக்கம். மிகப் பொருத்தமான ‘ஆழி மழை கண்ணா’, ‘முன்னிக் கடலை’ மேற்கோள்கள்.👌🙏🌸

போன ஸ்லோகத்தில் ஆச்சார்யாள் சிவபெருமானை வண்டுக்கு ஸ்லேஷையாகவும், நம் மனதை அந்த வண்டு நடனமாடும் தாமரையாகவும் உவமித்திருந்தார்.

இந்த ஸ்லோகத்தில் ஆச்சார்யாள் மேகத்துக்கு ஸ்லேஷையாக சொல்கிறார். அதிலிருந்து பொழியும் மழை நீரை சாதக பக்ஷிதானே ஏங்கி எதிர்பார்க்கும். அப்படிப்பட்ட சாதக பக்ஷியாக நம் மனத்தை உவமிக்கிறார். 🙏🌸

கனகதாரா ஸ்தவத்தில் “தத்யாத் தயாநுபவனோ” என்கிற சுலோகத்தில் ‘சாதக பக்ஷி மழைத் துளிக்கு ஏங்குகிற மாதிரி’ என்று சொல்லி, ‘உன்னிடம் இருக்கும் தயை என்கிற காற்றினால் உன் கடாக்ஷ மேகத்தைத் தள்ளிக் கொண்டு வந்து இவர்களுக்குச் செல்வ மழையைப் பொழியம்மா’ என்று ஒரு பிராமண ஸ்த்ரீக்காக முறையிடுகிறார் ஆச்சார்யாள். இந்த ஸ்லோகத்தில் ‘காருண்யாம்ருத வர்ஷிணம்’ கருணை என்ற அம்ருத்தத்தைப் பொழிபவர் என்று சிவபெருமானை சொல்கிறார். ஸ்வாமிகள் சொன்ன ‘நாம’ மகிமையை மேற்கோள் காட்டி அதுதான் ‘காருண்யாம்ருதம்’. அதைத்தான் மகான்கள் கொண்டாடியிருக்கிறார்கள் என்று சொன்னது மிக அருமை 👌🙏🌸

பரமேஸ்வரனை ‘சம்போ’ என்றும் ‘நீலகந்தரா’ என்றும் அழைக்கிறார். பக்தர்களுக்கு கருணை என்னும் அமிர்தத்தை வர்ஷித்து தாபத்தைப் போக்குவதாலும், மழையை நம்பி இருப்பவர்களுக்கு அதை பொழிந்து சந்தோஷத்தை தருவதாலும் ‘சம்போ’ என்று அழைக்கிறார் போலும். ஆலகால விஷத்தை அருந்தி லோகத்தையே ரக்ஷித்து எல்லோருக்கும் ஜீவனையும் சந்தோஷத்தையும் அளித்ததாலும் அவரை ‘சம்போ’, ‘நீலகந்தரா’ என்று அழைக்கிறார்.🙏🌸

நல்ல சிலேடைகளுடன் வழங்கப்பட்ட அருமையான ஸ்லோகம்!
இதில் ஸ்ரீ பரமேச்வரனை நீருண்ட மேகத்துக்கு ஒப்பாகவும், மனத்தை சாதகப் பக்ஷிக்கு சமமாகவும் கற்பிக்கப்படுகிறது. சாதகப் பறவை மேகத்திலிருந்து விழும் ஜலத்துளிகளை மட்டுமே குடிக்கும். வேறு எந்த ஜலத்தையும் குடிக்காது. அது போல் என் மனது தங்களையே நாடி நிற்கிறது என வர்ணிக்கிறார் ! மிக அழகான வர்ணனை! இதில் உள்ள சொற்கள் எல்லாம் சிலேடையாக ஸ்ரீபரமேச்வரனையும் நீருண்ட மேகத்தையும் குறிப்பிடுகின்றன! ப்ரதோஷ காலத்தில்தக்க ஸ்லோகத்தை எடுத்து, அழகான விளக்கத்துடன் இவண் படைத்திருக்கிறார் கணபதி! நன்றி.

Thank you Anna for posting the YouTube link on Govindan nama mahimai speech by Govinda Damodhara Swamigal 🙏👌

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.